Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வளங்கள் அழிக்கப்படுவதை அனுமதிக்கமாட்டேன்'

Featured Replies

வளங்கள் அழிக்கப்படுவதை அனுமதிக்கமாட்டேன்'

 

article_1477046404-aaaaaaaa.jpg-பொன்ஆனந்தம்

“ஒரு நாட்டில் வளங்கள் அழிக்கப்படுகின்றது என்றால் அந்த நாடு அழிக்கப்படுகின்றது என்றுதான் அர்த்தமாகும். அனுமதி பெற்றாலும் அல்லது அனுமதி பெறாவிட்டாலும் அவை அழிக்கபட்டால் அவற்றை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தேசிய சுற்சூழல் மாநாடு ஜனாதிபதி தலைமையில் இன்று காலை 10.12 மணியளவில் திருகோணமலையில்  நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

“இன்று இந்த சுற்றாடல் மாநாடு ஆரம்பித்து வைக்கப்படுகின்றது. இது ஆரம்பம்தான். இன்றிலிருந்து நாட்டிலுள்ள மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் அமைப்பினர் எமது சூழலை பாதுகாக்கும் வகையில் மரங்களை நட வேண்டும்.

நாட்டின் பல பாகங்களிலும் காடுகள், மரங்கள் வெட்டப்படுகின்றன. மணல்கள் அகழப்படுகின்றன. இவற்றில் 50 சதவீதம் மாத்திரமே அனுமதி பெற்று நடைபெறுகின்றன. ஏனையவை முறையற்ற வகையில் இடம்பெறுகின்றன. மலையகத்தின் பல பகுதிகளிலும் ஏனைய இடங்களிலும் இவ்வாறு காடுகள் அழிக்கப்படுகின்றன. இவற்றுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த காலத்தில் இதற்கு துணைநின்ற இரண்டு அதிகாரிகளை நான் பணி நீக்கம் செய்துள்ளேன்” என்றார்.

“கடந்த இரு நாட்களுக்கு முன்னர்,  நான் ஒரு சுற்று நிருபத்தை அனுப்பியுள்ளேன். எந்த பிரதேசத்திலும் இவ்வாறான விடயங்களுக்கு அனுமதி பெற்றாலும் அவற்றுக்கான அனுமதியை ஜனாதிபதிக்கு அனுப்பி பெற வேண்டும் என அந்த சுற்று நிருபத்தில் தெரிவித்துள்ளேன்” எனவும் குறப்பிட்டார்.

http://www.tamilmirror.lk/184464/-வளங-கள-அழ-க-கப-பட-வத-அன-மத-க-கம-ட-ட-ன-

  • தொடங்கியவர்
'அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும்போதே ஜனநாயகம் நிலைபெறும்'

 

article_1477046956-aaaaaaaa.jpg-பொன்ஆனந்தம்

“இந்த நாட்டில் ஜனநாயகம் நிலைபேற வேண்டுமாக இருந்தால் மாகாணசபை, உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் நிலைபெறும்” என எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

தேசிய சுற்சூழல் மாநாடு ஜனாதிபதி தலைமையில் இன்று காலை திருகோணமலையில்  நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“நாட்டின் ஜனாதிபதி மற்றும்பிரதமர் ஆகிய இருவரும் இந்த நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதில் மிகவும் நிதானத்துடன் செயற்பட்டு வருகின்றனர்.

அதற்கு எமது பங்களிப்பை வழங்க வேண்டும். ஜனாதிபதி அவர்களின் ஆட்சிக் காலத்துக்குள்  நாட்டில் நிலையான  ஜனநாயகத்தை ஜனாதிபதி ஏற்படுத்த வேண்டும்.

ஜனாதிபதி பதவி ஏற்ற பின்,பு சுற்றாடலில் அதிக கவனம் செலுத்தி வருவதனை நாங்கள் எல்லோரும் அறிவோம். அவர் அவரது காலப்பகுதியில் பல்வேறு விடயங்களை செய்ய முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றார்.

இந்த நாட்டில்  நாட்டின் பொருளாதாரம், நாட்டினுடைய கலாசாரம், ஒற்றுமை, ஒருமைப்பாடு, நல்லிணக்கம், புரிந்துணர்வு வெவ்வேறு மக்கள் மத்தியில் நாட்டில் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு மற்றும் ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவும் அவர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

இந்த நாட்டின் சர்வாதிகாரத்தை இல்லாமல் செய்வது  ஜனநாயகத்துக்கு உரிய இடத்தைக்கொடுப்பது போன்ற பல்வேறு கருமங்களில் அவரது அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.

ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவேண்டும் என்று கூறுகின்றபோது, தனக்குள்ள அதிகாரங்களைத்தான் விட்டு விட்டு தான் செல்லத்தயாராக இருப்பதாகவும் அவர் தெள்ளத் தெளிவாக கூறுகின்றார்” என்றார்

http://www.tamilmirror.lk/184465/-அத-க-ரம-பக-ர-ந-தள-க-கப-பட-ம-ப-த-ஜனந-யகம-ந-ல-ப-ற-ம-

  • தொடங்கியவர்

எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துடன் உடன்படுகின்றேன்

P10-d430da8d6df80e913f26c7fab739dac9e52693be.jpg

 

திருமலை சுற்றாடல் மாநாட்டில் ஜனாதிபதி

(மூதுார்,சேனையூர் நிரு­பர்கள்)

ஒரு நாட்டில் வளங்கள் அழிக்­கப்­ப­டு­கின் ­றது என்றால் அந்த நாடு அழிக்­கப்­ப­டு­கின்­றது என்­றுதான் அர்த்­த­மாகும். அனு­மதி பெற்றும் அனு­மதி பெறாமலும் அவை அழி­க்கப்­பட் டாலும் அதனை நான் ஏற்­றுக்­கொள்ள மாட் டேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். 

எமது எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்த விடயங்களுடன் நான் உடன்படுகின்றேன். அதற்காக அவருக்கு நான் நன்றியும் கூறுகின்றேன் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். தேசிய சுற்றாடல் மா­நாடு ஜனா­தி­பதி தலை­மையில் நேற்றுக்காலை திரு­கோ­ண­ம­லையில் நடை­பெற்­றது.

 இங்கு விஜயம் செய்த ஜனா­தி­பதி முதலில் மொற­வேவ பிர­தே­சத்தில் நடந்த மர­ந­டு­கை ­வி­ழா­வில் கலந்து கொண்டு பின்னர் திரு­கோ­ண­ம­லைக்கு வரு­கை­தந்தார். அங்கு மெய்­கேய்சர் திறந்த வெளி­ய­ரங்கில் அவ­ரது தலை­மையில் மகா­நாடு இடம்­பெற்­றது.

 இந்த நிகழ்வில் எதிர்­கட்­சித்­த­லைவர் இரா.­சம்­பந்தன், கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் .ஹாபீஸ்­நசிர் அகமட், ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ, மற்றும் அமைச்­சர்கள்,பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகாண சபை உறுப்­பி­னர்கள் என பெருமளவானோர் பங்கு பற்­றி­யி­ருந்­தனர். இங்கு அதி­க­ளவில் பாட­சாலை மாண­வர்களும், அதி­பர்­களும் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்­தனர். 

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனா­தி­பதி இவ்வாறு குறிப்­பிட்டார்.  இங்கு அவர் மேலும் கூறியதாவது இன்று இந்த சுற்­றாடல் மா­நாடு ஆரம்­பித்து வைக்­கப்­ப­டு­கின்­றது.இது­ ஒரு ஆரம்­பம்தான். இன்­றி­லி­ருந்து நாட்­டி­லுள்ள மாவட்ட செய­லா­ளர்கள் பிர­தேச செய­லா­ளர்கள்,பாட­சாலை மாண­வர்கள் மற்றும் அமைப்­பினர் எமது சூழலை பாது­காக்கும் வகையில், மரங்­களை நட­வேண்டும். 

நாட்டின் பல­பா­கங்­க­ளிலும் காடுகள், மரங்கள் வெட்­டப்­ப­டு­கின்­றன. மணல் அக­ளப்­ப­டு­கின்­றது. இவற்றில் 50 வீதம் மாத்­தி­ரமே அனு­மதி பெற்று நடை­பெ­று­கின்­றன.ஏனை­யவை முறை­யற்­ற ­வ­கையில் இடம்­பெ­று­கின்­றன. மலை­ய­கத்தின் பல பகு­தி­க­ளிலும் ஏனைய இடங்­க­ளிலும் இவ்­வாறு காடுகள் அழிக்கப்­ப­டு­கின்­றன.இவற்­றிக்கு கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். கடந்த காலத்தில் இதற்கு துணை­நின்ற இரண்டு அதி­கா­ரி­களை நான் பணி நீக்கம் செய்­துள்ளேன்.

