Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் .சர்வதேச திரைப்பட விழா

Featured Replies

யாழ் .சர்­வ­தேச திரைப்­பட விழா
 

யாழ் .சர்­வ­தேச திரைப்­பட விழா

செப் 23 முதல் 27 வரை!

 
 

யாழ். பல்­க­லைக்­க­ழக நுண்­க­லைத்­துறை மற்றும் சிலோன் தியேட்டர்ஸ் என்­ப­வற்­றோடு அஜன்டா 14 ஆகி­யன இணைந்து இரண்­டா­வது யாழ்ப்­பாண சர்­வ­தேசத் திரைப்­பட விழா­வா­னது ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

யாழ். சர்­வ­தேச திரைப்­பட விழா சர்­வ­தேச ரீதி­யாக பாராட்­டப்­பட்ட உலகெங்­கி­லு­முள்ள தமிழ்த் திரைப்­பட தயா­ரிப்­பா­ளர்­க­ளை அவர்­க­ளது திரைப்­ப­டங்­க­ளை யாழ்ப்­பா­ணத்தில் காட்­சிப்­ப­டுத்­து­வதற்கும் அழைக்­கின்­றது.

குடா­நாட்டில் சுயா­தீன திரைப்­ப­டங்­களைக் கொண்­டா­டுதல் எனும் தொனிப்­பொ­ரு­ளி­லான இவ்­விழா எதிர்வரும் 23ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளது.

விழாவின் இயக்­கு­ந­ரான அனோமா ராஜ­க­ருணா விழா பற்­றிக்­கூ­று­கையில்:

'குடா­நாட்டில் சுயா­தீ­ன­மாக திரைப்­ப­டங்­க­ளைக் கொண்­டா­டு­வது என்­பதே எங்­க­ளு­டைய அடிப்­ப­டை­யான நோக்­க­மாகும். இவ்­வி­ழா­வா­னது ஒரு சமூ­கத்தின் மீண்­டெ­ழு­த­லாக அமை­வ­தோடு, கலையின் ஊடாக மக்­களைச் சென்­ற­டை­த­லு­மாகும் என நாங்கள் நம்­பு­கின்றோம். அவ்­வ­கையில் இந்த விழா­வா­னது சினி­மா­வி­னூ­டாகச் சமூ­கங்கள் தமது எல்­லை­க­ளினைக் கடந்து ஒருவர் மற்­ற­வ­ருடன் இடை­வினை புரி­வ­தற்­கான ஓர் வெளி­யினை உரு­வாக்கும் எனவும் நாம் எண்­ணு­கின்றோம்.' எனக் கூறு­கிறார்.

விழாவின், இந்த இரண்­டா­வது வெளி­யீட்டில் ஏறக்­கு­றைய 25 நாடுகள் பங்­கு­பற்­ற­வுள்­ள­தோடு, விரு­தினை வென்ற மற்றும் விமர்­ச­ன­பூர்­வ­மாக பாராட்­டப்­பட்ட சுமார் 70 ஐரோப்­பிய, ஆசியத் திரைப்­ப­டங்­க­ளினைக் காட்­சிப்­ப­டுத்­து­வதற்கு யாழ்.சர்­வ­தேச திரைப்­பட விழா முயற்சி எடுத்­துள்­ளது.

இவ்­வி­ழாவில் பல­வி­ரு­துகள் வழங்கி­ வைக்­கப்­ப­ட­வி­ருக்­கின்­றன.

மூத்­த­வர்­க­ளை கௌர­வித்தல் மற்றும் இளந்­த­லை­மு­றை­யினை ஊக்­கு­வித்தல் என்­ற ­வ­கையில் யாழ். சர்­வ­தேச திரைப்­பட விழா­வா­னது மூன்று விரு­து­க­ளை அத­னது முத­லா­வது வெளி­யீட்டின் தொடர்ச்­சி­யாக இம்­மு­றையும் வழங்­க­வுள்­ளது.

