Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு முதலமைச்சரின் பணிப்பையும் மீறி அவைத்தலைவர் சீ.வீ.கே எதேச்சதிகாரம்!

Featured Replies

12191.jpg

வடக்கு மாகாண சபையின் புதிய பிரதி அவைத்தலைவரை தெரிவு செய்யும் நேற்றைய சபை அமர்வு பெரும் குழப்பங்களுக்கும் கூச்சல்களுக்கு மத்தியிலும் நடைபெற்று முடிந்துள்ளது. முதலமைச்சரின் கோரிக்கையை மீறி அவைத்தலைவர் வாக்கெடுப்பை நடாத்தி பிரதி அவைத்தலைவரை தெரிவு செய்துள்ளார். வடக்கு மாகாண சபையின் இதுவரை நடைபெற்ற 63 அமர்வுகளில் நேற்றைய அமர்வே முதல் தடவையாக வாக்கெடுப்புக்கு விடப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் அறுபத்தி நான்காவது அமர்வு நேற்றைய தினம் கைதடியில் அமைந்துள்ள பேரவை செயலகத்தில் அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன் போதே என்றுமில்லாதவாறு ஆளுங்கட்சியினர் தமக்குள்ளே அடிபட்டு கொண்டனர். எதிர்க்கட்சியினர் சைலன்சாக இருந்து வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தனர். அவ்வப்போது சண்டை போட வேண்டாம் என ஆளுங்கட்சிக்கு அட்வைசும் வழங்கினார்கள்.

ஆரம்பம் 
முன்னதாக சபை அறிவிப்பை மேற்கொண்ட அவைத்தலைவர்இ இன்றைய தினம் பிரதி அவைத்தலைவர் தெரிவு இடம்பெறவுள்ளதாக அறிவிப்பு செய்தார். எனினும் முதலமைச்சரின் கோரிக்கையை சுட்டிக்காட்டிய உறுப்பினர்கள்இ இந்த தெரிவை அடுத்த மாகாண சபைக்கு அமர்விற்கு ஒத்திவைக்குமாறும் கோரினார்கள். இதன் போது கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் குருகுலராஜாஇ குறித்த தெரிவினை அடுத்த அமர்வில் மேற்கொள்ளுமாறு கூறினார்.

எனினும் இதனை ஏற்றுக்கொள்ளாத உறுப்பினர் சயந்தன்இ முதலமைச்சர் இங்கு இல்லை என்ற அடிப்படையில் குறித்த தெரிவினை ஒத்திவைக்க முடியாது. மாறாக முதலமைச்சர் சபையில் இல்லாமை ஒரு வாக்கு குறையும் என்ற அடிப்படையில் கோர முடியும் என கூறினார். எனினும் முக்கியமான விடயங்கள் வருகின்ற போது முதலமைச்சருடன் கலந்துரையாடி முடிவெடுப்பது அவசியமாகும். எனினும் முதலமைச்சர் இங்கு இல்லாத நிலையில் போட்டிகள் பொறாமைக்களுக்காக அவசர அவசரமாக சிறுமைத்தனமாக செயற்பட கூடாது என உறுப்பினர் சர்வேஸ்வரன் கூறினார்.

சீ.வீ.கே. விற்கு ஏதும் நடைபெற்றால்?
எனினும் இதனை மறுத்த எதிர்க்கட்சி உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் தற்போது சபையை நடத்திவரும் அவைத்தலைவர் சிவஞானத்திற்கு திடீரென ஏதும் நடைபெற்றால் யார் சபையை நடாத்தி செல்வது? சபை ஒழுங்குகளை யார் முன்னெடுப்பது என கேள்வி எழுப்பி இன்றைய தினம் ஜநேற்றுஸ புதிய பிரதி அவைத்தலைவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என கூறினார். எனினும் இதனை தொடர்ந்து எதிர்த்துவந்த உறுப்பினர்களான விந்தன்இ சர்வேஸ்வரன் ஆகியோர் இந்த தெரிவை இன்றைய தினம் மேற்கொள்வதா இல்லையா என வாக்கெடுப்புக்கு விடுமாறு கோரினார்கள்.

