Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல்வர் விக்கினேஸ்வரன் மீதான குற்றச்சாட்டுக்கள்

Featured Replies

முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் மீதான குற்­றச்­சாட்­டுக்கள்

 

யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெற்ற 'எழுக தமிழ்' எழுச்சிப் பேர­ணிக்கு தலைமை தாங்­கிய வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் மீது தென்­ப­கு­தியில் வசை­மாரி பொழி­யப்­பட்­டு ­வ­ரு­கின்­றது. அர­சாங்க அமைச்­சர்­களும், இன­வாத அமைப்­புக்­களின் தலை­வர்­களும் முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் மீது கடு­மை­யான குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து வரு­கின்­றனர்.

தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்­புக்கள், பிரச்­சி­னைகள் என்­ப­வற்றை வெளிக்­கொண்­டு­வரும் வகை­யி­லேயே முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் தலை­மையில் எழுக தமிழ் பேரணி நடத்­தப்­பட்­டி­ருந்­தது. இதற்கு பல கட்­சி­களும் பொது அமைப்­புக்­களும் ஆத­ரவு தெரி­வித்­தி­ருந்­தன. இவ்­வாறு தமிழ் மக்­களின் அதி­ருப்­தியை வெளிக்­காட்­டிய எழுக தமிழ் பேர­ணிக்கு தலைமை வகித்த முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் இன்று தென்­ப­கு­தியில் பெரும் எதி­ரி­யாக பார்க்­கப்­படும் நிலை உரு­வா­கி­யி­ருக்­கின்­றது.

எழுக தமிழ் பேரணி நடை­பெற்ற நாள்­முதல் முதல்வர் விக்­கி­னேஸ்­வ­ரனை இலக்­கு­வைத்து அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­களும், இன­வாத அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­களும் ஆவே­ச­மான கருத்­துக்­களை தெரி­வித்து வரு­கின்­றமை இனங்­க­ளுக்­கி­டையே இன்­னமும் முரண்­பா­டான நிலை காணப்­ப­டு­கின்­றது என்­ப­தற்கு சான்­றாக அமைந்­தி­ருக்­கின்­றது.

தமி­ழீ­ழமும் இன­வா­தமும் தோற்­க­டிக்­கப்­பட்ட நிலையில் விக்­கி­னேஸ்­வரன் இன்று இரண்­டா­வது பிர­பா­க­ர­னாக விஸ்­வ­ரூபம் எடுத்­துள்ளார். சிங்­க­ள­வர்­களின் இறு­திக்­கட்ட பொறு­மை­யையும் சோதித்­துப்­பார்க்கும் விக்­கி­னேஸ்­வ­ர­னுக்கு நாம் கூறு­வது என்­ன­வெனில் இனியும் எம்மை சீண்­டிப்­பார்த்தால் இலங்­கையில் உள்ள அனைத்துத் தமி­ழர்­களும் இந்­தி­யா­விற்கு செல்ல தயா­ரா­க­வேண்டும் என்­ப­தே­யாகும். வடக்கில் தலை­தூக்கும் ஈழ­வா­தத்தை தோற்­க­டிப்­ப­தற்கு அனைத்து பௌத்த சிங்­கள அமைப்­புக்­களும் பௌத்த மத­த­லை­வர்­களும் கட்­சி­பே­த­மின்றி ஒன்­றி­ணை­ய­வேண்டும். பொது அணி­யொன்றை உரு­வாக்கி சிங்­கள பௌத்த கொள்­கையை நிலை­நாட்­ட­வேண்டும் என்று பொது­பல சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்­தே­ஞா­ன­சார தேரர் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

கொழும்பில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கருத்துத் தெரி­வித்த அவர் கடும் இன­வாதம் தோய்ந்த கருத்­துக்­களை கூறி­யி­ருக்­கின்றார். நாட்­டி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட தடை­செய்­யப்­பட்ட அமைப்­புக்கள் மீண்டும் இன்று நாட்­டுக்குள் செயற்­பட்டு வரு­கின்­றன. புலி­களின் பிர­தி­நி­திகள் மீண்டும் இந்த நாட்­டுக்குள் அர­சாங்­கத்தின் பூரண ஒத்­து­ழைப்­புடன் செயற்­பட ஆரம்­பித்­துள்­ளனர். அதன் ஒரு கட்­ட­மா­கவே தற்­போது விக்­கி­னேஸ்­வரன் வடக்கில் தெரி­வித்து வரும் கருத்­துக்­களும் அமைந்­துள்ளன. வடக்கில் சிங்­கள மக்­களும் சிங்­கள புனி­தத்­து­வமும் அழிக்­கப்­பட்டு வரு­கின்­றன. தெற்கில் சிங்­கள மக்­க­ளுடன் வாழ்ந்து நீதி­ய­ர­ச­ராக செயற்­பட்ட விக்­கி­னேஸ்­வரன் இன்று வடக்கில் முத­ல­மைச்­ச­ரான பின்னர் சிங்­கள மக்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட்டு வரு­வது நினைத்­துக்­கூட பார்க்க இய­லாத விட­ய­மாக மாறி­யுள்­ளது என்றும் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கூறி­யி­ருக்­கின்றார்.

