Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா எதிர் இங்கிலாந்து டெஸ்ட் போட்டி தொடர் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

இந்திய வெற்றி அலசல்: கோலியின் பங்களிப்பும், விக்கெட்டுகள் சரிந்த விதமும்

 

 
அஸ்வினுக்குக் கைகொடுக்கச் செல்லும் விராட் கோலி. | படம்: ஏ.எப்.பி.
அஸ்வினுக்குக் கைகொடுக்கச் செல்லும் விராட் கோலி. | படம்: ஏ.எப்.பி.
 

விசாகப்பட்டணத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியதற்கும் இந்திய கேப்டனும் ஆட்ட நாயகனுமான விராட் கோலியின் பங்களிப்புக்கும் நேரடி தொடர்பு உள்ளது.

அதாவது, இங்கிலாந்து 246 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததற்கு விராட் கோலியின் பேட்டிங் பங்களிப்பே காரணம் என்று கூற முடியும்.

முதல் இன்னிங்சில் 167 ரன்களையும் 2-வது இன்னிங்ஸில் 40/3 என்று தடுமாறிய தருணத்தில் 7-வது விக்கெட் வரை தாக்குப் பிடித்து, கடினமான சூழல், கடினமான பிட்சில் 74.31 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 81 ரன்களையும் கோலி எடுத்தார், ஆக மொத்தம் 248 ரன்கள் கோலியின் பங்களிப்பு, இங்கிலாந்து தோற்ற ரன் எண்ணிக்கை 246 ரன்கள், எனவே இந்திய வெற்றியில் அல்லது இங்கிலாந்து தோல்வியில் கோலியின் பேட்டிங் பங்களிப்பு முக்கிய அம்சமாகத் திகழ்கிறது, இதனால்தான் அவருக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்துள்ளது.

ஆனாலும் அவர் அடில் ரஷித்துக்கு நன்றியுடன் இருக்க வேண்டும், அதே போல் ஓரிரு தருணங்களில் நடுவருக்கும் நன்றிக்கடன் பட்டவராக இருக்க வேண்டும் என்பது போட்டியை உன்னிப்பாக கவனித்தவர்கள் வேண்டுவதாகும். கோலியின் சிறப்பம்சம் என்னவெனில் பெரிய ஆக்ரோஷ உடல் மொழி, மட்டை சுழற்றல் இல்லாமலேயே சரியான பந்தை தேர்ந்தெடுத்து பவுண்டரிக்கு அனுப்பியதிலும், நல்ல பந்தை அருமையான ‘டைமிங்’ மூலம் ரன் பந்தாக மாற்றியதும், கடினமான பந்துகளை தவிர்ப்பதிலும் சரி, தடுத்தாடுவதிலும் சரி கோலியின் அணுகுமுறை அப்பழுக்கற்றதாக இருந்தது. கோலியின் பேட்டிங்தான் இரு அணிகளுக்கு இடையே உள்ள வித்தியாசம்.

2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து குக், ஹமீது மூலம் உறுதியான, நல்ல தொடக்கம் கண்டது. ஆனால் இத்தகைய பிட்சில் அவ்வளவு ஓவர்கள் நிற்க முடியும் எனும்போது ரன்களையும் அடித்திருக்கலாமே என்பதுதான். முந்தைய தொடரில் ஹஷிம் ஆம்லா, டிவிலியர்ஸ் டெல்லியில் ஆகாத்ய தடுப்பாட்டம் ஆடினர், ஆனால் அந்தப் பிட்ச் குழி பிட்ச், அதில் அவ்வளவு நேரம் அவர்கள் விக்கெட்டை இழக்காமல் நின்றது சாதனையே, ஆனால் இந்தப் பிட்சில் அவ்வப்போது பந்துகள் கணுக்காலுக்குக் கீழ் வந்தது, ஆனால் பந்துகள் திரும்பவில்லை, இங்கிலாந்து கொஞ்சம் பிட்ச் பற்றிய தேவையற்ற பயத்தில் ஆடியது போலவே இருந்தது, குறிப்பாக குக், ஹமீத் ஆட்டமிழந்த பிறகு. இவர்கள் அடித்துக் காண்பித்திருந்தால் பின்னால் மொயின் அலி, ரூட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும் ஆதிக்கம் செலுத்தியிருக்க முடியும் ஏனெனில் அஸ்வின் பந்து வீச்சிலெல்லாம் பெரிய அச்சுறுத்தல் ஒன்றுமில்லை. சும்மா லைனையும் லெந்தையும் மாற்றி மாற்றி வீசிப் பார்த்தார் அவ்வளவுதான். ஜெயந்த் யாதவ் முதல் போட்டி என்பதால் அவரை அடித்து ஆடியிருக்க வேண்டும் இங்கிலாந்து, மாறாக குகைக்குள் சென்று ஆடி அவரையும் ஏதோ ஒரு பெரிய ஸ்பின்னர் என்பது போல் ஆடினர்.

