Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

YGC ஜூனியர்: வென்றது வவுனியா த.ம.ம.வி Technical Tigers

Featured Replies

YGC ஜூனியர்: வென்றது வவுனியா த.ம.ம.வி Technical Tigers
 

article_1467811594-LEADYGC5Juw.jpg

பாடசாலை மாணவர்கள் மத்தியில் புத்தாக்கத்திறனை ஊக்குவிப்பதற்காகவும் கணினியின் உதவியுடன் நாளாந்த பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனை ஊக்குவிப்பதற்காகவும் Yarl IT Hub என்ற தன்னார்வலர் நிறுவனத்தால், வட மாகாண கல்வித் திணைக்களத்துடன் இணைந்து நடாத்தப்பட்டு வரும் Yarl Geek Challenge (YGC) ஜூனியர் போட்டியின் வெற்றியாளராக வவுனியா தெற்கு வலயத்தினுள் உள்ளடங்குகின்ற வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த Technical Tigers அணி தெரிவாகியது. 

தொடர்ச்சியாக ஐந்தாவது வருடமாக நடாத்தப்பட்ட இப்போட்டியின் ஆரம்பத்தில், யாழ்ப்பாணம், தீவகம், துணுக்காய், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய இடங்களில் தொழிநுட்ப பயிற்சிப்பட்டறைகள் கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. இதில், வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலுள்ள 12 கல்வி வலயங்களில் இருந்து 585 பாடசாலைகள் அழைக்கப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து, 170 வரையான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வலய மட்ட போட்டிகளில் 90க்கு மேற்பட்ட அணிகள் பங்குபற்றி இறுதிப் போட்டிக்கு 34 அணிகள் தெரிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்ற இறுதிப் போட்டியிலேயே, Arduino வன்பொருள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நூலக முகாமைத்துவ அமைப்பொன்றை தயாரித்த, சிவகரன் சுஹீர்மன், கதிர்காமநாதன் கஜானன், நந்தகுமார் சஜீவனை உள்ளடக்கிய வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த Technical Tigers அணி, ஒட்டுமொத்த அணிகளில் வெற்றியாளராக தெரிவாகியது. இவ்வணியின் தயாரிப்பானது, நூலகமொன்றின் புத்தக இறாக்கைகளில் அடுக்கப்பட்டுள்ள புத்தகங்களை, அன்ட்ரொயிட் செயலியொன்றின் மூலமாக தேடும் பொழுதில், தேடும் புத்தகம் உள்ள இடத்தில் மின்விளக்கு ஒளிர்ந்து, குறித்த புத்தகத்தை அடையாளங்காட்டும் வகையில் அமைத்திருந்தனர்.

article_1467811619-LEAD-1Ygcju45jd.jpg

இதேவேளை, தீவக வலயத்தில் உள்ளடங்குகின்ற, யாழ். காரைநகர் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த கதிர்காமநாதன் கஜந்தன், சிவசுப்பிரமணியம் தூயவன் கிருஷ்ணமூர்த்தி சிவதர்சன் ஆகியோரினை உள்ளடக்கிய அணி 2, சிறந்த வன்பொருள் தீர்வை உருவாக்கிய அணியாக தெரிவு செய்யப்பட்டிருந்தது. நிறுத்தி வைக்கப்படுகின்ற வாகனங்களின் அடியே செல்லப் பிராணிகள், குழந்தைகள் இருக்கும்போது, செல்லப் பிராணியையோ அல்லது குழந்தையினையோ அகற்றாமல் குறித்த வாகனத்தின் கதவை சாரதி திறக்க முடியாத அமைப்பை குறித்த அணியினர் உருவாக்கியிருந்தனர்.

article_1467811654-LEAD-2YGC5jwid.jpg

இதேவேளை, வடமராட்சி வலயத்தினுள் உள்ளடங்குகின்ற யாழ். ஹாட்லிக் கல்லூரியைச் சேர்ந்த, அருணகிரி அனுஷ்னன், கணேஷலிங்கம் அபிஷனன், அதியமான் வாதவூரன் ஆகியோரினை உள்ளடக்கிய ஹாட்லி மொபைல் அணி, சிறந்த திறன்பேசிச் செயலியை வடிவமைத்த அணியாக தெரிவு செய்யப்பட்டது. அலுவலக நிலை என்ற தீர்வை குறித்த அணியினர் வடிவமைத்திருந்தனர். இந்த அலுவலக நிலையின் மூலம், தானாகவே உங்கள் அலைபேசி அமைதி நிலைக்குச் செல்வதுடன், அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் வந்தால், தானாகவே பதில் அனுப்பும் வகையில் உள்ளது.

article_1467811673-LEAD-3YGc5juw.jpg

இறுதியாக, சிறந்த இணையத்தள தீர்வாக, மன்னார் வலயத்தினுள் உள்ளடங்குகின்ற சென். சேவியர் ஆண்கள் கல்லூரியைச் சேர்ந்த பாலேந்திரகுமார் பானுஜன் தனியே பிரதிநிதித்துவப்படுத்திய சேவியர்ட்டீஸ் இரண்டு அணியின் தயாரிப்பிலான கிளவுட் கணினி இயக்குதளம் தெரிவானது. கூகுள் ட்ரைவ் போன்ற குறித்த இயக்குதளத்தில், ஒவ்வொரு ஃபோல்டர்களுக்கும் கடவுச்சொல் வழங்கக் கூடிய வகையிலும், பொதுவான ஃபோல்டர் ஒன்றினுள், உங்களுக்கு தனித்ததொரு ஃபோல்டரைக் கொண்டிருக்கும் வகை போன்ற பல வசதிகளை உள்ளடக்கியயதாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

- See more at: http://www.tamilmirror.lk/176414/-YGC-ஜ-ன-யர-வ-ன-றத-வவ-ன-ய-த-ம-ம-வ-Technical-Tigers#sthash.6V5wzyGJ.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.