Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு துறைமுகத்தில் உலகில் பழமையான கப்பல்

Featured Replies

கொழும்பு துறைமுகத்தில் உலகில் பழமையான கப்பல்
 
 

article_1477304814-1.jpg

உலகிலேயே மிகவும் பழமையான “தி பேர்ல் ஒஃப் நோர்வே” என்ற புனைப்பெயர்க் கொண்டு அழைக்கப்படும் “சோலன்டெட்” (Sørlandet) என்றக் கப்பல், கொழும்பு துறைமுகத்தை ஞாயிற்றுக்கிழமை (23)  வந்தடைந்தது.

article_1477304832-2.jpg

எதிர்வரும் 30ஆம் திகதி வரை கொழும்பில் நங்கூரமிடப்பட்டிருக்கும் இந்தக் கப்பல், உலகம் முழுவதுக்குமான 2 வருடகால பயணத்தை மேற்கொண்டு 70 உயர்பள்ளி மாணவர்களுடன் இலங்கைக்கு வந்துள்ளது.

article_1477304790-5.jpg

கடந்த 1927ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கப்பல், பயணிக்கவுள்ள 22 நாடுகளின் 44 துறைமுகங்களுக்குள் கொழும்பு துறைமுகமும் அடங்குகின்றது.

article_1477304851-3.jpg

இலங்கைக்கான இந்தக் கப்பலின் விஜயத்தின் போது, இலங்கையிலுள்ள கடல்சார்ந்த கற்கை நெறிகளை பயிலும் மாணவர்களும், கப்பலில் வருகை தந்துள்ள 70 மாணவர்களுக்கும் இடையிலான அனுபவப்பகிர்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த நிகழ்வுகள், இலங்கையிலுள்ள நோர்வே தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

article_1477304867-4.jpg

http://www.tamilmirror.lk/184621/க-ழ-ம-ப-த-ற-ம-கத-த-ல-உலக-ல-பழம-ய-ன-கப-பல-

  • தொடங்கியவர்

நோர்வேயின் பாய்மரக் கப்பல் :  ஒரு அருங்காட்சியகம்  : கப்பலின் கெப்டன்  தெரிவிப்பு  (படங்கள் இணைப்பு)

 

 

 

 

IMG_1179.jpg

(லியோ நிரோஷ தர்ஷன்)

உலகின் மிகவும் பழைமையான பாய்மரக் கப்பலான நோர்வேயின் எஸ்.எஸ். சோர்லாண்டர்  கொழும்பு துறைமுகத்தை  வந்தடைந்துள்ளது. 1927 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாய்மரகப்பலின் எடை 905.3 டொன் என  கப்பலின் கெப்டன் தெரிவித்தார். IMG_1197.jpg

27 பாய்மரங்களைக் கொண்டு அழகுடன் திகழும் எஸ்.எஸ். சோர்லாண்டர் உலக கப்பல் வரலாற்றில் ஒரு அருங்காட்சியகம் . எனவே தான் மதிப்பற்ற நோர்வேயின் முத்து என அதற்கு பெறுமதியளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டர்.IMG_1198.jpg

சிறந்த பயிற்சி முகாமாகவும் இந்த கப்பல் திகழ்கின்றது.  இதனால் தான் கப்பற்றுரைசார் மாணவர்களுடன் உலகை சுற்றி வருகின்றது.  ஏ பிளஸ்  அக்கடIMG_1182.jpgமி மற்றும் நோர்வேயின் சர்வதேச உயர் பாடசாலை மாணவர்கள் 70 பேருடன்  இரு வருட கால உலகைச் சுற்றிய சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளோம். இந்த மாணவர்கள் கப்பலின் அனைத்து நடவடிக்கைள் மற்றும் பல்வேறு சமுத்திரங்களின் தன்மை என்பன தொடர்பில் முழுமையாக அறிந்துக் கொள்ள  முடிகின்றது. IMG_1214.jpg

 உலகிலுள்ள சமுத்திரங்களில் சுமார் 90 வருட காலமாக பயணம் செய்துள்ளது.  கடற்றுறைசார் மாணவர்களுக்கும் படையணிக்குப் பயிற்சி பெறுபவர்களுக்குமான பயிற்சிக் கப்பலாகவே சேவையாற்றியுள்ளது. IMG_1216.jpg

அதேசமயம் இந்தக் கப்பல் இரண்டாம் உலகப் போரின் போது சிறைக் கப்பலாக செயற்பட்ட இருள் பக்க வரலாற்றையும் கொண்டுள்ளது. மேற்படி கப்பல் தனது இரு வருட கால உலகைச் சுற்றிய சுற்றுப் பயணத்தின் போது மேற்கொள்ளும் 22 நாடுகள், 44 துறைமுகங்களுக்கான விஜயத்தில் ஒன்றாக கொழும்புக்கான இந்த விஜயம் அமைந்துள்ளது.IMG_1218.jpg

இந்த விஜயத்தின் போது உண்மையான பாய்மரக் கப்பலில் பயணம் செய்வது தொடர்பான அனுபவத்தை மாணவர்கள் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.IMG_1254.jpg

இலங்கையின் கப்பல் மற்றும் கடல்துறைசார் மாணவர்களுக்கு சிறந்த அனுபவத்தை எஸ்.எஸ். சோர்லாண்டர்  கப்பல் பெற்றத் துரம் என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை.  இரு தரப்பினரும் தமது கப்பற்றுறைசார்  அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ள முடியும்.  IMG_1261.jpg

ஞாயிற்றுக்கிழமை 'பேர்ள் ஒப் நோர்வே' இலங்கைக்கான பயணத்தை பூர்த்தி செய்து கொண்டு தனது  பயணத்தின் அடுத்த கட்டமாக மாலைதீவு துறைமுகத்தை நோக்கி பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.IMG_1266.jpgIMG_1269.jpgIMG_1281.jpgIMG_1282.jpgIMG_1291.jpg

http://www.virakesari.lk/article/12831

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.