இங்குதான் விராட் கோலிக்கும் ஒட்டுமொத்த இங்கிலாந்து அணிக்குமான வேறுபாடு எழுகிறது, அவரால் 74% ஸ்ட்ரைக் ரேட்டுடன் விக்கெட்டை விடாமலும் ஆட முடிந்தது, எனவே இந்த போட்டியில் மிகச்சரியாக ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்ட கோலியின் 2 இன்னிங்ஸ் ஸ்கோர்தான் இங்கிலாந்து தோல்வியில் பெரும்பங்களிப்பு செய்தது என்று கூற முடியும்.

பிட்ச்:

பிட்ச் இரண்டு புறங்களிலும் பக்கவாட்டில் ‘கொதகொதவென்று’ இருந்ததே தவிர மையப்பகுதி ஓரளவுக்கு சேதமடையாமல் இருந்தது. இதுவும் குழி பிட்ச் முயற்சிதான் ஆனால் இந்திய அணியினர் எதிர்பார்த்த அளவுக்கு குழியாகவில்லை.

மாறாக ஒரு ‘சேஞ்ச்சுக்கு’ பிட்சில் பந்துகள் மிகவும் தாழ்வாக கணுக்காலுக்கும் கீழே வந்தது, இந்தப் பந்துகளை ‘உருட்டல்’என்று கூற முடியாது அவ்வளவுதான் மற்றபடி உருளலுக்கு சற்று உயரமாக வந்ததே. இத்தகைய பிட்சிலெல்லாம் பாவம் இங்கிலாந்து வீரர்கள் எப்படி ஆட முடியும்?

எனவே பெரிய அளவுக்கு பந்துகள் திரும்பி, எழும்பி, எழும்பி திரும்பவில்லை என்று கூறுவதன் மூலம் நாங்கள் நல்ல பிட்ச்தான் அளித்தோம் என்று இந்திய அணி நிர்வாகம் கூறிக்கொள்ள முடியாது. இத்தகைய பிட்சில் ஜிம்மி ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், அடில் ரஷீத், மொகமது ஷமி பந்து வீச்சே பாராட்டுக்குரியது.

விக்கெட்டுகள் விழுந்த விதம்:

இன்று காலை முதலில் டக்கெட் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவர் ஸ்பின்னுக்கு எதிராக புதிதான உத்தியை முயற்சி செய்து வருகிறார், ஆனால் கைகொடுக்கவில்லை. இம்முறை அவர் அஸ்வினை ஸ்வீப் செய்ய முயன்றார் பந்து சற்றே, மிக சற்றே கூடுதலாக எழும்ப, இவரது மட்டையின் ரீச்சிற்கு பந்து இல்லாததும் சேர்ந்து கிளவ், தொடைக்காப்பு என்று சகல இடங்களிலும் பட்டு சஹாவிடம் கேட்ச் ஆனது. நல்ல வேளையாக சஹா பிடித்தார், ஏனெனில் எல்பி அப்பீல் செய்து கொண்டே கேட்சை விடலாம் அல்லவா?

