Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லாட்சி அரசாங்கத்திலேயாவது எங்களுக்கு பாலம் அமைக்கப்படுமா?

Featured Replies

நல்லாட்சி அரசாங்கத்திலேயாவது எங்களுக்கு பாலம் அமைக்கப்படுமா?

 

(தொகுப்பு-பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினால் தினமும் சேவையில் ஈடுபடும் மட்டக்களப்பு- குருக்கள்மடம் அம்பளாந்துறை படகுப் பாதையை பயன்படுத்தும் பொது மக்கள் தினமும் பல்வேறு அசௌகரியங்களுக்கும்,இன்னல்களுக்கும் ஆளாகி வருவதாக படகுப் பாதையை பயன்படுத்தும் பொது மக்கள்,அரச ஊழியர்கள்,விவசாயிகள் என பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.

இவ் விடயம் தொடர்பில் அவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் …….

மேற்படி படகுப் பாதை சேதப்பட்டு இருப்பதாலும்,ஒரு மணித்தியாலத்திற்கு ஒரு தடவை இப் படகுச் சேவை இடம்பெறுவதாலும் அரச உத்தியோகத்தர்களும்,பாடசாலை அதிபர்,ஆசிரியர்களும்,விவசாயிகளும்,நோயாளிகளும் பொது மக்களும் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருவதால் படகுச் சேவையை விட்டு ஒரு நிரந்தரமான பாலம் ஒன்று அமைத்து தருவதற்கு அமைச்சர்களும்,அரசாங்கமும்,சம்மந்தப்பட்ட திணைக்களமும் இதற்கு ஆவணம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.

இது இவ்வாறு இருக்க கடந்த 30 வருடங்களாக அம்பளாந்துறை படகுப் பாதை சாரதியாக கடமையாற்றிவரும் கே.நாகலிங்கம் கருத்து தெரிவிக்கையில் …..

அம்பளாந்துறை பாதை சாரதியாக குறைந்தது 30 வருடங்களாக வேலை செய்து வருவதாகவும், பல சிரமங்களுக்கு மத்தியில் மக்கள் பாதையில் பயணம் செய்வதாகவும் அம்பளாந்துறை பக்கம் 14 (தடவையும்) ரூப்பும் குருக்கள்மடம் பக்கம் 14 (தடவையும்) ரூப்பும் பாதை சேவையில் ஈடுபடுவதாகவும் அது போய் வருவதற்கு மக்களுக்கு போதாது இருப்பதுடன் குறைந்தது இப் பாதையை தினமும் சுமார் 1500க்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்துவதாகவும் ,வாகனங்களும்,உழவு இயந்திரங்களும் இதில் செல்வதாகவும், பாதையும் அடிபட்டு ஓட்டையாக இருப்பதுடன் நெடுகிலும் தண்ணீரை இரைத்து இரைத்துதான் பாதை ஓடுவதாகவும் பல சிரமங்களுக்கு மத்தியில் பாதையில் பிரயாணம் செய்து வரும் மக்களுக்கு பாலம் ஒன்றை அமைத்துத் தருவதையே எல்லா மக்களும் விரும்புவதாகவும் கடந்த அரசாங்கமும் இந்த விடயத்தை சிரமம் எடுத்து செய்யவில்லை எனவும் இந்த அரசாங்கமாவது பாலம் அமைக்கும் விடயத்தை செய்து தருமாறு அம்பளாந்துறை பாதை சாரதி கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் இப் படகுப் பாதையை பயன்படுத்தும் பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில் …..

நாங்கள் மிக நீண்ட காலமாக இங்கிருந்து எழுவான்கரைக்கும் -படுவான்கரைக்கும் தொழிலுக்கும்,விவசாயத்திற்கும் போய் கொண்டு  வருகின்றோம்.

இந்தப் பாதை ஆரம்பத்தில் மரப் பாதையாக இருந்து பிறகு இருப்புப் பாதையாக போட்டுள்ளார்கள் ஆனால் இது பல வகையில் சேதமடைந்து இருப்பதுடன் பாதையின் கீழ் ஓட்டைகள் இருப்பதால் மழை காலங்களில் பிரயாணம் செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கின்றது.

பாதையை இரண்டு பக்கமும் சரியாக நிறுத்துவதற்கான இடங்கள் இல்லையெனவும் திட்டமில்லாத சில வேலைகளினால் பாதையை தட்டுவதும் கஷ்டம் அத்தோடு  இப் பாதையில் 8.மணிக்கும் 4.30 மணிக்குமிடையில் அதிகமாக அரச ஊழியர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலரும் செல்கின்றனர்.

ஆனால் பாதையை பயன்படுத்தும் பொது மக்கள் மழை காலங்களில் ஏறுவதற்கும்,இறங்குவதற்கும் மோட்டார் சைக்கிள் நெரிசல் படுகின்றது. 

 

சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல்; இங்கிருந்து பட்டிப்பளை,கொக்கட்டிச்சோலை,அம்பளாந்துறை,மண்முனை மேற்கு உள்ளிட்ட பிரதேச பாடசாலைகளுக்கு அதிகமான ஆசிரியர்கள், அரச ஊழியர்கள்  7 மணிக்கும் 8மணிக்கும் இடையில் செல்கின்றனர்.

அத்தோடு இப் பாதைiயை திருத்தித் தருவதோடு நிரந்தரமாக ஒரு பாலத்தை அமைத்து தந்தால் இதில் பிரயாணம் செய்கின்ற அரச ஊழியர்கள் உட்பட ஏனையோருக்கும் உதவியாக இருக்கும்.

அதே நேரத்தில் கிழக்கு பக்கமுள்ள அதிகமான விவசாயிகள் மேற்குப் பக்கம்தான் அதிகமாக வேலை செய்கின்றனர்.அவர்களின் உழவு இந்திரங்களோ,வெட்டு இயந்திரங்களோ ,நெல்லோ,பசளையோ வேறு வழியில் கொண்டு செல்கின்றனர்.

எனவே இப்போது இருக்கின்ற நல்லாட்சி காலத்திலேயாவது எழுவான்கரையும்,படுவான்கரையும் இணைக்கும் பாலத்தை நிர்மானித்து தந்தால் மிகச் சிறப்பாக இருக்கும் எனவும் அம் மக்கள் அங்கலாய்கின்றனர்.

எது எவ்வாறு இருந்தாலும் மட்டக்களப்பு- குருக்கள்மடம் அம்பளாந்துறை படகுப் பாதையிலுள்ள பிரச்சினைகளை தற்காலிமாக சீர் செய்து தருவதோடு மிக விரைவில் இதற்கான நிரந்தர தீர்வான எழுவான்கரையையும் -படுவான்கரையையும் இணைக்கும் பாலமொன்றை நிர்மாணிப்பதற்கு ஜனாதிபதி,பிரதமர் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அமைச்சர்கள்,அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் வேண்டுகோளாகும்.

http://www.virakesari.lk/article/12888

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.