Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணினியின் முன் அமர்வது எப்படி?

Featured Replies

கணினியின் முன் அமர்வது எப்படி?
 
article_1468470347-computer.jpg

தொழில்புரியும் இடங்களில் உடல் உபாதைகள் ஏற்படுவது வழமையானதே. குறிப்பாக நாம் இன்று கணினி யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். எமது வேலையை கணினி இலகுவாக்கினாலும் தொடர்ச்சியான வேலைகளால் நாம் பல இன்னல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. கண்பார்வை குறைபாடு, உடல் நோ, கூன் விழுதல், கழுத்து, முதுகு வலி என பல நோய்கள் எம்மை இலகுவில் தொற்றிக்கொள்கின்றன.

இவற்றிலிருந்து ஓரளவேனும் விடுபட வேண்டுமெனில் நாம் சில உடல் ஆரோக்கிய முறைகளை பின்பற்றுவது முக்கியம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எமது அன்றாட தொழில் நடவடிக்கைக்காக கணினியை பயன்படுத்தும் நாம், அலுவலகத்தில் வசதியாக, பாதுகாப்பாக, உற்சாகமாக இருக்கும் வழிகாட்டல் முறைகளை பின்தொடர்வோம்.

படி 1 - உங்கள் கதிரை

இயன்றளவு உங்கள் பிருட்டப் பகுதி கதிரையின் பின்புறத்தை தொடுமளவு அமருங்கள். பாதங்கள் தரையில் முழுதாக படுமளவு  இருக்கையை சரிசெய்யுங்கள். உங்கள் முழங்கால் இடிப்புக்குச் சமமாக அல்லது அதைவிட குறைந்தளவில் இருக்குமளவுக்கு  இருக்கையின் உயரத்தை சீர்செய்யவும்.

கதிரையின் பின்புறம் 100-110 பாகை சாய்வாக இருக்க வேண்டும். உங்கள் நாரி கதிரையில் தொட்டிருக்க வேண்டும். தேவையெனில் குஷன் அல்லது சிறிய தலையணையை பயன்படுத்தவும். உங்கள் கதிரையின் பின்புறத்தை சீர் செய்ய முடியுமாயின் அடிக்கடி அதன் நிலையை மாற்றவும்.

கைதாங்கியை உங்கள் தோலுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் வைத்திருக்கவும். கைதாங்கி உங்களுக்கு இடைஞ்சலாக இருந்தால் அதனை அகற்றிவிடுங்கள்.

படி:2 விசைப்பலகை
உங்கள் விசைப்பலகை தட்டு, மவுஸை வைக்கவும் கால்களை அசைக்கவும் இடம்தர வேண்டும். அதன் உயரத்தை  மாற்ற கூடியதாகவும் சரிக்ககூடியதாகவும் இருக்க வேண்டும்.

விசைத்தட்டுக்கு மிக நெருக்கமாக இருங்கள்.

உங்கள் உடலின் முன்னால் விசைப்பலகை இருக்க வேண்டும்.

உங்கள் தோற்பட்டைக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் விசைப்பலகையின் உயரத்தை சீர் செய்யவும்.

முழங்கை 100-110 பாகை அளவில் விரிந்திருக்க வேண்டும்.

மணிக்கட்டுக் கையும் நேராக இருக்க வேண்டும்.

நீங்கள் நிமிர்ந்த நிலையில் இருப்பவராயின், விசைத்தட்டை உங்களிலிருந்து விலகி சற்றுத் திருப்புங்கள். பின்பக்கம் சரிந்து இருப்பவராயின் விசைத்தட்டை உங்களை நோக்கி சற்று திருப்புங்கள்.

படி:3 திரை, ஆவணம், தொலைபேசி

திரை, மூல ஆவணம் (னுழஉரஅநவெ)என்பன சரியான இடத்தில் இல்லாதுவிடில் அந்தரமான நிலைமை ஏற்படும். உங்கள் கழுத்துக்கு அழுத்தம் கொடுக்காத வகையில் திரை, மூல ஆவணம் என்பவற்றை சீர்செய்து வையுங்கள்.

திரை உங்கள் முகத்துக்கு நேரே இருக்க வேண்டும்.

திரையின் உச்சமான இருக்கையின் போதான கண் மட்டத்துக்கு 2-3 அங்குலம் மேலே இருக்க வேண்டும்.

திரையிலிருந்து ஒரு கை நீளம் தள்ளி இருங்கள். உங்கள் பார்வை திறனுக்குத் தக்கதாக இது மாறலாம்.

திரையை சரியான இடத்தில் வைத்து கண் கூச்சத்தை குறையுங்கள்.

ஜன்னல்களுக்கு செங்குத்தாக திரை இருக்க வேண்டும்.

ஜன்னல் திரையை தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளுங்கள்.

மேலிருந்து வரும் வெளிச்சத்தால் உண்டாகும் கூச்சத்தை குறைக்க திரையின் கோணத்தை சீர் செய்க.
கூச்சத்தை குறைக்க filter fis (வடிகட்டிகளை) பயன்படுத்துக.

தொலைபேசியை இலகுவாக எடுக்கக் கூடியதாக வைக்கவும்.

