Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக இன்று  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

பாஸ்மதி அரிசி


Recommended Posts

பதியப்பட்டது
arisi_2999641f.jpg
 

அதிக சத்துகளும், இயற்கையாகவே நறுமணமும், அதிக சுவையும் கொண்ட இந்தியாவின் பாரம்பரிய அரிசி வகை. இதர அரிசி ரகங்களை விட இரண்டு, மூன்று மடங்கு அளவு பெரியது. இந்தியத் துணைக் கண்டத்தில் இமயமலை அடிவாரப் பகுதிகளில் பல நூற்றாண்டுகளாகவே பயிரிடப்பட்டு வருகிறது. இதர பாரம்பரிய அரிசி ரகங்களை விடவும் பாஸ்மதி அரிசி தனிச் சிறப்பு கொண்டது. புவியியல் ரீதியாக இந்த குறிப்பிட்ட பகுதிகளில் தகுந்த பருவ நிலையில் மட்டுமே சாகுபடி செய்ய முடியும்.

பிரியாணி மற்றும் புலாவ் உணவுக்கு பொருத்தமான அரிசி வகை என்பதால் அரபு நாடுகள் அதிக அளவு இறக்குமதி செய்கின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பண்டமாற்று முறையிலான வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகித்தது. தற்போது கமாடிட்டி சந்தையிலும் பாஸ்மதி அரிசி வர்த்தகமாகிறது. `வாசனை முத்து’ என்கிற பட்ட பெயரும் இதற்கு உள்ளது.

> 8.4 மிமீ வரை நீளம் கொண்டது.

> 20-30 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் விளைகிறது.

> இந்தியாவில் வட மேற்கு மாநிலங்களில் விளைகிறது. ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், டெல்லி, உத்தராகாண்ட், பிஹார் மற்றும் மேற்கு உத்தர பிரதேசம் உள்ளிட்ட இடங்களிலும், பாகிஸ்தானில் பஞ்சாப் பகுதியிலும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. 70 சதவீதம் பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் விளைகிறது.

> சர்வதேச சந்தைக்கு பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 70% சந்தையை இந்தியா வைத்துள்ளது. 30% சந்தையை பாகிஸ்தான் வைத்துள்ளது.

> இந்தியாவின் மொத்த அரிசி உற்பத்தியில் பாஸ்மதி 1 %

> உற்பத்தி ஏற்றுமதி ஆண்டு வளர்ச்சி வீதம் 21 %

> பாஸ்மதி அரிசி புவிசார் குறியீடு பெற்றுள்ளது. இதற்கான காப்புரிமையை இந்தியா பெற்றுள்ளது. காப்புரிமை பெறுவதில் அமெரிக்காவின் ரைஸ் டெக் நிறுவனத்துடன் போட்டி உருவானது.

> 2015-16 நிதியாண்டில் மிக அதிக அளவாக 40,45,796.25 மெட்ரிக் டன் பாஸ்மதி அரிசியை ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மதிப்பு ரூ. 22,718.44 கோடியாகும்.

> சவுதி அரேபியா, ஈரான், அரபு எமிரேட்ஸ், ஈராக், குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதற்கடுத்து ஐரோப்பிய நாடுகள் வருகின்றன. அதிக இறக்குமதி செய்யும் நாடு சவுதி அரேபியா.

சில பாரம்பரிய ரகங்கள்

* பாஸ்மதி ஸேப்டா

* பிந்தி

* டிலக்

* ஹன்ஸ்ராஜ்

ஏற்றுமதி அதிகரிக்கும் காலம்

* மார்ச்-ஏப்ரல்

* நவம்பர்-டிசம்பர்

முன்னணி 10 பிராண்டுகள்

* லால் குயூலா

* ஹனுமன் பாஸ்மதி

* கோஹிநூர்

* இந்தியா கேட்

* ஏரோப்ளேன் பாஸ்மதி

* அமிரா

* பெஸ்ட்

* மெஸ்பன்

* சன்கோல்டு

1996 இந்திய விதைகள் சட்டத்தின்படி முக்கிய சாகுபடி ரகங்கள்

பாஸ்மதி 386

பாஸ்மதி 217

ரன்பிர் பாஸ்மதி

கார்னல் லோக்கல்/ டராவ்ரி பாஸ்மதி

பாஸ்மதி 370

டைப்-3 (டேராடூனி பாஸ்மதி)

