Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலமைச்சர் நிதியம் தடையாக தமிழர் பிரதிநிதிகள் – விக்கி (நேர்காணல்)

Featured Replies

முதலமைச்சர் நிதியம் தடையாக தமிழர் பிரதிநிதிகள் - விக்கி (நேர்காணல்)

வடக்கு முத­ல­மைச்சர் என்ற வகையில் நான் ஒன்­றுமே செய்­ய­வில்லை என்று யாருமே நினைக்­கக்­கூ­டாது. மேலும் வெளி­நாட்டில் தற்­போது இலங்கைத் தமி­ழர்­களின் பிரச்­சினை நன்­றாக விளங்­கி­யுள்­ளது. வெளிநாட்டில் இருந்து வரு­கி ற­வர்கள் எல்­லோரும், தமி­ழர்­க­ளு­டைய நிலைமை உங்­களின் முயற்­சியால் எல்லோ­ருக்கும் தெரி­ய­வ­ரு­கி­றது என்கின்றார்கள். மேலும் வெளி­நாட்­டி­லி­ருந்து இலங்கை அர­சாங்­கத்­திற்கு தமி­ழர்­களின் விட­யங்கள் குறித்து பல நெருக்­க­டிகள் ஏற்­பட்ட வண்­ண­மே­யுள்­ளன. ஆகவே, நாங்கள் முதலில் களத்தில் இறங்கி எதையும் செய்­ய­வேண்டும். அதன் பலா­ப­லன்கள் கிடைக்­கின்­ற­னவா? இல்­லையா? என்­பது குறித்து பின்னர் பார்க்­கலாம். அதையே நானும் செய்து வரு­கின்றேன். முத­ல­மைச்சர் நிதியம் குறித்து நான் இன்னும் முழு முயற்சி எடுத்து வரு­கின்றேன். ஆனால், எங்­க­ளுக்­குள்­ளேயே பல தடங்­கல்­களை ஏற்­ப­டுத்­து கின்­ற­வர்கள் இருக்­கின்­றார்கள் என்­பதை மிகவும் மன­வ­ருத்­தத்­துடன் தெரி­வித்துக் கொள்­கின்றேன்.

வட மாகாண முத­ல­மைச்சர் நிதியம் எப்­பொ­ழுதோ வெற்­றி­ய­ளித்­தி­ருக்க வேண்­டிய ஒன்­றாகும். ஆனால் இதில் சம்­பந்­தப்ப ட்­ட­வர்கள் ஒன்­றி­ணைந்து ஒத்­து­ழைப்பு வழங்­க­வில்லை. தமி­ழ­ருக்கு ஒரு சாபக்­கேடு உள்­ளது. அது என்­ன­வென்றால், ஒருவர் ஒரு நற்­கா­ரி­யத்தில் ஈடு­படும் பொழுது, மற்­று­மொ­ருவர் தன்­னு­டைய சுய இலாபம் கருதி அவ்­வி­ட­யத்தை கால தா­ம­த­மாக்­கு­வது, பிற­ருக்கு எதி­ராக குழி பறிப்­பது போன்­ற­வை­யாகும். இவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் தொடர்ந்­து­கொண்டே இருக்­கின்­றன. என்­றாலும் அந்­நி­தியம் குறித்த முழு­மு­யற்­சியை நான் எடுத்­து­வ­ரு­கிறேன்.” என்று வட­மா­காண முத­ல மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் தெரி­வித்தார்

இடம்­பெ­யர்ந்த மக்­களை பேதம் காட்டி பிரிக்­காமல் அவர்­களை மக்­க­ளாகப் பார்க்­க­வேண்டும். வடக்கில் தமி­ழர்கள் பௌத்த­ம­தத்தை பின்­பற்­றிய காலப்­ப­கு­தி­யி­லுள்ள பௌத்த சின்­னங்­களை வைத்து வடக்கில் பாரம்­ப­ரிய சிங்­க­ளக்­கு­டி யேற்­றங்கள் இருந்­த­தாக காட்ட முனை­கின்­றனர். என்றும் அவர் சொன்னார்.

