Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளைகளுக்கு... திருமணம்  பேச ஆரம்பிக்கும் பெற்றோர்கள், அதனை... பிள்ளையிடம் சொல்லலாமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

எனக்குத்தெரிந்து பல இடங்களில் சோறு,சோத்துக்கூட்டம் என்ற நக்கல் நளினங்கள் போய்......

தமிழன் , தமிழச்சி என்று பகிடிவதை பண்ணத்தொடங்கியிருக்கிறர்கள். நல்ல சகுனமாகவே பார்க்கின்றேன்.


எனக்கு தெரிந்த தமிழ் சமுதாயம் தமிழராகவே வாழ்கின்றார்கள்.

பிள்ளைகளை முடிந்த அளவிற்கு தமிழ்மணம் வீச வைக்கின்றார்கள்.(கலியாண சாமத்திய வீடு அல்ல)

வீட்டில் உணவு மற்றும் பழக்கவழக்கங்களில் ஊர் நினைவலைகளை மீள வைக்கின்றார்கள்.

திருமண விடயத்தில் என்னவிட அகங்காரத்துடன் அந்த பிள்ளைகள் இருக்கின்றார்கள்.

 

புலம் பெயர்ந்த நாடுகளில் வேலை படிப்பு விடயத்தில் அவர்களுக்கு அதிகம் தெரியும்....

ஆனால்....


வருங்கால வாழ்க்கை விடயத்தில் எனக்கு இன்னும் அதிகம் தெரியும்...


சொல்ல வேண்டியது என் பொறுப்பு...

சொல்லி திருத்த வேண்டியது என் கடமை.


மீறியவர்களின் கதையும் எனக்குத்தெரியும்.:grin:

அண்ணா

எல்லாத்தமிழர்களது ஆசைகளும் வளர்ப்பும் இது தான்

என் பிள்ளைகளையும் அப்படித்தான்  வளர்க்கின்றேன்.

மேலே நான் எழுதிய  ஒரு வீத கருத்தை எனது மகன் தான் சொன்னான்

அவனது அனுபவப்படியும்  இங்குள்ளநிலைப்படியும்

எமது ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற ஒரு வீதமே சாத்தியம்.

அதுவே களநிலை.

அவன் என்னிடம் இன்னொரு  கேள்வியையும் முன்  வைத்தான்

புலம் பெயர் தேசங்களில்  நிறவெறி  வெளிநாட்டவர்களுக்கெதிரான தேசவெறி  மற்றும் மதவெறி என்பவற்றை வெறுக்கும் நாம்

எந்த அடிப்படைக்குள்  எமது இந்த நிலையை நியாயப்படுத்தமுடியும்

தமது பாடசாலைகளில் வேலைத்தளங்களில் இது சார்ந்து மற்றவர்கள் தம்மை கேலி செய்வதாகவும் சொன்னான்.

 

  • Replies 51
  • Views 6.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் ஏன் தமிழர்களையே திருமணம் செய்ய வேண்டும்?

 

அரசியல், பொருளாதாரம் போன்ற  காரணங்களால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள்  தமிழ்நாடு, இலங்கை போன்ற தமிழர்களின் பூர்வீக நிலங்களை விட்டு தொடர்ந்து  இடம்பெயரும் இக்காலகட்டத்தில் தமிழர்களிடையே நடைபெறும் வேற்றினக் கலப்பு மணங்களால், அந்த தமிழர்களின் இரண்டாவது தலைமுறையினர் மொழியையும்  கலாச்சாரத்தையும் இழப்பது மட்டுமல்ல, தமது அடையாளத்தையும் இழந்து இரண்டும் கெட்ட நிலையில் இருப்பதை பல மேலை நாடுகளில் நாம் கண்கூடாகக் காண்கிறோம். அதை நாகரீகத்தின் வளர்ச்சியின் அடையாளமாக, இனம், மதம் போன்ற குறுகிய கண்ணோட்டங்களிலிருந்து விடுபட்ட உயர்ந்த மனிதர்களின் அடையாளமாக சிலர் நினைத்துக் கொள்வதுமுண்டு.

