Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீரோடும் சிறப்போடும் நடந்தேறிய தமிழ்ப் புத்தாண்டு (2038) பொங்கல் விழா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீரோடும் சிறப்போடும் நடந்தேறிய தமிழ்ப் புத்தாண்டு (2038) பொங்கல் விழா!

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் எடுக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் புத்தாண்டு விழா இவ்வாண்டும் மிகச் சிறப்பாக நடந்தேறியது.

தமிழன் தன் இனம், தன் மொழி, தன் பண்பாடு, தன் மானம் பற்றிய கவலை இல்லாமல் இருப்பதுதான் அவனது தாழ்வுக்கும் வீழ்ச்சிக்கும் காரணம் என்பதைக் கண்டறிந்த மறைமலை அடிகளாரும், பெரியாரும் அண்ணாவும் தொடக்கி வைத்த பண்பாட்டு மலர்ச்சியின் குறியீடுதான் தமிழ்ப் புத்தாண்டு விழா மற்றும் பொங்கல் விழா ஆகும்.

இம்முறை தமிழக முதல்வர் கலைஞரின் தமிழ்நாடு அரசு தமிழர் திருநாளைக் கோலாகலமாகக் கொண்டாடுமாறு ஊடகங்கள் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

கனடா முருகன் கோயில் அரங்கில் நடந்தேறிய தமிழர் திருநாள் விழா தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இளைய இனிய உயிர்களை ஈந்த போராளிகள் நினைவாகவும், இந்திய - ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதத்திற்குப் பலியான பொது மக்கள் நினைவாகவும், தமிழ்மொழிப் போராட்டத்தில் உயிர் நீத்த மொழிப் பற்றாhளர்கள் நினைவாகவும் அமைதி வணக்கத்தோடு தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து திருக்குறள் மந்திரம், தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கனடா நாட்டுப் பண் ஆகியவற்றை செல்விகள் நிநோதராணி, சினேகலதா, பூஜா ஆகியோர் இனிமையான குரலில் பாடினார்கள்.

அமைதி வணக்கத்தைத் தொடர்ந்து வணக்கம் வணக்கம் வந்திருக்கும் எல்லோர்க்கும் வணக்கம் என்ற பாடலுக்கு ஆசிரியை பத்மினி ஆனந் அவர்களின் மாணவி மாலதி கண்ணன் ஆடினார்.

தமிழே வாழ்க என்ற பாடலுடன் கூடிய வரவேற்பு நடனத்தை நேர்த்தியான முறையில் வாசு சின்னராசா ஆசிரியரின் மாணவிகள் வழங்கினார்கள்.

சிறுவன் கஜன் தயானந்தன் தமிழர் திருநாள் பற்றி பேசினார். சுரபி யோகநாதன் தமிழ்மொழி பற்றிப் பேசினார். ஓவியா சபேசன் கவிதை வாசித்தார். திவ்யா பிரபாகரன் பாட்டுப்பாடினார்.

படைப்பாளிகள் கழகத் தலைவர் நக்கீரன் தலைமையுரை ஆற்றினார்.

ஆடிப் பாடுவோம் கூடிப் பாடுவோம் என்ற பாடலுக்கும் நல்ல தமிழ்ப் பெயரைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள் என்ற பாடலுக்கும் வாசு சின்னராசாவின் மாணவி நிவேதா இராமலிங்கம் மிக நேர்த்தியாகவும் அழகாகவும் ஆடி அவையோரின் பலத்த கைதட்டல்களைப் பெற்றுக் கொண்டார். கலை நளினமும் தெளிவும் தாளக் கட்டும் படைத்த பரத நாட்டியம் ஆடுபவர்களுக்கு அறிவுத் திறனும் உருவும் திருவும் உடல் வலிமையும் இன்றியமையாதன. இவற்றைப் பெற்றிருந்தாலன்றி பரதம் ஆடுவது அரிது. பாவம், இராகம், தாளம் என்ற மூன்று பதங்களும் பரதக் கலையின் அடிப்படை அம்சங்கள்.

ஏர் முனைக்கு நேர் இங்கே ஏதுமே இல்லை………… என்ற மெல்லிசைப் பாடலுக்கு வாசு சின்னராசா ஆசிரியரின் மாணிவிகள் அபிநயம் பிடித்தார்கள்.