அடுத்த 9 ஓவர்களில் 9 ரன்களே வந்தன அப்போது 2 ரன்களில் இருந்த மொயின் அலி., ஜடேஜா பவுலர்கள் காலடித் தடத்தில் ஒரு பந்தை பிட்ச் செய்து திருப்பி எழுப்ப கோலியிடம் எளிதான கேட்ச் ஆனது. அலி 31 பந்துகளில் 2 ரன்கள்.

அடுத்ததாக பென் ஸ்டோக்ஸ் 33 பந்துகள் அவரால் நிற்க முடிந்தது. ஆனால் ஜெயந்த் யாதவ் இந்த டெஸ்ட் போட்டியின் சிறந்த பந்தை வீசினார், அதாவது முதல் இன்னிங்சில் குக்கை பவுல்டு செய்த ஷமியின் பந்துக்குப் பிறகு சிறந்த பந்து இது, நடு மற்றும் ஆஃப் ஸ்டம்ப் லைனில் ஒரு பந்தை பிட்ச் செய்து திருப்ப ஸ்டோக்ஸ் செய்வதறியாமல் ஆட அது மட்டையை கடந்து ஆஃப் ஸ்டம்பை தட்டியது. அபாரமான பந்து ஸ்டோக்ஸ் 6 ரன்களில் வெளியேறினார்.

அதன் பிறகு கோலி மிகவும் புத்திசாலித்தனமாக ஷமியைக் கொண்டு வர மொகமது ஷமி நேற்று பிராட் வீசிய முறையை உள்வாங்கிக் கொண்டு கட்டர்களையும் ரிவர்ஸ் ஸ்விங்குகளையும் வீசினார், அப்போதுதான் 107 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்த ஜோ ரூட் ஷமியின் பந்து வீச்சில் சில பிரச்சினைகளை எதிர்கொண்ட நிலையில் அருமையான இன்ஸ்விங்கருக்கு (ரிவர்ஸ் ஸ்விங்) எல்.பி.ஆனார். ரிவ்யு பயனளிக்கவில்லை.

அன்சாரியை அஸ்வின் தாழ்வான பந்தில் பவுல்டு செய்தார். ஜெயந்த் யாதவ்வை ஸ்வீப் செய்ய முயன்று கால்காப்பில் வாங்க ஸ்டுவர்ட் பிராட் வெளியேறினார். அடுத்த பந்தே ஆண்டர்சனும் எல்.பி.ஆனார். 38.1 ஓவர்களில் இன்று இங்கிலாந்து ஆல் அவுட் ஆனது. மொத்தம் 158 ரன்களுக்கு இங்கிலாந்து தன் இரண்டாவது இன்னிங்ஸில் 97.3 ஓவர்களைச் சந்தித்தது.

மொத்தத்தில் இங்கிலாந்து அணி இந்திய பவுலர்களை விக்கெட்டுகளை வீழ்த்த போராட வைத்தது. இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சும் ஸ்பின் பந்து வீசில் அடில் ரஷீத்தும் அருமையாக உள்ளனர், அன்சாரிக்குப் பதிலாக கிறிஸ் வோக்ஸ் வர முடிந்தாலோ அல்லது வேறு வேகப்பந்து வீச்சாளர் வர முடிந்தாலோ, மொஹாலியில் டாஸ் வென்று இங்கிலாந்து முதலில் பேட் செய்தாலோ நிச்சயம் இந்திய அணியை வீழ்த்த முடியும்.

