Jump to content

விதவிதமான காளான் உணவுகளை தயார்செய்வது எவ்வாறு?


Recommended Posts

பதியப்பட்டது
1. பெப்பர் காளான்
 
தேவையான பொருட்கள்:
 
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு, உளுந்து, கருவேப்பிலை - தேவையான அளவு
பெரிய வெங்காயம் - இரண்டு (பொடியாக நறுக்கியது) 
பச்சை மிளகாய் நறுக்கியது - 1
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
மிளகு தூள் - இரண்டு ஸ்பூன்
காளான் - நறுக்கியது - 250 கிராம்
உப்பு - தேவையான அளவு
 
1463219757-7218.jpg
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
செய்முறை:
 
* கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடவும். பின்பு கடுகு, உளுந்து, கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.
 
* பொடியாக நறுக்கிய வெங்காயம் , பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
நறுக்கிய காளானை இதோடு சேர்த்து வதக்கவும்.
 
* இரண்டு நிமிடம் கழித்து காளான் நன்றாக தண்ணீர் விடும். இப்பொழுது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி, மூடி விடவும்.
 
* ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை காளானை நன்கு கிளறி விடவும். 15 நிமிடத்தில் தண்ணீர் முற்றிலும் வற்றி விடும். இப்போது அடுப்பை அணைத்து விட்டு மிளகு தூளை சேர்த்து நன்கு கிளறி விட்டால் தயார்.
 
2. காளான் டோஸ்ட்
 
தேவையான பொருட்கள்:
 
கோதுமை பிரட் - 4 துண்டுகள்
சீஸ் - 2 கட்டிகள் (துருவியது)
காளான் - 8 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
 
1463219791-1467.jpg
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
செய்முறை:
 
முதலில் ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் பிரட் துண்டு களைப் போட்டு, இரண்டு பக்கங்களையும் பொன்னிறமாக டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
 
பின்னர் ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், காளான் சேர்த்து 3-4 நிமிடம் பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் அதில் உப்பு சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.
 
பின்பு அந்த கலவையை டோஸ்ட் செய்த பிரட் துண்டுகளின் மீது வைத்து, அதன்மேல் துருவிய சீஸை தூவி, மைக்ரோவேவ் ஓவனில் வைத்து, 2-3 நிமிடம் சீஸ் உருகும் வரை வைத்து எடுக்க வேண்டும்.
 
இப்போது ஈஸியான காளான் டோஸ்ட் ரெடி. இதன் மேல் தக்காளி சாஸ் ஊற்றி சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.
 
3. காளான் கிரேவி
 
காளான் - 200 கிராம்
தக்காளி - 2
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 2
கிரீம் - அரை கப்
மல்லித் தளை - கால் கப் (பொடியாக நறுக்கியது)
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
வெண்ணெய் - சிறிது
 
1463219833-7217.jpg
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
செய்முறை:
 
* காளானை நான்கைந்து முறை மண் வாசனை போகக் கழுவி, சுத்தம் செய்து, விருப்பமான வடிவில் வெட்டவும்.
 
* பச்சை மிளகாய், இஞ்சி, தக்காளியை அரைத்துக் கொள்ளவும்.
 
* வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். ஒரு கடாயில் நெய் சூடாக்கி, அதில் வெங்காயத்தை வதக்கவும்.
 
* அது நன்கு சிவந்து வரும் போது, தக்காளி, இஞ்சி, மிளகாய் விழுதைச் சேர்த்து வதக்கவும்.
 
* பிறகு காளான் சேர்க்கவும். உப்பு சேர்த்து வதக்கவும். மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கி, காளான் வெந்து, கிரேவியாக வரும் போது, கிரீம் சேர்த்து இறக்கி, சிறிது வெண்ணெய் சேர்த்து,  சப்பாத்தியுடன் பரிமறவும்.
 
