Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி-பிரதமர் முரண்பாடு சமரச முயற்சியில் ராஜித தலைமையில் குழு?

Featured Replies

ஜனாதிபதி-பிரதமர் முரண்பாடு சமரச முயற்சியில் ராஜித தலைமையில் குழு?
 
 
ஜனாதிபதி-பிரதமர் முரண்பாடு சமரச முயற்சியில் ராஜித தலைமையில் குழு?
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நியமனத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டைத் தீர்க்க முடியாமல் அமைச்சர்கள் திண்டாடுவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரான அர்ஜுன மகேந்திரனை மீண்டும் அப்பதவிக்கு நியமிப்பதில் ஏற்பட்டிருந்த சிக்கல் இன்று பூதாகரமான பிரச்சினையாக மாறியுள்ளது. மத்திய வங்கியின் புதிய ஆளுநராக சரித ரத்வத்தவை நியமிக்க பிரதமர் தீர்மானித்திருந்திருந்தார். எனினும், ஜனாதிபதியின் பணிப்புரையில் இந்திரஜித் குமாரசுவாமி புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் ஜனாதிபதி, பிரமருக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையிலான குழுவொன்று தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
 
ஜனாதிபதி, பிரதமருக்கு இடையில் இவ்வாறான முரண்பாடுகள் தொடருமாயின் தேசிய அரசின் வேலைத்திட்டங்கள் கடும் பின்னடவை சந்திக்கும் என்பதுடன், தேசிய அரசின் எதிர்காலமும் கேள்விக்குறியாவிடும் என்று ஜனாதிபதியின் ஆலோசனை வட்டாரங்களிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
அண்மையில் பதுளையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றும்போது, ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து நாட்டை அபிவிருத்தி செய்வேன் என ஒரு எதிர்பாராத கருத்தை வெளியிட்டிருந்தார். இந்தக் கருத்து அரசியல் அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்பத்தியிருந்தது.
 
அத்துடன், தேசிய அரசில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களிடையேயும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு களமிறங்கியுள்ள ராஜித தலையிலான குழுவுக்கு எத்தகைய வெற்றிகள் கிடைக்கப் போகின்றன என்பதனை அரசியல் விமர்சகர்களால் எதிர்வுகூற முடியாதுள்ளது

http://onlineuthayan.com/news/14838

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.