அதற்கான வாய்ப்பு இங்கிலாந்துக்கு எப்போதும் உள்ளது, அதற்கான தடயத்தை, அடையாளத்தை இங்கிலாந்து இந்த 2 டெஸ்ட் போட்டிகளில் காண்பித்துள்ளது, மாறாக இந்திய அணியும் தரமான வேகப்பந்து வீச்சிற்கு மடியும் ரகம் இன்னும் தங்களிடையே இருப்பதை நிரூபித்துள்ளது. வரும் போட்டிகள் இன்னும் சுவாரசியமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ஆனால் டெஸ்ட் தொடர் ஒன்றை ‘டாஸ்’ தீர்மானம் செய்யும் போக்கு இந்தியாவில் தொடர்ந்து நீடிப்பது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல. ஆஸ்திரேலியாவில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறுகின்றனர், அதற்காக ஆஸ்திரேலியா எனக்கு குழி பிட்ச் வேண்டுமென்றோ, ‘புற்களே கூடாது’ என்றோ, பேட்டிங் சாதக ஆட்டக்களம் வேண்டும் என்றோ ஒரு போதும் கூறுவதில்லை என்பதை இந்திய அணி நிர்வாகம் நினைவில் கொள்வது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நல்லது,

 

http://tamil.thehindu.com/sports/இந்திய-வெற்றி-அலசல்-கோலியின்-பங்களிப்பும்-விக்கெட்டுகள்-சரிந்த-விதமும்/article9370233.ece

  • Replies 157
  • Views 8.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

தனக்கான கள வியூகத்தைக் கேட்டுப் பெற்றார் ஜெயந்த் யாதவ்: விராட் கோலி புகழாரம்

 

 
இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸை அபாரமான பந்தில் பவுல்டு செய்த ஜெயந்த் யாதவ். | படம்: ராய்டர்ஸ்.
இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸை அபாரமான பந்தில் பவுல்டு செய்த ஜெயந்த் யாதவ். | படம்: ராய்டர்ஸ்.
 

விசாக்கப்பட்டணத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றதையடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்ற கேப்டன் விராட் கோலி, அறிமுக வீரர் ஜெயந்த் யாதவ்வின் அணுகுமுறையைப் பாராட்டினார்.

ஆட்டம் முடிந்து பரிசளிப்பு விழாவில் விராட் கோலி கூறியதாவது:

இது எனக்கு அதிர்ஷ்டமான மைதானமாக வைசாக் விளங்குகிறது. அடிலெய்ட் மைதானத்தை எப்படி உணர்கிறேனோ அதே போல் இந்த மைதானமும் எனக்கு ஒரு சிறப்பு வாய்ந்த உணர்வை ஏற்படுத்துகிறது.

நிறைய ரசிகர்கள் மைதானத்திற்கு வந்து போட்டியை ரசிப்பது நம்மை உற்சாகமான ஒரு கிரிக்கெட் ஆட்டத்தை ஆட உத்வேகமளிக்கிறது. 5 செஷன்கள் ஆடுவது 450க்கும் கூடுதலாக ரன்களை எடுப்பது என்பதில் தெளிவாக இருந்தோம். அதன் பிறகு பவுலர்கள் அருமையாக வீசினர்.

பிட்சில் அதிகமாக எதுவும் நடக்கவில்லை. ஆனால் பேட்ஸ்மென்கள் சரணடைந்தனர். என் பேட்டிங்கைப் பொறுத்தவரை நான் பந்துகளை நன்றாக அடிப்பதாகவே உணர்கிறேன். மிகப்பெரிய ‘பாசிட்டிவ்’ என்னவெனில் பவுலர்களின் செயல்பாடு, ஜெயந்த் யாதவின் அறிமுகப் போட்டி ஆட்டம். அவரது பங்களிப்புகள் விலைமதிப்பற்றது. அவரைப்பற்றி அவரது ஆட்டம் நிறைய பேசுகிறது.

ஒரு இளம் வீரர் என்னிடம் வந்து தனக்கு என்ன மாதிரியான கள வியூகம் அமைக்க வேண்டுமென்று என்னிடம் கூறுவது பாராட்டுக்குரியது. அதாவது தான் என்ன வீசப்போகிறோம் என்பதை அவர் தெளிவாக அறிந்திருப்பதையும் தன்னம்பிக்கையையும் இது காட்டுகிறது. பேட்ஸ்மென்கள் அவருக்கு எதிராக சிரமப்பட்டனர். விக்கெட்டுகளைக் கைப்பற்றும் 5 பவுலர்கள் இருப்பது அருமையான ஒரு விஷயம். நாங்கள் நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். நாங்கள் இதனுடன் திருப்தியடைய விரும்பவில்லை. அதே வேளையில் துணிச்சலாகவும் இருக்க விரும்பவில்லை. நாங்கள் இங்கிலாந்து அணியை நிரம்பவும் மதிக்கின்றோம்.