இதன் போது கருத்து தெரிவித்த விந்தன் கனகரத்தினம்இ வடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு கடந்த இரண்டு வருடமாக ஒற்றுமையுடன் இயங்கி வருகின்றது. எத்தனையோ பிரேரணைகள் இதுவரை நிறைவேற்றியுள்ளோம் ஆனால் ஒன்று கூட வாக்கெடுப்புக்கு செல்லவில்லை. ஆனால் இப்போது முந்தியடித்து கொண்டு பிரதி அவைத்தலைவர் தெரிவினை வாக்கெடுப்பு மூலம் மேற்கொள்ள கோருவதற்கான காரணம் ஏன்ன?

பட்ஜெட் தோற்கடிக்கப்படும் 
உறுப்பினர்கள் அனைவரது சம்மதம் இன்றியும் பிரதி அவைத்தலைவர் தெரிவு வாக்கெடுப்பு மூலம் இடம்பெற்றால் எதிர்வரும் காலங்களில் வடக்கு மாகாண சபையின் பட்ஜெட் உட்பட அனைத்து பிரேரணைகளும் எதிர்க்கப்படும் தோற்கடிக்கப்படலாம். மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் பல அணிகளாக பிரிந்து செயற்ப்படும் நிலையம் இதன் மூலம் ஏற்படுத்தப்பட வாய்ப்புண்டு ஆகவே இந்த ஆபத்தான நிலையை தவிர்ப்பதற்கு அனைவரது கோரிக்கைகளை செவிமடுத்து அடுத்த அமர்விற்குஇ
பிரதி அவைத்தலைவர் தெரிவை மேற்கொள்ள வேண்டும் எனவும் விந்தன் வலியுறுத்தினார். இதன் போது உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக கதைத்தமையால் மொழிபெயர்ப்பாளர்கள் திணறியாதோடுஇ பார்வையாளர் அரங்கில் இருந்தவர்களும் தமது காதுகளை பொத்திக்கொண்டனர். இவ்வாறு உறுப்பினர்கள் தம்முடைய கருத்துக்களை ஒருவருக்கு ஒருவர் சந்தர்ப்பம் வழங்காமல் அனைவரும் கோரசாக கத்தி கத்தி கதைத்தமையால் சபை அமர்வே அமர்க்களமானது.

வாராந்த சந்தையே நேற்று கூடியது!
இதன் போது எழுந்த மீன்பிடி அமைச்சர் டெனிஸ்வரன்இ  இன்றைய அமர்வு சபை போன்று நடைபெறவில்லைஇ வாராந்த சந்தை கூடுவது போன்றே நடைபெற்று வருகின்றது. கௌரவமான சபை என கூறிக்கொண்டு இவ்வாறு அநாகரிகமாக உறுப்பினர்கள் நடந்து கொள்வது வருத்தம் அழிக்கின்றது. சிங்களவன் தமிழர்களுக்கு தனிநாட்டினை தந்தால் எமக்குள்ளேயே நாம் அடிபட்டு செத்து விடுவோம் என டெனிஸ்வரன் மிக கவலையடைந்தார்.

அறுபத்தி மூன்று மாகாண சபை அமர்வுகள் இதுவரை நடைபெற்று முடிந்துள்ளது. இவை அனைத்தும் சபை ஒழுங்குகளுக்கு அமையவே நடைபெற்றன. இந்த நிலையில் இன்றைய அமர்வும் அவ்வாறே நடைபெறல் வேண்டும். ஒழுங்கு பத்திரத்தில் பிரதி அவைத்தலைவர் தெரிவு உள்ளது என கூறப்பட்டுள்ளது. அதே போன்று இன்றும் ஜநேற்றுஸ அவைத்தலைவர் தெரிவு இடம்பெற வேண்டும். மேலும் அறுபத்தி மூன்று அமர்வுகள் எவ்வாறு அனைவரது ஒற்றுமையுடன் நடாத்தப்பட்டதோ அதே போன்றும் இந்த அமர்வு நடைபெற வேண்டும் என உறுப்பினர் ஆனல்ட் கூறினார்.

