Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை, அவுஸ்திரேலியா டி20 செய்திகள்

Featured Replies

அதிரடி மாற்றங்களுடன் களமிறங்குகிறது இலங்கை

 

இலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான முதலாவது டி20 போட்டி நாளை (06) கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் போட்டியில் இலங்கை அணி பல மாற்றங்களுடன் களமிறங்குகிறது.

இலங்கை அணியின் டி20 குழாமின் விபரம் இதோ...

1.குசால் ஜனித் பெரேரா

2.குசால் மெண்டிஸ்

3.தினேஸ் சந்திமால் (அணித் தலைவர்)

4.திலகரட்ன டில்ஷான்

5.தனஞ்சய டி சில்வா

6.சாமர கபுகெதர

7.சச்சித்ர பத்திரன

8.மிலிந்த சிறிவர்தன

9.சுரங்க லக்மால்

10.திசர பெரேரா

11.சச்சித்ர சேனாநாயக்க

12.சீகுகே பிரசன்ன

13.தசுன் சானக

14.கசுன் ராஜித

http://www.virakesari.lk/article/10986

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
ரி20 போட்டிகளிலிருந்து ஆஸி அணியில் இரு வீரர்கள் விலகல்
ரி20  போட்டிகளிலிருந்து ஆஸி அணியில் இரு வீரர்கள் விலகல்
 இலங்கைக்கு வந்துள்ள அவுஸ்ரேலிய   அணியினரின் காயப்பட்டோர் பட்டியலில் இறுதியாக கிரிஸ் லின், ஆரோன் பிஞ்ச் இணைந்துள்ளனர்.  பயிற்சியின்போது இடது தோள்பட்டையில் கிரிஸ் லின்னுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இவர் சிகிச்சைக்காக தாயகம் அனுப்பப்படவுள்ளார்.
 
ஐந்தாவது ஒருநாள் ஆட்டத்தில் களத்தடுப்பில் ஈடுபட்டவேளை வலது ஆட்காட்டி விரலில் ஆரோனுக்கு முறிவு ஏறபட்டுள்ளது. இதனால் இவ்விருவரும் நடைபெறவுள்ள ரி20 போட்டிகளில் கலந்துகொள்ளமாட்டார்களென தெரிவிக்கப்படுகிறது.
 
மேலும் இரு ரி 20 போட்டிகளை இலங்கை அணிக்கெதிராக அவுஸ்ரேலிய அணி விளையாடவுள்ளது..

http://onlineuthayan.com/news/17197

  • தொடங்கியவர்

இலங்கை, ஆஸி மோதும் முதலாவது டி20 ; முக்கிய அறிவிப்பு

 

இலங்கை மற்றும் ஆஸிஅணிகளுக்கிடையிலான  முதலாவது டி20 போட்டிக்கான டிக்கட்டுகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

large_r1.jpg

டிக்கட்டுகள் நாளை விற்பனை செய்யப்படமாட்டாது எனவும் கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

போட்டிக்கு உரித்துடைய டிக்கட்டுகள் வைத்திருப்பவர்கள் மாத்திரமே மைதானத்தில் அனுமதிக்கப்படுவரெனவும் கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.

http://www.virakesari.lk/article/10996

  • தொடங்கியவர்
இலங்கையுடனான இருபது20 போட்டியில் புதிய சாதனையுடன் 85 ஓட்டங்களால் ஆஸி அணி வெற்றி
2016-09-06 22:22:53

இலங்கை அணியுடனான இருபது20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 85  ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

 

பல்லேகலையில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 263 ஓட்டங்களைக் குவித்தது.

19068_Glenn-Maxwell.jpg

 


சர்வதேச இருபது20 போட்டிகளில் இது புதிய சாதனையாகும். 2007 ஆம் ஆண்டு  கென்ய அணிக்கு எதிராக இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 260 ஓட்டங்களைக் குவித்தமையே இதுவரை சாதனையாக இருந்தது.


இன்றைய போட்டியில் அவுஸ்திரேலிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கிளென் மெக்ஸ்வெல் 65 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 145 ஓட்டங்களைக் குவித்தார்.

 

19068australia.jpg

 

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 178  ஓட்டங்களையே பெற்றது.

 

அணித்தலைவர் தினேஷ் சந்திமால் 43 பந்துகளில் 58 ஓட்டங்களைப் பெற்றார். சாமர கப்புகெதர 25 பந்துகளில் 43 ஓட்டங்களைப் பெற்றார்.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=19068#sthash.9Cxnpsx5.dpuf
  • தொடங்கியவர்
இலங்கையுடனான 2 ஆவது இருபது20 போட்டியிலும் அவுஸ்திரேலியா வெற்றி
2016-09-09 22:12:13

இலங்கை அணியுடனான  சர்வதேச இருபது20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது.


ஆர்.பிரேமதாச அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஓவர்களில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு  128 ஓட்டங்களைப் பெற்றது.

 

19173_silva.jpg

 

தனன்ஜெய டி சில்வா


 

தனன்ஜெய டி சில்வா 50 பந்துகளில் 62 ஓட்டங்களைக் குவித்தார்.  குசல் பெரேரா 18 பந்துகளில் 22 ஓட்டங்களைப் பெற்றார்.   வேறு எவரும் 7 ஓட்டங்களுக்கு மேல் பெறவில்லை.


பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 17.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

 

19173australia-vs-Sri-lanka.jpg

கிளன் மெக்ஸ்வெல்


 

கிளன் மெக்ஸ்வெல் 29 பந்துகளில 4 சிக்ஸர்கள் உட்பட 66 ஓட்டங்களைக் குவித்தார்.

 

இவ்வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 2:0 விகிதத்தில் அவுஸ்திரேலிய அணி வென்றுள்ளது.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=19173#sthash.rQZtmbXi.dpuf

17,671 runs
154 wickets
39 100s
83 50s
242 catches
3 stumpings
1 unforgettable international career
#ThankYouDilshan

14242389_1330295733656186_77187496773949

14291634_1330177937001299_28960148635580

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.