Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாசிக்குடாவில் பாதுகாப்பு படையினர் அதிகளவிலான சுற்றுலா விடுதிகளை நடத்துகின்றனர்

Featured Replies

5780_1476108017_PhototasticCollage-2016-10-10-15-57-30.jpg

பாசிக்குடாவில் சுற்றுலாத்துறை சம்பந்தமாக மக்களுடன் எந்தவொரு கலந்துரையாடலும் நடத்தப்படாமல் மக்களுடைய காணிகள் சூறையாடப்பட்டுள்ளதாக காணி கொள்ளைகளுக்காக செயற்படும் சுவிஸ் நாட்டு அமைப்பாளர் வூவி சுட்டிக்காட்டியுள்ளார்.

பாசிக்குடாவில் பாதுகாப்பு படையினர் அதிகளவிலான சுற்றுலா விடுதிகளை நடத்துவதாகக் குறிப்பிட்ட அவர், சுற்றுலாத்துறையினால் சாதாரண மக்களுக்கு எந்தவிதமான பலாபலனும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பாசிக்குடா நந்தவனம் சுற்றுலா விடுதியில் இன்று காணி உரிமை மற்றும் மனித உரிமை தொடர்பான செயல் அமர்வு இடம்பெற்றது.

பாசிக்குடாவிலுள்ள மீனவர்கள் தமது காணிகளை விட்டு வெளியேற வேண்டும் என்று அண்மையில் பல பிரச்சினைகள் உருவாக்கியதை அடுத்தே இந்த செயல் அமர்வு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பாசிக்குடாவில் உள்ள பல பிரச்சனைகள் தொடர்பாக பேசப்பட்டதுடன், காணி உரிமை மற்றும் கடல் காணி கொள்ளைகளுக்காக செயற்படும் சுவிஸ் நாட்டு அமைப்பாளர் வூவி, கடந்த 2 வருடங்களாக நடத்திய ஆய்வு குறித்த அறிக்கையை தெளிவுபடுத்தும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சுவிஸ் நாட்டு அமைப்பாளர் வூவி தெரிவிக்கையில், சுற்றுலாத்துறைக்காக அதிக காணிகள் சூறையாடப்பட்டுள்ளது. சிறு மீனவர்கள் பாதிப்பில் உள்ளனர். சாதாரண மக்களுக்கு எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை.

ஆகவே, சாதாரண மக்களின் காணி உரிமை மீறப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை மக்களின் நலனுக்காகவே. ஆனால் பாசிக்குடாவில் எதிர்மாறாக இருக்கின்றது. இந்த மீனவர்களின் மனித உரிமை மறுக்கப்பட்டுள்ளது. ஆகவே இவர்களது காணிகள் தொடர்பாக வெளிநாடுகளிலும் பேசியுள்ளேன். இந்த நிலை தொடருமானால் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் பாசிக்குடாவுக்கு செல்வதை தடைசெய்ய நேரிடலாம்“ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க அமைப்பர் கேமன் குமார, சட்டத்தரணி சம்பத் புஸ்பகுமார, மட்டக்களப்பு இணைப்பாளர் சசிகரன் மற்றும் பாசிக்குடா மீனவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

http://battinaatham.com/description.php?art=5780

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.