Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மற்றுமொரு உறுதிமொழி பரவிப்பாஞ்சான் மக்களின் போராட்டம் கைவிடப்பட்டது

Featured Replies

மற்றுமொரு உறுதிமொழி பரவிப்பாஞ்சான் மக்களின் போராட்டம் கைவிடப்பட்டது
 
 
மற்றுமொரு உறுதிமொழி பரவிப்பாஞ்சான் மக்களின் போராட்டம் கைவிடப்பட்டது
கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடு விக்குமாறு கோரி நேற்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பரவிப்பா ஞ்சான் மக்கள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
 
பரவிப்பாஞ்சான் மக்களின் காணிகளை மூன்று மாதத்திற்குள் மீளப் பெற்றுக்கொடுப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொலை பேசியில் வழங்கிய உறுதிமொழியை அடுத்தே மக்கள் உண்ணாவிரத போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளனர்.
 
கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடு விக்குமாறு கோரி கடந்த ஓகஸ்ட் 31 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் வரை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருத்திருந்த பரவிப்பாஞ்சான்  மக்கள் நேற்று முதல் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
காணிகளை விடுவிக்குமாறு கோரி பரவிப்பாஞ்சான் மக்கள் கடந்தமாதம் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் முன்னெடுத்திருந்தபோது அங்கு சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், இரண்டு வாரங்களுக்குள் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி வழங்கியிருந்தார்.
 
எனினும் குறித்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததை அடுத்தே மக்கள் மீண்டும் தமது காணி களை விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
 
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள ஒரு தாய் நீர் ஆகாரமின்றி நேற்று முதல் உண்ணாவிரதம் இருந்துவருகின்றார். தமது கோரிக்கை நிறைவேறும் வரை தான் இந்தப் போராடடத்தை தொடரப் போவதாக லிங்கராசா மல்லிகா என்ற தாயார் தெரிவித்தார்.
 
இந்த நிலையில் இன்று போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பரவிப்பாஞ்சான் மக்களின் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி எதிர்வரும் 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் பாரிய அளவில் போராட்டமொன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் அதுவரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஒத்திவைக்குமாறு மக்களிடம் கோரி க்கை விடுத்தார். 
 
எனினும் கஜேந்திரகுமாரின் கோரிக்கை தொடர்பில் எந்தவித பதிலையும் தெரிவிக்காத பரவிப்பாஞ்சான் மக்கள் தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.
 
இந்த நிலையில் இன்று மாலை  அரசாங்கத்தின் மகளீர் மற்றும் சிறுவர் விவகார இர ஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொலைபேசி ஊடாக மூன்று மாதகாலத்திற்குள் மக்களின் காணிகளை மீளப்பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்தார்.
 
அது மாத்திரமன்றி எதிர்வரும் திங்கட்கிழமை காணி உரிமையாளர்களுடன் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை நேரில் சென்று பார்வையிடுவதாகவும் உறுதியளித்திருக்கின்றார்.
 
இதனையடுத்தே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தமது போராட்டத்தை கைவிட்டு ள்ளனர்.

http://onlineuthayan.com/news/17340

  • தொடங்கியவர்
பரவிப்பாஞ்சான் மக்களின் காணிகளிலிருந்து இராணுவம் இரண்டு மாதத்திற்குள் வெளியறும்
 
 
பரவிப்பாஞ்சான் மக்களின் காணிகளிலிருந்து இராணுவம் இரண்டு மாதத்திற்குள் வெளியறும்
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களது காணிகளிலிருந்து இராணுவம் இரண்டு மாதத்திற்குள் வெளியறும் என மகளீர் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
இராணுவத்தினர் மக்களின் காணிகளிலிருந்து வெளியேறிய பின்னர் மாதம் வாக்குறுதிய ளித்தவாறு  மூன்று மாத காலத்துக்குள் மக்களின் காணிகள் மக்களிடம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
 
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளின் உரிமை யாளர்களை நேற்று வெள்ளிக்கிழமை மாலை சந்தித்து மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக மகளீர் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கேட்டறிந்து கொண்டார்.
1473524000_download.jpg
அத்துடன் இராணுவத்தினர் வசமுள்ள வீடுகளையும் பார்வையிட்ட மகளீர் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பார்வையிட்டிருந்தார்.
 
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருனாசேன ஹெட்டியாராச்சி வழங்கிய வாக்குறுதி க்கமைய பரவிப்பாஞசான் பகுதியிலிருந்து இராணுவத்தினர் விரைவில் வெளி யேறுவார்கள் என அவர் குறிப்பிட்டார்.
 
கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் பொதுமக்களின் காணிகள் இராணுவ முகாமாக கடந்த ஏழு வருடங்களாக கையகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில்இ தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த ஓகஸ்ட் மாதம் 31 ஆம திகதி மாலை முதல் 17 குடும்பங்கள் முகாமுக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
 
இந்த நிலையில் வியாழக்கிழமை போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பரவிப்பாஞ்சான் மக்களின் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி எதிர்வரும் 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் பாரிய அளவில் போராட்டமொன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் இதனால் அதுவரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஒத்திவைக்குமாறு மக்களிடம் கோரி க்கை விடுத்தார். 
 
எனினும் கஜேந்திரகுமாரின் கோரிக்கை தொடர்பில் எந்தவித பதிலையும் தெரிவிக்காத பரவிப்பாஞ்சான் மக்கள் தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.
 
இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை மகளீர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொலைபேசி ஊடாக மூன்று மாதகாலத்திற்குள் மக்களின் காணிகளை மீளப்பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்தார். இதனையடுத்து பரவிப்பாஞ்சாம் மக்கள் மேற்கொண்ட போராட்டம் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://onlineuthayan.com/news/17426

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.