Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

400 வது டெஸ்ட் போட்டியை நாளை சந்திக்கிறது பாகிஸ்தான் அணி.முதலாவது பகலிரவு போட்டியும் இதுவே.

Featured Replies

400 வது டெஸ்ட் போட்டியை நாளை சந்திக்கிறது பாகிஸ்தான் அணி.முதலாவது பகலிரவு போட்டியும் இதுவே.

received_10210680736284102.jpeg

400 வது டெஸ்ட் போட்டியை நாளை சந்திக்கிறது பாகிஸ்தான் அணி.முதலாவது பகலிரவு போட்டியும் இதுவே.

பாகிஸ்தான் அணி தங்களது 400 வது டெஸ்ட் போட்டியில் நாளைய தினம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக விளையாடவுள்ளது.

நாளைய போட்டி இன்னுமொரு முக்கியத்துவம் கொண்ட போட்டியாகவும் அமையவுள்ளது, பாகிஸ்தான் அணி விளையாடும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியாகவும் இந்தப் போட்டி அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னணி துடுப்பாட்ட வீரர் யூனுஸ் கான் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு இப்போது மீண்டுவந்தாலும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி 10 நாட்கள் ஓய்வில் இருக்க பணிக்கப்பட்டுள்ளதால் நாளைய போட்டியில் இளம் வீரர் பாபர் அசாம் மற்றும் சகலதுறை வீரர் மொஹமட் நவாஸ் ஆகியோர் அறிமுகமாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதுவரையான 399 டெஸ்ட் போட்டிகளில் 128 வெற்றிகளையும், 113 தோல்விகளையும் பாகிஸ்தான் சந்தித்துள்ளது.

received_10210680593640536

received_10210680594040546

received_10210680594000545

received_10210680593760539

http://www.reeshinternational.com/vilaiyattu/கிரிக்கெட்-செய்திகள்/400-வது-டெஸ்ட்-போட்டியை-நாளை/

  • தொடங்கியவர்

பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் முதல் சதமடித்து சாதித்தார் அசார் அலி.

FB_IMG_1476378852310.jpg

பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் முதல் சதமடித்து சாதித்தார் அசார் அலி.

பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையே இன்று ஆரம்பமான 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் முதலில் துடுப்பாடி வருகின்றது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் ஆரம்ப வீரர்களான சமி அஸ்லம் மற்றும் அசார் அலி ஆகியோர் வலுவான ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தனர்.

இன்று தன்னுடைய 50 வது டெஸ்ட்டில் விளையாடும் அசார் அலி தனது 11 வது சதம் பெற்றார்.அத்தோடு பாகிஸ்தான் சார்பில் அதிக டெஸ்ட் ஓட்டங்கள் பெற்றவர்கள் வரிசையில் 12 வது இடம் பிடித்தார்.

அசார் அலியின் இன்றைய சதம், பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெறப்பட்ட முதல் சதம் எனும் பெருமையும் கிடைத்தது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் விளையாடும் அந்த அணியின் 400 வது டெஸ்ட் போட்டி என்பதோடு, இவ்விரு அணிகளுக்குமான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியென்பதும் குறிப்பிடத்தக்கது.

fb_img_1476378705356

fb_img_1476378804403

fb_img_1476378880068

fb_img_1476380841872

fb_img_1476380834396

fb_img_1476380824923

http://www.reeshinternational.com/vilaiyattu/கிரிக்கெட்-செய்திகள்/பகலிரவு-டெஸ்ட்-போட்டிகளி/

  • தொடங்கியவர்

அசார் அலியின் அபார சதத்தின் துணையுடன் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வலுவான நிலையில்.

FB_IMG_1476380834396.jpg

அசார் அலியின் அபார சதத்தின் துணையுடன் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வலுவான நிலையில்.

பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையே இன்று ஆரம்பமான 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் முதலில் துடுப்பாடியது.

வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இன்றைய டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் ஆரம்ப வீரர் அசார் அலியின் ஆட்டமிழக்காத சதத்தின் துணையுடன் மிகப்பலமான நிலையில் பாகிஸ்தான் காணப்பட்டது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் ஆரம்ப வீரர்களான சமி அஸ்லம் மற்றும் அசார் அலி ஆகியோர் வலுவான ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தனர்.இளம் வீரர் சமி அஸ்லம் 90 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார்.
fb_img_1476385909395

wp-%20width=

fb_img_1476385884715

அதன்பிறகு ஆடுகளம் புகுந்த ஆசட் சபீக் மற்றும் அசார் அலி ஆகியோர் மெலதிக விக்கெட் இழப்பை தவிர்த்து 1 விக்கெட்டை மட்டும் இழந்து 279 ஓட்டங்கள் பெற்ற வேளையில் இன்றைய நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

இன்று தன்னுடைய 50 வது டெஸ்ட்டில் விளையாடும் அசார் அலி தனது 11 வது சதம் பெற்றார்.அத்தோடு பாகிஸ்தான் சார்பில் அதிக டெஸ்ட் ஓட்டங்கள் பெற்றவர்கள் வரிசையில் 12 வது இடம் பிடித்தார்.

அசார் அலியின் இன்றைய ஆட்டமிழக்காத 146 ஓட்ட சதம், பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெறப்பட்ட முதல் சதம் எனும் பெருமையும் கிடைத்தது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் விளையாடும் அந்த அணியின் 400 வது டெஸ்ட் போட்டி என்பதோடு, இவ்விரு அணிகளுக்குமான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியென்பதும் குறிப்பிடத்தக்கது.

நாளை போட்டியில் இரண்டாம் நாளாகும்.

fb_img_1476385874977

fb_img_1476385909395

253439.jpg[caption id=253422.jpg

 

http://www.reeshinternational.com/vilaiyattu/கிரிக்கெட்-செய்திகள்/அசார்-அலியின்-அபார-சதத்த/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பாகிஸ்தானின் 400 வது டெஸ்ட் போட்டியில் முச்சதம் பெற்றார் அசார் அலி.

FB_IMG_1476466994498.jpg

பாகிஸ்தானின் 400 வது டெஸ்ட் போட்டியில் முச்சதம் பெற்றார் அசார் அலி.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரர் அசார் அலியின் அபார முச்சதத்தின் துணையுடன் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வலுவான நிலையில் காணப்படுகின்றது.

பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையே நேற்று ஆரம்பமான 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் முதலில் துடுப்பாடியது.

வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் ஆரம்ப வீரர் அசார் அலியின் ஆட்டமிழக்காத முச்சதத்தின் துணையுடன் (302*) மிகப்பலமான நிலையில் பாகிஸ்தான் காணப்பட்டது.3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 579 ஓட்டங்கள் பெற்றநிலையில் ஆட்டத்தை இடை நிறுத்தியது.

தனது 50 வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அசார் அலி இன்று அபாரமாக விளையாடி ஆட்டமிழக்காத முச்சதம் பெற்றுக்கொடுத்தார்.

பகலிரவு போட்டிகளில் பெறப்பட்ட முதல் முச்சதம் இதுவாகும்.அத்துடன் பாகிஸ்தான் அணி சார்பில் பெறப்பட்ட 4 வது முச்சதமாகும்.இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் ஆரம்ப வீரர் சமி அஸ்லம் ,ஆசாட் சபீக் மற்றும் அறிமுக வீரர் பாபர் அசாம் ஆகியோர் அரைச்சதம் பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

fb_img_1476467047257 fb_img_1476467057653 fb_img_1476467060862 fb_img_1476467065413 fb_img_1476467069283 fb_img_1476467072751

http://www.reeshinternational.com/vilaiyattu/கிரிக்கெட்-செய்திகள்/பாகிஸ்தானின்-400-வது-டெஸ்ட்/

  • தொடங்கியவர்

2 வது இன்னிங்ஸில் 123 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது பாகிஸ்தான்-மேற்கிந்திய தீவுகளுக்கு 346 ஓட்டங்கள் வெற்றி இலக்கு.

b-1-696x472.jpg

2 வது இன்னிங்ஸில் 123 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது பாகிஸ்தான்-மேற்கிந்திய தீவுகளுக்கு 346 ஓட்டங்கள் வெற்றி இலக்கு.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடுகின்ற 400 வது டெஸ்ட் போட்டியும், ஆசிய மண்ணில் இடம்பெறும் முதல் பகலிரவு டெஸ்ட் எனும் பெருமைபெற்ற டெஸ்ட் போட்டி பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் டுபாயில் இடம்பெற்று வருகின்றது.