வாழ்நாள் சாதனை விருது :

கே.பி.கே பால­சிங்கம்;

கே.பி.கே பால­சிங்கம் இலங்­கையின் மிக மூத்த திரைப்­பட ஒலிப்­ப­தி­வா­ளர்­களுள் ஒருவர். இலங்­கையில் எடுக்­கப்­பட்ட அனேக திரைப்­ப­டங்­க­ளுக்­கான ஒலிப்­ப­திவை அவரே மேற்­கொண்­டி­ருந்தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

மிகச்­சி­றந்த அறி­முக

திரைப்­ப­டத்­துக்­கான விருது;

இலங்­கை­யி­லி­ருந்தும் மற்­றைய நாடு­க­ளி­லி­ருந்தும் காட்­சிப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ள 12 அறி­முகத் திரைப்­ப­டங்கள் மிகச்­சி­றந்த அறி­முகத் திரைப்­ப­டத்­துக்கான் திற­னாய்வு விரு­துக்­காகப் போட்­டி­யி­டு­கின்­றன.

மிகச்­சி­றந்த குறும்­ப­டத்­துக்­கான பார்­வை­யாளர் விருது;

யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள பார்­வை­யா­ளர்கள் இந்த விழாவின் போது அவர்­க­ளுக்கு விருப்­ப­மான குறும்­ப­டத்­தினை தேர்ந்­தெ­டுக்க வாக்­க­ளிக்­கலாம்.

விழாக்­கு­ழுவில் பாக்­கி­ய­நாதன் அகிலன், கலா­நிதி. சேரன் உருத்­தி­ர­மூர்த்தி, கலா­நிதி. சு. இர­குராம், கலா­நிதி. பவித்­திரா கைலா­ச­பதி, முர­ளி­தரன் மயூரன், சூலி டி சில்வா, கண­ப­திப்­பிள்ளை சர்­வா­னந்தா ஆகி­யோரும் ஆலோ­ச­னைக்­கு­ழுவில் அ.யேசுராசா, கலாநிதி. தர்மசேன பத்திராஜா, திருமதி ஜீவா பெருமாள்பிள்ளை, சாமிநாதன் விமல், கலாநிதி. இரா. சிவச்சந்திரன், இ. கிருஷ்ணகுமார், ஞா. த. கேதாரநாதன் ஆகியோரும் இடம்பிடிக்கின்றனர். விழாக்குழுத் தலைவராக பாக்கியநாதன் அகிலனும் விழா முகாமையாளராக ஜே.எம்.கே.நீக்கலஸும் விழா இயக்குநராக அனோமா ராஜகருணாவும் செயற்பட்டு வருகின்றனர்.

 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=08/09/2016

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
யாழில் இரண்டாவது சர்வதேச திரைப்பட விழா
யாழில்   இரண்டாவது சர்வதேச திரைப்பட விழா
யாழ்ப்பாணத்தின் இரண்டாவது சர்வதேச திரைப்பட விழா எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து 4 நாட்களுக்கு நடைபெறவுள்ள இவ்விழாவில் 70இற்கு மேற்பட்ட சர்வதேச பன்மொழிப் படங்கள் திரையிடப்படவுள்ளன. 
 
இவ்விழாவானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரங்கிலும், யாழ் பொது நூலக அரங்கிலும் மயஸ்டிக் சினிமா யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் திரையிடப்படவுள்ளன. சென்றவருடம் நடைபெற்ற இவ்விழாவில் தமிழ்ப் படங்கள் குறைவாகத் திரையிடப்பட்டதுடன் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் குறைந்திருந்தது. 
 
எனவே, இம்முறை   திரைப்பட விழாவினை சிறப்பாக நடாத்தி செல்லும் நோக்கில் விழா ஏற்பாட்டாளர்கள் யாழ் குடாநாடு முழுவதும் வர்ணப் பதாகைகளையும், சுவரொட்டிகளையும் காட்சிப்படுத்தியதுடன் விழாவிற்கான நுழைவு அனுமதியை இலவசமாக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

http://onlineuthayan.com/news/17859

யாழில் இப்போது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இன்றும் யாழ் பல்கலை கழக கைலாசபதி அரங்கில் The edge of the heaven என்ற ஜேர்மன் நாட்டு திரைப்படத்தைப் பார்த்தேன். ரொம்பவும் அருமையாக இருந்தது, ஒரு துருக்கிய அப்பா , மகன் + அப்பாவின் விலைமாது, அவளின் மகள் மற்றும் ஒரு  ஜெர்மனிய அம்மா மகள் பற்றியது. மூன்று பகுதிகளாக படம் இருந்தது.

