Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பணிப்பாளர் உட்பட தலைவரும் பதவி விலகல்

Featured Replies

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்‌ஷி டயஸ் விக்ரமசிங்க தனது இராஜினாமா கடிதத்தை இன்று சமர்ப்பித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச மற்றும் முப்படை தளபதிகள் ஆகியோரை நீதிமன்றிற்கு அழைத்தமை தொடர்பில், கடந்த வாரம் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தொடர்பில் ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகியிருந்தது.

குற்றப்புலனாய்வு பிரிவினர், நிதிமோசடி விசாரணைப்பிரிவினர், மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு போன்றவை அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு செயற்படுமானால் அவற்றுக்கு எதிராக தீர்மானங்களை எடுக்க நேரிடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் கூறியிருந்தார்.

மேலும் ஜனாதிபதியின் இந்த கருத்து காரணமாகவே இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்‌ஷி டயஸ் விக்ரமசிங்க இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தில்ருக்ஸி டயஸ் பதவி விலகல் ஏற்றுக்கொள்ளப்பட்டது

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஸி டயஸ் விக்ரமசிங்கவின் பதவி விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாட்டுப் பயணமொன்றை மேற்கொண்டு நாடு திரும்பிய தில்ருக்ஸி இன்று தமது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்த இராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக கொழும்பு இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தொடர்பில் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தில்ருக்ஸி பதவி விலகுவார் என அறிவிக்கப்பட்டது.

பின்னர் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தலையீடு செய்து பதவி விலகுவதனை தடுத்ததாகக் கூறப்பட்டது.

எனினும் நாடு திரும்பியதும் தில்ருக்ஸி தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி இராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பணிப்பாளர் உட்பட தலைவரும் பதவி விலகல்

இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவியில் இருந்து தில்ருக்ஸி டயஸ் விக்ரமசிங்க விலகியதை அடுத்து ஆணைக்குழுவின் தலைவர் டி.பி. வீரசூரிய உட்பட ஆணையாளர்கள் பதவி விலக உள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இவர்கள் பதவி விலக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டப்ளியூ. லால் ரஞ்சித் சில்வா மற்றும் சீ. நெவில் குருகே ஆகியோர் ஆணைக்குழுவின் ஆணையாளர்களாக பதவி வகித்து வருகின்றனர்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/politics/01/121339?ref=home

  • தொடங்கியவர்

சர்வதேசத்தை ஏமாற்ற சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் போடும் நாடகங்கள் பலவிதம்.

பல பில்லியன் டாலர்கள் பெறுமதியான தமிழர் சொத்துக்களை கொள்ளையடித்து உல்லாச வாழ்வு வாழும் ராஜபக்ச கும்பலும், சிங்கள-பௌத்த பாதுகாப்புப் பயங்கரவாதிகளும் சுதந்திரமாக உலாவ "நல்லாட்சி" வேடம் போட்ட சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் விதம் விதமாக நடிக்கிறார்கள்.

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் இந்த நடிப்புக்களில் ஏமாந்து கொண்டிருக்கும் ராஜதந்திர முட்டாள்கள் இவர்களை பாராட்டி பாராட்டி தலைமறைவாகிறார்கள்.

 

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் தமிழின விரோத நீதித்துறை இயந்திரம் மீண்டும் மீண்டும் கேலிக்கூத்தாகிறது.  

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்தின் இனமதவெறிக் கறை படிந்த நீதித்துறையை தமிழர்கள் ஒருபோதும் நம்பவே முடியாது என்பது மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது.

கடந்த 60+ வருடங்களில்  சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்தின் நீதித்துறை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் எவைக்கும் தேவையான முழுமையான நீதியை, நிவாரணத்தை பெற்றுக்கொடுத்த சரித்திரம் இல்லை.

மிக மிக நீண்ட காலமாக தமிழின விரோதமாகவும், சிங்கள-பௌத்த பயங்கரவாதிகள் - கொலைகாரர்கள் - கொள்ளைக்காரர்கள் - பாலியல் வன்கொடுமையாளர்கள் சார்பாகவும் இயங்கி கறைகள் பல படிந்த இந்த (அ)நீதித்துறையை தமிழர்கள் இன்னொரு 60+ வருடங்களுக்கு நம்புவதற்கோ, ஏற்றுக்கொள்வதற்கோ அடிப்படைக் காரணங்கள் எதுவுமே இல்லை.

 

  • தொடங்கியவர்

பிரதமர் உச்சகட்ட கோபம்! ஜனாதிபதி தயக்கம்

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்சி டயஸ் விக்கிரமசிங்கவின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி செயலகம் ஏற்றுள்ளது.

எனினும் தற்போது வரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அந்த கடிதம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நாடு திரும்பிய பின்னர் இது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

ஜனாதிபதி கோரிக்கை விடுத்தால், இராஜினாமா செய்துக் கொள்ளும் தீர்மானத்தை மாற்றிக் கொள்வதாக டில்ருக்சி டயஸ் விக்கிரமசிங்க தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார்.

பதவி இராஜினாமா செய்துக் கொள்வதற்கு அவரால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பிரதமரின் கடுமையான கோபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://www.tamilwin.com/election/01/121508?ref=youmaylike1

  • தொடங்கியவர்

பிரதமர் நாடு திரும்பியதும் தில்ருக்ஷியை சந்திக்க உள்ளார்

ஐரோப்பாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் நாடு திரும்பவுள்ளார்.

பிரதமர் நாடு திரும்பியதும் உடனடியாக இலஞ்ச ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவை அழைத்து விரிவாக விடயங்களை கேட்டறிய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பிரதமர் நாடு திரும்பியதும் சிரேஷ்ட அமைச்சர்களும் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதனையடுத்து இந்த அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரியவருகிறது.

http://www.tamilwin.com/politics/01/121708?ref=home

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.