Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரெய்டு தாக்குதல்... கொதிக்கும் விஜயகாந்த் -‘‘பழிக்குப்பழி அரசியலுக்குள் இழுக்கிறார் கலைஞர்!’’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரெய்டு தாக்குதல்... கொதிக்கும் விஜயகாந்த்

‘‘பழிக்குப்பழி அரசியலுக்குள் இழுக்கிறார் கலைஞர்!’’

p47bir0.jpg

கல்லூரி, கட்சி அலுவலகம், வீடு என எங்கும் ரெய்டு மயமாகிவிட, அது போதா தென்று தன்னைச் சுற்றியிருப்பவர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் புகுந்து புறப்பட்டதில் கண்சிவந்து போயிருக்கிறார், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். ரெய்டில் ஏராள மான சொத்துக்கள் சிக்கியதாகவும் கணக்கில் காட்டப்படாத பணமும், வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டதாகவும் வெளியில் பரபரப்பாகச் செய்திகள் பரவிக்கொண்டிருக்க, விஜயகாந்தை அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்தோம்...

‘‘ரெய்டுக்குக் காரணம் அரசியல் பழிவாங் கல்தான் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், முறையான வரி செலுத்தாததினால்தான் உங்கள் வங்கிக் கணக்கு, லாக்கர்கள் எல்லாம் முடக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறையினர் கூறுகிறார்களே?’’

‘‘இந்த ரெய்டு சமாசாரம் முழுக்க முழுக்க என்னைப் பழிவாங்கறதுக்காகக் கலைஞர் போட்ட திட்டம்தான். தே.மு.தி.க-ங்கிற வார்த்தையே தமிழ்நாட்டுல இருக்கக் கூடாதுனு முடிவு பண்ணி, தப்பான இடத்துல கைய வெச்சிருக்காங்க. இது அரசியல் பழி வாங்கல்தாங்கறதை என்னால பல வகைங்கள்ல நிரூபிக்க முடியும். உதாரணத்துக்கு ஒண்ணை சொல்றேன். காலையில என் வீட்டுக் கதவை ரெய்டுக்கு வர்ற அதிகாரிங்க தட்டும்போதே கலைஞர் குடும்பத்து டி.வி&காரங்களும் வந்து நிக் கிறாங்க. சோதனை போட ஆரம்பிச்சவுடனேயே, ‘பல கோடிக்கான ஆவணங்கள் சிக்கியது’னு செய்தி போடறாங்க. இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்? எனக்குத் தெரிஞ்ச ஒரே அர்த்தம், அவங்களைத் தவிர வேற யாரும் இங்கே இருந்து நாட்டை ஆளக்கூடாதுங்கறதுதான்.

என் வீட்டுல ஏராளமான சொத்துக்கான ஆவணங்களை எடுத்திருக்காங்கன்னு சொல்றாங்க இல்ல... அந்த சொத்தையெல்லாம் என்கிட்ட கொடுக்கச் சொல்லுங்க. அதுக்கான வரியைக் கட்டி நானே வெச்சிக் கறேன். தைரியமிருந்தா இதைச் செய்யச் சொல்லுங்க பார்ப்போம். உண்மை என்னன்னு எனக்குத் தெரியும். கலைஞருக்கும் தெரியும். அதிகாரிங்க ஏராளமான ஆவணங்களை எடுத்திருக்க வாய்ப்பே இல்லை. ஏன்னா, எல்லாத்தையும் அடமானம் வெச்சுத்தான் நான் காலேஜ் ஆரம்பிச்சேன். எனக்கு அந்த வகையில ஏழரை கோடி ரூபாய் கடன் இருக்கு. இதுக்கு என்ன சொல்றாங்க?

ரெய்டுக்கு வந்தாங்க, எதுவோ செஞ்சாங்க, எல்லாம் முடிஞ்சு போச்சு. ஆனா, இன்னிக்கு வரைக்கும் என் வீட்டை உளவு பார்க்கறதுக்காக யூனிஃபார்ம் போடாத போலீஸ்காரங்க மறைஞ்சு நின்னு கவனிக்கறாங்க. இதுக்கு என்ன அர்த்தம்?

