Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தரப்பு; மக்களை ஏமாற்றுவதைவிட்டு அரசை பொறுப்புக்கூற வைக்கவேண்டும்! (கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்து)

Featured Replies

11119.jpg

தமிழ் தரப்புகள் வெற்றுக்கோசங்களை எழுப்பி மக்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டு  இந்த அரசை பொறுப்புக்கூற வைக்க வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 

ஒரு அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் போது  அதை குழப்புவற்கும் அப்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தை தப்பிக்கும் வகையிலும் தென்னிலங்கையில் உள்ள எதிர் அரசியல் கட்சிகள் பாதயாத்திரை போரா ட்டங்கள் என்பவற்றை மேற்கொள்வது தென்னிலங்கை அரசியலில் காலம்காலமாக நடைபெற்று வருகின்ற ஒன்று. 

அதே போன்று தமிழ் மக்களுக்கு நீதியின் அடிப்படையில் கிடைக்க வேண்டிய உரிமைகளை தமிழ் மக்களுக்கு கிடைக்காமல் செய்வதும். இன்னொரு வகையில் சிங்கள மக்கள் மத்தியில் கூடுதலாக தமது செல்வா க்கை வளர்த்துக்கொள்ளும் வகையிலும் ஆட்சியில் இருந்த தரப்புக்களும் சிங்கள எதி ர்க்கட்சிகளும் செயற்பட்டு வந்தன. 

அந்த பின்னணியில்தான் மகிந்த ராஜபக்சவின் பாதயாத்திரை அமைந்துள்ளது என  தமிழ் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இது நடைபெறும் என அனைவரும் எதிர்பார்த்த ஒன்று.
 இந்த நிலையில் மகிந்த ராஜபக்சவை மாத்திரம் ஒரு காரணமாக காட்டி தற்போதுள்ள அரசு  செய்ய வேண்டிய விடயங்களை செய்யாமல் இருப்பதில் இருந்து இந்த அரசை தமிழ் தரப்பு காப்பாற்ற போகிறதா? தமி;ழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய விடயங்களை கைவிடப்போகிறதா என்பது தான் எமது கேள்வியாகவுள்ளது.

மகிந்தவின் பாதயாத்திரையை முறியடிக்க வேண்டும் என தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூறுகிறார். ஆனால் ராஜபக்சவை காப்பாற்றி இருப்பது இந்த அரசாங்கம்தான்.
ராஜபக்சவை மக்கள் தோற்கடிப்பதற்கான காரணம் இன அழிப்புக்கு பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு என்பவற்றை அடைவதற்கு முற்றுமுழுதாக நிராகரித்த காரணத்தால் அவரை வெறுக்கிறார்கள். ஆனால் இப்போதுள்ள அரசாங்கம் அதே விடயத்தில் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது? என்பதை சிந்திக்க வேண்டும். 

ராஜபக்சவை ஆதரிப்பதில்லை என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. ஆனால் தொடர்ந்து அவரை சுட்டிக்காட்டி இன்றைய அரசை பொறுப்புக்கூற வைக்கிறோமா?  என்பதை சிந்திக்க வேண்டும். 

இந்த பொறுப்புக்கூறல் என்ற விடயத்தில் உள்ளக விசாரணைக்குள் கொண்டு சென்று தமிழ் மக்களின் இன அழிப்புக்கான பொறுப்புக்கூறலை முடக்கியுள்ளது. 
ஐ.நா தீர்மானம் வலியுறுத்தப்பட்ட போது சர்வதேச பங்களிப்பை சேர்த்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் இன்றைய அரசு தமது சிங்கள மக்களுக்கு உள்ளக விசாரணைதான் என வாக்குறுதிகளை வழங்கி வருகிறது. அத்துடன் ஒற்றையாட்சி முறைக்குள் தீர்வு என்பதையும் மிகத்தெளிவாக கூறி வருகிறது. 
இன்றைய அரசு தமது பங்காளி கட்சிகளுடன் ஒப்பந்தங்கள் கைச்சாத்திட்டுள்ளது. அந்த நிலையில்  மகிந்த கடந்த காலத்தில் எடுத்த நிலைப்பாட்டுக்கும். இன்றைய அரசு எடுக்கும் நிலைப்பாட்டுக்கும் இடையிலான வேறுபாடுகளை அரசை காப்பாற்ற வேண்டும் என நினைக்கும் தரப்புகள் பதில் சொல்ல வேண்டும் .
 
இந்த அரசு தமது சொந்த மக்களுக்கு பல தடவை வாக்குறுதி கொடுத்துள்ளார்கள். அதாவது  ராஜபக்ச குடும்பத்தையும் இராணுவத்தையும் குற்ற விசாரணையில் இருந்து காப்பாற்றுவதாக கூறியுள்ளது. தீர்வுத்திட்டம் தொடர்பாக தமிழருக்கு நியாயமான தீர்வு கிடைக்க கூடாது என வலியுறுத்தி  பாதயாத்திரை செய்ய இந்த அரசுதான் இடத்தை கொடுத்துள்ளது. இந்த அரசு தமிழ் மக்களுக்கான தீர்வை கொடுப்பதற்கு தயாரில்லை .

ராஜபக்சவின் பிழைகளை சுட்டிக்காட்டு வது மட்டுமான அரசியலை விட்டுவிட்டு உண்மையில் தாம் விரும்பி நிபந்தனை இல்லாத ஆதரவு கொடுத்து இந்த அரசை  ஆட்சிக்கு கொண்டு வந்த தமிழ் தரப்புகள் இந்த அரசை பொறுப்புக்கூற வைக்க வேண்டும் என்பது எமது கோரிக்கை. 
நிபந்தனை இல்லாத ஆதரவை கொடுத்து அரசை தக்க வைப்பது கூட்டமைப்புதான். அரசை காப்பாற்றுவதும் கூட்டமைப்புதான்.

தேர்தலின் போது பல வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன ராஜபக்சவை பொறுப்புக்கூற வைப்பதற்கு ஆட்சி மாற்றம் அவசியம் என கூறினார்கள். தற்போது நேர்மாறாக நடக்கிறார்கள். அரசியல் கைதிகள் விடுதலை கூறப்பட்டது நீதவான் விடுவிக்கும் நிலையிலும் வழக்குகளை மாற்றி தடுத்து வதைத்துள்ளார்கள். 
பொறுப்புக்கூறல் பிரிவினரை தப்ப வைப்பதும் கடந்த கால ஆட்சியாளர்களை மட்டும் குறை கூறுவதை இனி நிறுத்தி இக் கூட்டமைப்பு செயற்பட முன்வரவேண்டும். அதை செய்ய மக்கள் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும். அரசியல் தீர்வு மற்றும்  பொறுப்புக்கூறல் தொடர்பாக சரியான  தீர்வை அடைய முழுமையான சர்வதேச விசாரணை மேற்கொள்ளவதன் மூலமே அதை அடைய முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.   

http://www.valampurii.lk/valampurii/content.php?id=11119&ctype=news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.