அவருடைய செவ்வி வருமாறு:

கேள்வி: மீள்­கு­டி­யேற்ற புனர்­வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தலை­மை யில் வடக்கு, கிழக்கு மாகா­ணத்தில் மீள்கு­டி­யேற்றம் சம்­பந்­த­மாக ஜனா­தி­பதி குழு­ வொன்றை நிய­மித்­துள்ளார். இந்த குழுவில் வட மாகாண முத­ல­மைச்­ச­ரா கிய நீங்கள் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை. மாறாக வட மாகாண செய­லா­ளரே நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். இது தொடர்­பாக உங்­க ளது கருத்து என்ன?

பதில்: அமைச்­சர்­க­ளான டி.எம். சுவா­மி­நாதன், ரிஷாத் பதி­யூதீன், பைசர் முஸ்­தப்பா, ஆகி­யோரைக் கொண்ட குழு வொன்றை அமைத்து சிங்­களம் மற்றும் முஸ்­லிம்­களின் மீள் குடி­யேற்ற இடங்கள் குறித்து நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார். மேலும் அதில் ஜனா­தி­பதி, வட­மா­கா­ணத்­தி­லுள்ள பாரம்­ப­ரிய சிங்­களக் குடி­யேற்­றங்­க ளையும் திரு­கோ­ண­மலை மாவட்­டத்­தையும் உள்­ள­டக்­கு­மாறு அதில் குறிப்­பி­ட்­டுள்ளார். இது நேர­டி­யாக எனக்கு அனுப்பி வைக்­கப்­ப­ட­வில்லை. தலைமைச் செய­லாளர் இதைக் கொண்­டு­வந்து என்­னிடம் தந்தார். நான் இதைப் ­பார்த்­த­வுடன் இதனால் பல பின்­வி­ளை­வுகள் ஏற்­படக் கூடும் என அறிந்­து­கொண்டு உடனே உரிய அமைச்­சர்­க­ளிடம் இது குறித்துப் பேசினேன். அவர்கள் இது குறித்து ஒரு சந்­திப்­பொன்றை ஏற்­பாடு செய்து அதில் இந்த விட­யத்தை நேர­டி­யா­கவே பேசு­வ தென்று முடி­வுக்கு வந்­தனர்.

அதா­வது இன்னும் எமது தமிழ் மக்கள், தங்­க­ளது சொந்த இடங்­களில் மீள் குடி­யேற்­றப்­ப­டா­ம­லி­ருக்கும் நிலையில் ஏனை யோரை மீள்­கு­டி­யேற்­று­வது குறித்து எவ்­வாறு சிந்­திக்­க­மு­டியும்?

மேலும் அதில் பாரம்­ப­ரிய சிங்­களக் குடி­யேற்­றங்கள் குறித்தும் கவனம் செலுத்­தும்­படி கூறப்­பட்­டி­ருந்­தது. வட­மா­கா ணத்தில் எங்கு பாரம்­ப­ரிய சிங்­களக் குடி­யேற்­றங்கள் இருந்­தன?

ஆரம்­பத்தில் வட­மா­கா­ணத்தில் தமிழ் பௌத்­தர்கள் வாழ்ந்து வந்­துள்­ளார்கள். அவர்கள் வாழ்ந்­த­தற்­காக வர­லாற்றுச் சான்றுகள் மற்றும் சின்­னங்­களும் இங்­குண்டு. அதற்­குப்பின் பல நூற்­றாண்­டுகள் கழித்தே இந்த சிங்­கள மொழி இங்கு பரவத் தொடங்­கி­யது. இது சம்­பந்­த­மாக பேரா­சி­ரியர் சுனில் ஆரி­ய­ரட்ண “தெமள பௌத்­தயோ” என்ற புத்­த­க­மொன்­றையும் எழு­தி­யுள்ளார்.

ஆகவே வடக்கில் தமி­ழர்கள் பௌத்த மதத்தை பின்­பற்­றிய காலப்­ப­கு­தி­யி­லுள்ள பௌத்த சின்­னங்­களை வைத்து வடக்கில் பாரம்­ப­ரிய சிங்­களக் குடி­யேற்­றங்கள் இருந்­த­தாகக் காட்ட முனை­கின்­றார்கள். இது பின்னர் பார­தூ­ர­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்­தக்­கூடும் என்று கூறி­யதை பலர் ஏற்­றுக்­கொண்­டார்கள். சில கருத்­துக்­களில் எங்­க­ளுடன் முரண்­படும் சிங்­கள உறுப்­பினர் கூட, மீள்­கு­டி­யேற்றம் என்ற விட­யத்தில், தமிழ், முஸ்லிம், சிங்­களம் என்ற பேதம் பார்க்­காது அவர்­களை அந்தந்த இடத்தில் மீள்­கு­டி­ய­மர்த்­து­வதே சிறந்­தது என்­றனர். ஆகவே, எந்தக் கார­ணத்துக்­காக இந்­தக்­கு­ழுவை அமைத்­தார்களோ தெரி­ய­வில்லை. ஆனால் நாங்கள் இதற்கு எதிர்ப்புத் தெரி­வித்­துள்ளோம்.

