Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘ஒன்ராரியோ மருத்துவர்களின் பாலியல் துஷ்பிரயோகம் பற்றிய தகவல்கள் அதிர்ச்சியூட்டுபவை’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ன்ராரியோ மாநில வைத்திய சேவைத்துறையில் நிலவும் பாலியல் வன்முறைபற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளிப்படுத்தும் அறிக்கையொன்று அண்மையில் வெளியாகியுள்ளது. 1990 முதல் 1995 வரையான காலத்துக்குள் ஒன்ராரியோவில் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

எவ்வளவுதான் சட்டங்களும் பாதுகாப்பும் இருந்தாலும், அவற்றையும் மீறிபாலியல் துஷ்பிரயோகங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. சமமற்ற அதிகாரம் நிலவும் சந்தர்ப்பங்களில் இவற்றுக்கான வாய்ப்புக்கள் மிகவும் அதிகமாகிவிடுகின்றன. அதிலும் மருத்துவத்துறையில், மிகப் பலவீனமான நிலையில் உள்ள ஒரு நோயாளி மீது, மருத்துவர்களால் நடாத்தப்படும் துஷ்பிரயோகம் என்பது மிகக் கொடுமையானது. இவ்வாறான சந்தர்ப்பங்கள் பொதுமக்களுக்கு மருத்துவத் துறை மீது இருக்கும் நம்பிக்கையைக் குலைத்து விடுகின்ற ஆபத்தும் இருக்கின்றது. அதனால் தான் சாதாரண சட்டங்களுக்கு மேலதிகமாக சில பாதுகாப்பு முறைகளையும் நடமுறைப்படுத்துதல் அவசியமாகின்றது. எல்லாம் நடந்து முடிந்த பிறகு நீதி வழங்குவது என்பது சட்டத்தில் தொழில். ஆனால் தவிர்ப்பதற்கான சந்தர்ப்பங்களை முற்கூட்டியே ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை. அது மிகவும் அவசியமான ஒன்றும் கூட..

செப்ரெம்பர் 5ம் திகதி மருத்துவத்துறையில் பாலியல் துஷ்பிரயோகமும் அதைத் தடுப்பதற்கான வழிமுறைகளையும் உள்ளடக்கிய இந்த 298 பக்க அறிக்கை வெளியிடப்பட்டது. இதை வெளியிட்டவர் ஒன்ராரியோ அரசாங்கத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் எரிக் ஹொஸ்கின்ஸ். “பூச்சிய சகிப்புத்தன்மை” (Zero Tolerance) என்று தலைப்பிடப்பட்டிருந்த இந்த அறிக்கையில், இத்தகைய துஷ்பிரயோகங்கலைத் தவிர்க்கும் வகையிலான 34 சிபாரிசுகள் அடங்கியுள்ளன. இந்த அறிக்கையின்படி 1990 முதல் 1995 வரையான காலத்துக்குள் ஒன்ராரியோவில் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர் என்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இத்தகைய நிலமைகளைகட்டுப்படுத்துவதற்கான, முற்கூட்டிய பாதுகாப்பு முறைமைகளை உருவாக்குவதும் அமுல்படுத்துவதும் மருத்துவத்துறையின் சொந்தப்பொறுப்பிலேயே இவ்வளவு காலம் இருந்துவருகிறது. அதாவது ஒன்ராரியோ மருத்துவர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் கல்லூரி (CPSO) போன்ற மருத்துவர் சங்கங்களிடம் தம்மைத்தாமே நிருவகிப்பதற்கான உரிமை சட்டத்தினால் வழங்கப்பட்டிருக்கிறது.  ஒன்ராரியோவில் இவ்வாறான 26 மருத்துவர் சங்கங்கள் இருக்கின்றன. இந்தஅறிக்கை, மருத்துவர் சங்கங்களிடம் இருக்கும் இந்த உரிமை அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு சுயாதீனமான அமைப்பு ஒன்றினால் கையாளப்பட  வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசசெலவில் வழக்கறிஞர்களை வழங்க வேண்டும் எனவும் கூறுகிறது. இதற்குக் காரணம், மருத்துவத்துறையின், தம்மைத்தாமே நிருவகிக்கும் முறை கடந்த காலங்களில் பலவீனமாக இருந்ததுடன் மக்கள் நலனினை நோக்காகக் கொண்டு செயல்படத் தவறியிருக்கிறது என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால் 2013 இல் மிஸிசாகா குடும்ப வைத்தியர் ஒருவர் பத்துக்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் சேஷ்டைகளை மேற்கொண்டதை அடுத்து அவர் 8 மாதம் பணி நிறுத்தம் செய்யப்ப்ட்டார். ஆனால் அதன் பின்னர் ஆண் நோயளர்களுக்கு மட்டுமே வைத்தியம் புரிய முடியும் என்ற நிபந்தனையோடு மீண்டும் பணிபுரிய அனுமதிக்கப்பட்டார்.