ஒரு நாட்டில் வளங்கள் அழிக்­கப்­ப­டு­கின்­றது என்றால் அந்த நாடு அழிக்­கப்­ப­டு­கின்­றது.என்­றுதான் அர்த்­த­மாகும் . அனு­மதி பெற்­றாலும் அனு­மதி பெறாமலும் அவை அழி­ககப்­பட்­டால் அதனை நான் ஏற்­றுக்­கொள்ள மாட்டேன்

கடந்த இரு ­நாட்­க­ளுக்கு முன்னர் நான் ஒரு சுற்று நிரு­பத்தை அனுப்­பி­யுள்ளேன்.எந்த பிர­தே­சத்­திலும் இவ்­வா­றான விட­யங்­க­ளுக்கு அனு­மதி பெற்றிருந்தாலும் அவற்­றிக்­கான அனு­ம­தியை எனக்கு அனுப்பி மீளவும் அனுமதி பெறப்படவேண்டும் என அந்த சுற்று நிரு­பத்தில் தெரி­வித்­துள்ளேன்.

அவ்­வாறு பெறா­விட்டால் அது ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­மாட்­டாது. நேற்­ற­ய­தினம் (20) திரு­கோ­ண­மலை அபி­வி­ருத்தி தொடர்­பான ஒரு கூட்­ட­மொன்றை கொழுப்பில் நடத்­தினேன். அங்கு சிலர் அபி­வி­ருத்தி வேலை­க­ளுக்கு மண் எடுப்­பதில் பிரச்சி­னைகள் நில­வு­வ­தாக குறிப்­பிட்­டனர்.

தற்­கா­லத்தில் இவ்­வா­றான கட்­டு­மா­னங்­க­ளுக்கு புதிய தொழில் நுட்­பங்கள் பற்றி எமது பொறி­யி­லா­ளர்கள் சிந்­திக்க வேண்டும். கொங்­கிறீட், சீமெந்துக்கு மாறான விட­யங்­க­ளைச்­ சிந்­திக்க வேண்டும் டோகா­வி­மான நிலை­யத்தை நான் பார்­த்தேன், கட்டார் போன்ற நாடு­க­ளிலும் அதனை பார்க்க முடிந்­தது. அங்கு எந்­த­வித சீமெந்திலான கொங்­கிறீட்டைக்­கா­ண­மு­டி­ய­வில்லை.வேறு தொழில் நுட்­பங்­க­ளையே அவர்கள் பாவிக்­கின்­றனர். 

அது பற்றி நாம் சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது. இங்கு எமது எதிர்­கட்­சித்­த­லைவர் தெரி­வித்த விட­யங்­க­ளுடன் நான் உடன்­ப­டு­கின்றேன். அதற்­காக அவ­ருக்கு நான் நன்­றி­யையும் தெரி­விக்­கின்றேன். எனவே எமது எதிர்­கால சந்­த­தியின் நலன் கருதி எமது நாட்டை ஒரு வள­முள்ள நடாக நாம் பாதுகாக்க வேண்டும். இதனை பாட­சாலை மாண­வர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

நீங்­களும் உங்­ங­க­ளது பாட­சாலை நிரு­வா­கமும் இதற்­கான நட­வ­டிக்­கை­களை இன்­றி­லி­ருந்து எடுக்க வேண்டும். ஒக்­டோபர் மாதம் இந்த சுற்­றா­ட­லுக்கு முக்­கி­ய­மான மாத­மாகும். அத­னால்தான் அந்த மாதத்தை தேர்தெடுத்து இன்று இந்­நி­கழ்வு ஆரம்­பிக்­கப்­ப­டு­கின்­றது. 

நாட்டின் பல இடங்­களில் குடிக்க, குளிக்க நீர் இன்றி மக்கள் சிர­மப்­ப­டு­கின்­றனர். நாட்டின் சூழ­லைப்­பேணி பாது­காத்தால் தான் நீர் இருக்கும். தற்­கா­லத்தில் சுற்று சூழ­லைப் ­பா­துக்­காப்பது தொடர்பில் சர்­வ­தேச ரீதியில் பல நாடு­களும் சிந்­தித்து வரு­கின்­றன. அதனால் உல­கத்தில் ஏற்­ப­டப்­போகும் அழி­வுகள் பற்றி கவ­லைப்­ப­டு­கின்­றன.

திரு­கோ­ண­மலை, ஒரு­முக்­கி­ய­மான மூன்று சமூ­கங்­களும் புரிந்­து­ணர்­வுடன் வாழும் சமா­தானமான இட­மாகும். அது மட்­டு­மன்றி திரு­கோ­ண­ம­லைக்கும் பொலநறு­வைக்கும் நெருங்­கிய தொடர்­புள்­ளது. அதனால் நான் திரு­கோ­ண­ம­லையை பெரி­தும்­ம­திக்­கின்றேன். இதனால்தான் இந்த நிகழ்வை இங்கு ஆரம்­பிக்­கின்றோம்.