கேள்வி: இது குறித்து உங்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்த தயா­ரா­க­வுள்­ள­தாக அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் கூறி­யி­ருந்தாரே?

பதில்: ஆம். பேச்­சு­வார்த்தை எப்­பொ­ழுதும் நடத்­த­மு­டியும். ஆனால் இடம் பெயர்ந்த மக்­களை பேதங்­காட்டிப் பிரிக்­காமல் அவர்­களை மக்­க­ளாகப் பார்க்க வேண்டும் என்­பதே எங்­க­ளது நிலைப்­பாடு. அத்­துடன் இடம்­பெ­யர்ந்த மக்­களை அந்­தந்த இடங்­களில் பேதங்கள் பார்க்­காது குடி­ய­மர்த்த வேண்டும் என்­பது ஐக்­கிய நாடுகள் அமைப்­பினால் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கின்ற ஒரு கொள்­கை­யாகும்.

கேள்வி: வட­மா­கா­ணத்தின் முத­ல­மைச்சர் என்ற வகையில் நீங்கள் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை நன்கு அறிந்த ஒருவர். அதனால் நீங்கள் தமிழ் மக்­க­ளுக்­காக சில கடு­மை­யான நட­வ­டிக்­கை­க­ளையும் எடுத்­து­வ­ரு­கி­றீர்கள். சிலர் நீங்கள் கடும் போக்கில் செயற்­ப­டு­வ­தாக விமர்­சிக்­கின்­றார்கள். ஆனாலும் உங்­க­ளு­டைய முத­ல­மைச்சர் நிதியம் ஆரம்­பிப்­பது தொடக்கம் இந்தச் செயற்­பா­டுகள் வரை எந்­த­ளவு தூரம் வெற்­றி­ய­டைந்­துள்­ளன?

பதில்: வட மாகாண முத­ல­மைச்சர் நிதியம் எப்­பொ­ழுதோ வெற்­றி­ய­ளித்­தி­ருக்­க­வேண்­டிய ஒன்­றாகும். ஆனால் இதில் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் ஒன்­றி­ணைந்து ஒத்­து­ழைப்பு வழங்­க­வில்லை. தமி­ழ­ருக்கு ஒரு சாபக்­கேடு உள்­ளது. அது என்­ன வென்றால், ஒருவர் ஒரு நற்­கா­ரி­யத்தில் ஈடு­படும் பொழுது, மற்­று­மொ­ருவர் தன்­னு­டைய சுய இலாபம் கருதி அவ்­வி­ட யத்தை கால­தா­ம­த­மாக்­கு­வது, பிற­ருக்கு எதி­ராக குழி பறிப்­பது போன்ற செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­கின்­றனர். இவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் தொடர்ந்­து­கொண்டே இருக்­கின்­றன.

நாங்கள் முன்­வைக்­கின்ற கோரிக்­கையை ஏற்­றுக்­கொள்­ளாத பட்­சத்தில் கேட்­டுள்­ள­வற்றில் சில­வற்றைக் குறைத்து ஏனை­ய­வற்றை கேட்கக் கூடாது. அவ­சி­ய­மா­ன­வை களைக் கேட்­க­வேண்டும். அவர்கள் ஒரு­ வேளை தரா­விட்டால் அதற்கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­கலாம்.