இந்த அறிக்கையை எழுதியவர் பெண்ணியவாதியும் வழக்கறிஞருமான மரிலோ மக்பெடரன் என்பவர். அவர் இந்த அறிக்கையை, கடந்த டிசம்பர் மாதம் கையளித்திருந்த போதும் எட்டு மாதங்களாக அது கிடப்பில் போடப்பட்டுக் கிடந்தது தொடர்பாக சுகாதார அமைச்சர் மீது குற்றச்சாட்டுக்கள் தேழுப்பப்பட்டுள்ளன. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த அறிக்கை மருத்துவ சங்கங்களுக்கு அவதூறாக அமையலாம் என்ற அச்சம் காரணமாகவே வெளியிடப்பமலிருந்ததாகத் தெரிவிக்கப்படுவது தான்.

மரிலோ மக்பெடரனுக்கும் இந்த அறிக்கையிலிருக்கும் விடயங்களுக்கும் 25 வருட பந்தமுண்டு. 1991 ஆம் ஆண்டு வெளிவந்த ஒருசில செய்திகளை அடுத்து இந்த விடயத்தை எவ்வறு கையாளலாம் என்கிற ஆய்வை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க சிறிஷிளி வினால் இவர் நியமிக்கப்பட்டார். அவரது பரிந்துரைகளே ஒன்ராரியோவின் இவ்விடயம் தொடர்பான சட்டத்துக்கு அடிப்படையாக அமைந்தன. “பூச்சிய சகிப்புத்தன்மை” என்ற உத்தியோகபூர்வ கொள்கை அப்போதே இருந்தது.

ஒன்பது வருடங்களுக்குப் பின்னர் 2000ஆம் ஆண்டு ஒன்ராரியோ அரசாங்கத்தினாலே இதே விடயத்தில் மேற்கொள்ளப்பட்ட செயற்குழுவில் அதே மக்பெடரன் தான் தலைவராக இருந்தார். அப்போது அவர் அளித்த அறிக்கையில் பல்வேறு குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டு 34 பரிந்துரைகளும் வழங்கப்பட்டிருந்தன. இவற்றில் ஒன்றேயொன்று தான் செயற்படுத்தப்பட்டது என்று அவரே பின்னாளில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் தான் மீண்டும் அதே விடயத்தை ஆராய்ச்சி செய்வதர்காக அதே மக்பெடரன் 2014 இல் நியமிக்கப்பட்டார்.

16 வருடங்களுக்குப் பிறகு, இப்போது வெளிவந்த இந்த அறிக்கையிலும் வரிக்கு வரி அதே பரிந்துரைகள் பல இருப்பதே, பழைய அறிக்கை தூசு தட்டப்படாமல் இருந்தது என்பதற்கு அத்தாட்சியாக அமைகிறது. இந்தப் 16 வருடங்களில் ஒன்ராரியோவில் 4 முதல்வர்கள் மாறியிருக்கிறார்கள் ஆனால் மருத்துவர்களால் நடாத்தப்படும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக எந்த ஒரு விடயமும் மாறவில்லை. இப்போதுள்ள லிபரல் அரசாங்கம் பாலியல் துஷ்பிரயோகத்தை எதிர்ப்பதற்காக அதிக நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது ஒரு முக்கியமான விடயமாகும். கத்லீன் வின்னின் அரசின் கீழாவது இப்போது புதிதாக வந்த அறிக்கையிலுள்ள விடயங்கள் கருத்திலெடுக்கப்படும் என்ற என்கிற நம்பிக்கை நிலவுகிறது. அதன் முதற்படியாக, மிக இலகுவான 6 பரிந்துரைகளை முன்னெடுத்து நடமுறைப்படுத்துவதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும், ஒருதடவை பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட வர்கள் மீண்டும் மருத்துவத்துறையில் பணியாற்ற அனுமதிக்கப்படக்கூடாது என்பதே சரியான முடிவாக இருக்கும். ஆண்களை மட்டும் பரிசோதிக்க என்று அவர்களுக்கு அனுமதி அளிப்பது பிரச்சினையைத் தீர்க்கப்போவதுமில்லை, இனி இப்படி நடந்துகொள்ளாமலிக்க மற்றைய மருத்துவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கப் போவதும் இல்லை!.

ஒன்ராரியோ லிபரல் அரசு,பலமான மருத்த்குவ அமைப்புக்களுக்கு எதிராக உறுதியாக நிற்குமா,அதற்காக அது செய்யப்போவது என்ன என்பதை காலம் வெளிப்படுத்திவிடும்.

தகவல்கள்:The Star

 

http://deepam.news/2016/10/04/ஒன்ராரியோ-மருத்துவர்கள/

  • கருத்துக்கள உறவுகள்

இது சாஸ்கச்சுவானில் நடைபெற்ற உண்மைச் சம்பவம்..

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.