Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டேவிட் மில்லரின் அதிரடியில் உலக சாம்பியன்களை நிலைகுலையச் செய்து ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா.

Featured Replies

10 ஓவர்களில் 96 ரன்கள் புரட்டி எடுக்கப்பட்ட ஸ்டெய்ன் பந்து வீச்சு: ஆஸி. 371 ரன்கள் குவிப்பு

 

 
 
 
  • சதம் எடுத்த ஸ்டீவ் ஸ்மித். | படம்: ஏ.எப்.பி.
    சதம் எடுத்த ஸ்டீவ் ஸ்மித். | படம்: ஏ.எப்.பி.
  • சதம் எடுத்த வார்னர் மட்டையை உயர்த்தும் காட்சி. | படம்: ஏ.எஃப்.பி.
    சதம் எடுத்த வார்னர் மட்டையை உயர்த்தும் காட்சி. | படம்: ஏ.எஃப்.பி.

டர்பனில் நடைபெற்று வரும் 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட் செய்து 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 371 ரன்கள் குவித்துள்ளது.

தொடரில் நிலைபெற ஆஸ்திரேலியாவுக்கு இதில் வெற்றி பெறுவது முக்கியம். இன்று டேல் ஸ்டெய்னை விளாசித் தள்ளினர் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள், 10 ஓவர்களில் ஸ்டெய்ன் 96 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தென் ஆப்பிரிக்க ஒருநாள் வரலாற்றில் அதிக ரன்கள் விளாசித் தள்ளப்பட்ட பவுலர் என்ற எதிர்மறை சாதனைக்குரியவரானார் டேல் ஸ்டெய்ன்.

மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ரபாதா 10 ஒவர்களில் 86 ரன்கள் விளாசப்பட்டார். தென் ஆப்பிரிக்க பிட்ச்களும் பேட்டிங் சாதக ஆட்டக்களங்களாக மாற்றப்பட்டுள்ளதை ஸ்டெய்னுக்கு இன்று நடந்த சாத்துமுறை பறைசாற்றுகிறது, பாங்கிசோ ரபாதாவுக்கும் நல்ல அடி.

போட்டியின் முக்கியத்துவத்தை உணர்ந்த கேப்டன் ஸ்மித் டாஸ் வென்றவுடன் பேட்டிங் என்றார்.

வார்னர், ஸ்மித் அதிரடி சதங்கள்:

வார்னர் 107 பந்துகளில் 13 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 117 ரன்களையும் கேப்டன் ஸ்மித் 107 பந்துகளில் 9 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 108 ரன்களையும் எடுத்தனர். முதல் விக்கெட்டுக்காக வார்னரும், பிஞ்சும் இணைந்து 13 ஓவர்களில் 110 ரன்களை விளாசினர்.

டேவிட் வார்னர் ஒருநாள் போட்டிகளில் 81 இன்னிங்ஸ்களில் 3000 ரன்களை எடுத்து மைக்கேல் பெவனுக்கு அடுத்தபடியாக அதிவேக 3000 ஒருநாள் ரன்களை எடுத்த சாதனையை நிகழ்த்தினார்.

ஏரோன் பிஞ்ச் 34 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 53 ரன்கள் அடித்து நொறுக்கினார். இம்ரான் தாஹிர் வந்துதான் அவரது விக்கெட்டை வீழ்த்தினார்.

வார்னரும் பிஞ்சும் இணைந்து டேல் ஸ்டெய்ன், ரபாதாவை பிய்த்து உதற 12-வது ஓவரிலேயே ஸ்கோர் 100ஐ எட்டியது. ஸ்டெய்ன் வீசிய ஆட்டத்தின் 3-வது ஓவரிலேயே வார்னர் அவரை 2பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 17 ரன்களை விளாசினார். 7-வது ஓவரில் ஸ்டெய்னை பிஞ்ச் ஒரு அருமையான பிளிக் சிக்ஸும் ஒரு புல் சிக்சும் அடித்தார். ஸ்டெய்ன் 4 ஓவர்களில் 39 ரன்களை விட்டுக் கொடுத்தார். மொத்தம் டேல் ஸ்டெய்ன் தனது 10 ஓவர்களில் 9 பவுண்டரிகள் 5 சிக்சர்களை விட்டுக் கொடுத்தார். ஸ்டெய்ன் மோசமாக வீசினார் என்று கூறுவதற்கில்லை, வழக்கம் போல்தான் வீசினார், ஆனால் இன்று ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள் பேசிவைத்து ஸ்டெய்னுக்குப் ‘பூசை’ நடத்தினால்தான் தென் ஆப்பிரிக்காவை ஆதிக்கம் செலுத்த முடியும் என்று முடிவு கட்டி ஆடினர், இதில் ரபாதாவும் சிக்கிச் சின்னாபின்னமானார்.

