Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேற்குலகில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ள அகதிகள் பிரச்சினை-ஜனாதிபதி

Featured Replies

மேற்குலகில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ள அகதிகள் பிரச்சினை-ஜனாதிபதி
 
 
மேற்குலகில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ள அகதிகள் பிரச்சினை-ஜனாதிபதி
புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளின் பிரச்சினைகள் தற்போது மேற்குலக நாடுகளில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்து ள்ளார்.
 
இலங்கையிலும்  தாக்கம்  செலுத்தும் அந்த மோசமான நிலையை தவிர்ப்பதற்காக புதிய திட் ங்களுடாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் வலியுறுத்தினார்.  
 
குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களம் ஆகியவற்றை கொழும்பின் புறநகரான பத்தரமுல்லையில் அமைந்துள்ள “சுகுறுபாய” புதிய கட்டடத்தில் நிறுவும் நிகழ்வில் இன்று பங்கேற்று உரையாற்றுகையில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 
குடிவரவு குடியகல்வு செயற்பாடுகள் மற்றும் ஆட்களை பதிவுசெய்தல் தொடர்பில் தற்போதுள்ள சட்டதிட்டங்களை பலப்படுத்துதல் மற்றும் தேவையென்றால் புதிய சட்டவிதிகளை வகுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
 
குடிவரவு குடியகல்வு செயற்பாடுகள் மற்றும் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்கள செயற்பாடுகள் தொடர்பில் எழுந்துள்ள சவால்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அடுத்த பாதுகாப்புச் சபைக் கூட்டத்திற்கு அந்தத் திணைக்களங்களின் அதிகாரிகளையும் அழைப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
 
மக்களுக்காக சேவையாறும் நிறுவனங்களிலுள்ள குறைந்த வசதிகள் காரணமாக பாதிக்க ப்படுவது சாதாரண மக்களே எனவும் ஜனாதிபதி  குறிப்பிட்டுள்ளார்.
 
நிறைவேற்றப்படவேண்டிய பணிகளை தாமதித்தாவது தற்போதைய அரசின் கீழ் மக்களுக்காக நிறைவேற்றக் கிடைத்தமையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் அவர் வலியுறுத்தி யுள்ளார்.
 
புதிய தொழிநுட்ப உபகரணங்களுடனான சேவைகள் மூலம் ஏற்படும் வினைத்திறனான தன்மை மற்றும் முறைமைப்படுத்தல் ஊடாக மக்களுக்கும் நட்பான சேவையை வழங்கி, மனநிறைவுடன் அவர்கள் வெளியே செல்லக்கூடியவாறு அவர்களுடைய தேவைப்பாடுகளை நிறைவேற்றுதல் பணியாளர்களின் பொறுப்பாகுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

http://onlineuthayan.com/news/18296

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.