Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்திற்கான புதிய அரசியலமைப்பு வரப் போகின்றது.!

Featured Replies

தமி­ழீ­ழத்­திற்­கான புதிய அர­சி­ய­ல­மைப்பு வரப் போகின்­றது.!

 

tamil_-_vimal.jpg

வடக்கு, - கிழக்கை இணைத்து தனி தமி­ழீ­ழத்­திற்­கான கனவை நன­வாக்கும் தேசிய மற்றும் சர்­வ­தேச பிரி­வி­னை­வா­தி­களின் புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்டு வரு­வ­தற்­கான முயற்­சிகள் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன என்று தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவரும் பாரா­ளு­மன்ற உறுப்­பினருமான விமல் வீர­வன்ச தெரி­வித்தார்.

நாட்டை காட்டிக் கொடுக்கும் அர­சி­ய­ல­மைப்­பையும் சக்­தி­க­ளையும் தோல்­வி­ய­டைய செய்­வ­தற்கு நாட்டு மக்கள் பேதங்­களை மறந்து போராட வேண்­டிய காலம் வந்­துள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

கூட்டு எதிர்க்கட்­சியின் ஊடக சந்­திப்பு பாரா­ளு­மன்­றத்தின் குழு அறை நான்கில் நேற்று புதன்கிழமை இடம்­பெற்­றது. இதில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்ச மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை விஜ­யத்தின் போது பல்­வேறு விட­யங்கள் குறித்து தனது அதி­கா­ரங்­களை மீறிய வகையில் செயற்­பட்டார். ஆனால் அர­சாங்கம் அவ­ரது வரு­கைக்கு முன்னர் காணாமல் போன­வர்கள் அலு­வ­ல­கத்­திற்­கான சட்ட மூலத்தை நிறை­வேற்­றி­ய­துடன் , புதிய அர­சி­ய­ல­மைப்பை நவம்பர் மாதம் கொண்டு வரு­வ­தா­கவும் தக­வலை கசிய விட்­டது.

புதிய அர­சி­ய­ல­மைப்பு விடயம் குறித்து அர­சாங்­கத்தின் தக­வல்­களின் பின்­ன­ணியில் மேற்­கு­லக பிரி­வி­னை­வா­தி­களே உள்­ளனர். புதிய அர­சி­ய­ல­மைப்பு என்­பது மேற்­கு­லக நாடு­களின் தயா­ரிப்­பாகும். மனித உரி­மைகள் ஆணை­யாளர் செயிட் அல் ஹுசேன் மற்றும் சம்­பந்தன் உள்­ளிட்ட பிரி­வி­னை­வா­தி­களின் சக்­தி­களின் தேவையே புதிய அர­சி­ய­ல­மைப்பின் நோக்­க­மாகும். இலங்­கையை துண்­டாடி வடக்கு, கிழக்கை இணைத்து தமி­ழீழம் அமைக்கும் திட்­டத்தை தடுக்க மக்கள் அணி­தி­ரள வேண்டும்.

வெளி­வி­வ­கார அமைச்சர் நவம்­பரில் புதிய அர­சி­ய­ல­மைப்பு வரைபை முன் வைப்­ப­தாக வெறு­மனே கூறவில்லை. மாறாக பிரி­வி­னை­வா­தி­களின் அவ­ச­ர­மான தேவையை ஈடு செய்யும் வகை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றது. நாட்டின் எதிர்காலத்தை தீர்­மா­னிக்க கூடிய அர­சி­ய­ல­மைப்பை அவ­ச­ர­மாக கொண்டு வரு­வது என்­பது சாத்­தி­யற்ற விடயம். உயர் நீதிமன்றம் மக்கள் கருத்து கணிப்­பிற்கு செல்­லு­மாறு தீர்ப்­ப­ளித்தால் அதனை எதிர் கொள்­வது எவ்­வாறு மற்றும் பாரா­ளு­மன்­றத்தில் வரப்­பி­ர­சா­தங்­களை வழங்கி மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையில் நிறை­வேற்றிக் கொள்­வதா என்­பது குறித்து ஆராய்வதற்கே அர­சாங்கம் திட்­ட­மிட்டு புதிய அர­சி­ய­ல­மைப்பை அவ­ச­ர­மாக கொண்டு வரு­வ­தற்கு முற்­ப­டு­கின்­றது.

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலை காரணம் காட்டி அதில் மறைந்தும் நாட்­டிற்கு எதி­ரான அர­சி­ய­ல­மைப்பை அர­சாங்கம் கொண்டு வரலாம். இவற்­றுக்கு மக்கள் சந்­தர்ப்பம் அளிக்கக்கூடாது. 65 ஆயிரம் இரா­ணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்து பெற்றுக் கொண்ட சுதந்­தி­ரத்தை காட்டிக் கொடுக்க அனு­ம­திக்க முடி­யாது. குறைந்­தது 6 மாத கால கருத்துக் கணிப்பு புதிய அரசியலமைப்பை சமர்ப்பிப்பதற்கு தேவைப்படும். அதாவது அரசியலமைப்பு வரைபை முன் வைத்த பின்னரே இந்த கால அவகாசம். ஆனால் பிரிவினைவாதிகளின் தேவைக்காக நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை காட்டிக் கொடுக்கும் வகையில் நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்றது என்றார்.

http://www.virakesari.lk/article/11106

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.