தெற்கில் தமி­ழர்கள் தடை­யின்றி வாழ்ந்து வரும் நிலையில் வடக்கில் சிங்­கள மக்­க­ளுக்கு தடைகள் விதிக்­கப்­ப­டு­கின்­றன. அதி­கா­ரத்­திற்­காக அர­சாங்கம் வாய்­மூ­டி­யி­ருக்கலாம். ஆனால் நாட்­டுக்­கா­கவும், சிங்­கள பௌத்த மக்­க­ளுக்­கா­கவும், நாம் பொறு­மை­யாக இருக்க­ மாட்டோம் என்றும் அவர் சுட்டிக் ­காட்­டி­யி­ருக்­கின்றார்.

இதேபோல் ஜே.வி.பி.யின் பொதுச் செய­லாளர் ரில்வின் சில்­வாவும் முதல்வர் விக்­கி­னேஸ்­வ­ர­னுக்கு எதி­ராக கருத்து கூறி­யி­ருக்­கின்றார். வடக்கில், சிங்­க­ள­வர்­களை குடி­ய­மர்த்­தக்­கூ­டாது, பௌத்த விகா­ரை­களை நிர்­மா­ணிக்­கக்­கூ­டாது எனக்­கூ­று­வதைப் போல தெற்கில் தமி­ழர்­களை குடி­ய­மர்த்­த­வேண்டாம் என்றோ அல்­லது ஆல­யங்கள் தகர்க்­கப்­ப­ட­வேண்­டு­மென்றோ கருத்து முன்­வைக்­கப்­பட்டால் தமி­ழர்­களின் நிலை என்­ன­வாகும். வடக்கு முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் எல்­லை­மீறி செயற்­ப­டு­கின்றார். விக்­கி­னேஸ்­வரன் போன்ற நன்கு கற்­ற­வர்கள் நாட்டின் சட்டம் என்­ன­வென்­பதை அறிந்­த­வர்கள் இவ்­வாறு அடி­மட்ட நிலையில் இறங்கி இன­வா­தி­க­ளுடன் கைகோர்ப்­பது நாட்டின் சூழ­லுக்கு உகந்­த­தொன்­றல்ல என்று ரில்வின் சில்வா தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

நாட்டில் தேசிய நல்­லி­ணக்கம், இன ஒற்­றுமை குறித்து பேசிக்­கொண்டு செயற்­படும் வேளையில் இவ்­வா­றான மிகவும் மோச­மான கருத்­துக்­களை வட­மா­காண முதல்வர் முன்­வைப்­பது ஒரு­போதும் நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் பாதைக்கு வித்­தி­டாது. மஹிந்த அணி­யி­னரை விக்­கி­னேஸ்­வரன் வளர்ப்­பதும் விக்­கி­னேஸ்­வரன் உள்­ளிட்ட தமிழ் இன­வா­தி­களை மஹிந்த அணி­யினர் வளர்ப்­பதும் இன்று வழ­மை­யாக மாறி­யுள்­ளது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

இவர்­க­ளது கருத்­துக்­க­ளுக்கு ஒரு­படி மேல்­சென்று ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நளின் பண்­டார நேற்று முன்­தினம் நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கருத்துத் தெரி­விக்­கையில் வட­மா­காண சபையின் முத­ல­மைச்­ச­ரையும் பொது எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான வாசு­தே­வ ­நா­ண­யக்­கா­ர­வையும் ஒன்­றி­ணைத்து குற்­றம்­சாட்­டி­யி­ருக்­கின்றார்.