 
tamilmarriage1smallest3bigger-620x414.jpg
ஆனால் மொழி, இன அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டிருக்கும் இந்தியாவிலும், இன அடிப்படையில் சட்டங்களும், சலுகைகளும் இயற்றப்படுவதுடன்,  இன அடிப்படையில் தமிழர்களின் பூர்வீக நிலங்களில் பெரும்பான்மையினரைக் குடியேற்றி தமிழர்களை தமது சொந்தக் கிராமங்களிலேயே சிறுபான்மையினராக திட்டமிட்டுச் செயல்படும் இலங்கையிலும், புலம்பெயர்ந்த நாடுகளில்  எண்ணிக்கையில் மிகவும் குறைவான நிலையில் வாழும் தமிழர்களின் மத்தியிலும், வேற்றினக் கலப்பு மணங்கள், இன்னும் சில தலைமுறைகளில் தமிழர்களை தமிழ் அடையாளமற்ற கலப்பினமாக மாற்றி விடும் என்பதில் ஐயமில்லை.
 
தமிழர்களுக்கிடையே குறிப்பாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் இரண்டாவது தலைமுறையினர் மத்தியில் அகமணமுறை அருகி வருகிறது, அது மேலும்  ஊக்குவிக்கப்பட வேண்டும்.   தமிழர்கள் தமிழர்களையே திருமணம் செய்ய வேண்டும் அதாவது தமிழர்கள தமிழரல்லாதவர்களை மணப்பதை ஊக்குவிக்கக் கூடாது என்பதற்கும் பெரிய வேறுபாடு உண்டு. தமிழர்களிடையே மறைந்து வரும் அகமண முறை அதாவது தமிழர்கள் சாதியில் அக்கறை காட்டாமல் தமது சாதியை விட்டு மற்ற சாதி தமிழர்களை மணக்கும் முறை ஊக்குவிக்கப்பட வேண்டும், ஏனெனில் அது தமிழினத்தை ஒன்றிணைத்து பலப்படுத்தும். அதே வேளையில் தமிழரல்லாத வேற்றினக் கலப்பு  மணங்களின் மூலம்  தமிழர்களின் வாரிசுகள் தமது தமிழ் அடையாளத்தை இழப்பதால், அது தமிழினத்தை மேலும் நலிவடையச் செய்யும்.
 
வெளிநாடுகளில் நடைபெறும் தமிழர்- தமிழரல்லாதோர் கலப்பினத் திருமணங்களுக்கு காதல் காரணமாகக் கூறப்பட்டாலும் அந்தக் காதலின் பின்னணியில் தமிழர்களின் வெள்ளைத்தோல் ஆசையும் ஒரு காரணமாக இருக்கிறது  என்பதை யாராலும் மறுக்க முடியாது. இயற்கையில் கறுப்பு அல்லது மண்ணிறமுடைய தமிழர்களின் சுயவெறுப்பும்,  வெள்ளைத்தோல் ஆசையும் எந்தளவுக்கு தமிழினத்தை சீர் கெடுத்தது,  அது எவ்வாறு தமிழரல்லாதவர்களின் ஆதிக்கம் தமிழ்நாட்டில் ஏற்பட வழிவகுத்தது என்பதை யாவருமறிவர்.

 
பெரும்பான்மை கலப்பினத் திருமணங்கள் வெள்ளைத் தோலைக் கொண்ட வேற்றினத்தவர்களுக்கும் தமிழர்களுக்குமிடையிலேயே நடைபெறுவதை நாம் காணலாம். காலனித்துவ மூளைச்சலவையால் வெள்ளைத்தோல் தான் அழகு என்ற மனப்பான்மையும், யாராவது வெள்ளைக்காரப் பெண்ணை அல்லது ஆணை மணந்தால் சமுதாயத்தில் அவர்களின் அந்தஸ்து உயர்வதாக சில தமிழர்கள் நினைத்துக் கொள்வதும் இதற்கு காரணமாகும். 
 