கல்லறையில் தான் பிரதி அவைத்தலைவர் பதவி!
பிரதி அவைத்தலைவராக இருந்த அமரர் அன்ரனி ஜெயநாதன் ஒருமுறை தான் அதுவும் இரண்டு மணித்தியாலங்களே பிரதி அவைத்தலைவராக இந்த சபையில் இருந்து அவையை நடாத்தியிருந்தார். இதற்கு காரணம் அவைத்தலைவர் அவரை சபை நடாத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை. இப்போது அவர் இறந்த பின்னர் தான் அவரது கல்லறையில் பிரதி அவைத்தலைவர் என்ற பதவி பொறிக்கப்பட்டுள்ளது. என உறுப்பினர் பசுபதிப்பிள்ளை கூறினார். இவ்வாறன் ஒரு பதவிக்கு ஏன் அனைவரும் அடிபட வேண்டும் என அவைத்தலைவருக்கு மறைமுக குத்து ஒன்றை போட்டார் உறுப்பினர் உறுப்பினர் சயந்தன்.

இதன் போது எழுந்த உறுப்பினர் சிவநேசன் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆளுங்கட்சி பிரதிநிதிகளாக நானும் ரவிகரனும் தான் உள்ளோம். ஏனைய ஆளுங்கட்சி உறுப்பினர்களை முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரநிதிகளாக நாம் கருதவில்லை என கூறிஇ பிரதி அவைத்தலைவர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சொந்தமானது என்ற வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தை பிரநிதித்துவப்படுத்தும் எம்மிருவரிடமும் கலந்தாலோசிக்கப்படவில்லை. என தனது ஆதங்கத்தை சிவநேசன் கூறஇ அதைப்போய் கட்சியிடம் கேட்குமாறு அவைத்தலைவர் சிவஞானம் சடாரென்று பதில் கூறினார்.

முதலமைச்சர் என்னை குழப்புகின்றார்!
பிரதி அவைத்தலைவர் தெரிவு தொடர்பில் முதலமைச்சரின் கருத்தை கேட்டு செயற்பட வேண்டும். அவ்வாறில்லாமல் அவரது கோரிக்கைக்கு எதிராக இவ்வாறு அடிபட்டு கொண்டிருப்பது கேவலமாக இருக்கின்றது என உறுப்பினர் தியாகராசா கூறினார். எனினும் தன்னை குழப்புவதற்காவே குறித்த தெரிவினை ஒத்திவைக்குமாறு முதலமைச்சர் கடிதம் மூலம் கோரியுள்ளதாக தனது உளக் கிடைக்கையை கொட்டினார் அவைத்தலைவர் சிவஞானம்.

இங்கே இப்போது அசிங்கமான அமர்வு ஒன்று நடைபெற்று கொண்டு இருக்கின்றது. நாங்கள் ஆரம்பம் முதலே இப்போது நடைபெற்று கொண்டிருப்பவை பற்றி கூறியிருந்தோம். ஆனால் அதனை எமது சக உறுப்பினர்கள் செவி மடுக்கவில்லை. அப்போது நாம் கூறியவற்றை கேட்டிருந்தால் இந்தளவிற்கு அடிபாடு நடைபெற்றிருக்காது. இப்போது நாம் ஆரம்பத்தில் கூறிய விடயங்களுக்காக இப்போது அடிபட்டு கொண்டு இருக்கின்றனர். என எதிக்கட்சி உறுப்பினர் தவநாதன் கூறிஇ 

எதிர்கால சந்ததிக்கான சபையை குழப்பாதீர்கள்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கட்சி பிரச்சனையே இங்கு விவாதிக்கப்படுகின்றது. வடக்கு மாகாண சபை தேர்தல் இடம்பெற்று அதன் பின்னர் நடைபெற்ற சத்தியப்பிரமான நிகழ்வுகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவர் முன்னாள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதிலிருந்து இந்த பிரச்சனை ஆரம்பித்திருந்தது. உயிரிழந்த பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதனின் அஞ்சலி கூட்டத்திலும் கட்சி பிரச்சனையே பேசப்பட்டது. இதன் போது ஆளுங்கட்சி உறுப்பினர்களும் தவனாதனுக்கு எதிராக கூச்சலிட்டனர். மேலும் உறுப்பினர் சிவாஜிலிங்கம் குறித்த குற்றச்சாட்டை மறுத்திருந்தார்.

