Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் நகரை அபிவிருத்தி செய்யும் வகையில் உலகவங்கி பிரதிநிதிகள் கள நிலைமைகள் குறித்து ஆராய்வு

Featured Replies

யாழ் நகரை அபிவிருத்தி செய்யும் வகையில் உலகவங்கி பிரதிநிதிகள் கள நிலைமைகள் குறித்து ஆராய்வு
 
 
யாழ் நகரை அபிவிருத்தி செய்யும் வகையில் உலகவங்கி பிரதிநிதிகள் கள நிலைமைகள் குறித்து ஆராய்வு
நாட்டின் நகர அபிவிருத்தி திட்டங்களை முன்னேற்றும் வகையில் உலக வங்கியின் அபிவிருத்தி செயற்றிட்ட உயர் மட்ட அதி காரிகள் குழுவினர் இன்றையதினம் யாழ் மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.இக்குழுவினர் எதிர்வரும் 05 ஆண்டு களுக்கான யாழ் மாவட்ட அபிவிருத்தி செயற்றிட்டத்தினை முன்னெடுக்கும் வகையில்கள நிலைமைகளை ஆராய்ந்து கொண்ட னர்.
 
இக்குழுவினர் யாழ் ஆரியகுளப்பகுதிக்கு விஜயம் செய்ததுடன் அங்குள்ள நிலைமைகளையும் கண்டறிந்தனர். 
1476787516_unnamed%20%281%29.jpg
அத்துடன்  120 கிலோ மீற்றர் கொண்ட  கொடிகாமம் வீதி,பழையபூங்கா வீதியில் உள்ள மாவட்ட செயலக  நிர்மாணப்பணிகள்,யாழ் கோட்டையின் வெளிப்புற சுற்றுப்புற அபிவிருத்திகள்,மற்றும் யாழ் நகர் இயற்கை வள செயற்றிட்டங்கள்,மற்றும் புரதான குளங்கள் ,புல்லுக்குளம்,ஆரியகுளம்,தேவரிக்குளம் போன்ற செயற்றிட்டங்களை உலக வங்கி   புனர் நிர்மாணம் செய்யவுள்ளதாக  யாழ் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.சுதர்சன் தெரிவித்தார்.
 
யாழ் மாவட்டத்தின் வரலாற்று இடங்களை பாதுகாக்கும் நோக்கில் இக்குழுவினர் அபிவிருத்தி செயற்றிட்டங்களை முன்னெடுக்க வுள்ளதாகவும் யாழ் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.சுதர்சன் மேலும் தெரிவித்தார்.
 
இதில் உலக வங்கியின் மற்றும் நகர அபிவிருத்தி, மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
 
cvax%20%281%29.jpg
 
 

http://onlineuthayan.com/news/19114

யாழ் நகரின் வரலாற்று இடங்கள் புனரமைப்புக்காக உலகவங்கியால் தெரிவு!

நாட்டின் நகர அபிவிருத்தி திட்டங்களை முன்னேற்றும் வகையில் உலக வங்கியின் அபிவிருத்தி செயற்றிட்ட உயர் மட்ட அதிகாரிகள் குழுவினர் இன்று யாழ் மாவட்டத்திற்கு பயணம் ஒன்றை மேற்கொண்டனர்.  இக்குழுவினர் எதிர்வரும் 05 ஆண்டுகளுக்கான யாழ் மாவட்ட அபிவிருத்தி செயற்றிட்டத்தினை முன்னெடுக்கும் வகையில் யாழ்ப்பாணத்திற்கு நேரடியாகப் பயணம் செய்து கள நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.

அத்துடன் இக்குழு யாழ்ப்பாண நகரின் மத்தியில் அமைந்துள்ள ஆரியகுளத்தினை நேரடியாக ஆராய்ந்துள்ளனர்.

இது தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ். சுதர்சன் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை புனர் நிர்மாணம் செய்யப்படாது இருக்கும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடங்களைப் பாதுகாக்கும் நோக்கில் இக்குழுவானது அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்தார்.

இதனடிப்படையில், 120கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட கொடிகாம வீதி, பழைய வீதியில் மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் அமைந்துள்ள பழைய பூங்கா, யாழ்ப்பாணக் கோட்டையின் உட்புற மற்றும் வெளிப்புற அபிவிருத்திகள், யாழ் நகர் இயற்கை வள செயற்றிட்டங்கள் மற்றும் புராதன குளங்களான புல்லுக்குளம், ஆரிய குளம், தாவரங்குளம் ஆகியவற்றின் புனரமைப்பு வேலைகளைச் செய்வதற்கு இக்குழுவினர் இணக்கம் கண்டுள்ளனர்.

இச்செயலமர்வில் உலகவங்கியின் நகர அபிவிருத்தி மற்றும் மாவட்டச் செயலகத்தின் உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

http://thuliyam.com/?p=45150

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.