அப்படி வெள்ளை இனத்தவர்களை தமது “காதலினால்” வீழ்த்த முடியாதவர்கள்பலர் அதற்கு மாற்றாக சீனப் பெண்களை அல்லது பிலிப்பைன் நாட்டுப் பெண்களை மணந்து தமது ஆசையைத் தீர்த்துக் கொள்வதை நாம் மேலை நாட்டுப் பல்கலைக் கழகங்களிலும், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மத்தியிலும் காணலாம். அதிலும் குறிப்பாக பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி அல்லது மருத்துவத் துறையில்  கல்வி கற்கும் ஈழத்தமிழ் மாணவர்களின் வெள்ளைத் தோலாசையைச் சாதகமாகப் பயன்படுத்தி படிப்பறிவு குறைந்த ஆனால் புத்திசாலித்தனம் மிகுந்த தாய்லாந்து, அல்லது பிலிப்பைன் நாட்டுப் பெண்கள் தமது வலையில் வீழ்த்துவதுமுண்டு.  

ஆசையோடு தமது மகன்களை உயர்கல்வி கற்க வைத்து,  ஊரிலுள்ள  தங்களை விட நல்ல குடும்பத்தைச் சேர்ந்த  பெண்ணைக் கட்டி வைத்து இலங்கையில் தாமிருந்த ஏழ்மையை மறைப்பதற்கு திட்டம் போட்டிருந்த பெற்றோர்களும் கடைசியில் சம்மதம் தெரிவித்து விட்டு, தமது ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல் மறைப்பதும் புலம்பெயர்ந்த நாடுகளில் சாதாரணமாக நடைபெறுகிறது. அதே வேளையில் அவர்களின் மகன் ஒரு கறுப்பு இனப்பெண்ணைக் காதலித்திருந்தால் (அப்படி நடைபெறுவது அரிது), அந்தப் பெண் அழகாகவும், கல்வித்தகைமைகளுடன்  இருந்தாலும் கூட பெற்றோர்கள் ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்கள் ஏனென்றால் கறுப்பர் இனத்தையும் அவர்களின் தோலின் நிறத்தையும் தமிழர்கள் விரும்புவதில்லை.
 

Why I Believe Tamils Should Marry Tamils?

 
 தமிழர்கள் ஏன் தமிழர்களைத் தான் திருமணம் செய்ய வேண்டுமென நான் நம்புகிறேன் (Why I Believe Tamils Should Marry Tamils) ? http://www.tamilculture.ca/why-i-believe-tamils-should-marry-tamils/  என்ற தலைப்பில்,  கனடாவில் வாழும்  வினோத்குமார் என்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர் ஒருவர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கத்தை கீழே காணலாம்.  இந்தக் கட்டுரை தான் இந்தப் பதிவை எழுத என்னைத் தூண்டியது.
 
"என்னுடைய இந்தக் கட்டுரைக்கு குறுகிய மனம்படைத்த, இனவாதம் மிக்க, 21ம் நுற்றாண்டுக்கு ஒவ்வாத கருத்துக்கள் கொண்ட முட்டாள் என என்னைச் சாடிப் பலரும் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.

தமது வாழ்க்கைத் துணையைத் தமக்கேற்றவாறு ஒவ்வொருவரும் தெரிவு செய்ய வேண்டுமென்பதில் எனக்கும் நம்பிக்கையுண்டு. கலப்புத் திருமணத்தை தெரிவு செய்யும் தமிழர்களை நான் இழிவுபடுத்தவோ அல்லது கண்டிக்கவோ இல்லை. ஆனால் பல்வேறு வகையான கலாச்சாரங்கள் பாதுகாக்கப்படவும் அவை  பெரும்பான்மை கலாச்சாரத்துடன் கலந்து காணாமல் போகாமலிருக்கும்  உலகத்தை உருவாக்க ஒவ்வொரு இனக்குழுவினரும் தமது இனத்துடன் திருமண பந்தத்தை தொடர்தல் மிகவும் அத்தியாவசியமானதாகும்.
 
maxresdefault.jpgதமிழர்களாகிய நாங்கள் அனைவரும் ஒரு பொதுவான அடையாளம், மொழி, நம்பிக்கைகள் என்பவற்றைக் கொண்டுள்ளோம். திருமணம் என்பது எமது முன்னோர்கள் ஆயிரமாயிரமாண்டுகள் கட்டிக்காத்த தமிழர்களின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் தொடர்வதற்காக நாம் எடுக்கும் உறுதிமொழியாகும்.

