Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தபாய உட்பட எட்டு பேர் நீதிமன்றில் ஆஜர்

Featured Replies

கோத்தபாய உட்பட எட்டு பேர் நீதிமன்றில் ஆஜர்

 

 

அவன்கார்ட் விசாரணை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உட்பட எட்டு பேர் நீதிமன்றில் ஆஜராகியுள்ளனர்.

asdas1.jpg

இதில் அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி மற்றும்   கடற்படையின் முன்னாள்  கட்டளைத் தளபதிகள் மூவர் உள்ளடங்குகின்றனர்.

 

http://www.virakesari.lk/article/11914

  • தொடங்கியவர்
கோட்டாபய உள்ளிட்ட 8 பேருக்கு பிணை
 
30-09-2016 01:00 PM
Comments - 0       Views - 11

அவன் காட் ஆயுத கப்பல் வழக்குத் தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை (30) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரான, பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேரையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/182928/க-ட-ட-பய-உள-ள-ட-ட-ப-ர-க-க-ப-ண-#sthash.DLdFuiHC.dpuf
  • தொடங்கியவர்


பிணை கிடைக்கும் வரை கோட்டாபய ராஜபக்ஷவும்   கூட்டுக்குள்

IMG_6734_limg

0-02-06-a7d354793545186d21bffc37c7100e4f1bac6b2395b6036ae4c0a9928c49cc00_full

0-02-06-a37018ea9dea293d4aa907b2301c72a4ca1174ddbff5886fa3e4831601c2118c_full

படங்கள்: லங்கதீப

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
நீதிமன்ற காவல் கூண்டுக்குள் அடைக்கப்பட்ட கோத்தா
நீதிமன்ற காவல் கூண்டுக்குள் அடைக்கப்பட்ட கோத்தா
அவன்கார்ட் பாதுகாப்பு நிறுவன வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள  முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நேற்று, நீதிமன்றக் காவல் கூண்டுக்குள் சிறிது நேரம் அடைத்து வைக்கப்பட்டார்.
 
அவன்கார்ட் நிறுவனத்தின் மூலம் அரசாங்கத்துக்கு 11.4 பில்லியன் ரூபா வருமான இழப்பை ஏற்படுத்தியததாக குற்றம்சாட்டப்பட்டு கோத்தாபய ராஜபக்ச, அவன்ட் கார்ட் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கு நேற்று கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு குற்றம்சாட்டப்பட்ட கோத்தாபய உள்ளிட்ட 8 பேருக்கும் நீதிமன்றம் பணித்திருந்தது.
 
இதற்கமைய, கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர். அவர்கள் அப்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு கூண்டுக்குள் அடைக்கப்பட்டனர்.
gota-cell.jpg
கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட 8 பேரும் நீதிவான் பிணை வழங்கும் வரையில் நீதிமன்றக் கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்தனர்.
 
வழக்கை விசாரித்த நீதிவான், குற்றம்சாட்டப்பட்டவர்களை தலா 2 இலட்ம்சம் ரூபா பிணையில் செல்ல அனுமதித்தார். அதேவேளை, இவர்கள் அனைவரும் வெளிநாடு செல்வதற்கும் தடைவித்தார்.
 
எனினும், கோத்தாபய ராஜபக்ச, மேஜர் நிசங்க சேனாதிபதி,மேஜர் வதுகே பெர்னான்டோ ஆகியோர் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரினர்.
 
அதற்கு நீதிவான் இதுகுறித்து எழுத்துமூலம் கோரிக்கை விடுக்குமாறும், அதுகுறித்து வரும் 3ஆம் நாள் முடிவெடுக்கப்படும் என்றும் உததரவிட்டார்.
 
நேற்றைய வழக்கு விசாரணையில் கோத்தாபய ராஜபக்சவுக்கு துணையாக மகிந்த ராஜபக்சவும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்

http://onlineuthayan.com/news/18357

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.