Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலம் கடத்தும் போக்கில் அரசு செயற்படுவது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காலம் கடத்தும் போக்கில்

அரசு செயற்படுவது ஏன்?

`

அலை அடங்கக் குளிப்போம் என்று கடற்கரையில் காத் திருந்தவன் கதை போல இருக்கின்றது மஹிந்த அரசின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முயற்சி.

இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்ட யோசனையை முன்வைப் பதை இந்த வருடம் ஏப்ரல் மாதம் வரை தள்ளிப் போட்டிருப்பதாக மஹிந்தரது அரசு, எனச் செய்திகள் வெளி யாகி இருக்கின்றன.

அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் அரசு இப் போது முக்கியமான சில விடயங்களைக் கவனிக்க வேண்டி யிருப்பதால், தீர்வு யோசனையைத் தயாரிப்பதில் உடனடியா கக் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக அரசு கருதுவதாகவும் கூறப்படுகின்றது.

நல்ல வேடிக்கை இது. நாட்டின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணுவதைவிட, முக்கியத்துவமும் முன்னுரிமையும் அளிக்கப்பட வேண்டிய அரசியல் பிரச்சினைகள் அரசுக்கு இருக்கின்றனவாம்!

இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காண்பதற்கான தீர்வு யோச னையை முன்வைப்பதை விட மஹிந்தரின் அரசுக்கு இராணுவ ரீதியாக முன்னுரிமை முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய விடயங்கள் உள்ளன என்பது உள்ளங்கை நெல் லிக்கனி. ஏற்கனவே கடந்த ஆண்டு இறுதியில் தாம் நிகழ்த் திய வருடாந்த மாவீரர் தின உரையில் விடுலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனே இதைத் தெளிவாகச் சுட்டிக் காட்டி யிருந்தார்.

""மஹிந்தவின் அரசு படைப்பலத்தை அடிப்படையாகக் கொண்டே தமிழரின் தலைவிதியை நிர்ணயிக்க விரும்பு கின்றது. தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து, அதன் மூலம் இரா ணுவ மேலாதிக்க நிலையில் நின்று, தான் விரும்பும் அரை குறைத் தீர்வைத் தமிழர் தலையில் கட்டிவிட அது எண்ணு கின்றது. அதற்காகப் போர்முனைப்புப் போக்கில் செயற்படு கின்றது....'' என்று பிரபாகரன் தெரிவித்திருந்தார்.

எனவே, இராணுவ ரீதியில் தமிழர் தரப்பைப் பலவீனப்படுத்தும் தனது போரியல் செயற்பாட்டை இன்னும் தீவிரப் படுத்தி, தனக்கு மேலும் பல இராணுவ வெற்றிகளைக் குவிப் பதற்குக் கால அவகாசம் தேவைப்படுவதாக அரசுத் தலைமை கருதலாம். அதனால் தனது உத்தேச அரைகுறை தீர்வுத் திட்டத்தை வெளிப்படுத்துவதைத் தள்ளிப்போட அது உத் தேசிக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது.

அரசியல் ரீதியாக சில விடயங்களைக் கையாள வேண்டி யிருப்பதாகக் கூறப்படுவது, "குத்துக்கரண அரசியலை' தனது பலமாகப் பயன்படுத்துவதற்கு மஹிந்தருக்கு இன்னும் சற்று நேரம் தேவைப்படுகின்றது என்பதையே வெளிப்படுத்து கின்றது.

இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரத்தைப் பொறுத் தவரை தென்னிலங்கை அரசியலில் கடந்த ஐம்பது ஆண்டு களில் முன்னெப்போதும் நிகழ்ந்திராத அதிசயமான தீர்வுக் கான உகந்த சூழ்நிலையை உருவாக்குகின்ற அற்புதமான கள நிலைமை கடந்த ஆண்டில் ஏற்பட்டது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியும் அவரது அரசும் இனப்பிரச்சினைக்கான அமைதித் தீர்வை எட்டுவதற்கு எடுக்கும் அத்தனை முயற்சிகளுக்கும் நியாயமான எத்தனங் களுக்கும் நிபந்தனையின்றி முழு அளவில் ஒத்துழைப்புத் தருவதாக பிரதான எதிர்க் கட்சி பகிரங்கமாகவும், எழுத்து மூலமும் அறிவித்ததை அடுத்து தீர்வுக்கான ஒரு நல்லி ணக்க சூழ்நிலைக்கு நல்லதோர் அடித்தளம் தெற்கில் பல மாக இடப்பட்டது.

