Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டில்ஸ்கூப் மன்னன் டில்ஷானின் ஓய்வு அறிவித்தல் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவா? (ஆழமான அலசல்)

Featured Replies

டில்ஸ்கூப் மன்னன் டில்ஷானின் ஓய்வு அறிவித்தல் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவா? (ஆழமான அலசல்) 

 

received_10210240253392305டில்ஸ்கூப் மன்னன் டில்ஷானின் ஓய்வு அறிவித்தல் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவா? (ஆழமான அலசல்)

இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி நாயகனும், ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான திலகரட்ன டில்ஷான் சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுப்பதாக இன்று அறிவித்துள்ளார்.

1999 இல் சர்வதேச கிரிக்கெட் அறிமுகத்தை மேற்கொண்ட டில்ஷானின் 17 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வு இந்த திடீர் ஓய்வு அறைவிப்பு மூலமாக முடிவுக்கு வருகிறது.

கிரிக்கெட்டில் சாதிக்க தெரிந்த சாதனையாளர்கள் பலருக்கு தாங்கள் உச்சத்தில் இருக்கும் போதே, சர்சைகளில் சிக்காமல் ஓய்வு அறிவித்தலை வெளியிட்டிருக்க முடிவதில்லை என்று எல்லோரும் குறைபடுவதுண்டு .

இலங்கையின் அதிரடி நாயகன் சனத் ஜெயசூரிய, இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங் என்று எத்தனையோ சாதனையாளர்கள் தங்கள் கிரிக்கெட்டின் அந்திம காலத்தில் வேதனையோடுதான் கிரிக்கெட் வாழ்வுக்கு விடைகொடுத்தார்கள்.

மறுபுறத்தே சங்கா,மஹேல, டிராவிட் போன்ற கிரிக்கெட் கனவான்கள், ஏன் ஓய்வு அறிவித்தலை விடுக்கிறார்கள், இன்னும் கொஞ்ச காலம் கிரிக்கெட் ஆடினால் என்ன எனும் கேள்வியை எல்லோரும் தொடுத்த நேரத்தில் ,அதுவும் தங்கள் புகழ் உச்சத்தில் இருக்கும் போதே கவுரவத்துடன் ஓய்வை அறிவித்தவர்கள் எனலாம்.

இந்த சூழலில் இலங்கை கிரிக்கெட்டின் ஆரம்ப வீரரும் முன்னாள் தலைவருமான டில்ஷான் தனது 40 வயதில் அறிவித்திருக்கும் ஓய்வு அறிவித்தல், நாம் மேற்சொன்ன எந்த வகைக்குள் வ்ருகிறது என்பதையே இந்த கட்டுரை உங்களுக்கு தெளிவுபடுத்தப்போகிறது.
,
இலங்கை கிரிக்கெட் அணி உலக கிண்ணத்தை 1996 இல் வெற்றிகொண்டு அதன்பின்னரான காலத்திலும் அடுக்கடுக்கான வெற்றிகளைக் குவித்து வந்த காலத்தில் ,உலக கிண்ணம் உள்ளிட்ட வெற்றிகளின் முக்கிய பங்குதாரர்களாக இருந்த அரவிந்த, அர்ஜுனா, குருசிங்க,ஹசான், மஹாநாம என்று மூத்த வீரர்கள் தங்கள் ஓய்வை அறிவித்த நிலையில் இலங்கை அணியின் தேர்வாளர்களால் கவனத்தில் கொள்ளப்ட்ட சிலரில் இந்த டில்ஷானும் ஒருவர்.

1998 இல் அறிமுகமான மஹேல தனக்கான இடத்தை கிடைத்த ஒருசில வாய்ப்புக்களோடே உறுதி படுத்திக் கொண்டார்.1996 இல் உலக கிண்ணனத்தை வெற்றிகொண்ட அணியில் விளையாடிய அத்தனை பேரும் மஹேல அறிமுகமான முதலாவது ஒருநாள் போட்டியில் அணியில் இடம் பிடித்திருந்தனர்,இதன் காரணத்தால் மஹேலவின் ஆரம்ப காலத்தில் அவ்வளவு நெருக்கடிகளை சந்தித்திருக்கவில்லை.

ஆனால் 1998 கடந்து 1999 ம் ஆண்டு என்பது இலங்கை கிரிக்கெட் அணி தன்னை நிருபித்துக்காட்டிட வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்ட ஆண்டாக இருந்தது.