என்னோட பேங்க் கணக்கையெல்லாம் முடக்கிட் டதா பேப்பர்லதான் படிச்சேன். இன்னும் பேங்க் மேனே ஜருக்கு போன் போட்டாதான் என்னன்னு தெரியும். என் மடியில கனம் இல்லை சார்... நான் போற வழியைத் தீர்மாணிச்சுட்டேன். அந்த வழியில எனக்கு எந்த பயமும் இல்லை.’’

‘‘சரி, உங்கள் வீட்டில் எதுவும் இல்லை, உங்கள் உறவினர்களின் வீடுகளில் சோதனை போடப் பட்டிருக்கிறதே?’’

‘‘விஜயகாந்துங்கிறவன் எப்பவுமே மக்களோட ஒருத்தனா நின்னு போராடுறதுன்னு முடிவு பண்ணிட் டான். அவனோட குடும்பத்தையும் அதுக்குத் தயார்படுத்திட்டான். இது ஒருபக்கம்... ஆனா என்னோட சகோதரி என்ன தப்பு செஞ்சாங்க? அவங் களோட ஆஸ்பத்திரிக்குப் போயிருக்காங்க, அங்கயும் ரெய்டு செஞ்சிருக்காங்க. என்னோட பொறந்த ஒரே காரணத்துக்காக அவங்களுக்கு எவ்வளவு பெரிய மனவேதனை. அங்க போய் என்னத் தைப் பெரிசா கண்டுபிடிச்சாங்க? பன்னிரண்டு லட்ச ரூபாய்க்கு நகை வெச்சிருந்தாங்களாம். அவங்க ஒரு டாக்டர். அவங்களுக்குப் பெரிய குடும்பம் இருக்கு. எவ்வளவோ வருமானம் வருது. அதுலயிருந்து அவங்க அந்த நகையை வாங்கியிருப் பாங்க. அவங்க வேற துறையில இருந்தா நான் வருத்தப்படமாட்டேன். புனிதமான, மக்கள் மதிக்கிற மருத்துவத் துறையில இருக்காங்க. அவங்க மனசையும் சங்கடப்படுத்தறதுக்கு இவங்களுக்கு எப்படி தைரியம் வருது சார்.

அரசியல்னா எல்லாத்தையும் மறந்துடுவாங்களா? அந்த இடத்துல பழிவாங்கியே தீரணும்ங்கற வைராக்கி யம் மட்டும்தான் மிஞ்சுமா? மனசு வலிக்குது சார். நான் நினைச்சிருக்கற அரசியலே வேற. நான் செய்ய நெனைக்கற அரசியலே வேற. ஆனா, அவங்க திரும்பத் திரும்ப என்னை வழக்கமான அரசியல் செய்யவும், சும்மாயிருக்கறவனைத் தெருவுக்கு இழுத்து வம்பு பண்ணவும் கூப்பிட்டுக்கிட்டிருக்காங்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்துக் கணக்குகளை காட்டத் தயாரா?

கருணாநிதிக்கு சவால்

விஜயகாந்த் ஆவேச பேச்சு

திருச்சி, ஜன.28:

நான் எனது சொத்துக் கணக்குகளை எல்லாம் காட்டுகிறேன். முதல்வர் கருணாநிதி அவரது சொத்துக் கணக்குகளை காட்டத் தயாரா என தேமுதிக தலைவர் விஜயகாந்த் சவால் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் அடுத்த ஆட்சி தேமுதிக ஆட்சிதான் என்று கூறியுள்ள அவர், ஒரு விஜயகாந்தை அழிக்க நினைத்தால் ஓராயிரம் விஜயகாந்துக்கள் தோன்றுவார்கள் என அவர் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி யின் மகள் பிரியாவெற்றிவேல் திருமண விழா திருச்சி அருகே மணப்பாறை செல்லும் நெடுஞ் சாலையில் உள்ள ஜே.ஜே. கல்லூரி வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது.

திருச்சியில் முன்னாள் அமைச்சர்

கே.பொன்னுசாமியின் மகள்

திருமணத்தை இன்று காலை

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

நடத்தி வைத்தார். அருகில்

விஜயகாந்தின் மனைவி

பிரேமலதா, எல்.கே.சுதீஷ்

ஆகியோர் மணமக்களை

ஆசீர்வதிக்கும் காட்சி.