இந்தப் போட்டியில் முதல் இணங்கிஸில் அபாரமாக ஆடிய பாகிஸ்தான் 2 வது இன்னிங்ஸில் எவரும் எதிர்பாராதவிதமாக வெறுமனே 123 ஓடடங்களுக்குள் சகல விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

இதன்காரணத்தால் இந்தப் போட்டியில் இப்போதைய நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 346 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தலைவர் மிஷிபாஹ் முதலில் துடுப்பாட விருப்பம் வெளியிட்டார்.இதனடிப்படையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரர் அசார் அலியின் அபார முச்சதத்தின் துணையுடன் இந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 579 ஓட்டங்கள் பெற்றநிலையில் ஆட்டத்தை இடை நிறுத்தியது.

received_10210708839986677 fb_img_1476466994498

தனது 50 வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அசார் அலி அபாரமாக விளையாடி ஆட்டமிழக்காத முச்சதம் (302*) பெற்றுக்கொடுத்தார்.

பகலிரவு போட்டிகளில் பெறப்பட்ட முதல் முச்சதம் இதுவாகும்.அத்துடன் பாகிஸ்தான் அணி சார்பில் பெறப்பட்ட 4 வது முச்சதமாகும்.இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் ஆரம்ப வீரர் சமி அஸ்லம் ,ஆசாட் சபீக் மற்றும் அறிமுக வீரர் பாபர் அசாம் ஆகியோர் அரைச்சதம் பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

பதிலுக்கு தமது முதல் இணங்கிஸில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 357 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.டர்ரன் பிராவோ மற்றும் மார்லன் சாமுவேல்ஸ ஆகியோர் அரைசதம் பெற்றனர்.

பந்துவீச்சில் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றிய சூழல் பந்து வீச்சாளர் யாசிர் ஷா இந்து தனது 17 வது டெஸ்ட் போட்டியில் 100 வது விக்கெட் கைப்பற்றினார்.

DUBAI, UNITED ARAB EMIRATES - OCTOBER 16: Yasir Shah of Pakistan celebrates after dismissing Miguel Cummins of West Indies during Day Four of the First Test between Pakistan and West Indies at Dubai International Cricket Ground on October 16, 2016 in Dubai, United Arab Emirates. (Photo by Francois Nel/Getty Images)

பதிலுக்கு 2 வது இன்னிங்க்ஸை தொடர்ந்த பாகிஸ்தான் அணியால் முதல் இன்னிங்ஸ் போன்று வலுவாக ஆட முடியவில்லை.சுழல பந்து வீச்சாளர் தேவேந்திர பிஷோ 8 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற 123 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது.

இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 346 ஓட்டங்கள் நோக்கி துடுப்பாடி வருகின்றது.

ddd

yasir

West Indies bowler Shannon Gabriel (4R) celebrates with his teammates after taking the wicket of Pakistani batsman Azhar Ali on the fourth day of the first day-night Test between Pakistan and the West Indies at the Dubai International Cricket Stadium in the Gulf Emirate on October 16, 2016. / AFP / AAMIR QURESHI (Photo credit should read AAMIR QURESHI/AFP/Getty Images)

 

http://www.reeshinternational.com/vilaiyattu/கிரிக்கெட்-செய்திகள்/2-வது-இன்னிங்ஸில்-123-ஓட்டங்க/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பாகிஸ்தானுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்குமா மேற்கிந்திய தீவுகள்? இறுதி நாளில் வெற்றிக்கு 251 ஓட்டங்கள் தேவை.

marlon-696x452.jpg

பாகிஸ்தானுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்குமா மேற்கிந்திய தீவுகள்? இறுதி நாளில் வெற்றிக்கு 251 ஓட்டங்கள் தேவை.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடுகின்ற 400 வது டெஸ்ட் போட்டியும், ஆசிய மண்ணில் இடம்பெறும் முதல் பகலிரவு டெஸ்ட் எனும் பெருமைபெற்ற டெஸ்ட் ஆட்டம் பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் டுபாயில் இடம்பெற்று வருகின்றது.

இந்தப் போட்டியில் முதல் இணங்கிஸில் அபாரமாக ஆடிய பாகிஸ்தான் 2 வது இன்னிங்ஸில் எவரும் எதிர்பாராதவிதமாக வெறுமனே 123 ஓடடங்களுக்குள் சகல விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

ddd

இதன்காரணத்தால் இந்தப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 346 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட, இன்றைய நான்காம் நாள் நிறைவில் மேற்கிந்திய தீவுகள் தடுமாற்றத்தை தவிர்த்து பாகிஸ்தானுக்கு பதட்டத்தை அதிகரித்துக் கொடுத்துள்ளது.

