Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் போராளியின் அரிசி மூட்டை! த. செல்வா (உண்மைக் கதை)

Featured Replies

முன்னாள் போராளியின் அரிசி மூட்டை! த. செல்வா (உண்மைக் கதை)

 


கடவுள் அந்த மனிதரை மீண்டும் என்னை சந்திக் வைத்ததால் இந்தக் கதையை எழுத வேண்டிய தேவை தவிர்க்க முடியாததாகிப் போய்விட்டது. கடந்த வருடம் ஒரு மழைப் பொழுதில் ஏதோ மூட்டை முடிச்சுடன் உயர்ந்த மிடுக்கான தோற்றத்துடன் கிளிநொச்சி நகரத்தில் பேரூந்துக்காக வீதியில் ஒரு பெரியவர் நின்றிருந்தார்.

நான் அவசரமாக மோட்டார் வண்டியில்சென்று கொண்டிருந்தேன். ஒரு கெல்மெற்றுடன் ஓடி வந்து என்னை மறித்தார். என்னால் அந்த பெரியவரை கணக்கெடுக்காமல் செல்ல முடியவில்லை. நின்று எனது மோட்டார் சைக்கிளில் ஏற்றினேன். அவர் வைத்திருந்த மூட்டை பற்றி விசாரித்தேன்.

அவர் சொன்னார். 

20 வருடங்கள் என்ரை வாழ்க்கை முழுக்க இயக்கத்திலேயே கழிஞ்சிது. இயக்கத்தில் இருக்கேக்க எப்படியெல்லாம் இருந்தம். இப்ப இந்த அரிசி மூட்டைக்காக அலையிறம். 3 மாதத்துக்கு ஒருக்கா எங்கள போல 100 க்கு மேற்பட்ட போராளிகளுக்கு அரிசி மூட்டை தருவாங்கள். யார் தாறாங்கள் என தெரியாது. கூப்பிட்டா போவம்.. இது எங்க காணும் என சொல்லிக் கொண்டிருக்கும் போது, போன் சத்தமிட்டது. அதை எடுத்தவர் சொல்லம்மா சீமாட்டி என்றார். கதைத்து முடிந்ததும் யாரென கேட்டேன்

அது தம்பி என்ர வீட்டுக்காறி அவள் இல்லை எண்டா எப்பவோ நான் செத்திருப்பன். இப்பவும் சாப்பிடாமல்தான் இருப்பாள். என்ர ராசாத்தி என அழுவது போல் சொன்னார். அவர் மனைவியை அழைத்த முறை பௌவியமாக பேசிய முறை எல்லாம் ஒரு போராளிமீது கொண்ட பார்வையை மதிக்க முடியாத உயர்ந்த நிலைக்கு இழுத்துச் சென்றது.

தலையில் வெடியை சுமந்து கால் ஊன முற்று கண் பார்வையும் குறைந்து காணப்பட்ட அவரை வறுமை முழுதாக விழுங்கிக் கொண்டாலும் ஒழுக்கம் எதிலும் குறையவில்லை. அந்த பெரிய மனிதரிடம் போர் பற்றிய உணர்வுகளையும் வருங்காலம் பற்றிய எண்ண அலைகளையும் மீட்டிப் பார்க்காக ஆசையாக இருந்தது. கோழிக் குஞ்சுகளுக்கு வைக்கும் கழிவு அரிசியில்தான் கஞ்சி காச்சி குடிப்பம்..பழைய பாண சுட்டுச்சாப்பிடுவோம் சில நேரங்களில் சாப்பிடுவதும் இல்லை என வேதனை கனத்த அவரின் நெஞ்சை திறந்து விட்டார்.

கடும் மழையால் அவருடன் அதிகம் பேச முடியவில்லை. விசுவமடுவை அடுத்து உள்ள ஒரு தென்னம் சோலைதான் அவரது வீடு. பாக்கு மரமும் தென்னை மரங்களும் போட்டி போட்டு வளர்ந்திருந்தன. அதுகும் அவரைப் போல அந்த இடத்தை அழகு செய்தன. வீடு வந்ததும் இறங்கினார்.

சரியாக அதே நேரத்தில் போன் சத்தமிட்டது தம்பி வீட்ட வந்து ஏதாவது குடிச்சிட்டு போகலாமே என்றார். அவருக்கு எந்த உதவியும் செய்ய முடியாத நான் பிறகு வருவேன் என சமாளித்துத் திரும்பினேன். இன்று தருமபுரம் நோக்கி செல்கையில் அதே கெல்மற் அதே அதே மனிதர் எனது மோட்டச் சைக்கிளில் மூட்டையைக் காண வில்லை.

ஐயா என்னைத் தெரியுமா? என கேட்டேன். நோய் வாய்ப்பட்டிருந்த அவர் என்னை கண்டறிய சிரமப்பட்டார். பாவம் நான் கதைகுடுக்க விரும்ப வில்லை மருந்தெடுத்துக்கொண்டு போறார் போல. ஒரு வருட இடைவெளியில் அவர் கம்பீரமான தோற்றத்தை தொலைத்து விட்டார். தலையில் குண்டிருக்கென்று சொன்னவர் என்னையும் மறந்திருப்பார்.


ஒருவருடமாய் வீதிகளில் கெல்மெற்றுடன் நடந்து திரிகிறார் எத்தின பேரிடம் கெஞ்சி இருப்பார். சிலர் ஏற்றுவது போல் அருகில் வந்து ஏமாற்றியும் சென்றிருப்பார். அவருக்கு எப்படி நான் மட்டும் நினைவில் நிற்பேன்?

அவர் நினைக்க வேண்டியது அடுத்த கணசாப்பாடு, சீமாட்டி, தென்னைமரம், பாக்குமரம், மருந்துப்பை.. இதைவிட அவர் ஞாபகங்கள் எதையும் ஏற்காது.


அவர் சாவுடன் தினமும் போராடுகிறார். நோயிடம் கெஞ்சுகிறார். இயக்கத்தில் இருந்ததை விட நரக வலியை அனுபவிப்பதை அவர் முன்னமே சொல்லி இருந்தார். எத்தனையோ பேர் மிருகக் காட்சி சாலையில் விலங்குகளை படம் பிடிப்பது போல் என்னைப் பிடித்துச் சென்றனர். இது வரை எந்த உதவியும் இல்லை என்று கூறியிருந்தார்.

இதை எல்லாம் நினைத்துப் பார்த்த நான் எனது பேச்சை சிறைப்பிடித்துக் கொண்டேன். அவர் அதிகம் அமைதியை எதிர்பார்க்கிறார்போல். போராளிகள் ஒவ்வொரு கணமும் இப்படித்தான் கழிகிறது. 

இது முற்றும் உண்மை.ஆனால் இயக்கத்தை காரணம் காட்டி வெளிநாடு போனவர்கள் ஆடம்பரத்தில் திளைத்து ஆடம்பரச் செலவுக்கு பணம் அனுப்புகின்றனர். இதில் ஒரு பகுதி உதவியேனும் இவர்களுக்கு ஆற்ற மறுந்து விடுகின்றனர். இதை எழுதவேண்டும் என்பதற்காகவே அந்தப் போராளியையும் என்னையும் கடவுள் இரு முறை சந்திக்க வைத்தார் போலும். அவர் சீமாட்டியுடன் நோயின்றி வாழ யார் உதவுவாரோ? எண்ணற்ற தியாகங்களை எப்படித்தான் இந்த நிலம் தாங்குமோ?

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135246/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.