அதே­வேளை வடக்கு முத­ல­மைச்சர் என்ற வகையில் நான் ஒன்­றுமே செய்­ய­வில்லை என்று யாருமே நினைக்­கக்­கூ­டாது. மேலும் வெளி­நாட்டில் தற்­போது இலங்கைத் தமி­ழர்­களின் பிரச்­சினை நன்­றாக விளங்­கி­யுள்­ளது. வெளி­நாட்டில் இருந்து வரு­கி­ற­வர்கள் எல்­லோரும், தமி­ழர்­க­ளு­டைய நிலைமை உங்­களின் முயற்­சியால் எல்­லோ­ருக்கும் தெரி­ய­வ­ரு­கி­றது என்கின்­றார்கள். மேலும் வெளி­நாட்­டி­லி­ருந்து இலங்கை அர­சாங்­கத்­திற்கு தமி­ழர்­களின் விட­யங்கள் குறித்து பல நெருக்­க டிகள் ஏற்­பட்ட வண்­ண­மே­யுள்­ளன.

ஆகவே, நாங்கள் முதலில் களத்தில் இறங்கி எதையும் செய்­ய­வேண்டும். அதன் பலா­ப­லன்கள் கிடைக்­கின்­ற­னவா? இல்லையா? என்­பது குறித்துப் பின்னர் பார்க்­கலாம். அதையே நானும் செய்து வரு­கின்றேன். முத­ல­மைச்சர் நிதியம் குறித்து நான் இன்னும் முழு முயற்சி எடுத்து வரு­கின்றேன். ஆனால் எங்­க­ளுக்­குள்­ளேயே பல தடங்­கல்­களை ஏற்­ப­டுத்­து கின்­ற­வர்கள் இருக்­கின்­றார்கள் என்­பதை மிகவும் மன­வ­ருத்­தத்­துடன் தெரி­வித்துக் கொள்­கின்றேன். இதனால் தான் தாம தங்கள் ஏற்­ப­டு­கின்­றன. எங்­க­ளு­டைய மக்கள் எதையும் செய்­யட்டும் என்று நாங்கள் வாயை மூடிக்­கொண்­டி­ருக்க முடி யாது. அத்­துடன் அர­சாங்­கத்­தையும் நாங்கள் எந்­நே­ரமும் குறை சொல்­லிக்­கொண்­டி­ருக்­கவும் முடி­யாது. அத்­துடன் எங்கள் அழுத்­தங்­களால் காணிகள் கொஞ்சம் கொஞ்­ச­மாக விடு­விக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. இரா­ணுவப் பிர­சன்னம் குறைக்­கப்­பட்டு வரு­கின்­றது. ஆகவே முன்­னேற்­றங்கள் ஏற்­பட்­டுக் ­கொண்­டே­யி­ருக்­கின்­றன.

கேள்வி: அண்­மையில் 201 ஏக்கர் நிலம் விடு­விக்­கப்­பட்­டுள்­ளது? அந்த நிலப்­ப­ரப்­பி­லுள்ள கிட்­டத்­தட்ட அறு­பது வீடு­களில் பொலிஸார் நிலை கொண்­டி­ருக்­கின்­றனர். அந்த பொலிஸார் அந்த அறு­பது வீடு­க­ளுக்கும் காணி உறுதி கொண்­டு­வ­ரும்­படி கேட்­டி­ருக்­கின்­றார்கள். அறு­பது வீடு­க­ளையும் விடு­விப்­ப­தற்­காக காணி உறுதி கேட்­ப­தற்கு பொலி­ஸா­ருக்கு என்ன அதி காரம் இருக்­கி­றது? இது குறித்து தாங்கள் கவனம் வெலுத்­த­வில்­லையா?

பதில்: ஆம். இது­கு­றித்து நான் கட்­டா­ய­மாகப்பேச­வேண்டும். இன்னும் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அது குறித்து தெரி­ய­வ­ர வில்லை. அந்த மக்­க­ளிடம் காணி உறுதி இருக்­கின்­றதா? இல்­லையா? என்று கேட்­ப­தற்கு சிவில் அதி­கா­ரி­க­ளுக்கே அதி காரம் உண்டு. பொலிஸார் குடி­யி­ருக்­க­வேண்­டு­மானால் அர­சாங்க காணிகள் உண்டு. அங்கு சென்று வீடு­களை அமைத்து குடி­யி­ருக்­கலாம். அதை­விட்டு பொது­மக்கள் கைவிட்டுச் சென்ற வீடு­களில் குடி­யி­ருந்­து­கொண்டு அவர்­க­ளிடம் காணி உறு­திப்­பத்­தி­ரத்தை எவ்­வாறு கேட்­க­மு­டியும்?