புசா பாஸ்மதி-1

புசா பாஸ்மதி-1121

பஞ்சாப் பாஸ்மதி-1

ஹரியாணா பாஸ்மதி-1

கஸ்தூரி

மஹி சுகந்தா

stats_2999639a.jpg

கிராஃபிக்ஸ்: தே.ராஜவேல்

http://tamil.thehindu.com/business/business-supplement/பாஸ்மதி-அரிசி/article9074709.ece?widget-art=four-all

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எமது நோக்கம் மற்றும் இலக்கின் அடிப்படையில் அனைத்து தரப்பையும் அரவணைத்துச் செல்ல நாங்கள் தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், சில கருத்தியல் ரீதியான வேறுபாடுகளை களைந்து மன்னார் வவுனியா மாவட்டங்களுக்கு ஏற்ப்பட்டுள்ள வெற்றிடங்களையும் கருத்தில்கொண்டு தேசியபட்டியல் ஆசனத்தை வைத்தியர் சத்தியலிங்கத்திற்கு வழங்குவதற்கு தீர்மானம் எடுத்தோம். இந்த பிரதேசத்தில் வேறுவகையான ஆக்கிரமிப்புக்கள் இடம்பெறுவதையும் கருத்தில் கொண்டே ஒரு ஒத்த முடிவிற்கு வந்துள்ளோம்.  அத்துடன் 2001 ஆம் ஆண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் இலக்கின் அடிப்படையில் அனைவரையும் அரவணைத்துச் செல்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அதில் அதிக கரிசனையும் விருப்பமும் எங்களுக்கு இருக்கிறது.  எனது தேர்தல் பிரச்சாரங்களிலும் கூட அந்த ஆணையை வழங்குமாறு மக்களிடம் கேட்டிருக்கிறேன்.  எனவே நாங்கள் ஒன்றாக பலமாக இணைந்து செல்லவேண்டிய தேவையை உணர்ந்திருக்கிறோம். அதற்காக நாங்கள் தொடர்ந்து செயற்படுவோம். நான் தமிழரசுக்கட்சியின் தெரிவுசெய்யப்பட்ட தலைவர். நீதிமன்ற தடையுத்தரவு நீக்கப்பட்டால் நான் தலைவராக செயற்படுவேன்.  அதற்கான காலம் கனிந்துகொண்டிருப்பதாக உணர்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/199019
    • அது உள்ளூராட்சி சபையாகவும் இருக்கலாம், அதை தமிழ் மக்களால் தெரிவு செய்த எம்பிகள், மாகாண சபை ஆதரிக்கும் என்றால் ஐ எம் எவ் அல்ல ஆண்டவனே எதுவும் செய்ய முடியாது. புலிகள் மிகவும் முயன்று பாதியளவு வெற்றியடைந்த விடயம் எமது பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தியது. நாமே என் பி பி எம்பிகளை தேர்ந்து அனுப்புவது - அதை அப்படியே ரிவர்ஸ் ஆக்கி விடும்.
    • நிலத்தில் வடிந்திருக்கும்  இரத்தத்த, (புலம்பெயர்ஸ் போலித்  டமில் தேசிய வியாபார) நாய்கள் நக்குவதாகப் போட்டிருந்தால் இன்னும் சிறப்பு.   100% ✅
    • யாராவது... வேலியில்   போகின்ற ஓணானை பிடித்து, வேட்டிக்குள் விடுவார்களா. 😂
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.