முதலாவது துருக்கிய அப்பாவுக்கும் விலைமாதுவுக்குமான தொடர்பு + வீட்டிற்கு வருவது, மகனுக்கும் அவளுக்குமான தொடர்பு. மகன் அவளுக்கு ஒரு மகள் இருப்பதை தெரிந்து கொள்ளுதல் + அவளது இறப்பு.

இரண்டாவது : விலை மாதுவின் மகளுக்கும், ஜேர்மனிய தாயின் மகளுக்குமான தொடர்பு + பாலியல் தொடர்பு. திருப்பி அனுப்பப்பட்ட துருக்கிய பெண்ணை தேடி சென்ற ஜேர்மனிய இளம்பெண்ணின் இறப்பு.

மூன்றாவது : முடிவு 

அழகாக மூன்று பகுதிகளையும் தந்திருந்தார் இயக்குனர் .......

இன்று யாழ்நூ லகத்தில் 1972 இல் வந்த குத்துவிளக்கு திரையிடப்பட்டது. முன்னரே பார்த்தத்தினால் பார்க்கவில்லை.

நிலா

நிலா என்றொரு தமிழ் படமும் இன்று மெஜஸ்டிக் தியேட்டரில் திரையிடப்பட்டது. பாக்கலாம் என்ற முடிவுடன் போனேன். செல்வமணி செல்வராஜ் என்ற இந்திய இளைஞர் இயக்கியிருந்தார். இரு கதாபாத்திரங்கள் மட்டுமே பங்கேற்கும் 96 நிமிட படம். மற்றய கதாபாத்திரங்கள் என்றால் 3 பேர் மட்டுமே. அவர்களும் மொத்தமாக படத்தில் 5 நிமிடம்கூட வரவில்லை. இரவு நேர படப்பிடிப்புதான் படம் முழுவதும் - பிளாஷ் பைக் காட்சிகள் தவிர. 
அதுவும் மொத்தமாக நான்கு இடங்கள்தான் படப்பிடிப்பில், டாக்ஸி ட்ரைவரின் வீடு + பெண்ணின் வீட்டு வாசல் + பெண் இறங்கும் இடம், சண்டைக்காக ஒரு ட்ரெயின் மேம்பாலத்தின் கீழ்.

வசனங்கள் யதார்த்தத்துடன் ஒத்துவரவேயில்லை. சில இடங்களில் கவித்துவமாகவும், பல இடங்களிலும் மொக்கையாகவும் இருந்தது. பல விடயங்களை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள் என்று காட்சிகளை தவிர்த்த இயக்குனருக்கு, பல இடங்களில் வசனங்களையும் தவிர்த்திருக்க தோணவேயில்லை.

படத்தின் காட்சிகளில் ஏறத்தாழ 70 வீதமும் டாக்ஸியில்தான். அதனை எத்தனையோ கோணங்களில் படமாக்கி இருக்கலாம். முக்காவாசி காட்சியும் விண்ட்ஸகிரீன் ஊடாக எடுத்த அதே ஷாட்டுகள். இசை படத்துக்கு சம்பந்தமே இல்லாதது. நான் நித்திரையே கொண்டுவிட்டேன். ஆனாலும் சம்பந்தமில்லாத இசை என்னை இடைக்கிடை எழுப்பினது. 

இயக்குனரும் இங்கு வந்திருந்தார் - ஏன் இப்படி ஒரு படம் எடுத்தீர்கள் என்ற கேள்விக்கு ஒரு பெயர் தெரியாத வாய்க்குள் நுழையாத ஒரு மேலைத்தேய இயக்குனரின் பெயரைச் சொல்லி அவரால்தான் என்கிறார். அட பாவி அவன் நல்ல படங்களை எடுத்திருப்பார் - அவற்ர பெயரை கெடுக்காதே.

இந்தப்படத்தை ஒரு குறும்படமாக 15 - 20 நிமிடம் எடுத்திருந்தால் ரசித்திருக்கலாம் என்று தோன்றுகின்றது. நல்ல கதை.

இவ்வளவு மோசமான ஒரு படத்தை நான் வாழ்க்கையில் பார்த்ததேயில்லை - இப்படியே போனால் தமிழ் படம் மீதான ஆர்வமே போய்விடும் போலிருக்குது. இந்த படத்தை ஒரு சர்வேதேச விழாவில் எப்படித்தான் திரையிடுகிறார்களோ - பணமா அல்லது அரசியலா?