பிஞ்ச் ஆட்டமிழந்த பிறகு ஸ்மித், வார்னர் ஜோடி 2-வது விக்கெட்டுக்காக சுமார் 21 ஓவர்களில் 124 ரன்களைச் சேர்த்தனர். வார்னரும் இம்ரான் தாஹிரிடம் வீழ்ந்து விட, பெய்லி இறங்கி தன் பங்கிற்கு 18 பந்துகளில் 28 ரன்களை விளாசினார், இவரும் ஸ்மித்தும் இணைந்த் 3-வது விக்கெட்டுக்காக 6 ஓவர்களில் 46 ரன்களை விளாசினர். பெய்லி பெலுக்வாயோ பந்தில் டு பிளெசிஸ் பிடித்த அபார கேட்சிற்கு வெளியேறினார் அதேபோல் மிட்செல் மார்ஷ் 2 ரன்களில் டேவிட் மில்லர் பிடித்த மேலும் அபாரமான கேட்சிற்கு ஸ்டெய்ன் பந்தில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஸ்மித் 47-வது ஓவரில் ஸ்டெய்னிடம் பவுல்டு ஆனார்.

டிராவிஸ் ஹெட், ஸ்டெய்னின் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுமாறு 49வது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடிக்க வேட் இறங்கி அவர் ஒரு பவுண்டரி அடிக்க அந்த ஓவரில் 18 ரன்கள் வந்தது. டிராவிஸ் ஹெட் 18 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 35 ரன்கள் எடுக்க மேத்யூ வேட் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 17 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். டுமினி மட்டுமே சிக்கனமாக வீசி 6 ஓவர்களில் வெறும் 32 ரன்களை கொடுத்தார். கடைசி 10 ஓவர்களில் ஆஸ்திரேலியா 101 ரன்களை விளாசியது. இதில் கடைசி 5 ஓவர்களில் 65 ரன்கள் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்க அணிக்கு இலக்கு 372 ரன்கள்.

http://tamil.thehindu.com/sports/10-ஓவர்களில்-96-ரன்கள்-புரட்டி-எடுக்கப்பட்ட-ஸ்டெய்ன்-பந்து-வீச்சு-ஆஸி-371-ரன்கள்-குவிப்பு/article9189163.ece?homepage=true

டேவிட் மில்லரின் அதிரடியில் உலக சாம்பியன்களை நிலைகுலையச் செய்து ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா. 

 

 

fb_img_1475697632224

டேவிட் மில்லரின் அதிரடியில் உலக சாம்பியன்களை நிலைகுலையச் செய்து ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா.

தென் ஆப்பிரிக்காவுக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்துள்ள அவுஸ்திரேலியா அணிக்கும் ,தென் ஆபிரிக்க அணிக்குமிடையிலான 3 வது போட்டி நிறைவுக்கு வந்துள்ளது.

5 போட்டிகள் கொண்டதான இந்த தொடரின் முதலிரு போட்டிகளிலும் வெற்றியைப்பெற்ற தென் ஆப்பிரிக்கா இன்றைய போட்டியிலும் அசத்தல் வெற்றியுடன் தொடரை வெற்றிகொண்டது.

போட்டியில் முதலில் ஆடிய அவுசுதிரேலியா இறுதி 10 ஓவர்களில் 101 ஓட்டங்கள் பெற்றுகொள்ள, அணித்தலைவர் ஸ்மித், வோர்னர் ஆகியோரின் சதத்தின் துணையுடன் 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 371 ஓட்டங்கள் குவித்தது.

fb_img_1475696708503fb_img_1475696701984

372 எனும் இமாலய இலக்குடன் களம் புகுந்த தென் ஆபிரிக்க அணி ஆரம்பம் முதலே அதிரடியில் மிரட்டியது.இறுதியில் அதிரடி மன்னன் டேவிட் மில்லர் அனல் பறக்கும் அதிரடிகாட்ட 49.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து போட்டியில் அசத்தல் வெற்றி பெற்றது.

இறுதி விக்கெட்டில் ஜோடி சேர்ந்த பேலுக்வாயோ மற்றும் மில்லர் ஜோடி 7 வது விக்கெட்டில் 107 ஓட்டங்களை பெற்று அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தது.

இறுதி 10 ஒருநாள் தொடர்களில் 8 இல் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா இந்த தொடரில் தோல்வியை தழுவியமை குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரில் இன்னுமிரு போட்டிகள் மீதமிருக்க ஹட்ரிக் வெற்றியுடன் தொடரை தனதாக்கி உலக சாம்பியன்களை நிலைகுலைய செய்தது தென் ஆப்பிரிக்கா அணி..

fb_img_1475696633900 fb_img_1475697553675

http://vilaiyattu.com/19007-2/

  • தொடங்கியவர்

மில்லர் காட்டடி சதம்: ஆஸி.க்கு எதிராக 372 ரன்களை விரட்டி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!