கொடூர யுத்­தத்­தின்­போது வீட்டை விட்டு உயிரைக் கையில் பிடித்­துக்­கொண்டு ஓடி­ய­வர்கள் காணி உறுதிப் பத்­தி­ரத்தை யும் எடுத்துக் கொண்டா செல்­வார்கள்? இது அனை­வ­ருக்கும் தெரிந்த விடயம். அவர்­க­ளு­டைய காணி உறு­தி­யைப்­பற்றி காணி ஆணை­யாளர் நட­வ­டிக்கை எடுப்பார். இதையே சாட்­டாக வைத்­துக்­கொண்டு பொலி­ஸா­ரா­கவோ அல்­லது வேறு யாரா­கவோ இருந்­தாலும் பொது­மக்கள் காணி­க­ளிலும் வீடு­க­ளிலும் அத்­து­மீறி குடி­யி­ருப்­பது தவ­றா­ன­தாகும்.

கேள்வி: இன்­னமும் இந்த அவலம் தொடர்ந்த வண்ணம் உள்­ளது. ஆகவே இது குறித்து யார் நட­வ­டிக்கை எடுப்­பது? இதற்கு என்ன தான் தீர்வு?

பதில்: இது தொடர்பில் ஆளு­நரின் பிர­தி­நிதி சில நட­வ­டிக்கை எடுத்­துக்­கொண்­டி­ருக்­கின்றார். அவர்­க­ளுக்­கி­டையே கருத்துப் பரி­மாற்­றங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன.

கேள்வி: முத­ல­மைச்சர் நிதியம் அமைக்­கப்­பட்டால் அந்த நிதி­யத்­திற்கு புலம்­பெ­யர்ந்த தமிழ் அமைப்­பு­க­ளி­ட­மி­ருந்து நிதி திரட்­டப்­பட்டு வேலை­வாய்ப்பு வழங்கும் வகையில் தொழிற்­சா­லைகள் அமைக்­கப்­ப­டுமா?

பதில்: எம்­மிடம் அந்த எதிர்ப்­பார்ப்பு உள்­ளது. ஆனால் அது எந்­த­ள­விற்கு சாத்­தி­யப்­படும் என்று தெரி­ய­வில்லை. எவ்­வா­றெ ­னினும் நாம் இது தொடர்பில் பொறுத்­தி­ருந்­துதான் பார்க்­க­வேண்டும்.

கேள்வி: புலம்­பெயர் தமிழ் அமைப்­புக்­க­ளிடம் நிதி திரட்­டு­தலில் போட்­டித்­தன்மை நில­வு­கின்­றது. மத்­திய அரசும் புலம்பெயர் தமிழ் அமைப்­பு­க­ளிடம் நிதி­கோரி பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. பிர­தமர் சமீ­பத்தில் சிங்க ப்பூர் சென்று இது­கு­றித்து பேச்­சு­வார்த்தை மேற்­கொண்­டி­ருந்தார். மற்றும் மங்­கள சம­ர­வீர இலண்­ட­னி­லுள்ள தமிழ் அமைப்­பிடம் சென்று நிதி தொடர்­பாக பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். இது தொடர்பில் உங்­க­ளு­டைய நிலைப்­பாடு என்ன?

பதில்: தமிழ் மக்­க­ளுக்கு கிடைக்­க­வேண்­டி­ய­வற்றை தாம் பெற்­றுக்­கொள்ள பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மத்­திய அரசு மேற்­கொண்­டு­வ­ரு­கி­றது. இது எங்­க­ளுக்குத் தெரியும். நான் வட­மா­கா­ணத்­திற்கு முதல்­வ­ராக வந்த போது ஜேர்­ம­னி­யி­லி ருந்து ஒருவர் வட­மா­கா­ணத்தில் முத­லீடு செய்ய முன்­வந்­த­போது மத்­திய அரசின் பிர­தி­நி­தி­யொ­ருவர் குறுக்­கிட்டு நீங்கள் என்ன வட மாகா­ணத்­திற்கு மாத்­திரம் முத­லீடு செய்­கின்­றீர்கள். மத்­திய அரசும் இருக்­கின்­ற­தல்­லவா? ஆகையால் எமக்கு 40சத­வீதம் வரை முத­லீடு செய்­து­விட்டு மிகு­தியை வட­மா­கா­ணத்­திற்கு கொண்­டு­செல்­ல­லா­மென பேரம் பேசி­யுள்ளார்.