  • 2 weeks later...
Posted

சுவை மிகுந்த காளான் மசாலா

சுவை மிகுந்த காளான் மசாலாவை செய்து அனைவரையும் அசத்துவோம்
 
1448535173-6102.jpg
 
 
தேவையான பொருட்கள்:
 
காளான் - 1/2 கிலோ
சோள மாவு - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1/4 கிலோ
தக்காளி - 150 கிராம்
தேங்காய் பூ - 1/4 முடி
பச்சை மிளகாய் - 4
மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
பூண்டு - 1
சோள மாவு 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
 
செய்முறை:
 
1. காளானை சுத்தம் செய்து நடுத்தர சைஸ்க்கு நறுக்கி கொள்ளவும். இதனுடன் அரை டீஸ்பூன் மிள்காய், மஞ்சத்தூள், கறிமசலாத்தூள், மற்றும் 
சோள மாவு, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
 
2. காய்ந்த எண்ணெயில் பிசைந்த காளான் மாவை பொரித்து எடுக்கவும். பச்சை மிளகாய், பூண்டு, கசகசா இவற்றை மிருதுவாக அரைக்கவும்.  
 
3. வெங்காயம், தக்காளி இவற்றை நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வ்தக்கவும். அதனுடன் அரைத்த பூண்டு, பச்சைமிளகாய், கசகசா விழுதை சேர்த்து வதக்கி தக்காளி சேர்க்கவும். பின்பு மீதமுள்ள மசாலா தூள்களை சேர்த்து கிளறவும். 
 
3. பொரித்து வைத்திள்ள காளானை 5 நிமிடங்கள் கழித்து போட்டு கிளறி தேவையான உப்பு சேர்த்து கிளறவும் இதை சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.
 
அருமையான காளான் மசாலா தயாராகிவிட்டது.

http://tamil.webdunia.com/article/making-of-dishes-in-tamil/mushrooms-are-delicious-spices-115112600061_1.html

  • 2 months later...
Posted

பெப்பர் மஷ்ரூம்

Indian Food: Pepper Mushroom - Cooking Recipes in Tamil

 

இயற்கை நமக்குத் தந்த வரப்பிரசாதம்தான் இந்த காளான். அதை இப்போ செயற்கையா உருவாக்கினாலும் இதோட சுவைய அடிச்சிக்கிறதுக்கு... ம்ஹூம் சான்ஸே இல்ல. சத்தான சுவையான உணவு காளான். எப்படிச் செய்தாலும் அதன் டேஸ்ட்.. ஆஹாதான். இந்த முறை பெப்பரோடு சேர்த்து சாப்பிட்டுப் பாருங்க. சுவையும் மணமும் அபாரம். உடல் நலனுக்கும் ஏற்றது.

தேவையான பொருட்கள்:

பட்டன் மஷ்ரூம் - 200 கிராம்
சோள மாவு - 2 டீ ஸ்பூன்
மிளகுத்தூள் - 2 டீ ஸ்பூன்
வெங்காயம் - 1
பால் - 1\4 கப்
பூண்டு - 5 பல்
சீரகத்தூள் - 1 டீ ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* பட்டன் மஷ்ரூம், வெங்காயம், பூண்டு இவற்றை தனித்தனியே பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* கடாயில் நான்கு டீ ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

* இதில் மஷ்ரூம், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து, சிறிது தண்­ரை தெளித்து வேக விடவும்.

* சோள மாவில் பால் சேர்த்துக் கரைத்து, வெந்த மஷ்ரூமில் ஊற்றி நன்றாகக் கிளறி இறக்கவும்.

* கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

* இது பிரெட் டோஸ்டுக்கு ஏற்றது.

* வதக்கும்போது கால் கப் பனீர் துண்டுகளை சேர்த்து செய்தால் சுவை அருமையாக இருக்கும்.

 

http://www.koodal.com/women/cooking/recipes.asp?id=919&title=indian-food-pepper-mushroom

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.