1999 உலக கிண்ணத்தில் இலங்கை அணியின் மோசமான பின்னடைவுக்குப் பின்னர் மூத்த வீரர்கள் பலர் ஓய்வை அறிவித்த நிலையில், இலங்கையின் மத்திய வரிசைக்கான சரியான வீரர்களைத் தேடும் முயற்சியில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஈடுப்பட்ட்து.

அந்தக் காலக்கட்டத்தில் மத்திய வரிசையில் தங்களை அடையாளப்படுத்தும் முயற்சிகளில் ரஸ்ஸல் ஆர்னோல்ட் (1997 இல் அறிமுகம்),மற்றும் 1999 இல் அறிமுகத்தை மேற்கொண்ட சாமர சில்வா, இந்திக்க டி சேரம், TM டில்ஷான் ஆகியோருக்கிடையில் கடுமையான போட்டி நிலவியது.

அந்த போட்டிக்கு மத்தியில் மற்றைய வீரர்கள் காணாமல் போக, பல சோதனைகளைக் கடந்து 40 வயது வரையிலும் துடிப்புடன் பத்தாயிரம் ஒருநாள் ஓட்ட்ங்கள் பெற்று சாதித்தவர்தான் திலகரட்ன டில்ஷான்.

இப்போதைய வர்ணனையாளராக இருக்கும் ஆர்னோல்ட் 180 ஒருநாள் போட்டிகளோடு 2007 இல் ஓய்வை அறிவித்தார்,சாமர சில்வா(75 போட்டிகள்), இந்திக்க டி சேரம்(15 போட்டிகள்) போன்ற வீரர்கள் சில காலத்தோடு காணாமல் போன நிலையில் 17 ஆண்டுகாலமாக சாதித்திருக்கிறார் டில்ஷான்.

மத்திய வரிசையில் டில்ஷான் துடுப்பாடிய காலக்கட்டங்களில் அவ்வளவு பெரிதாக ஓட்டங்களைக் குவிக்கவில்லை, இதுவரை 329 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள டில்ஷான் 22 சதங்கள் உட்பட 10,248 ஓட்ட்ங்கள் குவித்துள்ளார். 106 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

ஆனால் மத்திய வரிசையில் டில்ஷான் ஆடிய காலகட்ட்ங்களில் 129 இன்னிங்ஸ்களில் ஒரேயொரு சதத்தையும், 14 அரைசதங்களையும் பெற்று 2994 ஓட்டங்களை மட்டுமேதான் குவித்தார்.

அதன்பின்னர் டில்ஷான் ஆரம்ப வீரர் ஸ்தானத்தில் துடுப்பாட பணிக்கப்பட்டதன் பின்னர்தான் டில்ஷானின் அசுர வேகத் துடுப்பாட்ட ஆற்றல் உலகுக்கு வெளிப்பட்டது .

ஆரம்ப வீரராக களம்கண்ட 175 இன்னிங்ஸ்களில் (இறுதி ஒருநாள் போட்டியை விளையாடுவதற்கு முன்னரான) 21 சதங்கள், 34 அரைச்சதங்கள் அடங்கலாக 47 க்கும் அதிகமான சராசரியில் 7225 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

தலைவராக விளையாடிய 26 போட்டிகளில் 728 ஓட்டங்களையும்,தலைவராக அல்லாது சாதாரண வீரராக விளையாடிய 303 போட்டிகளில் 9480 ஓட்டங்களையும் டில்ஷான் குவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டின் மும்மூர்த்திகள் என அழைக்கப்படட சங்கா, மஹேல, டில்ஷான் ஆகிய வீரர்களில் முன்னைய இருவரும் 2015 உலக கிண்ணப் போட்டிகளோடு சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஓய்வை அறிவித்தாலும் டில்ஷான் மட்டும் தொடர்ந்தும் விளையாடுவதில் ஆர்வம் காட்டினார்.

சங்கா, மஹேல போன்ற முன்னணி வீரர்கள் ஓய்வை அறிவித்த 2015 உலக கிண்ணப் போட்டிகள் வரையில், டில்ஷானும் உச்சத்தில் தான் துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார்.