இன்றைய 4 ம்நாள் நிறைவுக்கு வரும்போது மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 95 ஓட்டங்கள் பெற்றது.ஆட்டமிழக்காது மார்லன் சாமுவேல்ஸ மற்றும் டர்ரன் பிராவோ ஆகியோர் காத்திருக்கின்றனர்.

முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தலைவர் மிஷிபாஹ் முதலில் துடுப்பாட விருப்பம் வெளியிட்டார்.இதனடிப்படையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரர் அசார் அலியின் அபார முச்சதத்தின் துணையுடன் இந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 579 ஓட்டங்கள் பெற்றநிலையில் ஆட்டத்தை இடை நிறுத்தியது.

தனது 50 வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அசார் அலி அபாரமாக விளையாடி ஆட்டமிழக்காத முச்சதம் (302*) பெற்றுக்கொடுத்தார்.

fb_img_1476467072751

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் ஆரம்ப வீரர் சமி அஸ்லம் ,ஆசாட் சபீக் மற்றும் அறிமுக வீரர் பாபர் அசாம் ஆகியோர் அரைச்சதம் பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

பதிலுக்கு தமது முதல் இன்னிங்ஸில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 357 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.டர்ரன் பிராவோ மற்றும் மார்லன் சாமுவேல்ஸ ஆகியோர் அரைசதம் பெற்றனர்.

பந்துவீச்சில் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றிய சூழல் பந்து வீச்சாளர் யாசிர் ஷா இந்து தனது 17 வது டெஸ்ட் போட்டியில் 100 வது விக்கெட் கைப்பற்றினார்.2 வது வேகமான 100 விக்கெட்டுக்கள் எனும் சாதனையும் இவருக்கு சொந்தமானது.

Pakistan v West Indies - 1st Test: Day Four

பதிலுக்கு 2 வது இன்னிங்க்ஸை தொடர்ந்த பாகிஸ்தான் அணியால் முதல் இன்னிங்ஸ் போன்று வலுவாக ஆட முடியவில்லை.சுழல பந்து வீச்சாளர் தேவேந்திர பிஷோ 8 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற 123 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது.

இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 346 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய நான்காம் நாள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 95 ஓட்டங்கள் பெற்றது, மேற்கிந்திய தீவுகளின் வெற்றிக்கு இன்னும் 251 ஓட்டங்களும், பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு இன்னும் 8 விக்கெட்டுக்களை தேவைப்படுகின்றன.

போட்டியின் இறுதி நாள் நாளையாகும்.

CRICKET-PAK-WIS-TEST

 

http://www.reeshinternational.com/vilaiyattu/கிரிக்கெட்-செய்திகள்/பாகிஸ்தானுக்கு-இன்ப-அதிர/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பிராவோ 'பிரேவ்' சதமும் மே.இ.தீவுகள் போராட்ட தோல்வியும்!

 

 
படம்: ஏஎஃப்பி
படம்: ஏஎஃப்பி

துபாயில் பிங்க் பந்தில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகளின் கடுமையான போராட்டத்துக்கு இடையே பாகிஸ்தான் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று பாகிஸ்தான் முன்னிலை பெற்றது. 4-ம் நாள் தேவேந்திர பிஷூவின் 8 விக்கெட்டுகளால் மே.இ.தீவுகளுக்கு ஒரு வெற்றி வாய்ப்பை உருவாக்க 95/2 என்று 5-ம் நாள் களமிறங்கிய மே.இ.தீவுகள் கடைசி வரை போராடி 289 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சுவர் போல் நின்ற டேரன் பிராவோவின் அபார டெஸ்ட் சதம்:

வெற்றி பெற 83 ரன்கள் இருக்கும்போது 249 பந்துகளைச் சந்தித்து 10 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 116 ரன்கள் எடுத்த டேரன் பிராவோ, யாசிர் ஷாவின் பந்துக்கு தன் வலது காலை பந்து பிட்ச் ஆன இடத்துக்கு நகர்த்தாமல் டிரைவ் ஆட முயல, பந்து மட்டையின் உள் விளிம்பில் பட்டு யாசிர் ஷாவிடமே கேட்ச் ஆனது.

அதுவரை ஆட்டம் பாகிஸ்தான் கைகளிலிருந்து நழுவிக் கொண்டுதான் இருந்தது. லாரா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 153 நாட் அவுட் என்று ஆடி தனி ஒருவராக வெற்றி பெற்றதைப் போன்ற ஒரு இன்னிங்ஸ் இது. லாரா அளவுக்கு இவரிடம் சரளம் இல்லை, ஆனால் சந்தர்பாலின் பொறுமையும், லாராவின் உறுதியும் கலந்திருந்த ஒரு இன்னிங்ஸாக இது அமைந்தது.