இராஜகோபுரம் எங்கள் தலைவன் என்ற விடுதலைப் பாடலுக்கு வாசு சின்னராசாவின் மாணவி ஸ்ரீரங்கன் சிந்தியாவும் கிராமியப் பாடலுக்கு ஸ்ரீரங்கன் அஞ்சனா, துர்க்கா ஆகியோர் அபிநயம் செய்தார்கள்.

திரு. திருவாட்டி மகேஸ்வரன் இணையர்களது குழந்தை செந்தூரிக்கு வண.பிதா பிரான்சிஸ் அடிகளார் ஏடு தொடக்கி வைத்தார்.

ஆண்டாண்டு காலமதாய் என்ற பாடலை உச்சத்தொனியில் மிக எளிதாக செல்வன் சுபவின் பவானந்தன் பாடி அவையோரை மகிழ்வித்தார். இசைத்துறையில் இவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.

விழாவில் சமயத்துக்கு அப்பால் ஒட்டுமொத்தத் தமிழர்களுக்குத் தமிழர் திருநாள் என்று சொல்லத்தக்க வண்ணமாக இருப்பது பொங்கல் விழா ஒன்றுதான் என்பதை வலியுறுத்தியும் பொங்கல், புத்தாண்டு ஆகியவற்றின் பண்பாட்டுச் சிறப்புப் பற்றியும் திருவாளர்கள் சிவம் பரமநாதன், வி.சு. துரைராசா (தலைவர், கனடா தமிழீழச் சங்கம்) மு.தியாகலிங்கம் ஆகியோர் உரையாற்றினர்.

கவிஞர்கள் திரு. சிவா சின்னத்தம்பி, தீவகம் இராசலிங்கம், திருமதி பவானி தர்மகுலசிங்கம்( பவித்திரா) ஆகியோர் கவிதை படித்தார்கள்.

தாயக மண்வாசனையோடு பொங்கல் புதுப் (மண்) பானையில் பால், புத்தரிசி, கற்கண்டு, சர்க்கரை, முந்திரி, கசுக்கொட்டை, ஏலம் ஆகியவை இட்டு கவிஞர் திரு. சிவா சின்னத்தம்பி குடும்பம் பொங்கல் பொங்கிப் படைத்தனர்.

பொங்கல் பொங்கிய இடத்தில் பந்தல் போடப்பட்டு மாவிலைகளினாலும் தோரணங்களினாலும் சரங்களினாலும் கரும்புத் தண்டுகளினாலும் இஞ்சி மஞ்சள் இலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முற்றத்தில் கோலம் போடுவதுபோல் மாக் கோலம் போடப்பட்டிருந்தது.

தாயகத்தை நினைவூட்டும் வண்ணம் கலப்பை, மண்வெட்டி, வண்டில் சில்லு, உரல், உலக்கை, பானை, சுளகு ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

பால் பொங்கி வழிந்தபோது 'பொங்கலோ பொங்கல்' என்ற வாழ்த்தொலி அரங்கு எங்கிலும் எதிரொலித்தது.

தனித்தமிழ்ப் பெயருக்கான ஆயிரம் டொலர் பரிசு பகீரதன் அணி மற்றும் பாஸ்கரன் முகிலன் இருவருக்கும் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டது. மேலும் 10 சிறார்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.

உ.த.படைப்பாளிகள் கழக செயலாளர் திருமதி பவானி தர்மகுலசிங்கம் அவர்கள் விழா வெற்றிகரமாக நடந்தேறியதற்கு உறுதுணையாக இருந்த ஊடகங்கள், புரவலர்கள் ஆகியோருக்;கு நன்றி தெரிவித்தார். குறிப்பாக தமிழ் ஒளி (ரிவிஅய்), கனடிய தமிழ் வானொலி, தமிழ்ச்சோலை முழக்கம், சுதந்திரன், பரபரப்பு, ஆசிரியர் சின்னராசா வாசு, எஸ்பி இப்போட்டர்ஸ் அங்காடி, ஏஜிஆர் துரித நாணயமாற்று நிறுவனம், கனடா முருகன் கோயில் அறங்காவல் அவை ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்தார். நன்றியுரையோடு விழா இனிது நிறைவேறியது.

விழா நிகழ்ச்சியை திரு. ஞானம் அன்ரனி சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.

நடப்பாண்டில் தாயக மக்களது வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்! தமிழீழம் பிறக்கும்!

(தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் தை முதல்நாள் (2038) நடத்திய பொங்கல் புத்தாண்டு விழாவில் நக்கீரன் ஆற்றிய தலைமையுரை)

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களது நம்பிக்கை. மலர்ந்துள்ள இந்த புத்தாண்டில் தாயகத்தில் இன்னல்கள், துன்பங்கள் துயரங்கள், அல்லல்கள் இன்னல்கள், அவலங்கள் அனர்த்தங்கள் அடக்குமுறை ஆகியவற்றுக்கு ஆளாகி அவலப்படும் எமது உறவுகள் வாழ்வில் துன்பங்கள் நீங்கி இன்பம் பொங்கும் தமிழீழ அரசு மலர்ந்து உலகப் படத்தில் இடம் பிடிக்கும் என நம்புகிறேன்” எனத் தமிழர் திருநாளான பொங்கல், புத்தாண்டு வள்ளுவர் பிறந்த நாள் எனத் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் நடத்திய முப்பெரும் விழாவில் உரையாற்றிய நக்கீரன் குறிப்பிட்டார். அவ மேலும் பேசியதாவது

அன்பு நிறைந்த பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே, தம்பி தங்கைகளே தம்பி தங்கைகளே உங்கள் எல்லோருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்களையும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தமிழ் வணங்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயம் உலகளாவிய அனைத்துத் தமிழ் மக்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழீழத்தில் குண்டுமாரிக்கும் செல் அடிக்கும் பயந்து பதுங்கு குழிகளுக்குள் உண்ண உணவின்றி, உடுக்கத் துணையின்றி இருக்க இடமின்றி மருந்தின்றி அல்லல்படும் எமது தாயக மக்களுக்கும், அந்நிய சிங்களப் படையினால் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கும் எங்கள் மண்ணை மீட்கத் தங்கள் உயிரைப் பணயமாக வைத்துப் போராடிக் கொண்டிருக்கும் வி.புலிப் போராளிகளுக்கும், யாழ்க் குடாநாட்டையும் தென் தமிழீழத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் சிங்களப் படைகளுக்கு எதிராக தமிழீழ தேசிய இராணுவத்தை வழிநடத்திக் கொண்டிருக்கும் தளபதிகளுக்கும் எல்லாவற்றிற்கும் மேலாக ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தாதை; தலைவர், தமிழீழ தேசத்தின் தலைவர், வி. புலிப்படையின் இராணுவத் தளபதி மேதகு பிரபாகரன் அவர்களுக்கும் உங்கள் சார்பாகவும் படைப்பாளிகள் சார்பாகவும் இனிய பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் கடந்த அய்ந்து ஆண்டுகளாக (2005 நீங்கலாக) தமிழர் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது நீங்கள் அறிந்ததே.

பொங்கல் தமிழர்க்கே உரித்தான தனித்துவமான விழாவாகும். தமிழர்கள் புதுவருடம் தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடினாலும் பொங்கல் விழாவே சமயம் சாராத தமிழர் திருநாளாக, உழவர் கழனி திருத்தி, உழுது, வரம்பு கட்டி, விதைவிதைத்து, களையெடுத்து, நெல் மணிக் கதிர்களை அறுவடைசெய்ய உதவிய ஞாயிறுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக உழவர் பெருமக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். அந்த விழாவும் உழவர்களுக்கு எல்லாவிதத்திலும் உதவியாக இருந்த கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகும்.

நாங்கள் ஒரு வித்தியாசமான பண்பாட்டுச் சூழலில் வாழ்ந்தாலும் பொங்கல் போன்ற பெரு விழாக்களைக் கொண்டாடுவதன் மூலம் எங்களது மொழி, கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியங்களை நாம் காப்பாற்ற முடியும். இப்படியான விழாக்களை நாம் கொண்டாட மறந்தால், அவற்றை நாம் கைவிட்டால் எங்கள் மொழி, கலை, பண்பாடு காலப் போக்கில் அழிந்து போகும் அபாயம் இருக்கிறது. முன்னைய காலத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கள் மொழி, கலை, பண்பாட்டை இழந்து தமிழர் என்ற அடையாளத்தையே தொலைத்து இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்ததே.

இங்கு நாம் தமிழர் திருநாளைக் கொண்டாடுவது போல தமிழகத்திலும் பொங்கல் புத்தாண்டு திருவள்ளுவரின் பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பட்டுள்ளது.

