Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவின் குந்தகமான செயற்பாடுகளுக்கு சிங்கள மக்கள் உடன்படார்-சுமந்திரன்

Featured Replies

மகிந்தவின் குந்தகமான செயற்பாடுகளுக்கு சிங்கள மக்கள் உடன்படார்-சுமந்திரன்
 
 
மகிந்தவின் குந்தகமான செயற்பாடுகளுக்கு சிங்கள மக்கள் உடன்படார்-சுமந்திரன்
நல்லாட்சி அரசைக் கவிழ்த்து தான் மீளவும் பதவிக்கு வரலாமென கனவு காணும்
மஹிந்த ராஜபக்ச,  எந்த முயற்சிகளாலும் தற்போதைய அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளை தடுத்து விட முடியாது. அவரின் குந்தகமான செயற்பாடுகளுக்கு சிங்கள மக்கள் உடன்படப் போவதுமில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
 
தேசிய அரசாங்கத்துக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரை எதிர்வரும் 28ஆம் திகதி கண்டியிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவா் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடந்த ஜனவரி 8ஆம் திகதி நடைபெற்ற புரட்சியுடன் துரத்தி அடிக்கப்பட்ட பின் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி பதவிக்கு வர பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றார் என்பது உலகறிந்த விடயம்
 
இந்த முயற்சியின் ஒரு அங்கமே மஹிந்தவும் அவரது அணியினரும் எதிர்வரும் 28ஆம் திகதி பாதயாத்திரையை மேற்கொள்ளும் முயற்சியாகும்.
 
தற்பொழுது அவர் என்ன கூறுகின்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு சிங்கள மக்கள் வாக்களிக்கவில்லை. ஈழ மக்கள் வாக்களித்ததன் காரணமாகவே அவர் வெற்றி பெற்றார். அவ்வாறு இல்லையாயின் அவர் வெற்றி பெற்றிருக்க முடியாது என்றெல்லாம் கூறிக்கொண்டிருக்கின்றார். இது அவரின் ஆற்றாமையையே எடுத்துக் காட்டுகிறது.
 
மஹிந்த இந்த அரசை வீழ்ச்சியடைய செய்வதற்காக பல முயற்சிகளையும் கைங்கரியங்களையும் செய்துகொண்டுதான் இருக்கின்றார். அது எதுவுமே பலனளிப்பதாகவில்லை. காரணம் சிங்கள மக்கள் இவரின் எதிர்ப்பிரசாரத்துக்கு பலிபோகவில்லையென்பதே உண்மை.
 
எனவேதான் மஹிந்த ராஜபக்ச மேற்கொள்ளும் பாதயாத்திரை முயற்சியும் தோல்வியிலேயே முடியும். இதில் அவர் எதையுமே சாதிக்க முடியாத நிலையே ஏற்படும்.
 
அரசியல் சாசன ஆக்க முயற்சிகள் சுமுகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மஹிந்தவின் பாதயாத்திரை எதிர்ப்பு நிலைகளால் அரசியல் சாசன முன்னெடுப்புகளுக்கு பங்கம் ஏற்படுமென்று கூறிவிடமுடியாது.
 
புதிய அரசியல் சாசனத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையென்பது பொதுவான நியதி. அவ்விடயத்தில் பாராளுமன்றிலும் இலங்கை மக்களிடமும் பூரண ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையின் பேரிலேயே அரசாங்கத்தின் அரசியல் சாசன முன்னெடுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதில் சந்தேகப்பட வேண்டிய விடயம் ஏதுமில்லை.
 
ஆனால் இம்முயற்சிகளை குழப்புவதற்கு தன்னாலான முழு முயற்சிகளையும் மஹிந்த ராஜபக்ச மேற்கொள்வாரென்பது நாம் அறிந்து கொள்ளக்கூடிய உண்மைதான். அதற்காக நாம் பயந்து கொண்டிருப்பதில் அர்த்தமில்லையென்றே எண்ணுகின்றேன்.
 
புதிய அரசியல் சாசன நிறைவேற்றம் அரசு மற்றும் எமது கணிப்பின்படி எதிர்வரும் வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றுக்கு வருவதற்கு முன் புதிய அரசியல் சாசனம் நிறைவேற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்புடன் தான் அரசியல் சாசன ஆக்கப்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
 
இதற்கு எந்த தடையீடுகள் வந்தாலும் அதற்கு முகங்கொடுத்து அரசு முன்னெடுத்துச் செல்லுமென்றே நம்புகின்றோமென சுமந்திரன் மேலும் தெரிவித்தார்

http://onlineuthayan.com/news/15499

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.