மொஹீந்தர் அமர்நாத் ஒருமுறை பாகிஸ்தானில் விரோதமான நடுவர் தீர்ப்புகளுக்கு மத்தியில் 109 ரன்கள் எடுத்து டெஸ்ட் போட்டியை டிரா செய்து கொடுத்த இன்னிங்ஸ் நினைவுக்கு வருகிறது. அன்றும் ஏகப்பட்ட பவுன்சர்களை அவர் உடம்பில் வாங்கினார், சிலவற்றை புல், ஹூக் செய்தார். ஆனால் விக்கெட்டை கொடுக்கவில்லை. அதேபோல் நேற்றும் அமீர், வஹாப் ரியாஸின் ஷார்ட் பிட்ச் பந்துகளில் ஓரிரு முறை அடிவாங்கினர், மற்றபடி முழுக் கட்டுப்பாட்டுடன் விலகினார்.யாசிர் ஷாவின் சோதனைகளை உறுதியான உத்திகள் மூலம் எதிர்கொண்டார்.

கடைசியில் ஜேசன் ஹோல்டர் அந்த ஒரு ரன்னை எடுத்திருக்காவிட்டால் டேரன் பிராவோ ஒரு வேளை அவுட் ஆகியிருக்க மாட்டாரோ என்னவோ? ஆனாலும் ஆஃப் திசையில் சில கட்கள், டிரைவ்கள் கண்ணுக்கினியதாக இருந்தது, இந்த இன்னிங்ஸ் சரளம் பற்றியதல்ல உறுதியைப் பற்றியது என்பதை பிராவோ தனது ஆட்டத்தின் மூலம் அறிவித்தபடியே இருந்தார்.

காலையில் மர்லன் சாமுவேல்ஸ் முதல் பந்தில் மொகமது ஆமிர் பந்தில் தேவையில்லாமல் ஆட்டமிழந்தார். ஒருமணிநேர ஆட்டத்திற்குள் ஜெர்மைன் பிளாக்வுட்டும் மொகமது நவாஸ் பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார்.

ராஸ்டன் சேஸ், டேரன் பிராவோ இணைந்து 77 ரன்களை போராடி 5-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். சேஸ் 35 ரன்களில் யாசிர் ஷாவிடம் பவுல்டு ஆனார்.

அதன் பிறகு பிராவோதான் கடைசி செஷனில் ஒரு மணி நேரம் வரை அவர் அணியின் சுமையை சுமந்தார். கடைசியில் களைப்படைந்த ஒரு ஷாட்டில் யாசிர் ஷாவின் அருமையான கேட்சிற்கு வெளியேறினார்.

விக்கெட் கீப்பர் ஷேன் டவ்ரிச்சை வஹாப் ரியாஸ் யார்க்கரில் வெளியேற்றினார். ஜேசன் ஹோல்டரும், பிராவோவும் இணைந்து 69 ரன்களைச் சேர்த்தனர். ரன்கள் முக்கியமல்ல சுமார் 24 ஓவர்களை இருவரும் ஆடினர். ஹோல்டர் கடைசி வரை நாட் அவுட்டாக இருந்து 40 ரன்களை சேர்த்தார்.

பிஷூ 3 ரன்களில் நவாஸிடம் எல்.பி.ஆக, கமின்ஸ், கேப்ரியல் இருவரும் ரன் அவுட் ஆக பிராவோ ஆட்டமிழந்த பிறகு 15 ஓவர்கள் தாக்குப் பிடித்த மே.இதீவுகள் கடைசியில் 109 ஓவர்களில் 289 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மொகமது ஆமிர் 3 விக்கெட்டுகளையும் யாசிர் ஷா, நவாஸ் முறையே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகனாக முச்சதம் கண்ட அசார் அலி தேர்வு செய்யப்பட்டார். இந்த அருமையான டெஸ்ட் போட்டியை மைதானத்தில் மொத்தம் 100 பேர் பார்த்திருந்தால் பெரிய விஷயம் என்றே தெரிகிறது. காலி மைதானத்தில் இரு அணிகளும் இத்தகைய 'ஸ்பிரிட்டான' கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தியது மிகப் பெரிய விஷயமே.

http://tamil.thehindu.com/sports/பிராவோ-பிரேவ்-சதமும்-மேஇதீவுகள்-போராட்ட-தோல்வியும்/article9233729.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.