Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாக்குக் கேட்கும் அரசியல்வாதிகள் என்ன செய்கின்றார்கள்?

Featured Replies

 

வாக்குக் கேட்கும் அரசியல்வாதிகள் என்ன செய்கின்றார்கள்?

அரசியல்வாதிகள் பொதுமக்களின் வாக்குகளால் நியமிக்கப்படுவது மாத்திரம் இன்றி பொதுமக்களிடம் இருந்து அறவிடப்படும் வரிப்பணத்தில் இருந்தே அவர்களின் எந்தவொரு நடவடிக்கைகளுக்குமான பணம் செலவிடப்படுகிறது. இதனால் இவர்களின் நடவடிக்கைகளில் பொதுமக்களுக்கு பொறுப்புகூறும் தன்மை (Accountability) இன்றியமையாததாகிறது. தங்களது தொகுதிக்கு பெரும் படை பட்டாளத்துடன் சென்று மக்களுக்கு அனல் பறக்கும் பேச்சுக்கள் ஊடாக படம் காட்டிய காலங்கள் மலையேறிவிட்டன.

தகவலறியும் சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலையில் அரசியல்வாதிகளின் பொறுப்பு கூறும் கடப்பாடுகளை வெளிப்படுத்தும் பல பொறிமுறைகள் வெளிவந்தமுள்ளன.

இதன் ஒரு முக்கிய பொறிமுறைதான் வெரிட்டே நிறுவனம் manthri.lk ஊடாக கொண்டுவந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தரப்படுத்தல் முறையாகும்.

இந்த தரப்படுத்தல் ஊடாக உங்கள் பாராளுமன்ற உறுப்பினர் எந்தளவுக்கு மக்களின் நலன்களுக்காக பாராளுமனறத்தில் குரல் கொடுக்கிறார், அவர் எத்தனை முறை பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டார்? என்னென்ன விவாதங்களில் கலந்துகொள்கிறார், அவர் கேட்ட வாய்மூல கேள்விகள் என்ன? எழுத்துமூல கேள்விகள் என்ன? என்று பல விடயங்களை தெரிந்துகொள்ள முடியுமாக இருக்கிறது.

இவற்றை வைத்து உறுப்பினர்களுக்கான தரப்படுத்துடலும் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் விசனத்துகுறிய விடயம் என்னவென்றால், தரப்படுத்தலில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் லட்சக்கணக்கில் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் வந்தவர்களும் சிறுபான்மை இனங்களை பிரதிநித்துவப்படுத்தும் உருப்பினர்களுமேயாகும்.

இங்கு மக்களின் அதிக எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்ற முக்கிய 4 நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், சிறீதரன், சுமந்திரன், மாவை சேனாதிராசா ஆகியோரின் நடவடிக்கைகள் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளன.

2. மீள்குடியேற்றம் தொடர்பாக மொத்தம் 42 அமர்வுகள் நடந்திருக்கிறது. இதில் சம்பந்தனும் சிறீதரனும் கலந்துகொள்ளவில்லை. எனினும் மாவை சேனாதிராசா 37.5 வீதமான அமர்விலும் சுமந்திரன் 54 வீதமான அமர்விலும் கலந்துகொண்டனர்.

3. பொறுப்புக்கூறல் விடயத்தில் சம்பந்தன் 0.64 வீதமான அமர்விலும் சுமந்திரன் 34 வீதமான அமர்விலும் கலந்துகொண்டதுடன் மாவை சேனாதிராசாவும், சிறீதரனும் எந்தவொரு அமர்விலும் கலந்துகொள்ளவில்லை.

4. அடுத்து சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினை கல்வி. இது தொடர்பாக மொத்தம் 272 அமர்வுகள் நடந்திருக்கின்றன. இதில் இதில் மாவைசேனாதிராசா எந்தவொரு அமர்விலும் கலந்துகொள்ளவில்லை. இதில் சம்பந்தன் 25 வீதமான அமர்விலும், சுமந்திரன் 13 வீதமான அமர்விலும், சிறீதரன் 16 வீதமான அமர்விலும் மாத்திரமே கலந்துகொண்டனர்.

5. சுகாதாரம் தொடர்பாக மொத்தம் 52 அமர்வுகளில் சுமந்திரன் மாத்திரமே 4 வீதமான அமர்வில் கலந்துகொண்டுள்ளார்.

6. வடக்குக் கிழக்கு மாகாணத்தின் முக்கிய தொழிலான மீன்பிடித் தொழிலில் நடைபெற்ற எந்தவொரு அமர்விலும் ஒருவருமே கலந்துகொள்ளவில்லை.

 

123456

நீங்கள் பாராளுமன்றம் அனுப்பியவரின் தரப்படுத்தலை நீங்களே பார்க்கலாம் www.manthri.lk

 

http://thuliyam.com/?p=35881

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.