இந்த ஆண்டுப் பொங்கல் கடந்த ஆண்டோடு ஒப்பிடும் பொழுது எமது தாயக மக்களுக்கு இனிப்பான பொங்கலாக இல்லை என்பதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. இரக்கமற்ற சிங்களவர்களது ஆட்சியில் அல்லல்பட்டு அவலப்பட்டு கண்ணீரும் கம்பலையுமாக வாழ்கிறார்கள்.

இந்த புத்தாண்டில் அவர்களது இன்னல்கள், துன்பங்கள் துயரங்கள், அல்லல்கள் அவலங்கள் அனர்த்தங்கள் தொலைந்து அவர்களது வாழ்வில் இன்பம் பொங்கட்டும். தமிழீழ அரசு மலரட்டும். என வாழ்த்துகிறோம். எம்மைப் பிடித்த பீடுகள் அனைத்தும் இந்த ஆண்டில் தொலைய வேண்டும்.

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் தமிழ்மொழி வளர்ச்சி, தமிழ்ப்பண்பாட்டுக் காப்பைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கி வருகிறது.

இந்தக் குறிக்கோள்களை அடைய வேண்டும் என்றால் தமிழ்மொழி எமது வீட்டு மொழியாக இருக்க வேண்டும். வீட்டில் தமிழைத் தவிர வேறுமொழியில் பேசக் கூடாது. இந்தியாவில் புகழ்பெற்ற நேரு குடும்பம் வீட்டில் இந்தியில் மட்டும் பேசியது.

அடுத்து உங்கள் உறவு முறைகளை தமிழில் கூறுங்கள். டடி, மமி எங்களுக்கு வேண்டாம். அப்பா அம்மா என்று அழகு தமிழில் அழையுங்கள். அங்கிள் ஆன்ரி வேண்டாம். மாமா மாமி என வண்ணத் தமிழில் கூப்பிடுங்கள்.

உங்கள் பிள்ளைகளுக்கு சொற்சுவையும் பொருட்சுவையும் நிறைந்த தனித் தமிழ்ப் பெயர்களை வையுங்கள். இப்படிச் செய்வது நீங்கள் அன்னைத் தமிழுக்கு செய்யக்கூடிய குறைந்தளவு கடமையாகும். ஆசா, கோசா, யூரேனியா, நிரோஜன், நிரோஜினி, நிஷாந்தன், அபிஷா, டில்ஷன், டில்ஷி, அஸ்வினி எனப் பொருள் இல்லாத அல்லது முறைகேடான பெயர்களை உங்கள் பிள்ளைகளுக்கு வைக்காதீர்கள். நிரோஜன் என்றால் ரோசமற்றவன் எனப் பொருள். நிரோஜினி என்றால் ரோசமற்றவள் என்று பொருள். அஸ்வினி என்றால் குதிரை என்று பொருள்.

பெற்றோர்களுக்கு தமிழ் எது வடமொழி எது என்ற குழப்பம் இருக்கிறது. இதனைத் தீர்ப்பதற்கு ஒரு இலகுவான வழி இருக்கிறது. பெயர்களில் ஜ,ஸ,ஷ,ஹ,ஸ்ரீ போன்ற கிரந்தச்சொற்கள் இருந்தால் அவை வடமொழிப் பெயர்களாகவே இருக்கும். தமிழில் அழகான, இனிமையான, பொருள் நிறைந்த பெயர்கள் ஏராளமாகவும் தாராளமாகவும் இருக்கின்றன. அரசி, அருளரசி, அன்பரசி, கலையரசி, கலைமகள், திருமகள், நிலமகள், நாமகள், கு+மகள், கோதை, நிலா, அரசன், மாறன், அழகன், முருகன், கண்ணன் எனச் சின்னக் குழந்தைகளுக்கு நல்ல நல்ல வண்ணப் பெயர்கள் இருக்கின்றன.

உங்கள் திருக்கோயில் வழிப்பாட்டை தமிழில் வைத்துக் கொள்ளுங்கள். கடவுளர்க்கு மொழிச் சிக்கல் இல்லை. அவர்களுக்கு எல்லா மொழியும் தெரியும். முக்கியமாக தமிழ்மொழி தெரியும். “அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலாம் எமைச் சொற்தமிழில் பாடுக” என சிவபெருமானே கேட்டதாக” சேக்கிழார் பாடியுள்ளார்.