நாளைக்கும் இன்னொரு தமிழ் படம் "சிவபுராணம்" - பாக்கும் யோசனைதான். இந்த உலகத்தையே காக்கும் விஷ்ணு என்னை மட்டும் நாளை விட்டிடுவாரா என்ற நம்பிக்கையில். 75  நிமிடம்தானே - தாக்குப்பிடிப்பான் இந்த ஜீவன்.

ஒரே ஒரு வேண்டுகோள் : குறைந்த செலவில் கலை அம்சமான படம் எடுக்கின்றேன் என்று தயவு செய்து யாரும் இனிமேல் அவசரப்பட்டு கிளம்பிடாதேங்கோ - ப்ளீஸ் 

அப்படி கிளம்பினாலும் எழுத்தோட்டத்துக்கும், முடிவில் போடுற எழுத்தோட்டத்துக்கும் செலவளிக்கிற நேரத்தில கொஞ்சமாவது இது இரண்டுக்கும் இடையிலையும் செலவழியுங்கப்பா. 
 

 

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்

பகிர்வுக்கு நன்றி ஜீவன்..:)

ஏனைய படங்களின் விமர்சனங்களையும் எழுதுங்கள்.

The edge of the heaven 2007 இல் வெளிவந்த படம்.

 

  • தொடங்கியவர்
யாழில் சர்வதேச திரைப்படவிழா
யாழில் சர்வதேச திரைப்படவிழா
யாழ்ப்பாணத்தில் சர்வதேச திரைப்பட விழா கடந்த 23ஆம் திகதி ஆரம்பமாகி யாழ்ப்பாணம் மஜஸ்ரிக் கொம்பிளக்ஸ், யாழ் நூலக கேட்போர் கூடம், யாழ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில்; கடந்த நான்கு தினங்களாக நடைபெற்றுவருகின்றது. 
P1050326.jpg
இந்நிலையில் கைலாசபதி கலையரங்கில் இன்று திங்கட்கிழமை காலை 9 மணியளவில் இந்த திரைப்படவிழா  ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் பிரான்ஸ் நாட்டு திரைப்படமான 'பெண்ணியம்' , பங்களாதேஸின் 'யலாவின் கதை', ருமேனியாவின் 'நான் ஒரு கம்யூனிச மூதாட்டி', பெல்ஜியத்தின் 'வரிக்குதிரை பற்றிய ஆய்வு', இந்தியாவின் 'சிவபூரணம்';, போலந்தின் 'விநோதமான மோட்சகம்';, இலங்கையின் 'ஒரு தெருவைத்தேடி', இங்கிலாந்தின் 'வசந்தத்தின் பின் இலையுதிர் காலம்', நெதர்லாந்தின் 'அத்துமீறி நுழைந்தவர்', லெபனானின் 'சூனியம்', இத்தாலியின் 'பிரம்மியமான அழகு', நேபாளத்தின் 'கலோபொத்தி' ஆகிய சர்வதேச திரைப்படங்கள் திரையிடப்பட்டன. 
 
நாளை இந்நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்னேஸ்வரன் இந்திய திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் போன்றோர் கலந்துகொள்ளவுள்ளனர். 

http://onlineuthayan.com/news/18127

  • தொடங்கியவர்
யாழில் சர்வதேச திரைப்பட விழா நிறைவு
யாழில் சர்வதேச திரைப்பட விழா நிறைவு
 
யாழில் கடந்த  23ஆம் திகதி  ஆரம்பமாகி கடந்த  ஐந்து தினங்களாக தொடர்ச்சியாக நடைபெ ற்று வந்த சர்வதேச திரைப்பட விழா இன்றுடன் நிறைவுபெற்றது.
 
இன்று மாலை 6மணியளவில் மஜெஸ்டிக் கொம்ளெக்சில் இறுதிநிகழ்வுகள்  ஆரம்பமாகின. 
14470740_770247313114353_1024644531_n.jpg
இவ் விழாவில் சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டதுடன் கலைஞர்களும் கௌர விக்கப்பட்டனர். இந் நிகழ்வில் இறுதியில்  ஒஸ்கார் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட விசார ணை திரைப்படம் திரையிடப்பட்டது. 
 
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இந்திய திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டார். மேலும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், சர்வதேச, இந்திய திரைப்பட நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
14518766_770247233114361_316361168_n.jpg

http://onlineuthayan.com/news/18202

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.