Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முக்கியமான அரச இரகசியங்களின் மூலப்பிரதிகள் வெளிநாட்டு இணையத்தில் வெளியீடு

Featured Replies

இலங்கை அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாதத் தடைச் சட்டமூலத்தின் பிரதி ஒன்று லண்டனில் செயற்படும் இணையத்தளம் ஒன்றில் வெளியாகியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

58 பக்கங்களைக் கொண்ட இந்த பயங்கரவாதத் தடைச்சட்ட மூலத்தின் பிரதி நேற்று குறித்த இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த புதிய சட்டமூலம் மக்கள் தெரிந்து கொள்வதற்காக இதுவரையில் வெளியிடப்படவில்லை.

எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரபல நபர் ஒருவருக்கு இந்த சட்ட மூலம் கிடைத்துள்ளதாக லண்டன் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மிகவும், இரகசியத் தன்மையுடையது என கருதப்படும் அம்சங்களும் இந்த சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

குறித்த புதிய பயங்கரவாதத் தடைச் சட்டமூலத்தின் கீழ், பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு 20 வருடங்களுக்கு குறையாத சிறைத்தண்டனையும், சொத்துக்கள் பறிமுதல் போன்றவைகளும் மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

http://www.tamilwin.com/security/01/121513?ref=home

  • தொடங்கியவர்

பல்லாயிரம்  மனிதப் படுகொலைகளை, தமிழின அழிப்பை, தமிழர் சொத்துக்கள் அபகரிப்புகளை - அழிப்புக்களை, பல கடத்தல்களை, பல கொள்ளைகளை, பல பாலியல் பலாத்காரங்களைச் செய்த  சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளால் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தயாரிக்கப்பட்டு சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் அமைச்சரவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் தொடர்ந்தும் ஜனநாயகம் என்ற போர்வையில் சர்வதேசத்தை ஏமாற்றியபடி தமிழின அழிப்பை தொடரும் அரச பயங்கரவாதத்தை முன்னெடுக்க தேவையான வசதிகள் அனைத்தையும் கொண்டுள்ளது.

மேலும் நீதித்துறை எப்போதும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள், சிங்கள-பௌத்த பாதுகாப்புதுறைப் பயங்கரவாதிகள், சிங்கள-பௌத்த இனமதவெறிக் கொலைகாரர்கள் சார்பாக இயங்கும் வகையில் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

குறித்த சட்டம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Draft_of_Counter_Terrorism_Law_-_2016_Oct_-_Prepared_by_Sinhala-Buddhist_Govt_Terrorists.pdf

Edited by போல்

  • தொடங்கியவர்
On 19/10/2016 at 0:33 PM, போல் said:

குறித்த சட்டம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Draft_of_Counter_Terrorism_Law_-_2016_Oct_-_Prepared_by_Sinhala-Buddhist_Govt_Terrorists.pdf

இதை முழுமையாக படித்துப் பார்ப்பது ஈழத்தமிழரில் அக்கறை உள்ளவர்களின் கடமை!

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் தமிழின அழிப்பில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான ஒரு சட்டத்தை முதலில்  கொண்டுவர வேண்டும். அதில் விலாவரியாக தமிழின அழிப்பில் ஈடுபடும் பயங்கரவாதிகளுக்கான தண்டனைகள், அவர்களின் சொத்துக்கள் பறிக்கப்படுத்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகள் போன்ற விபரங்களும் அடங்கியிருக்க வேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.