இவ்வாறு கூறினார்.

இங்கிலாந்து கேப்டன் அலஸ்டைர் குக்:

கடினமாக ஆடி சவால் அளித்தது மிகப்பெரிய தருணமாக இருந்தது, ஆனால் கடைசியில் ஆட்டமிழந்தது ஏமாற்றமளிக்கிறது. முதல் நாள் பேட்டிங் மிகச்சுலபமாக இருந்ததாகவே கருதுகிறோம். அதன் பிறகு கடினமாக மாறியது.

டாஸ் வென்றது இந்திய அணிக்குச் சாதகமாக அமைந்தது. இதில் சந்தேகமில்லை. முதல் இன்னிங்ஸிற்குப் பிறகே நாங்கள் போராடினோம்.

இந்திய அணியை கடினமாக உழைத்து ஆட பணித்தோம், எளிதாக விட்டுவிடவில்லை என்பது திருப்திகரமாக உள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் சில கட்டங்களில் நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினோம்.

இரண்டு போட்டிகளில் வென்று மீண்டும் நாங்கள் எங்களை நிரூபிக்க வேண்டும்.

 

இவ்வாறு கூறினார் குக்.

http://tamil.thehindu.com/sports/தனக்கான-கள-வியூகத்தைக்-கேட்டுப்-பெற்றார்-ஜெயந்த்-யாதவ்-விராட்-கோலி-புகழாரம்/article9370318.ece?homepage=true

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கோலியின் ரன்களை கழித்து விட்டுப்பாருங்கள்: தோல்வி குறித்து இங்கிலாந்து கேப்டன் குக்

 

இங்கிலாந்து கேப்டன் அலஸ்டர் குக். | படம்: ஏ.பி.
இங்கிலாந்து கேப்டன் அலஸ்டர் குக். | படம்: ஏ.பி.
 

விசாகப்பட்டணம் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை 246 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது குறித்து கேப்டன் அலஸ்டைர் குக் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அதாவது, கோலி இந்த டெஸ்ட்டில் எடுத்த ரன்கள் 248, இங்கிலாந்து தோற்ற ரன்கள் வித்தியாசம் 246, இதனைக் குறிப்பிட்டு கேப்டன் கூறியதாவது:

“விராட் எடுத்த ரன்களை எடுத்துவிட்டுப் பாருங்கள்- ஒரு பேச்சுக்காக- நாங்கள் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தது தெரியவரும். இந்த 10 நாட்கள் கிரிக்கெட் எனக்கு என்ன அறிவுறுத்துகிறது என்றால், இந்திய நிலைமைகளில் நாங்கள் சவாலாகவே திகழ்ந்துள்ளோம். சரி! நாங்கள் பெரிய் ரன் வித்தியாசத்தில் தோற்றுள்ளோம், இன்னும் கொஞ்சம் ஆக்ரோஷமாக ஆடி கூடுதல் ரன்களை எடுத்திருந்தால் 150 ரன்களில் தோற்றிருப்போம். ஆனால் நாங்கள் அவ்வழி சென்றோம்.

இந்த 2 டெஸ்ட் போட்டிகளின் சாதக அம்சங்களை நோக்கினால் அடில் ரஷீத் 2 போட்டிகளிலும் அருமையாகச் செயல்பட்டார். ஆண்டர்சன் மீண்டும் வந்து அருமையாக வீசினார். அனைத்து அம்சங்களையும் நாங்கள் ஒன்று திரட்டினால் இந்தியாவை வீழ்த்தலாம். மொஹாலியில் இந்திய அணியை வீழ்த்திவிட்டால் நிச்சயம் இந்தத் தொடரில் ஆதிக்கம் செலுத்துவோம்.

