Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீவகத்தை வேரறுத்த இராணுவ ஆக்கிரமிப்பு

Featured Replies

11408.jpg

எங்கள் தீவகப் பெருநிலம் இன்று ஆட்களின் ஆரவாரமின்றி இனம்புரியாத சோகத்துடன் இருப்பதை அங்கு செல்பவர்கள் உள்ளூர உணர்ந்திருப்பர்.தன்னுறவு மீளவும் வரவில்லையே என்ற வேதனைதான் தீவகத்தின் பொலிவிழப்புக்குக் காரணமென்று கூடச்சொல்லலாம்.

யாழ்ப்பாணத்தின் தென்பால் அமைந்த தீவகம் ஒரு அற்புதமான பிரதேசம். விருந்தோம்பல் உபசாரம், உறவுகளைப் பேணும் உன்னதம், இன்சொல்லால் வரவேற்கும் இங்கிதம், சமூகத்தை மதிக்கும் பெருந் தன்மை, மொழிப்பற்று, ஆன்மிக சிந்தனை என மனித வாழ்வுக்குத் தேவையான அத்தனை விழுமியப் பண்பாடுகளையும் கொண்ட பிரதேசமாக தீவக மண்ணை அடையாளம் காணமுடியும்.

கதிரவன் மேற்றிசையில் உறங்கலான் என்றதும்  பண்ணை வீதியில் வேகமெடுக்கும் கார்கள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை ஒரு தொடர் காட்சியாக அலங்காரமாக அமைந்திருக்கும்.

யாழ்.நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் ஏன்? தென்பகுதியில் இருக்கக்கூடிய பெருவர்த்தகத்தின் ஸ்தாபகர்கள் தீவகப் பெருமக்களாகவே இருந்தனர். இதன் காரணமாக தீவகம் செல்வந்தம் நிறைந்த பூமியாகவும் விளங்கிற்று.  

தீவகத்தில் இயங்கிய கல்லூரிகள், பாடசாலைகள் யாழ்ப்பாண நகரத்தின் பிரபல்யமான பாடசாலைக ளுக்கு ஈடாக - நிகராக கல்வியையும் ஒழுக்க விழுமியங்களையும் போதித்து வந்தது.  

இவ்வாறாக இருந்த தீவகம் 1990-ம் ஆண்டு ஓகஸ்ட் 25-ம் திகதியன்று நிர்மூலமாகியது. யாழ்ப்பாணக் கோட்டையில் அகப்பட்டுக்கிடந்த இராணுவத்தை மீட்பது என்ற பேரில் ஊர்காவற்றுறையில் தரையிற ங்கிய இராணுவம், 1990-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 25-ம் திகதி மாலைப் பொழுதில் மண்டைதீவை ஆக் கிரமித்துக்கொண்டது.

கடல், தரை, ஆகாயம் என்ற மூன்று மார்க்கங்களிலிருந்தும் தாக்குதல் நடத்திக்கொண்டு வந்த இராணுவம் மண்டைதீவில் சாதாரண பொதுமக்களை சங்காரம் செய்ததுடன், பலரைக் கைதும் செய்தது. இந்த அட்டூழியம் நடந்து இன்று 26 ஆண்டுகள் பூர்த்தியாகி விட்டன.

1990-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 30-ம் திகதி கோட்டையில் இருந்த இராணுவத்தை மீட்டு மண்டைதீவுக்கு கொண்டு சென்றபோது அங்கு கைதாகியிருந்த பலர் கொல்லப்பட்டு கிணறுகளில் போடப்பட்டதான செய்திகள் இன்னமும் எங்கள் இதயங்களை கருக்கிக்கொண்டே இருக்கிறது.

அமைதியாக இருந்த தீவக மண் ஆக்கிரமிப்புக்குட்பட்டு இன்று 26 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்,
தீவகத்தில் வாழ்ந்து; அந்த மண்ணில் மகிழ்வோடு இருந்த பலர் இன்று அந்தப் பக்கமே செல்வதில்லை என்ற நிலைமை மிகப்பெரும் துரதிர்ஷ்டமாகும்.

யாழ்ப்பாண மண்ணிற்கு ஒரு அரணாக, பண்பாட்டு விளைநிலமாக இருந்த தீவகத்தின் இன்றைய நிலைமையே எங்கள் ஒட்டுமொத்தப் பண்பாட்டின் பஞ்சத்துக்கும் எங்கள் கூட்டு வாழ்க்கையின் அஸ்த மனத்துக்கும் காரணமெனலாம்.

எனவே, 26 ஆண்டுகளாக நீடித்து வரும் தீவகத்தின் வெறுமைநிலை தவிர்க்கப்பட வேண்டும்.
இந்தப் பிரதேசம் அபிவிருத்தி செய்யப்படுவதுடன் தீவகத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு தொடர்ச்சியாக வாழ முடியாவிட்டாலும் தங்கள் வாழ்விடங்களைத் திருத்தியமைத்து புதிய வீடுகளைக்கட்டி தாம் வாழ்ந்த நிலங்களைச் செப்பனிட்டு அங்கு இடையிடையேனும் தங்கியிருந்து, எந்தையும் தாயும் மகிழ்ந்து வாழ்ந்த மண்; நாம் பிறந்து தவழ்ந்த மண் என்ற நன்றி உணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்வோமாயின் தீவக மண் மீண்டும் தழைத்தோங்கும்.

http://www.valampurii.lk/valampurii/content.php?id=11408&ctype=news

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம்.. யாழ் நகரை கைப்பற்ற நடவடிக்கை என்று அதன் இந்திய அரச பயங்கரவாதத்தை தமிழ் மக்கள் மீது திணித்த போது.. எங்களுக்கெல்லாம் அடைக்கலம் தந்த தீவகம்.. அன்று அத்தனை ஆயிரம் மக்களுக்கு பாதுகாப்புக் கவசமாக விளங்கிய தீவகம்.. இன்று...

எதுவும் உடையவன் கையில் இருந்தால் தான் அதன் பயனும் பலனும்... உச்சமாக முடியும். ஆக்கிரமிப்பாளன் கைக்கு போனால்.. எல்லாம் அழிவு தான். தீவகமும் சாட்சி. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தீவக ஆக்கிரமிப்பின் போது, முன்னேறி பல திக்குகளில் வந்த இராணுவத்தின் ஒரு பிரிவு, நாரந்தனை எனும் ஊரில், தெரிந்த உறவில் இரட்டையர்களான அண்ணன் தம்பியரை, அவர்களது சீவனத்துச்கு வளர்த கோழிகளை சமைக்க வைத்து, சாப்பிட்டு, போகும் போது இருவருக்கும் வெடி வைத்ததில், அண்ணன் இறக்க, தம்பியை பின்னே வந்த ராணுவ வீரர்கள் மருந்துதவி செய்து காப்பாற்றிய நிகழ்வும் நடந்தது.

கொஞ்ச நஞ்ச அவலங்களா நடந்தது? tw_cry:

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.