படம்: திருச்சி சார்லஸ்.

திருமணத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையேற்று நடத்தி வைத்தார். மணவிழாவில் தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச் சந்திரன், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், தேமுதிக மாநில இளைஞரணி தலைவர் எல்.கே.சுதீஷ், திருச்சி மாவட்ட தேமுதிக தலைவர் நடராஜன், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் விஜயராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆரோக்கிய சாமி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர் களும் கலந்து கொண்டனர்.

திருமண விழாவில் விஜயகாந்த் பேசியதாவது: இந்திய வரலாற்றில் முதன் முறையாக தேமுதிக கட்சி அலுவலகத்தில் தான் வருமானவரி சோதனை நடந்துள்ளது. ஹிட்லர் ஆட்சியில் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் சோதனை நடந்ததுபோல் இப்போது தேமுதிக அலுவலகத்திலும் நடந்துள்ளது.

இதற்கு முழுக்க முழுக்க திமுக தான் காரணம். வருமானவரித்துறை அதிகாரிகள் இதே போல் அறிவாலயம் மற்றும் கூட்டணி கட்சி அலுவலகத் திற்கு போக வேண்டியது தானே. நான் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு முழு அளவில் ஒத்துழைப்பு கொடுத்தேன். வருமான கணக்கிற்கும், தேர்தல் நேரத்தில் நான் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த கணக்கிற்கும் வித்தியாசம் என்று இப்போது குற்றம் சாட்டுகிறார்கள்.

கொலை செய்த மந்திரிகள், எம்எல்ஏக்கள் வெளியே சுற்றி கொண்டு உள்ளனர். சென்னை மாநகராட்சி தேர்தலில் ரவுடிகளை பரோலில் எடுத்து கத்தி, அரிவாள் கொண்டு தேர்தல் நடத்தி 99 கவுன்சிலர்களை ஜெயிக்க வைத்தார்கள்.

தேர்தல் ஆணையர் சந்திரசேகரன், போலீஸ் டிஜிபி முகர்ஜி, போலீஸ் கமிஷனர் லத்திகாசரண் இவர்களை இன்னும் மாற்றம் செய்யாமல் இருப்பது நியாயமா? சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது என்று சட்டசபையில் சொல்கிறார்கள். திட்டங்களை நாங்கள் குறை சொல்லவில்லை. ஏழை மக்களுக்கு வளர்ச்சி திட்டங்கள் கொடுக்க வேண்டும்.

ஆனால் நிரந்தர ஏற்பாடு இன்னும் செய்யவில்லை. அவர்கள் நடத்தும் கேபிள் இணைப்புக்கு வருமானம் பார்க்கவே இலவச டிவி கொடுக்கிறார்கள். அதே போல இலவச சமையல் எரிவாயு திட்டம் ஏழைகளுக்கு உதவாது. மாதந்தோறும் 300 ரூபாய் கொடுத்து சிலிண்டர் வாங்க ஏழைகள் எங்கே போவார்கள்.

ரிலையன்சுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அதிலும் பங்கு கிடைக்கும் என்பதால் சமையல் எரிவாயு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர். அடுத்து ஆட்சியில் அமரப்போவது தேமுதிக தான். இதில் எந்த மாற்றமும் இல்லை. திமுகவினர் தேமுதிகவில் உள்ளவர்களுக்கு 20 லட்சம், 30 லட்சம் ரூபாய்களுக்கு ஒப்பந்தம் (காண்டிராக்ட்) தருவதாக ஆசை காட்டினார்கள். திருச்சியில் உள்ள ஒரு மந்திரி கூட இதற்காக முயற்சி செய்து ஏமாந்து விட்டார்.