படி:4 ஓய்வும் இடைவேளையும்

எவ்வளவு தான் நீங்கள் முயன்றாலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யினும் நீண்ட நேரம் ஒரே மாதிரி இருத்தல் இரத்தோட்டத்தை குறைத்து உடலில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு 20-30 நிமிடங்களுக்கு 1-2 நிமிட ஓய்வு எடுங்கள். ஒவ்வொரு மணித்தியாலத்துக்குப் பின்னரும் 5-10 நிமிட ஓய்வு எடுங்கள். அல்லது வேலையை மாற்றுங்கள்.

மதியபோசனத்தின் போது கணினியை விட்டு தூர போங்கள்.

அவ்வப்போது கண்களுக்கு ஆறுதல் கொடுங்கள். திரையை பார்க்காது தூர உள்ள பொருட்களை பாருங்கள்.
10-15 செக்கன்கள் கைகளால் பொத்தி கண்களை ஓய்வுவெடுக்க விடுங்கள்.

இயலுமான அளவுக்கு அசைந்து கொள்ளுங்கள்.

- See more at: http://www.tamilmirror.lk/177009/கண-ன-ய-ன-ம-ன-அமர-வத-எப-பட-#sthash.ks3EfaNw.dpuf
  • 2 months later...
  • தொடங்கியவர்
Hidden

http://www.tamilmirror.lk/177009/கண-ன-ய-ன-ம-ன-அமர-வத-எப-பட-

  • தொடங்கியவர்
 
Bild zeigt 1 Person
 
முதுகுவலி தவிர்க்க 6 வழிகள்!

நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்கள், குறிப்பாக கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து வேலை செய்பவர்கள் சந்திக்கும் முக்கியப் பிரச்னை முதுகுவலி. சரியான முறையில் அமர்ந்து வேலை செய்தால், முதுகுவலியைத் தவிர்க்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

தலையை நேராக வைக்க வேண்டும்

கணிப்பொறியின் திரைக்குச் சரியான உயரத்தில் தலை (பார்வை) இருக்க வேண்டும். தலையை உயர்த்தியோ, தாழ்த்தியோ, திரையைப் பார்க்குமாறு உட்காரக் கூடாது. எனவே, அதற்கேற்ற வகையில் மேசையும் சாய்வு நாற்காலியும் இருக்க வேண்டும். கழுத்துக்கு அழுத்தம் தருவது முதுகுவலிக்குக் காரணமாகிவிடும்.

சற்று சாய்ந்து உட்காருவது சிறப்பு

நாற்காலி 110 டிகிரி அளவுக்குச் சாய்வாக இருக்கட்டும். இருக்கைக்கு ஏற்றவாறு, இடுப்புக்கு அழுத்தம் தராமல் சற்று சாய்ந்து உட்கார வேண்டும். கணிப்பொறி இருக்கும் பக்கம் முன்னோக்கி சாய்வதோ, அளவுக்கு அதிகமாகப் பின்நோக்கிச் சாய்வதோ கூடாது.

பிரத்யேக சாய்வு நாற்காலியைப் பயன்படுத்த வேண்டும்

கணிப்பொறியில் அமர்வதற்கு ஏற்ற, பிரத்யேக சாய்வு நாற்காலி (Computer chair) இருக்க வேண்டும். எழுதுவதற்கு, சாப்பிடுவதற்கு என மற்ற செயல்களுக்கு இந்த நாற்காலியைப் பயன்படுத்தக் கூடாது. மேசையின் உயரத்துக்கும் உங்களின் உயரத்துக்கும் ஏற்றவாறு அட்ஜஸ்ட் செய்யயும் வசதியுள்ள சாய்வு நாற்காலிகளைப் பயன்படுத்த வேண்டும். உடல் எடைக்குத் தகுந்த, முதுகைக் குறிப்பாக கீழ்முதுகைத் தாங்குவது போன்ற நாற்காலியைத் தேர்வு செய்வது அவசியம்.

கைப்பிடிகளைப் பயன்படுத்த வேண்டும்

நாற்காலியில் இருக்கும் கைப்பிடியின் மேல் கைகளை வைக்க வேண்டும். கைப்பிடிகளின் உயரத்துக்கு இணையாக, விசைப்பலகை (கீபோர்டு) இருக்க வேண்டும். கைப்பிடிக்கு உயரமாகவோ அல்லது கைப்பிடிக்கு கீழாகவோ விசைப்பலகை இருக்கக் கூடாது.

தொடைகளுக்குப் பக்கபலம் அவசியம்

நாற்காலியின் நுனியில் உட்காரக் கூடாது. தொடைகள் முழுவதுமாக நாற்காலியில் இருக்குமாறு அமர வேண்டும். தொடைகளைத் தொங்கப்போடக் கூடாது. தரைக்கு இணையாக தொடைகள் இருக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

பாதங்களைத் தொங்கவிடக் கூடாது

பாதங்கள் படத்தில் காட்டியுள்ளபடி சாய்வாக இருக்க வேண்டும். பாதங்கள் தொடைக்கு செங்குத்தாகவோ, கெண்டைக்காலை மடக்கி உள் இழுத்தோ வைக்கக் கூடாது. பாதங்கள் மற்றும் கெண்டைக்கால் சரியான நிலையில் இல்லை எனில், இடுப்புப் பகுதியில் அழுத்தம் ஏற்படும்.

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.