உயிரிழந்த பிரதி அவைத்தலைவர் மிகவும் அமைதியான நல்ல மனிதர் அவருடைய பதவியை பெறுவதற்காக இவ்வாறு அடிபடுவது அவருடைய ஆத்மா சாந்தியடையாது. இந்த தெரிவு அமைதியாக எடுத்தால் தான் அவருடைய ஆத்மா சாந்தியடையும் என உறுப்பினர் லிங்கநாதன் கூறினார். எனினும் முடிவுகள் எவையும் இறுதிவரை ஒற்றுமையுடன் எடுக்கப்படவில்லை. வாக்கெடுப்பா? அல்லது தெரிவை ஒத்திவைப்பதா? என்ற குழப்பம் தொடர்ந்து செல்ல நல்லெண்ண அடிப்படையிலும்இ முதலமைச்சருக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த தெரிவை பிற்போடுவது நல்லது என மீண்டும் விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் கூறினார்.

மக்களின் ஆணைக்கு மதிப்பளிக்க வேண்டும்.
இதுவரை மௌனம் காத்த உறுப்பினர் ரவிகரன்இ முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பிரதி அவைத்தலைவர் வழங்குவது என்பதில் அனைத்து உறுப்பினர்களும் ஒருமித்த கருத்துடன் இருக்கின்றார்கள். வடக்கு மாகாண சபை தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணைக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும். அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் விருப்பு வாக்குகளை அதிகம் பெற்ற உறுப்பினர்களுக்கு ஜனநாயக அடிப்படையில் பிரதி அவைத்தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும். 

மாறாக பொறுப்பற்ற தெரிவான வாக்கெடுப்பு தெரிவிற்குள் நான் வரவில்லைஇ வாக்கெடுப்புக்கு விட்டால் அது உறுப்பினர்களை இரண்டுபடுத்தும் செயற்பாடாக அமையும் ஆகவே வாக்கெடுப்புக்கு விட்டால் தான் அதிலிருந்து விலகுவதாக ரவிகரன் அறிவித்தார். இதன் போது முதலமைச்சரின் கோரிக்கையையும் அவர் சுட்டிக்காட்டினார். எனினும் முதலமைச்சர் தன்னோடு பேசவில்லைஇ தனியே அமைச்சர்களோடு மாத்திரமே பேசியுள்ளார் என அவைத்தலைவர் மீண்டும் கூறி வாக்கெடுப்பை நடாத்தப்போவதாக அடம்பிடித்தார்.

வேட்பாளர்கள் தெரிவு 
இதன் பின்னர் பல உறுபினர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் பிரதி அவைத்தலைவர் தெரிவினை வாக்கெடுப்பின் மூலம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. வேட்பாளர் தேர்வில் க.வ.கமலேஸ்வரனை சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் முன்மொழிந்தார் அதனை உறுப்பினர் ஆனல்ட் வழிமொழிந்தார். பின்னர் உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரனை உறுப்பினர் சிவாஜிலிங்கம் முன்மொழிய அதனை உறுப்பினர் சர்வேஸ்வரன் வழிமொழிந்தார். 

எனினும் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட உறுப்பினர் ரவிகரன் முன்னர் கூறப்பட்டது போல தான் இவ்வாறு வாக்கெடுப்பிற்குள் வரவிரும்பவில்லை என கூறியதற்கு இணங்க அவருடைய பெயர் யாராலும் பிரேரிக்கப்படவில்லை. வேட்பாளர் தெரிவு முடிந்த நிலையில் பன்னிரண்டு மணிக்கு தேநீர் இடைவேளை என அறிவிக்கப்பட்டது. இடைவேளையின் போது வேட்பாளர் இவர்களுடனும் உறுப்பினர்கள் கூடி கூடி பேசினார்கள். சில இடத்தில் வாக்குவாதங்களும் இடம்பெற்றன.

தமிழரசு கட்சிக்குள்ளேயே போட்டி!
பிரதி அவைத்தலைவர் வேட்பாளர்களாக பிரேரிக்கப்பட்ட இருவருமே தமிழரசு கட்சி உறுப்பினர்களேஇ இந்த நிலையில் ஏற்கனவே தயாரான நிலையில் இருந்த வாக்குபெட்டிஇ வாக்கு சீட்டு ஆகியன அவை செயலாளரினால் சபா மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டது. உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தமது வாக்குகளை அழித்தனர். வாக்கெண்ணும் பணிகளை யார் மேற்கொள்வது என்பதிலும் உறுப்பினர்களிடையே கருத்து மோதல் இடம்பெற்றிருந்தது. 