திருமணம் என்பது வெறுமனே ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதற்கும் அப்பாற்பட்டது,  அது பல தலைமுறை, தலைமுறையாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த  பண்பாட்டிலும், பழக்க வழககங்களினதும், நம்பிக்கைகளினதும்  அடிப்படையில் இரண்டு குடும்பங்கள்  இணையும் பாரம்பரியமாகும். எங்களின் இனத்துக்குள் நடைபெறும்  திருமணம் எமது பண்பாட்டையும், கலாச்சார பாரம்பரியங்களையும் பாதுகாக்க உதவுகின்றது, ஏனென்றால் மணமகனும், மணமகளும் அவர்கள் இருவருக்கும் பொதுவான அடையாளத்தையும், கலாச்சாரத்தையும் மதிப்பவர்களாக இருப்பர். 
 
புலம்பெயர்ந்த தமிழர்களாகிய நாங்கள், தொழில் வாய்ப்புக்களுக்காவும், எமக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காகவும் எமது சொந்த மண்ணை விட்டு ஆயிரமாயிரம் மைல்களுக்கு அப்பால் வெளிநாடுகளில் வாழ்கிறோம்.  வெளிநாடுகளை எமது சொந்த நாட்டைப் போன்றே ஏற்றுக் கொண்டோம், எமது வழிபாட்டுத்தலங்களையும், எமது கலாச்சார நிலையங்களையும், நிறுவனங்களையும் எமது அடையாளத்தைப் பேணிப்பாதுகாப்பதற்காக அமைத்துக் கொண்டோம். எமது ஒருங்கிணைந்த தமிழ் அடையாளம், தமிழ்ப் பாரம்பரியத்துடன் எமது பெற்றோர்களால் எமக்கு அளிக்கப்பட்ட– மூத்தோரை மதித்தல், நம்பிக்கை, பண்பாட்டுப் பழக்க, வழக்கங்கள், கல்வி, திருமணம், குடும்பம்- என்பன இன்று புலம்பெயர்ந்த (வெளிநாடுகளில் வாழும்) தமிழர்களின் வெற்றிக்கு அத்திவாரமிட்டவையாகும். ஒரு திருமணத்தில் மணமகளும், மணமகனும் தமிழர்களாக இருக்கும் போது எமது முன்னோர்களின் உயரிய பண்புகளையும், பாரம்பரியங்களையும் பாதுகாக்கவும், அவற்றை எமது குழந்தைகளுக்கு இலகுவாக கையளிக்கக் கூடிய நிலையிலும் நாமிருப்போம். 
மேலும், இனம் என்பது ஒரு சமுதாயக்கட்டமைப்பு, இனங்களுக்கிடையிலான கலப்பு மணங்களை  ஊக்குவிப்பது இனவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்பதை நானும் ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில், தென்னமெரிக்காவில் பலவின கலப்பின மக்களைக் கொண்ட நாடாகிய பிரேசிலில், வெள்ளைத் தோலைக் கொண்ட, ஐரோப்பியர்களின் தலைமுறையில் வந்தவர்கள் செல்வாக்கு மிக்க மேட்டுக் குடியினராக வாழ்வதையும், கருப்பு அல்லது பழுப்பு நிறம் கொண்ட கலப்பின முலாட்டோக்களும், கறுப்பின ஆபிரிக்க – பிரேசிலியர்களும் அடிப்படை  சமூக. பொருளாதார வசதிகளற்றவர்களாகவும், பல இனப்பாகுபாடுகளுக்கும் உள்ளாகின்றனர். இதே நிலை தான் ஏனைய லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், அங்கும் இன ஏற்றத் தாழ்வு காணப்படுகிறது, ஐரோப்பியர்களின் தலைமுறையினர் மேல்மட்டத்திலும் ஏனைய இனக் குழுவினர்களாகிய மெஸ்டீசோக்களும், முலாட்டோக்களும், பூர்விககுடிகளின் பரம்பரையினரும் அடிமட்டத்திலுள்ள குழுவினர்களாகவும் காணப்படுகின்றனர். 