முதல்வர் விக்­கி­னேஸ்­வ­ரனும் வாசு­தேவ­ நா­ண­யக்­கா­ரவும் மைத்­து­னர்­க­ளாவர். இவர்கள் இரு­வரும் இரவில் கொழும்பில் வைத்து கோப்பி அருந்­தி­விட்டு அர­சாங்­கத்­திற்கு எதிராக தீட்­டிய திட்­டமே எழுக தமிழ் பேர­ணி­யாகும். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த ­ரா­ஜ­ப­க் ஷ­வினால் அர­சாங்­கத்­திற்கு எதி­ராக பாரிய சதித்­திட்டம் தீட்­டப்­ப­டு­கின்­றது. இதன் பிர­காரம் தெற்கில் விமல் வீர­வன்ச மற்றும் உதய கம்­மன்­பி­லவும் வடக்கில் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனும் குறித்த சதியில் முக்­கி­ய ­பங்­கா­ளர்­க­ளாக உள்­ளனர். மேலும் இன­வா­தத்தின் ஊடாக ஆட்­சியை கவிழ்க்க இவர்கள் கூட்டு சேர்ந்­தி­ருக்­கின்­றனர் என்று நளின் பண்­டார குற்­றம்­ சு­மத்­தி­யி­ருக்­கின்றார்.

இதேபோல் ஜாதிக ஹெல ­உ­று­மய கட்­சியும் முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் மீது பெரும் குற்­றச்­சாட்டை சுமத்­தி­யி­ருக்­கி­றது. விக்­கி­னேஸ்­வ­ரனின் செயற்­பா­டுகள் தமிழ் சமூ­கத்தை மீண்டும் நந்­திக்­க­ட­லுக்கு இழுத்­து­செல்­வ­தா­கவே அமைந்­துள்­ளது. முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் சட்டம், தொடர்பில் ஆழ­மாக அறிந்த ஒரு நீதி­ய­ர­ச­ராவார். அவர் சட்டம், அறி­யா­தவர் போல் நடந்­து­கொள்­வ­தை­யிட்டு நாம் வருந்­து­கின்றோம் என்று ஹெல உறு­ம­யவின் பேச்­சா­ளரும், மேல் மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான நிஷாந்த வர்­ண­சிங்க தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

 இவ்­வாறு எழுக தமிழ் பேர­ணிக்கு தலைமை வகித்த முதல்வர் விக்­கி­னேஸ்­வ­ர­னுக்கு கடும் குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. மூன்று தசாப்­த­கால யுத்­தத்தில் தமிழ் மக்கள் தமது உயிர்­க­ளையும், உட­மை­க­ளையும் இழந்து நிர்க்­க­திக்­குள்­ளா­கினர். யுத்தம் முடி­வ­டைந்து ஏழு வரு­டங்கள் ஆகி­விட்­ட­போ­திலும், இன்­னமும் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­ப­ட­வில்லை. கடந்த அர­சாங்க காலத்தில் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண இத­ய­சுத்­தி­யுடன் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை. ஆனால் தற்­போது நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­றி­ருக்­கின்­றது. பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­படும் என்ற நம்­பிக்கை மேலோங்­கி­யி­ருந்­தது. ஆனாலும் தற்­போது கூட தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வுகள் இழுத்­த­டிக்­கப்­பட்டு வரு­வ­தை­ய­டுத்து வடக்கில் தமிழ் மக்கள் முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் தலை­மையில் தமது அதி­ருப்­தியை எழுக தமிழ் மூலம் எடுத்­துக்­காட்­டி­யி­ருந்­தனர்.

இந்தப் பேர­ணி­யா­னது அர­சாங்­கத்­திற்கு எதி­ரா­னதோ அல்­லது சிங்­கள மக்­க­ளுக்கு எதி­ரா­னதோ இல்லை என்றும் தமிழ் மக்­களின் உள்­ளக்­கி­டக்­கை­களை வெளிப்­ப­டுத்தும் வகை­யி­லேயே அமைந்­த­தா­கவும் எழுக தமிழ் பேரணியில் உரையாற்றிய முதல்வர் விக்கினேஸ்வரன் தெளிவாக தெரிவித்திருந்தார். இவ்வாறான நிலையில் தமிழ் மக்கள் தமது பிரச்சினைகள் குறித்து வெளியே கூறுவது கூட தென்பகுதியில் இனவாதமாக பார்க்கப்படுகின்றமை கவலையளிக்கும் விடயமாகவே உள்ளது.

சிறுபான்மை தேசிய இனமான தமிழர்கள் தமக்கான உரிமைகள் கிடைப்பதனை இனவாதமாக பார்க்க முடியாது. எழுக தமிழ் பேரணியில் தமிழர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பாகவே வலியுறுத்தினரே தவிர சிங்கள, பௌத்தர்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்க­வில்லை என்று ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரனும் சுட்டிக்காட்டியுள்ளார். உண்மையிலேயே எழுக தமிழ் பேரணியை இனவாதக் கண்ணோட்டத்துடன் பார்க்காது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண தென்பகுதி அரசியல் சக்திகள் முன்வரவேண்டும். அதுவே இன்றைய தேவையாக உள்ளது என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.       

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-09-29#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.