இறுதியில் வாக்கெண்ணும் கண்காணிப்பாளர்களாக அமைச்சர் டெனிஸ்வரன்இ எதிர்க்கட்சி உறுப்பினர் ஜவாகிர் ஆகியோர் நியமிக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் செயலாளரினால் வாக்கு எண்ணப்பட்டது. அனந்தி பதின்மூன்று வாக்குகளை பெற்றார்இ கமலேஸ்வரன் பதிமூன்று வாக்குளை பெற்று பிரதி அவைத்தலைவராக தெரிவானார். இந்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன் நடுநிலைமை வகித்ததாக அறிவித்தார். 

வெற்றியும் அல்ல தோல்வியும் அல்ல.
இந்த தேர்தலில் போட்டியிட்ட இருவருமே சரிக்கு சமனான வாக்குகளை பெற்றுள்ளனர். இதனை வெற்றி தோல்வியாக கருத முடியாது. எனினும் இருவர் பக்கமும் உறுப்பினர்கள் இருப்பதனால் எதிர்காலத்தில் பிரிந்து நிற்பதற்கான சாத்தியங்கள் உண்டு. எனவே இந்த வாக்கெடுப்பு தான் கடைசியும் முதலுமான வாக்கெடுப்பாக இருக்க வேண்டும் என அமைச்சர் ஐங்கரநேசன் கூறினார்இ மேலும் இந்த வாக்கெடுப்பு தான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிளவின் ஆரம்பம் என உறுப்பினர் விந்தன் இதன் போது கூறிவைத்தார்.

மேலும் தான் இன்றைய தினம் ஜநேற்றுஸ பதவி விலகும் எண்ணத்துடன் தான் வந்ததாக தன்னுடைய கவலைகளை சபையில் கூறினார் அவைத்தலைவர். இதன் பின்னர் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் அவைத்தலைவர் முன்பாக சத்தியப்பிரமாணம் செய்து பதவியை பொறுப்பேற்று கொண்டார். இதன் பின்னர் அவரது உரை இடம்பெற்று. அதன் பின்னர் மதிய உணவு இடைவேளைக்கு சபை சென்றது.

http://www.valampurii.lk/valampurii/content.php?id=12191&ctype=news

வட­மா­காண சபையின் பிரதி அவை தலை­வ­ராக கம­லேஸ்­வரன் தெரிவு

 

 

கடும் சர்ச்­சை­க­ளுக்கு மத்­தியில் வாக்­கெ­டுப்பு 
(எம்.நியூட்டன்)

வட மாகாண சபையின் பிரதி அவைத்­த­லைவ­ராக முல்­லைத்­தீவு மாவட்­டத்தைப் பிர­தி­நி­தித்­துவப்படுத்­து­ப­வரும் தமி­ழ­ரசுக் கட்­சியைச் சேர்ந்­த­வ­ரு­மான கே.வி.கம­லேஸ்­வரன் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ளார். பிரதி அவைத்­த­லை­வ­ராக பதவி வகித்த அன்டனி ஜெக­நாதன், கடந்த மாதம் மார­டைப்பால் உயி­ரி­ழந்த நிலையில் வெற்­றி­ட­மாக இருந்த பத­விக்கே இவ்­வாறு வி.கம­லேஸ்­வரன் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.  

கடும் சர்ச்­சைக்கு மத்­தியில் நேற்­றைய வட மாகாண சபை அமர்­வின்­போது பிரதி அவை தலைவர் தெரிவு செய்­யப்­பட்டார். கே.வி.கம­லேஸ்­வரன் மற்றும் அனந்தி சசி­தரன் ஆகி­யோரில் ஒரு­வரை தெரிவு செய்யும் நோக்கில் நடத்­தப்­பட்ட வாக்­கெ­டுப்பில் 18 வாக்­கு­களைப் பெற்ற வி.கம­லேந்­திரன் பிரதி அவைத் தலை­வ­ராக தெரிவு செய்­யப்­பட்டார். அனந்­தி­ச­சி­த­ர­னுக்கு 13 வாக்­குகள் கிடைப்­பெற்­றன.

வட­மா­காண சபையின் 64 வது அமர்வு கைத­டியில் அமைந்­துள்ள பேரவைச் செய­ல­கத்தில் நேற்­றை­ய­தினம் அவைத்­த­லைவர் சீ.வி.கே சிவ­ஞானம் தலை­மையில் இடம்­பெற்­றது. சபை நட­வ­டிக்கை ஆரம்­ப­மான நிலையில் இழு­பறி நிலையில் காணப்­பட்ட பிரதி அவைத்­த­லைவர் வெற்­றி­டத்­திற்­கான தெரிவில் சபை உறுப்­பி­னர்­க­ளுக்­கி­டையே கூச்சல் குழப்­பங்கள் ஏற்­பட்­டன.