தேமுதிக தொண்டர்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. கோடி கோடியாக சம்பாதித்தாலும் கடைசியில் 6 அடிக்கு 3 அடி தான் கிடைக்கும். வேறு என்ன கொண்டு போக முடியும். உங்களுக்கு (கருணாநிதி) 40 குடும்பங்கள் உள்ளன. எவ்வளவு சொத்துக்கள் உள்ளது என்பது மக்களுக்கு தெரியும். மக்களுக்கு உங்களை பற்றியும் தெரிகிறது, என்னை பற்றியும் தெரிகிறது. காசுக்கு ஆசைப்பட்டால் தனித்து போராடாமல் சூட்கேஸ் வாங்கிக்கொண்டு போய் இருப்பேன். அந்த மாதிரி அரசியல் எனக்கு வேண்டாம்.

அதிமுக அரசு மிடாசில் சரக்கு (மதுபானம்) எடுத்தது என்று சொன்ன திமுகவினரும் இன்று மிடாசில் தான் சரக்கு எடுத்து வருகிறார்கள். நியாயமாக நடந்து கொள்ளுங்கள். தனி மனித வருமானத்தை ஏற்படுத்துங்கள். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தாருங்கள்.

மூன்று மாதத்திற்கு படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்து விட்டு அதன் பின்னர் பணம் இல்லாமல் திண்டாடப்போகிறீர்கள். திமுக, அதிமுக ஆட்சியில் ஒன்னரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவில்லை.

விவசாயிகளுக்கு கூடுதலாக கொள்முதல் நிலையங்களை திறப்பதைவிட அவர்களின் விலைப்பொருட்களுக்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்யுங்கள். அரிசி கடத்தப்படவில்லை என்று சொல்கிறீர்கள். கள்ளன் (திருடன்) பெரிசா? தாழ்பாள் பெரிசா? என்ற நிலை தான் உள்ளது.

என் சொத்து கணக்கை தருகிறேன். உங்கள் (கருணாநிதி) கணக்கை தாருங்கள். நடப்பது நடக்கட்டும், என்னை அழிக்க நினைத்தால் ஓராயிரம் விஜயகாந்த் தோன்றுவார்கள். மக்களால் உருவாக்கப்பட்ட கட்சி தேமுதிக. உங்களை (மக்களை) நம்பித்தான் கட்சி நடத்துகிறேன்.

விஜயகாந்த் எதையாவது கொடுப்பான் என்று நம்பியா வந்தீர்கள்? ஒவ்வொரு மாநாட்டிற்கும், நிகழ்ச்சிக்கும் ஆதாயம் எதிர்பார்த்தா வந்தீர்கள்? என் வாழ்க்கை முழுவதும் உங்களுக்காகவே வாழ்வேன்.

விஜயகாந்த்தை மட்டும் உங்களால் (கருணாநிதி) பயமுறுத்த முடியாது. காசு ஆசை எனக்கு இல்லை. எனக்கு இது சோதனை காலம். ஆனாலும் சோதனைக்காலத்தில் தான் சாதிக்க முடியும். இளைஞர்கள் போராடும் காலம் இது. மகளிர்கள், தாய்மார்கள், சகோதர, சகோதரிகள் போராட வேண்டும்.

இந்த ரத்தத்தை உங்களால் (கருணாநிதி) தடுக்க முடியுமா? நாமா, அவர்களா என்று தப்பான வழியில் இல்லாமல் அறவழியில் பார்ப்போம். தமிழ்நாடு அரசியலில் புதிய மாற்றத்தை நாம் உருவாக்க வேண்டும். தனியாக நின்று சாதிப்போம்.

ஜனாதிபதி அப்துல்கலாம், படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். சாக்கடையாக உள்ளதை சீர் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். எனவே அரசியலை சீர் செய்ய உங்களைப் போன்ற சுத்தமான இளைஞர்களை அரசியலுக்கு வரவேற்கிறேன். தேமுதிக அடுத்து ஆட்சிக்கு வரும். அப்போது 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கொடுக்கும். இந்த திருமணம் மண்டல மாநாடு போல் நடந்துள்ளது. இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

http://www.maalaisudar.com

கருணாநிதிக்கு (நீதி) இருக்கிற சொத்து எங்கை இருந்து வந்ததாம் அரசியல்லை இருந்து சுத்து மாத்து செய்த காசு தானே

இது அவங்கள் உழைத்த காசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.