Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனின் இறப்பிற்கு மரண சான்றிதழ் வழங்க முடியும் – பசில் ராஜபக்ஷ

Featured Replies

பிரபாகரனின் இறப்பிற்கு மரண சான்றிதழ் வழங்க முடியும் – பசில் ராஜபக்ஷ

praba
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கடந்த ஆட்சிக்காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்தமைக்கான, மரண சான்றிதழ் வழங்கப்படாவிட்டாலும் நல்லாட்சியில் அதற்கான செயற்பாட்டை முன்னெடுக்க முடியுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால் அதற்கான மரண சான்றிதழை ஏன் மஹிந்த அரசு வழங்கவில்லை என்பது சர்வதேச ரீதியில் எழுப்பப்பட்டு வரும் கேள்வியாகும். இந்நிலையில், நேற்றைய தினம் தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்த பசில் ராஜபக்ஸவிடம்  இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/3583

  • தொடங்கியவர்

பிரபாகரனின் இறப்பு – மரண சான்றிதழ் வழங்கும் செயற்பாட்டை TNA நல்லிணக்க அரசுடன் இணைந்து முன்னெடுக்கலாம்:

tna

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இறப்பு – மரண சான்றிதழ் வழங்கும் செயற்பாட்டை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு  நல்லிணக்க அரசுடன் இணைந்து முன்னெடுக்கலாம் என  முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதால், பிரபாகரனுக்கு மரண சான்றிதழ் வழங்கும் செயற்பாட்டை எளிதாக முன்னெடுக்கலாம் எனவும்  குறிப்பாக கூட்டமைப்பில் நீதியரசர்களும் வழக்கறிஞர்களும் உள்ளதால், அவர்களின் துணையுடன் தற்போதைய அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சிக்காலத்தில் பிரபாகரனுக்கு மரண சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தால், அதற்கென ஒரு ஆணைக்குழுவை அமைத்து எதற்காக பிரபாகரனுக்கு மரண சான்றிதழ் வழங்கினீர்கள் என விசாரணை செய்திருப்பார்கள்  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/3587

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.