குறிப்­பாக வட­மா­கா­ண­சபை பிரதி அவை தலை­வரை இன்றே தெரிவு செய்­யுங்கள் என ஒரு குழு­வி­னரும், அடுத்த அமர்வில் தெரிவு செய்­யுங்கள் என மற்­றொரு குழு­வி­ன­ரு­மாக பிரிந்த ஆளுங்­கட்­சி­யினர் 3 மணித்­தி­யா­லங்கள் தமக்­குள்­ளேயே விவாதம் மற்றும் வாய்த்­தர்க்­கம்­ஈ­டு­பட்­டி­ருந்­தனர். இதன்­போது உறுப்­பினர் ஒருவர் தனது கருத்­தினை அவைத் தலை­வ­ருக்கு முன்­வைக்க எழுந்து சென்ற போது ஆளுங்­கட்­சிக்குள் குழு­வாகச் செயற்­படும் ஒரு குழு­வினர் அந்த உறுப்­பி­னரை தடுத்­த­துடன் செங்­கோலை பாது­காக்­கு­மாறு சபையில் தெரி­வித்­தி­ருந்­தனர். இந்­நி­லையில் செங்­கோலை தூக்­கு­வ­தாக கனவு கண்­டு­விட்டு இங்கு வந்து கருத்­துக்­கூ­று­கி­றீர்­களா என குறித்த உறுப்­பினர் அந்தக் குழு­வி­னரைப் பார்த்து தெரி­வித்­தி­ருந்தார்.

இவ்­வாறு வாதப் பிரதி வாதங்­க­ளுடன் கூச்­சலும் குழப்­ப­மு­மாக காணப்­பட்ட வேளை வட­மா­காண போக்­கு­வ­ரத்து அமைச்சர் டெனீஸ்­வரன் “நாடு” கொடுத்­தி­ருந்தால் நாங்­களே அடி­பட்டு செத்­தி­ருப்போம் என தெரி­வித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் எதிர்க்­கட்­சித்­த­ரப்­பினர் அமை­தி­யாக இருந்த நிலையில் ஆளுங்­கட்சி உறுப்­பி­னர்கள் கூச்­சலும் குழப்­ப­மு­மாக தமது கருத்­தக்­களை முன்­வைத்­த­போது இரண்டு மூன்று தட­வை­க­ளுக்கு மேல் ஒலி வாங்­கியை அவை தலைவர் நிறுத்­தி­யி­ருந்தார். எனினும் ஒலி­வாங்­கிகள் நிறுத்­தப்­பட்­ட­போதும் ஆளுங்­கட்சி உறுப்­பி­னர்கள் தமது கருத்­துக்­களை ஒலி­வாங்கி இல்­லாமல் சபையில் தெரி­வித்­த­மையை காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

நேற்­றைய அமர்வில் வட­மா­காண முத­ல­மைச்சர் கலந்­து­கொண்­டி­ருக்­காத நிலையில் பதில் முத­ல­மைச்­ச­ராக கல்­வி­ய­மைச்சர் குரு­கு­ல­ரா­ஜாவே கட­மை­களை முன்­னெ­டுத்தார். இந்­நி­லையில் ஆளுங்­கட்­சிக்குள் ஒரு குழு­வினர், முன்னாள் பிரதி அவை தலைவர் மறைந்த அன்­டனி ஜெய­நாதன் இறந்த நிலையில் அதன் பின்னர் சில நாட்கள் முத­ல­மைச்சர் நாட்­டிலே இருந்­த­போதும் புதிய பிரதி அவை தலை­வரை தெரிவு செய்­வதில் அக்­கறை காட்­ட­வில்லை. அதேபோல் பதில் முத­ல­மைச்­ச­ரான குரு­கு­ல­ரா­ஜாவும் அவ் விட­யத்தில் இது­வரை அக்­கறை காட்­ட­வில்லை. எனவே புதிய பிரதி அவை தலைவர் தெரி­வா­னது இந்த அமர்­வி­லேயே இடம்­பெ­ற­வேண்டும் என கோரிக்கை விடுத்­தி­ருந்­தனர்.