திருமணங்களைத் தமிழில் செய்து கொள்ளுங்கள். தமிழர்களது திருமணங்களில் விளங்காத வடமொழிக் கூச்சல் வேண்டாம். அம்மி வேண்டாம். வடநாட்டு அருந்ததி வேண்டாம். தமிழ்ப் படைப்பாளிகள் கழகத்தை அணுகினால் நாங்கள் எந்தத் தெட்சணையும் வாங்காமல் திருக்குறள் மந்திரம் ஓதி தமிழ்முறைத் திருமணங்களை எளிய முறையில் நடத்தி வைப்போம்.

எங்கள் மொழியையும் பண்பாட்டையும் கட்டிக் காத்து அடுத்த தலைமுறைக்கு கையளிக்கும் பொறுப்பு எங்கள் எல்லோருக்கும் உண்டு என்பதை மறக்காதீர்கள்.

நான் தொடக்கத்தில் குறிப்பிட்டது போல இந்த ஆண்டில் தமிழீழம் தனியொரு நாடாக மலரும் அங்கு வாழும் எம் உறவுகள் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பார்கள் என்ற நம்பிக்கையை மீண்டும் கூறி எனது உரையை நிறைவு செய்கிறேன். வணக்கம்.

வன்னிப் பெருநிலப் பரப்பின் பெரும் பகுதிப் பிரதேசத்தில் இருந்து சிங்களப் படையை வி.புலிகள் ஓயாத அலைகள் 3 இராணுவத் தாக்குதல் மூலம் ஓமந்தைவரை ஓடோடி விரட்டி அடித்த மகிழ்ச்சியின் பின்னணியில் இந்தப் பொங்கலைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அது மட்டுமல்ல நாம் இங்கே பொங்கல் விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது அங்கே யாழ்ப்பாணக் குடாநாட்டை மீட்கும் போர் உக்கிரமமாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனையிறவு சிங்கள இராணுவத் தளம் மீதான வி.புலிகளின் நாளும் பொழுதும் இறுகிக் கொண்டு வருகிறது. நேற்றுக் கூட தனங்களப்பில் 6 இராணுவத்தினர் வி.புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டுப் பொங்கல் முன்னரைவிட இனிமையாக இருந்தாலும் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் படுகொலை அந்த இனிப்பை வெகுவாகக் குறைத்து விட்டது. குமார் பொன்னம்பலத்தைப் பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. தமிழீழத் தேசியத் தலைவரால் மாமனிதர் விருது கொடுக்கப்பட்டு அவர் கௌரவிக்கப்பட்ட ஒன்றே குமார் பொன்னம்பலத்தின் புகழை உலகறியச் செய்துவிட்டது. இதுவரை காலமும் மூன்றே மூன்று மனிதர்கள்தான் தலைவரால் மாமனிதர் என்ற விருது கொடுத்துக் கௌரவிக்கப் பட்டுள்ளார்கள். முன்னாள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக துணைவேந்தர் துரைராசா, எண்பது வயதைக் கடந்துவிட்ட பேராசிரியர் சி.ஜே. எலியேசர், அகில இலங்கை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் பொன்னம்பலம் அந்த மூவர்களாவர்.

குமார் பொன்னம்பலம் சிங்கத்தின் குகையில் இருந்து கொண்டே தமிழீழ விடுதலைக்காக துணிவோடு குரல் கொடுத்தவர். வி.புலிகளின் அரசியல் கோட்பாட்டை மட்டும் அல்ல புலிகளது ஆயுதப் போராட்டத்தையும் ஆதரித்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பேசியவர். எழுதியவர். அதற்காகவே அவரைத் திட்டமிட்டு சனாதிபதி சந்திரிகாவும் அவரது பாதுகாப்புப் படையும் படுகொலை செய்துள்ளது. இது திட்டமிட்ட படுகொலைதான் என்பதில்யாருக்கும் சந்தேகம் இருக்கத் தேவையில்லை.

இந்தப் பொங்கல் விழாவின் இன்னொரு சிறப்பு, முக்கியத்துவம் என்னவென்றால் இந்த நாளை மறைந்த வி. புலிகள் தளபதி கிட்டு (சதாசிவம் கிருஷ்ணகுமார்)வின் நினைவு தினமாகவும் உலகம் முழுதும் நாம் கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு அவரதும் அவர்களது தோழர்களும் மறைந்த 7வது நினைவு ஆண்டாகும்.

