Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரனைமடு புத்த விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து செப்ரெம்பர் ஏழாம் திகதி மாவட்டம் தழுவிய போராட்டம்:

Featured Replies

இரனைமடு புத்த விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து செப்ரெம்பர் ஏழாம் திகதி மாவட்டம் தழுவிய போராட்டம்:

 

 
கிளிநொச்சி இரனைமடு கனகாம்பிகை அம்மன் கோவில் ஆலயத்திற்கு மிக அருகில்  மிகப்பெரிய புத்த விகாரை அமைப்பது,மற்றும் ஆலயத்தின் மூன்றாவது வீதியை ஆக்கிரமித்து விகாரைக்கான சுற்று மதில் அமைத்தல் போன்ற செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவி;த்து எதிவரும் மாதம் ஏழாம் திகதி கிளிநொச்சி மாவட்டம் தழுவிய ரீதியில் மாபெரும் ஜனநாயக வழியிலான பேராட்டம் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
13-08-2016 சனிக்கிழமை கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
 
இரனைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் மூன்றாவது வீதியை ஆக்கிரமித்து படையினர் புத்த விகாரைக்கான மதிலை அமைத்து வரும் அதேவேளை ஆலயத்திற்கு மிக அருகில் மிகப்பெரிய விகாரை அமைக்கும் பணியினையும் வேகமாக முன்னெடுத்து வருகின்றனர்.
 
வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஆலயத்தின் அருகில் இவ்வாறு விகாரை அமைப்பது மக்கள் மத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே இது தொடர்பிலலான செய்திகள் ஊடகங்களில் வெளியானதனை தொடர்ந்து பல்வேறு மட்டங்களில்  அதிர்வலையை ஏற்படுத்தியது. கிளிநொச்சியில் மாத்திரமன்றி வடக்கு கிழக்கில் உள்ள சிறப்பு மிக்க இந்து ஆலயங்களுக்கு  அருகில் இவ்வாறு விகாரை அமைப்பது தொடர்ந்தவண்ணம் உள்ளது.
 
 எனவேதான் இதற்கான எதிர்ப்பினை வெளிப்படுத்தும்  நோக்கில் தமிழ்த் தேசிய மக்கள்  முன்னணி பகிரங்க கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைத்திருந்தது. இந்தக் கலந்துரையாடலின் போதே கிளிநொச்சியில் மாவட்டம் தழுவிய ரீதியில் மாபெரும் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை மெற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தப்  போராட்டமானது எதிர்வரும் 07-09-2016 மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
 
மாவட்டம் தழுவிய ரீதியில் திட்டமிட்ட சிங்கள பௌத்த மையமாக்கலுக்கு எதிராக அனைத்து அமைப்புகள், பொது மக்கள் ஆகியோர் இணைந்து இரனைமடு அம்மன் ஆலயத்தில் இருந்து கிளிநொச்சி மாவட்டச் செயலகம்  வரை பேரணியாக சென்று எதிர்ப்பினை வெளிப்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
இந்தக் கலந்துரையாடலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ்பிறேமசந்திரன், மு.சந்திரகுமார், கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.