Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பல சவால்களை எதிர்கொள்கிறோம்

Featured Replies

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பல சவால்களை எதிர்கொள்கிறோம் 

 

 

இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட பல­வந்­த­மாக காணாமல் ஆக்­கப்­பட்டோர் தொடர்­பான ஐ.நா. செயற்­கு­ழுவின் சில பரிந்­து­ரை­களை அர­சாங்கம் ஏற்­க­னவே அமுல்­ப­டுத்த ஆரம்­பித்­துள்­ளது. தொடர்ந்து இந்த செயற்­கு­ழு­வுடன் நாம் ஈடு­பாட்­டுடன் செயற்­ப­டுவோம் என்று இலங்­கையின் ஜெனி­வா­வுக்­கான பிர­தி­நிதி ரவிநாத ஆரி­ய­சிங்க தெரி­வித்தார்.

bf8a2b37a0bc1f5510d685634cf7cc2c_XL.jpg

மேலும் சர்­வ­தேச சமூகம் இலங்­கைக்கு தொடர்ந்து உத­வி­களை பெற்றுக் கொடுக்கும் என நாங்கள் எதிர்­பார்க்­கின்றோம் என்றும் இலங்­கையின் ஜெனி­வா­வுக்­கான பிர­தி­நிதி ரவிநாத் ஆரி­ய­சிங்க சுட்­டிக்­காட்­டினார்.

நேற்று நடை­பெற்ற ஐ.நா.மனித உரிமைப் பேர­வையின் 33 ஆவது அமர்வின் மூன்றாம் நாள் அமர்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­வ­ட­வாறு குறிப்­பிட்டார்.

ரவி­நாத ஆரி­ய­சிங்க அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்,

16 வரு­டங்­களின் பின்னர் இலங்கை அர­சாங்கம் ஐக்­கிய நாடு­களின் பல­வந்­த­மாக காணா­மல்­போனோர் குறித்த செயற்­கு­ழுவை வர­வேற்­றி­ருந்­தது. இது நல்­லி­ணக்கம், ஜன­நா­யகம், நல்­லாட்சி ஆகி­ய­வற்­றிற்கு ஒரு ஊக்­கு­விப்­பாக அமைந்­தது. அந்த குழு­வுக்கு இலங்­கையில் எப்­ப­கு­திக்கும் விஜயம் செய்­வ­தற்­கான சுதந்­திரம் காணப்­பட்­டது.

இந்­நி­லையில் குறித்த ஐ.நா.குழு­வா­னது தனது அறிக்­கையில் இலங்­கையின் ஆரோக்­கி­ய­மான நிலை­மை­களை பாராட்­டி­யுள்­ளது. நல்­லி­ணக்­கத்­துக்­கான சிறந்­ததோர் படிக்­கல்­லாக இந்த குழு­வு­ட­னான ஈடு­பாட்டை நாம் பார்க்­கிறோம். அர­சாங்­க­மா­னது உண்மை நீதி, நட்­ட­ஈடு, மீள்­நி­க­ழா­மையை உறு­திப்­ப­டுத்தல் போன்­ற­வற்றில் செயற்­பட்டு வரு­கி­றது.

இந்த விட­யங்­களில் அர­சாங்கம் வழங்­கி­யுள்ள வாக்­கு­று­தி­களை செயற்­ப­டுத்­து­வதில் பல சவால்­களை எதிர்­கொண்­டுள்ளோம். சில இன­வாத சக்­திகள் அர­சாங்­கத்தின் ஆழ­மான முயற்­சி­க­ளுக்கு தடைக் கல்லை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றன. ஐ.நா.செயற்­குழு இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட பின்னர் இலங்­கை­யா­னது சில முக்­கிய விட­யங்­களை முன்­னெ­டுத்­துள்­ளது.

காணா­மல்­போனோர் தொடர்பில் பொறுப்­புக்­கூ­று­வ­தற்­கான சர்­வ­தேச சாச­னத்தில் நாங்கள் கைச்­சாத்­திட்­டு­ருக்­கின்றோம். அதன் பின்னர் காணா­மல்­போனோர் தொடர்­பாக ஆராயும் நிரந்­தர அலு­வ­ல­கத்தை அமைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. செயற்­குழு முன்­வைத்த பரிந்­து­ரைக்கு அமை­வா­கவே இந்த அலு­வ­லகம் அமைக்­கப்­ப­ட­வுள்­ளது.

அதன் பின்னர் காணா­மல்­போ­னோ­ருக்கு சான்­றிதழ் வழங்­கு­வ­தற்­கான சட்­ட­மூ­லத்­திக்கு பாரா­ளு­மன்றம் அனு­மதி அளித்­துள்­ளது. மேலும் உண்­மையை கண்­ட­றியும் பொறி­மு­றையை தயா­ரிப்­ப­தற்கு 11 பேர் கொண்ட செய­லணி மக்­க­ளுடன் மக்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டல்­க­ளையும் ஆலோ­ச­னை­க­ளையும் நடத்தி வரு­கி­றது. வெ ளிநா­டு­க­ளி­லி­ருந்தும் யோச­னைகள் பெறப்­பட்டு வரு­கின்­றன.

இந்த செய­ல­ணி­யா­னது ஒக்­டோபர் நடுப்­ப­கு­தியில் தனது அறிக்­கையை அர­சாங்­கத்­திற்கு கைய­ளிக்கும். அதன் பின்னர் நல்­லி­ணக்க பொறி­மு­றையை வடி­வ­மைப்­ப­தற்­கான செயற்­பாடு ஆரம்­பிக்­கப்­படும். இதே­வேளை நல்­லி­ணக்க செய­ல­கமும் பிர­த­மரின் கீழ் செயற்­பட்டு வரு­கி­றது. இந்த அனைத்து விட­யங்­க­ளிலும் அர­சாங்கம் ஐ.நா.வுடனும் சர்­வ­தேச செஞ்­சி­லுவை சங்கம் போன்ற அமைப்­புக்­க­ளு­டனும் நெருக்­க­மாக செயற்­பட்டு வரு­கி­றது.

தகவல் அறியும் சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. சாட்­சி­களை பாது­காக்கும் சட்­ட­மூலம் மீளாய்வு செய்­யப்­பட்டு வரு­கி­றது. பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­திற்கு பதி­லாக மாற்று சட்டம் தயா­ரிக்­கப்­ப­டு­கி­றது. வடக்கில் நலன்­புரி முகாம்­களில் உள்ள 971 குடும்­பங்­களை மீள்­கு­டி­யேற்­றவும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­டுள்­ளது. அந்த வகையில் ஐ.நா. செயற்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்கனவே அமுல்படுத்துவதற்கு ஆரம்பித்து விட்டது.

இதேவேளை சிறுபான்மை மக்களின் விவகாரங்களை ஆராயும் ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் ரிட்டா ஐசாக் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் தொடர்பான ஐ.நா. வின் விசேட அறிக்கையாளர் மைனா கை அடுத்த வருடம் முதல் பகுதியில் இலங்கை வரவுள்ளார்.

http://www.virakesari.lk/article/11386

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.