Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க முதலீட்டாளரை தேடும் அரசு

Featured Replies

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க முதலீட்டாளரை தேடும் அரசு
 
 
பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க முதலீட்டாளரை தேடும் அரசு
கடந்தகால யுத்த நடவடிக்கையால் சிதைந்துபோன பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை  மீள புனரமைத்து  ஆரம்பிப்பதற்கும், ககட்டகக பென்சில்கரி அகழும் சுரங்கப் பணிக்கும் முதலீட்டாளர்களை அரசு தேடுகின்றது. 
 
பரந்தன் இரசாயன கூட்டுதாபனம் என்ற பெயரில் முன்பு வடமாகாணத்தில் இயங்கிவந்த இரசாயனத் தொழிற்சாலையின் சேதமடைந்த கட்டடங்கள் இந்த வருட முடிவுக்கு முதல் முழுமையாகக் கட்டிமுடிக்கப் பட வேண்டும். தொழிற்சாலை உற்பத்தியை மீண்டும் ஆரம்பிக்க 525 மில்லியன் ரூபா தொகை அவசியப்படும் எனவும் அரசு தெரிவிக்கின்றது.
 
தொழிற்சாலை நிர்மாணப்பணி பூர்த்தியாகியதும் இலங்கைக்கு தேவையான மொத்த குளோரினையும் உற்பத்தி செய்யக்கூடியதாக இருப்பதோடு, அந்நிய செலவாணித் தொகையாக வருடாந்தம் 900,000 டொலர் தொகையை அரசு சேமிக்க முடியும் என்று அரசு கணித்துள்ளது. 
 
அரசு குளோரினை தற்பொழுது திரவ நிலையில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வருகின்றது.
 
ககட்டககவில் உள்ள பென்சில் கரி அகழும்; சுரங்கங்களின் பங்குகளில் 49 வீதமான பங்குகளை ஆஸ்திரேலியாவில் இதே தொழிலைச் செய்கின்ற ஒரு நிறுவனத்திற்கு அரசு விற்க முனைகின்றது என்று வர்த்தக சங்கத் தலைவர் கூறியுள்ளார். சிறிது காலம் மூடப்பட்ட நிலையிலிருந்த இந்தச் சுரங்கங்கள் அரசின் எந்த முதலீடும் இன்றி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு, இப்பொழுது இலாபத்தில் இயங்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

http://onlineuthayan.com/news/18110

article_1474976580-3.gif

பரந்தன் பிரதேசத்தில் அமைந்துள்ள பரந்தன் கெமிக்கல் கம்பனியை அரச தனியார் பங்காண்மையின் மூலமாக மீண்டும் இயங்கச்செய்வதுக்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தொழிற்துறை மற்றும் வாணிபத்துறை அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்காக பிரேரணைகளைக் கோரியுள்ளதாகவும், இந்த வருட இறுதிக்குள் சேதமடைந்துள்ள பரந்தன் கெமிக்கல் கம்பனியின் கட்டடங்களைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.  தொழிற்சாலையின் செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுக்கச் செய்வதற்கு 525 மில்லியன் ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.  

பொருளாதார முகாமைத்துவத்துக்கான அமைச்சரவைக்குழு பரந்தன் கெமிக்கல் தொழிற்சாலையை மீளக்கட்டமைப்பது தொடர்பில் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. பரந்தன் கெமிக்கல் 150 மில்லியன் ரூபாயை 2015 இல் இலாபமாக பதிவு செய்துள்ளதாகவும், இந்நிலையில் இதன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு திறைசேரியிலிருந்து நிதியை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை இல்லை எனவும் பரந்தன் கெமிக்கல் கம்பனியின் தொழிற்சங்க அங்கத்தவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் பரந்தன் கெமிக்கல் கம்பனியை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய தேவை இல்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

http://www.tamilmirror.lk/182729/பரந-தன-க-ம-க-கல-ஸ-ந-ற-வனத-த-ம-ள-இயங-கச-ச-ய-ய-நடவட-க-க-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.