Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்குமுதல்வருடன் அமெரிக்க பிரதித்தூதுவர் சந்திப்பு

Featured Replies

வடக்குமுதல்வருடன் அமெரிக்க பிரதித்தூதுவர் சந்திப்பு
 
 
வடக்குமுதல்வருடன் அமெரிக்க பிரதித்தூதுவர் சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்க பிரதி தூதுவர் றொபேட் ஹில்டன் தலைமையிலான குழு இன்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டு, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வர னைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளது.
1473264138_ss.jpg
இன்று காலை 10.45 மணியளவில் அமெரிக்க குழுவினர், கைதடியில் முதலமைச்சரை சந்தித்தனர். சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு மேலாக சந்திப்பு நீடித்தது.
 
சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த முதலமைச்சர், மத்திய அரசு வடமாகாண பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கைகளை மேற்கொண்டால், எமது நிர்வாகத்தினை நல்ல முறையில் நடாத்த முடியும்.
 
மேலெழுந்தவாரியாக கொழும்பில் தீர்மானங்களை எடுத்துவிட்டு, அதனை ஏற்றுக்கொள்ளு ங்கள் என கூறினால், அங்கு ஏற்படும் பிரச்சினைகள் பற்றி எடுத்துக்கூறினேன். 2000 வருட ங்கள் தனித்துவமாக வாழ்ந்த தமிழ் மக்களின் மொழி மற்றும் கலாசாரங்களை புரிந்து அதற்கேற்றவாறு அரசியல் யாப்பில் மாற்றங்களை கொண்டு வந்து அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதனை அமெரிக்க பிரதி தூதுவர் றொபேட் ஹில்டனுக்கு எடுத்து ரைத்ததாக தெரிவித்தார்.

http://onlineuthayan.com/news/17290

  • தொடங்கியவர்
தன்னிச்சையான முடிவுகள் திணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
 
08-09-2016 09:01 AM
Comments - 0       Views - 16

article_1473305583-cv.jpg-சொர்ணகுமார் சொரூபன்

'எங்களுடன் கலந்தாலோசிக்காது, வட பகுதிக்கு என்ன வேண்டும் என்பதை, மத்திய அரசாங்கம் தாமாகவே முடிவெடுக்கின்றது.  பின்னர், அதனை ஆதரித்து ஒத்துழைக்குமாறு, எமக்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றது என்பதை, இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதுவர் ரெபேட் கில்டன் குழுவிடம் தெளிவுபடுத்தியுள்ளோம்' என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமரிக்க துணைத்தூதுவர் உள்ளடங்கிய குழுவினர், வடமாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில், புதன்கிழமை (07) சந்தித்துக் கலந்துரையாடினர்.

இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த முதலமைச்சர்,

'வருகை தந்த குழுவினர், தற்போது நியமிக்கப்பட்டவர்களாக உள்ளனர். அந்த வகையில் வடமாகாணத்தின் நிலைமைகளைப் பார்வையிடுவதற்காக அவர்கள் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

மத்திய அரசாங்கம், எம்முடன் கலந்தாலோசிக்காது முடிவுகளை எடுக்கிறது. அவர்களாக ஒரு முடிவை எடுத்துவிட்டு, அதனை நடைமுறைப்படுத்த எம்மிடம் ஒத்துழைப்புக் கேட்கிறார்கள். இதுவே நிர்வாகம் சார்ந்த பிரச்சினையாகக் காணப்படுகின்றது என்பதை, அமெரிக்கத் துணைத்தூதுவரிடம் தெரியப்படுத்தினேன்.

அதனை ஏற்றுக்கொண்ட அவர்கள், அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் கலந்துரையாடினர். குறிப்பாக அதிகாரப் பரவலாக்கம் என்பது, குறித்த ஒரு பிரதேசத்தில் வாழும் மக்கள் தம்மை தாம் நிர்வகிக்கின்ற சுயநிர்ணயம் வழங்கப்படவேண்டும். இதனை தான் இந்தோனேஷியாவில் அவதானித்ததாகவும் அங்கு தற்போது போர் நிறைவடைந்து தீர்வும் கிடைத்துவிட்டதாகவும் துணைத்தூதுவர் என்னிடம் தெரிவித்தார்.

சரித்திர ரீதியாக, 1930ஆம் ஆண்டு, நாடு ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த போது, நிர்வாக இலகுவாக்கத்துக்காக  மாகாணங்கள் இணைக்கப்பட்டன. பின்பு 1948ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்ததன் பின்னர், இலங்கை ஒரு நாடாக இருந்தது.

1972 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியரசு யாப்பில், பெரும்பான்மைக்கு முன்னுரிமையளிக்கப்பட்டது. இதனால் தான் இத்தனை கொந்தளிப்புகள், பிரச்சினைகள் தோற்றம் பெற்றன. ஆகவே எமது எதிர்பார்ப்புகள், வேதனைகள் என்ன என்பதை, மத்திய அரசாங்கத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதை நான் துணைத்தூதுவரிடம் தெரிவித்தேன்.

அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்த ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கையளிக்கபட்ட கடிதம் தொடர்பில், தாமும் தெரிந்து கொள்ளவேண்டும் எனக் கேட்டனர். அதற்கு, அக்கடிதத்தின் பிரதியை அவர்களிடம் கையளித்துள்ளேன்' என முதலமைச்சர் மேலும் கூறினார்.

- See more at: http://www.tamilmirror.lk/181406#sthash.jT6PMp7G.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.