சங்கா, மஹேல போன்றோரின் இடத்தை நிரப்புவதற்கான மிக சரியான வீரர்கள் இல்லாமல் இருந்தாலும் சந்திமால், மத்தியூஸ் போன்ற வீரர்கள் அதற்கான தெரிவுகளாக காணப்பட்ட்னர்.அதன் காரணத்தால் அவர்களை ஓய்வை அறிவித்த நேரமும் , சந்தர்ப்பமும் சரியானதாகவே பலருக்கும் தென்பட்டது.

அதுபோன்றதொரு வாய்ப்பும், சந்தர்ப்பமும் டில்ஷானுக்கு அப்போதைய சூழலில் வாய்த்திருக்கவில்லை என்ற உண்மையை நாம் யாரும் மறந்துவிடக் கூடாது.

உப்புல் தரங்க ஒரு சில போட்டிகளுக்குப் பயன்படுத்தப் பட்டாலும், நீண்ட காலத் தெரிவாக அவர் தன்னை நிரூபித்திருக்கவில்லை.குஷால் ஜனித்த பெரேராவும் ஊக்க மருந்து சோதனையில் சிக்குண்டு போக சரியான ஆரம்ப ஜோடியை கண்டுபிடிப்பதற்கு இலங்கையின் தேர்வாளர்களுக்கு காலம் தேவைப்பட்ட்து.

அந்தக் காலகட்டத்தில் ஓரளவுக்கு அணியைத் தாங்கிப் பிடிப்பதில் தன்னை அர்ப்பணித்தார் டில்ஷான், ஒரு சில போட்டிகளில் தனுஷ்கா குணாதிலக்கவோடும் இன்னும் சில போட்டிகளில்(T20 உலக கிண்ணம்+ஆசியக் கிண்ணம் ) தினேஷ் சந்திமாலோடும் இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்டத்தை பலப்படுத்தினார்.

இப்போதைய நிலையில் குஷால் ஜனித் பெரேரா அணிக்கு மீளவும் திரும்பியிருக்கிறார், இங்கிலாந்தில் கொடுக்கப்படட வாய்ப்புக்களில் தனுஷ்கா குணாதிலக்க தன்னை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

இதைவிடவும் இலங்கையின் இளையோர் அணியில் கலக்கிவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இங்கிலாந்து இளையோர் அணிக்கெதிரான போட்டிகளில் அடுத்தடுத்து சதங்களை விளாசி இலங்கையின் தேசிய அணியில் வாய்ப்பு பெற்றுள்ள 18 வயதான அவிஸ்க்கா பெர்னாண்டோ காத்திருக்கிறார்.

இப்படி சரியான வீரர்கள் அணிக்கு வந்திருக்கும் நிலையில், இலங்கை அணியும் சரிவுகளிலுருந்து மீண்டு சாதித்துக் கொண்டிருக்கும் நிலையில், தனது சேவை அணிக்கு தேவையில்லை என்பதை உணர்ந்திருக்கும் டில்ஷான் ஓய்வு முடிவை சரியான நேரத்தில் எடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

சங்கா, மஹேல போன்று மிகப்பெரிய ஓட்டக் குவிப்புக்களோடு அணியிலிருந்து விடைபெறும் முடிவை டில்ஷான் எடுக்கவிட்டாலும், அணியின் நலன் கருதி செயற்பட்டார் என்பதில் நாம் பெருமைப்படத்தான் வேண்டும்.

மத்தியூஸ் தலைவராகுவதற்கு முன்னர் அணியின் தலைமைத்துவத்திற்கு அனுபவ சாலியான டில்ஷானை அணி முகாமை கேட்டுக்கொண்ட போதும் அணிக்கு தலைமை தாங்கியவர் டில்ஷான் எனபதும் குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறாயினும் 40 வயதிலும் அதிரடியில் மிரட்டி, அற்புதமாய் களத்தடுப்பில் ஜொலித்து, தேவையான நேரத்தில் ஊடறுத்து உடைக்கும் ஆயுதமாகியும் (Break Through ) தில்சஷன் அணியைத் தாங்கிப் பிடித்திருக்கிறார்.

இலங்கை அணியின் வெற்றிகள் பலவற்றுக்கு காரணமாக திகழ்ந்து எங்களை மகிழ்ச்சிப்படுத்திய டில்ஷானை வாழ்த்தி வழியனுப்பி வைக்கலாம்.

d1 CRICKET-WT20-2016-AFG-SRI

http://vilaiyattu.com/17407-2/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.