Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீர்வேலி இரட்டைக் கொலைக் குற்றவாளிக்கு மரணதண்டனை

Featured Replies


நீர்வேலி இரட்டைக் கொலைக் குற்றவாளிக்கு மரணதண்டனை
 
 

article_1475134995-gavel300.jpg-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம், நீர்வேலிப் பகுதியில், கடந்த 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைக் கொலை வழக்கில், குற்றவாளியாக இனங்காணப்பட்ட அருணாச்சலம் குகணேஸ்வரன் என்பவருக்கு, மரண தண்டனை வழங்கி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், இன்று வியாழக்கிழமை (29) தீர்ப்பளித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/182845/ந-ர-வ-ல-இரட-ட-க-க-ல-க-க-ற-றவ-ள-க-க-மரணதண-டன-#sthash.lv42UTlj.dpuf
  • தொடங்கியவர்
நீர்வேலி இரட்டைக் கொலை எதிரிக்கு இரட்டை மரண தண்டனை
நீர்வேலி இரட்டைக் கொலை எதிரிக்கு இரட்டை மரண தண்டனை
யாழ்ப்பாணம் நீர்வேலியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பில் இடம்பெற்று வந்த விசாரணைகளில் எதிரியை குற்றவாளியாக இனங்கண்ட யாழ் மேல் நிதிமன்றம் அவருக்கு இரட்டை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
 
கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் திகதி கணவன், மனைவி ஆகியோர் அடித்து படுகொலைச் செய்யப்பட்டதுடன், அவரது மகன் மீது கொலை முயற்சித் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
 
சம்பவத்தில் மார்க்கண்டு உதயகுமார், வசந்திமால உதயகுமார் ஆகியோர் உயிரிழக்க, உதயகுமார் குகதீபன் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
 
இதன்போது கொலைச் செய்யப்பட்ட பெண்ணின் சகோதரனான குணா என்றழைக்கப்படும் புவனேஸ்வரன் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளமையினால் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
இதன்போது இரட்டைக் கொலை குற்றத்திற்காக எதிரிக்கு இரட்டை மரண தண்டனை விதித்த நீதிபதி இளஞ்செழியன், மகன் மீதான கொலை முயற்சி தாக்குலுக்கு 5 வருட கடூழிய சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்தார்.
இந்த அபராத தொகையினை கட்டத்தவறின் மேலதிகமாக 6 மாத கடூழிய சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
 
அத்துடன். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 1 இலட்சம் நட்ட ஈடு வழங்கவேண்டும் என்றும், அந்த பணத்தை வழங்கத் தவறின் மேலும் இரு வருட கடூழிய சிறைதண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

http://onlineuthayan.com/news/18286

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.