ஆனால், அந்தச் சாத்தியமான சாதகமான வாய்ப் பான அரசியல் சூழ்நிலையை அமைதித் தீர்வுக்கு வளமா கவும், வசமாகவும் பயன்படுத்துவதை விடுத்து, பலமிழந்து நிற்கும் பிரதான எதிர்க்கட்சியை உடைத்து, அரசியல் குதிரை யோட்டத்தையும், குத்துக்கரணங்களையும் ஊக்குவித்து, நாடாளுமன்றில் தனது அரசியல் பலத்தைப் பெருக்கிக்கொள் ளத் துடியாய்த் துடிக்கிறார் ஜனாதிபதி மஹிந்தர்.

இந்த அரசியல் குளறுபடித்தனத்தால், அமைதி முயற்சி களை ஒன்றுபட்டு முன்னெடுப்பதற்கான நல்லிணக்க சூழ் நிலை தகர்ந்து போவது பற்றியும் அவர் கவலைப்படுபவராக இல்லை. அவருக்கு இன்று முக்கியமானதெல்லாம் அதிகா ரப் பலத்தில் நிற்கும் தனக்கு இராணுவ வெற்றிகள் மூலமும், அரசியல்வாதிகளின் கட்சி மாறும் குத்துக்கரணத்தை நன்கு பயன்படுத்துவதன் மூலமும் அரசியல் பலத்தைப் பெருக் கிக் கொள்வதுதான். அந்த அரசியல் சுயலாபத்தை ஈட்டுவதற்காக, அமைதித் தீர்வுக்கு வாய்ப்பாக இப்போது தெற்கில் ஏற்பட்ட நல்லிணக்கத்தைப் பலி கொடுக்கவும் கூட அவர் தயாராகிவிட்டார்.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஆளும் தரப்பின் அமைதி முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பையும் நிபந்தனையின்றி வழங்க பிரதான எதிர்க்கட்சி சம்மதித்தபோது, அம்முயற்சி களுக்கு தெற்கில் பலமான ஆதரவும், அடித்தளமும், எதிர் பார்ப்பும் ஏற்பட்டன. ஆனால், "குத்துக்கரண' அரசியலைத் தூண்டும் மூன்றாம் தர வேலைக்கு அந்தச் சூழலை அரசு பயன்படுத்த முயல்வதால், சில சமயம் ஆளும் கட்சிக்கு நாடாளு மன்றில் அறுதிப்பெரும்பான்மை கிட்டலாம்; ஆனால் அமைதி முயற்சிகளுக்குச் சாதகமான பரந்து, விசாலித்து தெற்கில் உருவான ஆதரவுத் தளம் அடிபட்டுப் போகும் என்பது உறுதி.

தன்னுடைய போர் முனைப்புப் போக்குக் காரணமாகவும், குறுகிய அரசியல் சுயலாபம் கருதிய செயற்பாட்டினா லும் அமைதிக்கான வாய்ப்பை அடியோடு தகர்க்கிறார் ஜனா திபதி மஹிந்தர்.

இராணுவ வெற்றிகளைச் சம்பாதித்துக் கொண்டு, அர சியல் ரீதியாகத் தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டு, அமைதி முயற்சிகளைத்தொடரலாம் என்று கனவு காண்கின்றார் அவர்.

அரசின் தீர்வுத்திட்ட யோசனைகளை வெளிப்படுத்து வதற்கு முன்னர் அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் அரசு கையாள வேண்டிய முக்கியமான சில விடயங்கள் உள்ளன என்று கூறப்படுவது இதைத்தான்.

இவற்றை இந்த விடயங்களை நிறைவேற்றிய பின்னர் தீர்வு யோசனைகளை வெளியிடுவது என அரசுத் தரப்பு திட்டமிடுவது, மேலே குறிப்பிட்டது போன்று கடல் அலை ஓய்ந்த பின்னர் கடலில் குளிக்கலாம் என்று கருதிக் காத் திருப்பதற்கு ஒப்பானதாகும்.

நன்றி- உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.