Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோதல் உருவாக இராணுவத்தினரே காரணம்! - சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கிழக்கு மற்றும் யாழ். பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு சிங்கள மாணவர்களை பெரும்பான்மையாக உள்வாங்குவது உடனடியாக நிறுத்தப்படாவிடின், மீண்டும் ஒரு யுத்தத்திற்கு தூபம் போடும் நடவடிக்கையாக அது அமையும் என முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் எச்சரித்துள்ளார். யாழ்.ஊடக  அமையத்தில் நேற்று நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

கிழக்கு மற்றும் யாழ். பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு சிங்கள மாணவர்களை பெரும்பான்மையாக உள்வாங்குவது உடனடியாக நிறுத்தப்படாவிடின், மீண்டும் ஒரு யுத்தத்திற்கு தூபம் போடும் நடவடிக்கையாக அது அமையும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் எச்சரித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

   

'யாழ்.பல்கலைகழகத்தில் மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவத்தை அடுத்து சில தமிழ்- சிங்கள இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்களில் மிகமோசமான கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று தேசிய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், " சிங்கள மாணவர்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது, எனவே இராணுவத்தினை விலக்கக்கூடாது, இராணுவம் இருந்தால் தான் சிங்கள மாணவர்களுக்கு பாதுகாப்பு " என பொருள்பட உள்ளது. இது மிக மோசமான அறிக்கை ஆகும்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களால் மிக மோசமாக தாக்கப்பட்டு வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார்கள். வைத்திய சாலையில் சிகிச்சை பெற்ற மாணவர்களை கிழக்கு மாகாண ஆளுநரோ , எவரும் சென்று பார்க்கவில்லை . இவர்களுக்காக எவருமே குரல் கொடுக்கவில்லை . ஆனால் சிங்கள மாணவர்கள் தாக்கப்பட்ட போது எத்தனை குரல்கள் ஓங்கி ஒழிக்கின்றன. வடமாகாண ஆளுநர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறும் மாணவனை பார்த்து உள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் மோதல்களை உருவாக்க என இராணுவத்தினரும் புலனாய்வு பிரிவினரும் சில மாணவர்களை பயன்படுத்துகின்றார்கள். யாழ்ப்பாணத்திற்கு கல்வி கற்க வரும் சிங்கள மாணவர்கள் போர் வெற்றி சின்னங்களை கடந்தே வருகின்றார்கள். அந்த சின்னங்களை கடக்கும் போது அந்த மாணவர்களின் எண்ணங்களில் தமிழர்கள் தோற்றுப்போனவர்கள் என்ற எண்ணமே உருவாகும்.

அதுமாத்திரமின்றி வடக்கிலே பௌத்த சின்னங்களை அரசாங்கம் நிறுவுகின்றது. தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தில் ஏன் அவற்றை நிறுவ வேண்டும். சாம்பல் தீவில் இரவோடு இரவாக புத்தர் சிலை ஏன் வைக்க வேண்டும். கொக்கிளாயில் நீதிமன்ற தடையை மீறி தனியார் காணியில் பௌத்த விகாரை எவ்வாறு கட்டப்படுகிறது ? இரணைமடு குளக்கட்டு, நயினாதீவில் , பாரிய புத்தர் சிலை ஏன் நிர்மாணிக்கப்படுகின்றது. சிங்கள பிரதேசமாக தமிழர் பிரதேசத்தை உருவாக்கவா ? இவற்றை எல்லாம் அரசாங்க செலவிலேயே நிர்மானிக்கிர்கள்எதற்காக?

இலங்கையில் 17 பல்கலைகழகங்கள் உண்டு. அவற்றில் மூன்று பல்கலைக்கழகங்களே வடக்கு, கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளன. அதில் அம்பாறையில் உள்ள பல்கலைக்கழகம் முஸ்லீம் மாணவர்களை பெரும்பா்ன்மையாக கொண்ட பல்கலைக்கழகம். மற்றைய இரு பல்கலைக்கழகங்களான கிழக்கு மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்கள் பெரும்பான்மையாக கற்று வந்தார்கள்.

அதனை இல்லாமல் செய்ய வேண்டும் எனும் நோக்குடனே கிழக்கு மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகங்களில் சிங்கள மாணவர்கள் பெரும்பான்மையாக உள்வாங்க படுகின்றார்கள். கிழக்கு மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு சிங்கள மாணவர்களை பெரும்பான்மையாக உள்வாங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிடின் மீண்டும் ஒரு யுத்தத்திற்கு தூபம் போடும் நடவடிக்கையாக அமையும்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் பின்னால் நின்று இயக்கியவர்கள் யார் என்பது கண்டறியப்பட வேண்டும். மோதலில் ஈடுபட்ட மாணவர்களை கண்டறிந்து தண்டிக்கிறத விட மோதலை உருவாக்க காரணமானவர்கள் கண்டறிய ப்பட வேண்டும். என மேலும் தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=161891&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.