 திரு­கோ­ண­ம­லையின் அபி­வி­ருத்தி விட­யத்­திற்கு வந்தால், நான்­இன்று காலை மொற­வே­வ­விற்­குச்­சென்­ற­வேளை பாட­சாலை மாண­வர்கள் சிலரிடம் உங்­க­ளுக்­குள்ள பிரச்­சி­னைகள் என்ன என்று கேட்டேன். அவர்கள் எ­மது பாட­சா­லை­களில் இருக்க கதி­ரை­மேசை இல்­லை­ என்று தெரிவித்தனர்.

நாங்கள் சகல மாகாண சபை­க­ளுக்கும் இம்­முறை அதி­க­ள­வி­லான நிதியை கல்­விக்­காக ஒதுக்­கி­யுள்ளோம். பாட­ச­லையில் கட்­டிடம், குடிநீர்,தள­பா­டங்கள்,மல­ச­ல­கூ­டம்­போன்­றவை அடிப்­படை தேவை­க­ளாகும் அவை உடன் நிறை­வேற்­றப்­பட வேண்டும்.இவ்­வாறு எனது மாவட்டமான பொல­ந­று­வை­யிலும் நான் ஆராய்ந்­த­வேளை இப்­பி­ரச்­ச­னை­களை இனம்­கண்டேன். 

பின்­னர்­வி­ஷேட நிதியை அங்கு நான் ஒதுக்கி அம்­மா­ண­வர்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்க நட­வ­டிக்கை எடுத்தேன். இங்கும் அம்­மா­ண­வர்­க­ளின் ­த­ள­பா­டத்­தேவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சரும் கல்வி செயலாளரும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக நான் அதிக கரிசனை எடுக்கவுள்ளேன். இதனை ஒரு உதாரணமாக்கொண்டு நாட்டின் அனைத்துப்பாடசாலைகளுக்கும் இவ்விதமான தேவைகளை இனம் கண்டு உடன் நிறைவேற்ற வேண்டும் என கருதுகின்றேன். 

பாடசாலை மாணவர்களின் கல்வி மிக முக்கியமானதாகும் அவற்றிக்கு இந்த அடிப்படைத்தேவைகள் முக்கியமானவையாகும். எனது அமைச்சரவைக்கூட்டத்திலும் நான் சகல அமைச்சர்களையும் இவ்விடயத்தில் கவனமெடுக்குமாறும் கோரியுள்ளேன் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-10-22#page-1

  • தொடங்கியவர்

ஜனாதிபதி தனது ஆட்சிக் காலத்தில் நிலையான ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டும்! இரா.சம்பந்தன்

sambantharகுளோபல் தமிழ் செய்தியாளர்

ஜனா­தி­பதி தனது ஆட்­சிக்­கா­லத்­துக்குள் இந்த நாட்டில் நிலை­யான ஜன­நா­ய­கத்தை ஏற்­ப­டுத்­த­வேண்டும் என்று எதிர்க்கட்­சித்­த­லைவர் இரா சம்­பந்தன் தெரிவித்துள்ளார்.   அத்துடன் நாட்டில் ஜன­நா­யகம் நிலை­பெற வேண்­டு­மாயின் மாகாணம்,பிராந்­தியம் ,உள்­ளூராட்சி சபை போன்றவற்றுக்கு அதி­காரம் பகிர்ந்­த­ளிக்­க­ப்ப­ட­வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வாதிகார முறைக்கு இடமில்லை எனக் கருதுகின்ற ஒரு ஜனாதிபதி, ஜனநாயகம் முழுமையாக இந்த நாட்டில் நிலவுவதற்கு அதிகாரம் எந்தளவுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண் டும் என்பதையும் உணர்ந்திருப்பார் என்றும் எதிர்கட்சித் தலைவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.  மக்கள் மத்தியில் ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்த இந்த அரசாங்கம் செயற்பட்டு வரு கின்றது என்று சர்வதேசம் கருதுகின்றது. இதனால் இந்த கருமத்தில் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் வெற்றிபெறுவதற்கு நாம் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் சம்பந்தன் கூறியுள்ளார்.

நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற தேசிய சுற்றாடல் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.   ஜனா­தி­பதியாக மைத்திரிபால சிறிசேன பதவி ஏற்ற பின்னர், அவர் சுற்­றா­டலில் அதிக கவனம் செலுத்தி வரு­வ­தாகவும் அவர் அவ­ரது காலப்­ப­கு­தியில் பல்­வேறு விட­யங்­களை செய்வதற்கு முயற்­சி­களை மேற்கொண்டு வரு­வதாகவும் கூறினார்.