அதற்கு பின்னர் அந்த முத­லீடு கம்­போ­டியா நாட்­டுக்கு சென்­று­விட்­டது. எனவே இவ்­வாறு போட்டி, பொறாமை தொடர்ந்தால் நாட்டில் நல்­லெண்ணம் மல­ராது.

கேள்வி: வட மாகா­ணத்தில் வேலை­யில்லாப் பட்­ட­தா­ரி­களின் பிரச்­சினை நாளுக்கு நாள் தொடர்ந்­த­வண்ணம் உள்­ளது. சமீ­பத்தில் கூட வட­மா­காண சபைக்கு முன்னால் போராட்­ட­மொன்றை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். இது தொடர்பில் உங்­க­ளு டைய நிலைப்­பாடு என்ன?

பதில்: உண்­மையில் அவர்கள் பாவம். அவர்­க­ளுக்கும் பல­வி­த­மான பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன. கடந்த காலங்­க­ளி­லி ருந்தே யாழ்ப்­பா­ணத்தில் வேலை­யில்லாப் பட்­ட­தா­ரிகள் தங்­க­ளுக்கு உரிய வேலை­வாய்ப்­புகள் இன்றி தவித்து வரு கின்றார்கள். எனினும் அவர்­க­ளது தகை­மைக்கு ஏற்ற வகையில் வேலை­வாய்ப்­புகள், வெற்­றி­டங்கள் இருக்­க­வேண்டும். நாம் இதற்­காக நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்றோம். எனினும் எமக்­கான நெறிப்­ப­டுத்­தல்கள் மத்­திய அர­சி­ட மி­ருந்து கிடைக்­க­வில்லை.

கேள்வி: பட்­ட­தாரி ஆசி­ரிய வெற்­றி­டங்கள் யாழ். குடா­நாட்டு பாட­சா­லை­களில் இருக்­கின்­ற­னவா?

பதில்: சில இடங்­களில் வெற்­றி­டங்கள் இருக்­கின்­றன. அது தொடர்பில் நாம் நட­வ­டிக்கை எடுத்­துள்ளோம். முழு­மை­யாக எந்­த­ள­வுக்கு வெற்­றி­டங்கள் இருக்­கின்­றன என்­பது தொடர்பில் எனக்கு சரி­யாகத் தெரி­யாது. அது தொடர்பில் தக­வல்க ளைப் பெற்­றுக்­கொள்­ளவும் நட­வ­டிக்கை எடுத்­துள்ளேன். முழு­மை­யாக காணப்­படும் வெற்­றி­டங்கள் தொடர்பில் அறிந்­து கொண்ட பின்னர் அந்த வெற்­றி­டங்­க­ளுக்கு பட்­ட­தா­ரி­களை நிய­மிப்­பது குறித்து நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும். ஆனால் இதில் ஒரு பிரச்­சினை இருக்­கின்­றது. சிற்­சில பிர­தேச பாட­சா­லை­களில் அள­வுக்கு அதி­க­மாக ஆசி­ரி­யர்கள் பணியில் இருக்­கின்­றார்கள். சில இடங்­களில் குறை­வாக இருக்­கின்­றார்கள். அங்கு பட்­ட­தா­ரி­களை பணிக்கு அனுப்பி னால், அது பின்­தங்­கிய கிராமம், அங்கு இருப்­ப­தற்கு உரிய வச­திகள் இல்லை, போக்­கு­வ­ரத்து வச­திகள் இல்லை இப்­படி ஏதா­வது கார­ணத்தை சொல்லி அனை­வரும் தயங்கி நிற்­கின்­றார்கள். ஆகவே இங்கு பல­வி­த­மான பிரச்­சி­னைகள் இருக்கி ன்­றன. தற்­போது இவ்­வாறு போராடி வரு­ப­வர்­களும் வேலை கிடைத்­த­வுடன் வேலை சரி­யில்லை என்று ஏதா­வது ஒரு காரணம் கூறு­கின்­றார்கள். உண்­மையில் இங்கு உள்ளூர் கிரா­மங்­களில் ஆசி­ரிய வெற்­றி­டங்கள் இருக்­கின்­றன. அந்த வெற்­றி­டங்­களை நிரப்ப வேண்­டிய அவ­சியம் எமக்கு இருக்­கின்­றது. அது தொடர்­பிலும் நாம் நட­வ­டிக்­கையெ­டுத்து வரு கின்றோம்.