இவ்­வாறு ஆளுங்­கட்சி உறுப்­பி­னர்­க­ளி­டையே வாதப்­பி­ரதி வாதங்கள் இடம்­பெற்ற நிலையில் மாகாண சபை உறுப்­பினர் ரவி­கரன், பிரதி அவைத்­தலைர் தெரிவு தொடர்பில் தனது கருத்து நிலைப்­பாட்டை சபையில் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

 அவர் உரை­யாற்­று­கையில்

மறைந்த பிரதி அவைத் தலைவர் அன்­ரனி ஜெக­நா­தனின் சேவை எமது மாவட்­டத்­திற்கு சிறப்­பாக கிடைக்­கப்­பெற்ற நிலையில் அவரின் அளப்­ப­ரிய சேவையை தொடர்ந்து ஆற்­றக்­கூ­டி­ய­வ­கையில் புதிய பிரதி அவைத்­த­லைவர் தெரி­வா­னது முல்­லைத்­தீவு மாவட்­டத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வகையில் இடம்­பெ­ற­வேண்டும்.

முல்­லைத்­தீவு மாவட்­டத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்த வேண்டும் என்ற எனது கருத்து என்னை அந்த பதவி நிலைக்கு அமர்த்­துங்கள் என்­ற­தாக கருத்­துப்­ப­டாது. எனினும் மக்­களால் வழங்­கப்­பட்ட விருப்பு வாக்குத் தெரிவில் முதன்­மை­யாக இருப்­ப­வ­ருக்கே இப்­ப­தவி வழங்­கப்­பட வேண்டும் என்­பது எனது நிலைப்­பா­டாகும். மாறாக இப்­ப­த­விக்­கு­ரிய ஆளைத் தெரிந்­தெ­டுப்­ப­தற்கு தமிழ்­தே­சியக் கூட்­ட­மைப்பை சார்ந்த உறுப்­பி­ன­ரி­டையே இரண்டு பிரி­வாக நின்று வாக்­கெ­டுப்பை நடத்­து­வதை நான் விரும்­ப­வில்லை என்றார்.

இவ்­வா­றான கருத்து நிலைகள் சபை உறுப்­பி­னர்­க­ளுக்­கி­டைய காணப்­பட்­ட­நி­லையில் தேனீர் இடை­வே­ளைக்­காக சபை ஒத்­தி­வைக்­கப்­பட்டு மீண்டும் ஆரம்­பிக்­கப்­பட்டு சுமார் 2 மணித்­தி­யா­லங்கள் கடந்த நிலையில் பிர­தி­அ­வைத்­த­லை­வ­ராக கம­லேஸ்­வ­ரனை தெரிவு செய்­யு­மாறு சுகா­தார அமைச்சர் சத்­தி­ய­லிங்கம் சபையில் முன்­மொ­ழிந்தார். இதன்­போது உறுப்­பினர் சிவா­ஜி­லிங்கம் அனந்தி சசி­த­ரனை பிர­தி­அவைத் தலை­வ­ராக தெரிவு செய்­யு­மாறு தனது கருத்­தினை தெரி­வித்­தி­ருந்தார்.

இத்­த­கைய நிலையில் மீண்டும் சபையில் பிர­தி­அ­வைத்­த­லைவர் தெரிவு விவ­காரம் கார­சா­ர­மாக பேசப்­பட்­டது. இதன்­போது அவைத்­தலைர் சி.வி.கே சிவ­ஞானம் பிரதி அவைத் தலைவர் தெரி­வா­னது பெரும்­பான்­மை­யான உறுப்­பி­னர்­களின் கோரிக்­கைக்­க­மைய வாக்­கெ­டுப்­பின்­மூ­லமே இடம்­பெ­று­மென அறிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து 32 உறுப்பினர்களுக்கிடையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது 18 வாக்குகளைப் பெற்ற வ.கமலேந்திரன் பிரதி அவைத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். அனந்திசசிதரனுக்கு 13 வாக்குகள் கிடைப்பெற்றன. இந்நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் இவ்வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இதன்பின்னர் புதிய பிரதிஅவைத் தலைவராக வ.கமலேந்திரன் அவைத்தலைர் முன்னிலையில் தனது கடமையைப் பொறுப்பேற்றார். அதன் பின்னர் அனைத்து உறுப்பினர்களும் கைலாகு கொடுத்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-10-28#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.