நாட்டின் பொரு­ளா­தாரத்தை வளர்த்து நாட்­டி­னு­டைய கலா­சாரம், மக்கள் மத்­தியில் ஒற்­றுமை, ஒரு­மைப்­பாடு, நல்­லி­ணக்கம்,புரிந்­துணர்வு, ஆகியவற்றை ஏற்படுத்தவும் உள்­­நாட்டின் தேசி­யப்­பி­ரச்­ச­னைக்கு ஒரு நிரந்­த­ர­மான தீர்வை காணவும் ஜனா­தி­பதி முற­மையை ஒழிப்பதற்கும் பல்வேறு முயற்­சி­களை அவர் மேற்கொண்டு வரு­வதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.

இந்த நாட்டின் சர்­வா­தி­கா­ரத்தை இல்­லாமல் செய்­வது ஜன­நா­ய­கத்­திற்கு உரிய இடத்­தைக்­கொ­டுப்­பது போன்ற பல்­வேறு கரு­மங்­களில் அவ­ரது அர­சாங்கம் ஈடு­பட்டு வரு­கின்­றது. ஜனா­தி­பதி முறை­மையை ஒழிக்­க­வேண்டும் என்று கூறு­கின்­ற­போது தனக்­குள்ள அதி­கா­ரங்­க­ளை தான் விட்டு செல்­லத்­த­யா­ராக இருப்­ப­தா­கவும் அவர் தௌ;ளத் தெளி­வாக கூறு­வதாகவும் குறிப்பிட்டார்.

இந்த நாட்டின் பல தலை­வர்­க­ளாக இருந்­த­வர்கள் இவ்­வி­த­மான பல உறுதி மொழி­களை வாக்­கு­று­தி­களை கூறி­யபோதும் அவை பின்னர் நிறை­வேற்­றப்­பட வில்லை என்று தெரிவித்த இரா. சம்பந்தன்   ­ஜ­னா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது ஜனா­தி­பதி அதி­கா­ரத்தை நீக்கி இந்த நாட்டின் ஒரு சர்­வா­தி­கார ஆட்சி இருக்­க­கூ­டாது. ஒரு ஜன­நா­யக முறமை இருக்க வேண்டும் என்ற கார­ணத்­திற்­காக அந்த அதி­கா­ரங்­களை பகிர்ந்து கொடுக்­கவும் முன்­வந்­துள்ள அவ­ருக்கு  பாராட்­டு­தல்­களைத் தெரி­விப்பது தம் கட­மை­யாகும் என்றும் கூறினார்.

அவ்­வி­த­மாக மக்­க­ளி­னு­டைய இறைமைகள் அந்­தந்த மக்­களின் இறை­மையின் அடிப்­ப­டையில் பயன்படுத்த சந்­தர்ப்பம் இருந்­தால்தான் நாட்டில் ஜன­நா­யகம் உண்­மை­யாக நில­வக்­கூ­டிய நிலைமை ஏற்­படும் என்றும் நாட்­டின் ­ஜ­னா­தி­பதி,மற்­றும் ­பி­ர­த­ம­மந்­திரி ஆகிய இரு­வரும் இந்த நாட்டின் பல பிரச்சி­னை­களை தீர்ப்­பதில் மிகவும் நிதா­னத்­துடன் செயற்­பட்டு வரு­கின்­றனர் என்றும் கூறினார்.

ஜனா­தி­பதி தனது பத­விக்­கால ஆட்­சியில் இருந்து நீங்­கு­கின்ற பொழுது இந்த நாடு வேறு ஒரு நாடாக மாற­வேண்டும் என்று தெரிவித்த சம்பந்தன் இன்­றைக்கு இந்த ஆட்சி மாற்­றத்தின் பின்னர் சர்­வ­தே­சத்­ததால் எமது நாடு மதிக்­கப்­ப­டுவதாகவும் ஜனா­தி­பதி நாடு­க­ளுக்­குச்­செல்லும் போது அவரை மதித்து சிறப்­பான வர­வேற்பு அளிக்­கப்­ப­டு­வதில் தாமும் பெரு­மை­ய­டைவதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கை நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்ட பிறகு கொள்­கை­ய­ளவில் பாரிய மாற்றம் ஏற்­பட்­டு.மக்கள் மத்தியில் ஒரு ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்த இந்த அரசாங்கம் செயற்படுகின்றது என்ற கருத்து சர்வதேசத்தின் மத்தியில் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

http://globaltamilnews.net/archives/4048

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.