கேள்வி: கடந்த காலங்­களில் அர­சியல் ரீதி­யாக, கட்சி ரீதி­யாக, பல்­வேறு சவால்­களை எதிர்­கொண்­டி­ருந்­தீர்கள். இது தொடர்பில் உங்­களைப் பற்­றிய விமர்­ச­னங்கள் பர­வ­லாக எழுப்­பப்­பட்­டன. மக்­க­ளி­டை­யேயும் பல்­வேறு விமர்­ச­னங்கள் எழுந்­தன. தற்­போது அவ்­வி­மர்­ச­னங்­க­ளை­யெல்லாம் எதிர்­கொண்டு வெற்றி கண்­டுள்­ளீர்­களா? அது­பற்றி கூற­மு­டி­யுமா?

பதில்: நான் இவற்றை வெற்றி, தோல்­வி­யென்று பார்ப்­ப­தில்லை. என்னை சிலர் நண்­பர்­க­ளாக பார்க்­கின்­றார்கள், சிலர் எதி­ரி­க­ளாகப் பார்க்­கின்­றார்கள். ஆனால் நான் யாரையும் நண்­பர்­க­ளா­கவோ அல்­லது எதி­ரி­க­ளா­கவோ பார்ப்­ப­தில்லை. அனை­வ­ரையும் மனி­தர்கள் என்ற வகையில் அர­வ­ணைத்­துக்­கொண்டே செயற்­பட்டு வரு­கின்றேன். என்னை எதி­ரி­யாகப் பார்ப்­பவ­ரி­டமும் நான் நன்­றாக பேசிப் பழ­கு­கின்றேன். யார் என்­மீது பழி சுமத்­தி­னாலும் விமர்­ச­னங்­களை கூறி­னாலும் நான் அவற்றை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. இதுவே என்னுடைய சுபாவம்.

இதுவரை காலமும் சிலர் தமது சுய நலன்களுக்காக நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்ததும் உண்மை. நான் பொது நன்மைக்காக நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தமையும் உண்மை. இந்த விவகாரங்களின் மூலமாக பலரிடையே சில கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் வந்ததும் உண்மை. எனக்குரிய காலம் வரும் வரை என்னுடைய போக்கில் நான் போய்க்கொண்டு இருப்பேன். என்னிடம் சுயநலம் இல்லை. என்னிடம் எல்லாமே இருக்கின்றது. எனக்கு இந்த உலகில் எதுவுமே தேவையில்லை. ஆகவே சுயலாபம் கருதி நான் தனித்து எதையும் செய்யப்போவதில்லை. மக்களின் நலன் கருதி அவர்களுக்கு வேண்டியதை சிந்தித்து அவர்களுக்காக செயற்பட்டு வருகின்றேன்.

கேள்வி: ஏனைய மாகாண சபைகளின் எதிர்க்கட்சி தலைவர்களை விட வட மாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவர் உங்களுடன் சுமுகமான போக்கை கடைப்பிடித்து வருகிறார். அத்துடன் பலவிடயங்களில் நீங்கள் இருவரும் ஒத்த கருத்துக்களையே கொண் டிருக்கின்றீர்கள். இது சம்பந்தமாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: இது எமக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். நான் ஏதாவது தவறிழைத்தால் அவர் அது குறித்து சுட்டிக் காட்டுவார். அது அவருடைய கடமை. அதேசமயம் அவருடன் சில விடயங்களில் முரண்படுவதும் உண்மை. ஆனால் கொள்கை தொடர்பாகவோ தமிழ் மக்கள் நலன் தொடர்பாகவோ எம்மிருவரிடையே கருத்து முரண்பாடுகள் இருந்ததில்லை. அதனாலேயே நாம் எடுக்கும் சில முடிவுகளுக்கு அவர் பூரண ஆதரவைத் தருகிறார். கட்சி ரீதியாக எமக்கிடையே முரண்பாடுகள் இருந்தாலும் வடமாகாண மக்களின் வருங்காலம் சம்பந்தமாக கொள்கை ரீதியாக எங்களுக்குள் சிறந்த புரிந்துணர்வு இருக்கின்றது.

நன்றி: வீரகேசரி

http://thuliyam.com/?p=36182

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.