Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தபாய - மஹிந்தவின் உத்தரவுக்கமைய ஆடுகளை வெட்டும் கத்தியால் நடந்த படுகொலை

Featured Replies

ஆடுகளை வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஆயுத்தினால், தொழில்மட்ட கொலைகாரர்களினால் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆடுகளை வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஆயுதத்தை பயன்படுத்தி தொழில் ரீதியாக கொலை செய்யும் கொலைக்காரர்களினால் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தவிர வேறு யார் உத்தரவிட்டிருக்க முடியும்?

பாரத லக்ஷ்மன், வசீம் தாஜுடீன், லசந்த விக்ரமதுங்க ஆகிய கொலை தொடர்பில் ராஜபக்ச ஆட்சி நேரடியாக அல்லது மறைமுகமாக தொடர்புப்பட்டுள்ளதுடன், அவற்றினை மறைப்பதற்கு முயற்சித்துள்ளனர் என ரஞ்சன் ராமநாயக்க இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

ஆடுகளை வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஆயுதம் கொலைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதென எவ்வாறு உறுதியான கூற முடியும் என ஊடகவியலாளர் வினவிய போது,

அதனை உறுதி செய்வதற்காக தான் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது இன்னமும் விசாரணை ஆரம்பிக்கப்படாத நிலையில் ஆடுகளை வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஆயுதம் கொலைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர் எதிர் கேள்விகள் கேட்டுக்கும் போது அந்த இடத்தில் சூடான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://www.tamilwin.com/statements/01/119090?ref=right_featured

  • தொடங்கியவர்

ரஞ்சனின் நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் முறைப்பாடு செய்யப்படும்!

சமூக மேம்பாட்டு பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் முறைப்பாடு செய்யப்படும் என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளா சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கடந்த 27ம் திகதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது நடந்து கொண்ட விதம் குறித்து முறைப்பாடு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் ஊடக சுதந்திரத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

இந்த சம்பவம் குறித்த காணொளிகளை பார்த்ததன் பின்னர் பிரதமரிடம் இது குறித்து முறைப்பாடு செய்யப்படவுள்ளது.

கடந்த அரசாங்கத்தினால் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய போது அதற்காக குரல் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மீளவும் நாட்டில் அவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட இடமளிக்கப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/119197?ref=home

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.