தளபதி கிட்டுவும் அவரது தோழர்களான மேஜர் வேலன், கேணல் குட்டிஸ்ரீ, கடற்புலி கப்டன் றோசான், கடற்புலி கப்டன் அமுதன், கடற்புலி லெப். நல்லவன், கடற்புலி கப்டன் குணசீலன், கடற்புலி கப்டன் நாயகன்,

உ.த.இயக்கம் மொமி மி, காமல் ம் அழிந்து விடாமல் விழாக்களை நாம் விரட்டும்க் கொடுத்புக்கு உட்ப மண்மீட்கும் போரில் தங்கள்

அன்பு நிறைந்த பெரியோர்களே, தாய்மார்களே, சகோதர சகோதரிகளே, தம்பி தங்கைகளே உங்கள் எல்லோருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்களையும், தமிழ் வணங்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயம் தமிழீழத்தில் குண்டுமாரிக்கும் செல் அடிக்கும் பயந்து பதுங்கு குழிகளுக்குள் உண்ண உணவின்றி, உடுக்கத் துiயியின்றி இருக்க இடமின்றி அல்லல்படும் எமது தாயக மக்களுக்கும், அந்நிய சிங்களப் படையனால் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கும் எங்கள் மண்ணை மீட்கத் தங்கள் உயிரைப் பணயமாக வைத்துப் போராடிக் கொண்டிருக்கும் வி.புலிப் போராளிகளுக்கும், யாழ்க் குடாநாட்டையும் தென் தமிழீழத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் சிங்களப் படைகளுக்கு எதிராக தமிழீழ தேசிய இராணுவத்தை வழிநடத்திக் கொண்டிருக்கும் தளபதிகளுக்கும் எல்லாவற்றிற்கும் மேலாக ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தமிழீழ தேசத்தின் தலைவர், வி.புலிப்படையின் இராணுவத் தளபதி மேதகு பிரபாகரன் அவர்களுக்கும் உங்கள் சார்பாகவும் படைப்பாளிகள் சார்பாகவும் எமது இனிய பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொங்கல் தமிழர்க்கே உரித்தான தனித்துவமான விழாவாகும். நாங்கள் புதுவருடம் தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடினாலும் பொங்கல் விழாவே சமயம் சாராத பெரு விழாவாக, கழனி திருத்தி, உழுது, விதைவிதைத்து நெல் மணிக் கதிர்களை அறுவடைசெய்ய உதவியாக இருந்த ஞாயிறுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக உழவர் பெருமக்களால் கொண்டாடப் பட்டுவருகிறது. பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். அந்த விழாவும் உழவர்களுக்கு எல்லாவிதத்திலும் உதவியாக இருக்கும்; மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக மாட்டுப் பொங்கல் நடாக்கும்.

நாங்கள் வித்தியாசமான சூழலில் வாழ்ந்தாலும் பொங்கல் போன்ற பெரு விழாக்களைக் கொண்டாடுவதன் மூலம் எங்களது மொழி, கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியங்களை நாம் காப்பாற்ற முடியும். இப்படியான விழாக்களை நாம் கொண்டாட மறந்தால், அவற்றை நாம் கைவிட்டால் எங்கள் மொழி, கலை, பண்பாடு, மொழி காலப் போக்கில் அழிந்து போகும் அபாயம் இருக்கிறது. முன்னைய காலத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கள் மொழி, கலை, பண்பாட்டை இழந்து தமிழர் என்ற அடையாளத்தையே தொலைத்து இருக்கிறார்கள்.

இந்தப் பொங்கல் விழாவே திருவள்ளுவரின் பிறந்த நாளாகவும், தமிழ்ப் புத்தாண்டாகவும்,திருவள்ளுவர

dont you like to do some valuable things why are you wasting time?

he he he

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

dont you like to do some valuable things why are you wasting time?

he he he

முதலில் தமிழில் எழுதுவது எப்படி என்று பழகுங்கள். நீங்கள் என்ன தான் ஆங்கிலமோ, பிரெஞ்சோ நோர்வேஜியனோ பேசினாலும் வெள்ளைக்காரர்கள் உங்களை தங்கட இனமாக நினைக்க மாட்டினம். நாங்கள் தமிழர். தமிழரின் ஒரே ஒரு தனித்துவமான திரு நாள் தைப்பொங்கல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.