Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி தீ அனர்த்தத்திற்கு அரசு நட்டஈட்டைத் தரவி்ல்லை-வர்த்தகர்கள்

Featured Replies

கிளிநொச்சி தீ அனர்த்தத்திற்கு அரசு நட்டஈட்டைத் தரவி்ல்லை-வர்த்தகர்கள்
 
 
கிளிநொச்சி தீ அனர்த்தத்திற்கு அரசு நட்டஈட்டைத் தரவி்ல்லை-வர்த்தகர்கள்
கிளிநொச்சி சந்தைக் கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீயினால் பாரிய நட்டத்தை எதிர்நோக்கி யுள்ள வர்த்தகர்கள் தமக்குரிய நட்டஈட்டை அரசாங்கம் பெற்றுக்கொடுக்கவில்லை என கவலை வெளியிட்டுள்ளனர்.
 
போரினால் அனைத்தையும் இழந்து தமது சொந்தக் காலில் நிற்க முயற்சித்த தாம் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாத துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவி க்கும் கிளிநொச்சி சந்தைக் கட்டட வியாபாரிகள் தமக்கு உதவுமாறு மன்றாட்டமாக கோரி க்கை விடுத்துள்ளனர்.
 
சாம்பல் மேட்டிலிருந்து முதலீடுகளை இழந்தவர்களின் உருக்கமான வேண்டுகோள் என்ற தொனிப்பொருளில் கடந்த 16 ஆம் திகதி கிளிநொச்சி பொது சந்தைக் கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களின் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.
 
இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த வியாபாரிகள் தாங்கள் எதிர்நோக்கும் கஸ்ட ங்களை தெளிவுபடுத்தினர்.  
 
கொடூர யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, உறவுகளை இழந்த நிலையில், வாழ்வாதாரத்தை மேற்கொண்ட வர்த்தகர்களின் கடைகள் எரிந்து நாசமாகியதனால், கடன் தொல்லையில் இருந்து மீளமுடியாது வர்த்தகர்கள் உள்ளதாக கிளிநொச்சி வர்த்தக சங்கம் தெரிவிக்கின்றது.
 
கிளிநொச்சி சந்தைக் கட்டடத் தொகுதியில் கடந்த 16 ஆம் திகதி ஏற்பட்ட தீயினால் அங்கி ருந்த 114 கடைகள் முற்றாக எரிந்துள்ள நிலையில், 222 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்தையும் இழந்துள்ள கிளிநொச்சி வர்த்தகர்களுக்கு கருணை உள்ளம் கொண்டவர்கள் உதவி செய்ய வேண்டும் என்றும் கிளிநொச்சி வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 

http://onlineuthayan.com/news/18341

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.