Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல்போனோர் அலுவலகம் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது- பிரித்தானியா

Featured Replies

காணாமல்போனோர் அலுவலகம் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது- பிரித்தானியா:



காணாமல்  போனோர் அலுவலகம் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

அண்மையில் இலங்கையில் காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது நல்லிணக்கப் பாதையின் முக்கிய நகர்வாக கருதப்பட முடியும் என பிரித்தானியா சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த அலுவலகம் ஊடாக காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினர்களுக்கு நன்மை ஏற்படும் என தெரிவித்துள்ளது.

தாம் நேசித்தவர்களுக்கு என்னவாயிற்று என்பதனை அறிந்து கொள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு ஓர் சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும், இதன் ஊடாக நல்லிணக்கத்தை வலுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

ஆயிரக் கணக்கான முறைப்பாடுகள் தொடர்பில் அலுவலகம் நடவடிக்கை எடுக்கும் போது சவால்களை எதிர்நோக்க நேரிடும் என்பதனை ஒப்புக்கொளவ்தாக பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134919/language/ta-IN/article.aspx

காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் வரவேற்கப்பட வேண்டியது – க்ளோபல் தமிழ் போரம்

 

காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் வரவேற்கப்பட வேண்டியது – க்ளோபல் தமிழ் போரம்:-



காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் வரவேற்கப்பட வேண்டியது என க்ளோபல் தமிழ் போராம் அமைப்பு அறிவித்துள்ளது.

குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் நீதியை நிலைநாட்டுதல் ஆகியன தொடர்பிலான முதல் கட்ட நடவடிக்கையாக இந்த சட்ட அமுலாக்கத்தை கருத முடியும் என தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் எடுத்துள்ள மிக முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாக இதனைக் கருதுவதாகத் தெரிவித்துள்ளது.
இந்த சட்டம் உரிய முறையில் அமுல்படுத்தப்பட்டால் காணாமல் போன ஆயிரக்கணக்கானவர்களின் குடம்ப உறுப்பினர்களுக்கு நன்மை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளது.

இந்த சட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியனவற்றின் ஆதரவு கிடைக்கப்பெற்றமை வரவேற்கப்பட வேண்டியது என தெரிவித்துள்ளது.


எவ்வாறெனினும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்ள இதுவரையில் திடமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ளது.

காணாமல் போனோர் அலுவலகம் சட்டத்தை நிறைவேற்றியதனைப் போன்றே ஏனைய நல்லிணக்க முனைப்புக்களையும் தீவிரப்படுத்துமாறு க்ளோபல் தமிழ் போராம், இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134918/language/ta-IN/article.aspx

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.