 

 
அதிரடி சதமடித்து வெற்றிக்கு வித்திட்ட டேவிட் மில்லர் | படம்: ஏஎஃப்பி
அதிரடி சதமடித்து வெற்றிக்கு வித்திட்ட டேவிட் மில்லர் | படம்: ஏஎஃப்பி

டர்பனில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் 371 ரன்களை மகா விரட்டல் செய்த தென் ஆப்பிரிக்கா 372/6 என்று அபார வெற்றி பெற்று, 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்று கைப்பற்றியது.

மேலும், 2009-க்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரை வெல்கிறது தென் ஆப்பிரிக்கா.

டேல் ஸ்டெய்ன், ரபாதா ஆகியோருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக தென் ஆப்பிரிக்க அணியில் டேவிட் மில்லர் 79 பந்துகளில் 10 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் 118 ரன்களை குவித்து இறுதி வரை நாட் அவுட்டாக இருந்து வெற்றிக்கு இட்டுச் சென்றார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய வெற்றியடைந்த துரத்தலாகும் இது.

ஆஸ்திரேலியாவின் 372 ரன்கள் இலக்கை தென் ஆப்பிரிக்கா 49.2 ஓவர்களில் எடுத்து தொடரை வென்றது. முன்னதாக, ஆஸ்திரேலியாவை படுத்தி எடுக்கும் குவிண்டன் டி காக் 49 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 70 ரன்கள் எடுத்தார். ஹஷிம் ஆம்லா 30 பந்துகளில் 45 ரன்களையும், டுபிளெசிஸ் 32 பந்துகளில் 33 ரன்களையும் எடுத்தனர்.

372 ரன்கள் இலக்கைத் துரத்த களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் டி காக், ஆம்லா களமிறங்கினர். ஆம்லா நிதானமாகத் தொடங்கினாலும் பிறகு அருமையான ஆட்டத்தை ஆடினார். பெரிய மட்டைச் சுழற்றல் இல்லாவிடினும் கிரீசுக்குள் தன்னை அழகாக நகர்த்திக் கொண்டு 10 பந்துகளில் ஆஃப் திசையிலும் லெக் திசையிலும் 7 பவுண்டரிக்ளை விளாசினார். கடைசியில் 30 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்து ஹேஸ்டிங்ஸ் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். 8.3 ஓவர்களில் 66/1 என்று ஆனது தென் ஆப்பிரிக்கா. இவர் அடித்த 9 பவுண்டரிகளில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் வொராலை மட்டுமே 5 பவுண்டரிகள் அடித்தார் ஆம்லா.

டு பிளெசிஸ் களமிறங்கிய பிறகு குவிண்டன் டி காக் அடித்து ஆடத் தொடங்கினார். குறிப்பாக மார்ஷ் வீசிய ஸ்லோ பந்தை லாங் ஆஃபில் அருமையாக அடித்த சிக்ஸ் கிளாஸ் ரகத்தைச் சேர்ந்தது. அதே போல் டிராவிஸ் ஹெட் பந்தை ஸ்வீப் செய்து பைன் லெக் பவுண்டரிக்கு விரட்டி 36 பந்துகளில் அரைசதம் கண்டார், அரைசதம் எடுத்த மகிழ்ச்சியை கொண்டாட ஷார்ட் பிட்ச் பந்தை மிட்விக்கெட்டில் சிக்ஸ் விளாசினார்.

பிறகு, டுபிளெசிஸிற்கு சாம்பா பந்தில் ஸ்மித் கவர் திசையில் கடினமான வாய்ப்பைத் தவறவிட்டார். ஆனாலும் டுபிளெசிஸ் நீடிக்கவில்லை. 32 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்த நிலையில் ஹெட் பந்தில் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். டுபிளெசிஸ், டிகாக் இணைந்து சுமார் ஓவர்களில் 74 ரன்களை சேர்த்தனர். முதல் 20 ஓவர்களில் டி20 போல் 161/2 என்று இருந்தது தென் ஆப்பிரிக்கா.

டி காக் 49 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 70 ரன்கள் எடுத்து டிரெமெய்ன் பந்தை புல் செய்ய முயன்று டாப் எட்ஜில் பெரிய கொடியை ஏற்றி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 21 ஓவர்கள் முடிவில் 164/3. ரைலி ரூசோவ் அதிக நேரம் நீடிக்கவில்லை 18 ரன்களில் அவர் சாம்ப்பா பந்தில் எல்.பி.ஆனார். 24 ஓவர்கள் முடிவில் 179/4. அதாவது ரன் விகிதம் 7.45, வெற்றிக்கு தேவையான ரன் விகிதம் 7.42.