images?q=tbn:ANd9GcSFBKwH1C4nQhR04yshwM4S3Mc6I4Epjts3Gfn4lbecsA-kLvvyNAநான் இளமையில் பல்லின மக்களைக் கொண்ட சிங்கப்பூரில் வாழும் போது,  பழுப்பு நிறத்தைக்  கொண்ட சிந்தியன்CHINDIANS (தமிழர் – சீனர் கலப்பின திருமணங்களின் குழந்தைகள்) தமிழ் அடையாளத்துக்குப் பதிலாக தம்மை பெரும்பான்மை சீனர்களுடன் அடையாளப்படுத்துவதை நான் அவதானித்திருக்கிறேன். அநேகமாக எல்லா கலப்பினச் சிந்தியன்களும் மன்டறினைத் (Mandarin) தமது இரண்டாவது மொழியாகக் கற்பதுடன், ஒரு சீனப் பெண்ணை மணந்து கொண்டு, அவர்களின் மதத்தையும் இழந்து விடுவர். சிந்தியன் ஒரு தமிழ் ஆணை அல்லது பெண்ணை மணப்பது என்பது கிடையாது என்றே கூறலாம். இவ்வாறு வெளிப்படையாகக் கூறுவது, இக்காலத்துக்குப் பொருந்தாதது ஆயினும், எண்ணிக்கையும், பொருளாதார பலமும் உள்ள இனம் எப்பொழுதும் ஒரு கலப்பினக் குழந்தையின் அடையாளத்தைத்  தீர்மானிப்பதில் முன்னிலை வகிக்கும். புலம்பெயர்ந்த தமிழர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாக இருப்பதால், அடுத்த தலைமுறைகளில் தமது தமிழ் அடையாளத்தை முற்றாக இழந்து விடுவர். 
கனடா பல சமூகங்களால் அமைக்கப்பட்ட ஒரு சமூகம் என்றார் (“Canada is a community made up of communities.”) கனடாவின் பதினாறாவது பிரதமர் ஜோ கிளார்க்.  Charlottetown  மாநாடு தொடக்கம் தென்மேற்குப் புரட்சியிலிருந்து  Meech Lake ஆவணம் வரை கனடாவின் ஒவ்வொரு இனக்குழுவின் அடையாளமும் தான் கனடாவின் வரலாற்றை உருவமைத்தது. மேலும், கனடாவில் தமிழர்களின் அரசியல் பலம் எமது மக்களின் பலம் வாய்ந்த எண்ணிக்கையின் அடிப்படையில் தான் தங்கியுள்ளது. கனடாவில் தமிழ் கனேடியன் பாராளுமன்ற உறுப்பினர் இருப்பதற்கு  அவரது தொகுதியில் கணிசமான தொகையில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை தான் காரணமாகும். எங்களின் எண்ணிக்கை குறைவடையும் போது எமது நாட்டில் எங்களின் அரசியல் பலமும் இல்லாமல் போய்விடும்.   
எமது இனத்தை விட்டு வெளியே திருமணம் செய்பவர்களை நாம் இழிவு படுத்தக் கூடாது, அதே வேளையில்  எமது இனத்துக்குள்ளேயே காதலிப்பதையும், திருமணங்களையும்   ஊக்குவிக்க எம்மாலானவரை நாம் முயற்சிக்க வேண்டும்."

 

http://viyaasan.blogspot.qa

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.