மில்லர் காட்டடி தர்பார்:

டேவிட் மில்லர் களமிறங்கி கொஞ்ச நேரத்துக்கு பந்தை பீல்டர் கைகளில் நேராகவே அடித்துக் கொண்டிருந்தார், சாம்ப்பாவும் மிட்செல் மார்ஷும் கொஞ்சம் இறுக்கினர். இதனால் மில்லர் முதல் 11 பந்துகளில் 2 ரன்களையே எடுத்திருந்தார். இதனால் வெற்றிக்கான ரன் விகிதம் 8 ரன்களைத் தொட்டது.

அப்போதுதான் ஸாம்பா 28-வது ஓவரை வீச வர புகுந்தார் மில்லர். முதல் பந்து ஒரு அபாரமான ஸ்வீப், இது அதிக உயரம் கூட எழும்பவில்லை, ஆனால் சிக்ஸ். ஃபிளாட் சிக்ஸ். பிறகு லாங் ஆன். லாங் ஆஃபில் 2 பவுண்டரிகள் என்று அந்த ஓவரில் 16 ரன்கள் வந்தது. ஆனால் அதன் பிறகும் மார்ஷ் ஒரு ஓவரில் 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஹேஸ்டிங்ஸ் 30வது ஓவரில் 3 ரன்களையே விட்டுக் கொடுத்தார். 31-வது ஓவரில் மார்ஷ் மீண்டும் 6 ரன்களையே விட்டுக் கொடுத்தார், பவுண்டரிகள் திடீரென பஞ்சமாயின. இந்த நெருக்கடியில்தான் டுமினி 20 ரன்களில் லெக் திசையில் பெரிய ஷாட்டில் கேட்ச் ஆனார்.

இவர் அவுட் ஆன ஓவரிலும் 3 ரன்களே வந்தது. எனவே 32 ஓவர்களில் 220/5 என்ற நிலையில் வெற்றிக்கு தேவைப்படும் ரன் விகிதம் 8.44 என்று அதிகரிக்க மில்லர் ஆவேசமடைந்தார்.முதலில் வொரால் பந்தை ஒதுங்கிக்கொண்டு லாங் ஆஃபில் ஒருசிக்சரையும் ஒரு புல்ஷாட்டில் பவுண்டரியையும் அடித்து அந்த ஓவரில் 11 ரன்கள் வந்தது. பிறகு ஹேஸ்டிங்ச் சற்றே ஷார்ட் பிட்சாக வீச டீப் மிட்விக்கெட்டில் 4 வரிசைகள் தள்ளிப்போய் விழுந்தது பந்து. 45 பந்துகளில் அரைசதம் கண்டார் மில்லர்.

எதிர்முனையில் பிரிடோரியஸ் 15 ரன்களில் ஆட்டமிழக்க தென் ஆப்பிரிக்கா 38 ஓவர்களில் 268/6 என்று இருந்தது, மிட்செல் மார்ஷ் சில நல்ல ஓவர்களை வீசியதால் ரன்விகிதம் கட்டுப்பட வெற்றிக்குத் தேவையான ரன் விகிதம் 8.66 என்று ஆனது. அப்போதுதான் மில்லருடன் பெலுக்வாயோ இணைந்தார்.

இருவரும் இணைந்து ஆட்டமிழக்காமல் 70 பந்துகளில் 107 ரன்களை விளாசி வெற்றிக்கு இட்டுச் சென்றனர். 45 பந்துகளில் அரைசதம் கண்ட டேவிட் மில்லர் அடுத்த 24 பந்துகளில் மேலும் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 69 பந்துகளில் சதம் கண்டார். கடைசியில் இன்னொரு சிக்சரையும் பவுண்டரியையும் அடித்து 10 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 79 பந்துகளில் 118 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தர்.

பெலுக்வயோ 39 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 42 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். தென் ஆப்பிரிக்கா 49.2 ஓவர்களில் 372/6 என்று ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 2-வது பெரிய வெற்றித்துரத்தலைச் சாதித்தது. 8 ஓவர்கள் வரையிலும் 44 ரன்களை மட்டுமே கொடுத்து சிக்கனம் காட்டிய மிட்செல் மார்ஷ் அதன் பிறகு 2 ஓவர்களில் 17 ரன்களைகொடுத்து 10 ஓவர்களில் 61 ரன்களுடன் சிக்கனமாக வீச்சாளராகவே திகழ்ந்தார்.

ஆட்ட நாயகனாக டேவிட் மில்லர் தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/மில்லர்-காட்டடி-சதம்-ஆஸிக்கு-எதிராக-372-ரன்களை-விரட்டி-தொடரை-வென்றது-தென்-ஆப்பிரிக்கா/article9192086.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.