டாஸில் தோற்றது மிகப்பெரிய விஷயம்தான். ஆனால் சில தருணங்களில் நாங்கள் அருமையான கிரிக்கெட்டை வெளிப்படுத்தினோம். நாங்கள் இன்னும் இந்தத் தொடரை இழந்து விடவில்லை. இரண்டு டாஸ்களை வென்றால் நிலைமைகள் மாறிவிடும். இதில் சந்தேகமேயில்லை.

இருந்தாலும் டாஸில் வென்றால் முடிவுகள் எங்களுக்குச் சாதகமாக அமையும் என்று நான் கூறவில்லை. இத்தகைய பிட்ச்களில் டாஸ் வெல்வதும் முக்கியம். முதல் நாள்தான் பேட் செய்ய சிறந்த நாள். முதல் நாளுக்குப் பிறகே ரன் எடுக்கும் விகிதம் குறைவதை நீங்கள் பார்க்கலாம். ரன் எடுப்பது கடினமாகி விடும்.

இந்த டெஸ்ட்டில் 455 ரன்களை கொடுத்த பிறகு 80/5 என்றால் மீள்வது கடினம். இந்த பிட்ச் நிலைமைகளில் முதல் இன்னிங்சை கோட்டை விட்டால் மீள்வது கடினம். ஆனாலும் நாங்கள் எங்கள் திறமையை வெளிப்படுத்தி சவால் அளித்தோம்” என்றார் குக்.

http://tamil.thehindu.com/sports/கோலியின்-ரன்களை-கழித்து-விட்டுப்பாருங்கள்-தோல்வி-குறித்து-இங்கிலாந்து-கேப்டன்-குக்/article9370879.ece?homepage=true

  • தொடங்கியவர்

இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் தேர்வு

 

 
BHUVNESHWAR_TH_3089419f.jpg
 
 

இங்கிலாந்துக்கு எதிராக மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடக்க வீரர் கவுதம் கம்பீர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார், கவுதம் கம்பீர் சர்வதேச கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வந்து விட்டதாகவே இது அறிவுறுத்துகிறது.

கொல்கத்தாவில் நியூஸிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய புவனேஷ்வர் குமார் முதுகு காயம் காரணமாக 6 வாரங்கள் கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்தார்.

இந்நிலையில் தன் உடல் தகுதியை நிரூபிக்க மும்பைக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் ஆடி 36 ஓவர்களை வீசினார்.

இதனையடுத்து அவர் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி வருமாறு: விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ராகுல், முரளி விஜய், புஜாரா, கருண் நாயர், விருத்திமான் சஹா, அஸ்வின், ஜடேஜா, ஜெயந்த் யாதவ், அமித் மிஸ்ரா, மொகமது ஷமி, உமேஷ் யாதவ், இசாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார் ஹர்திக் பாண்டியா.

http://tamil.thehindu.com/sports/இந்திய-அணியில்-புவனேஷ்வர்-குமார்-தேர்வு/article9374567.ece?homepage=true

டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர்

 

மொகாலியில் 26-ந்தேதி தொடங்கும் 3-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில், ஒருநாள் அணியின் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் பேட்ஸ்மேனாக சேர்க்கப்பட்டுள்ளார்.

 
 
டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர்
 
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 3-வது டெஸ்ட் 26-ந்தேதி மொகாலியில் தொடங்குகிறது.

விசாகப்பட்டினத்தில் நேற்றுடன் முடிந்த 2-வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் சுழற்பந்து வீச்சில் திணறி வருகிறார்கள். குறிப்பாக அந்த அணியின் 4-வது வீரராக களம் இறங்கும் பென் டக்கெட் நான்கு இன்னிங்சில் மூன்றில் அஸ்வின் பந்தில் ஆட்டம் இழந்துள்ளார்.

அவர் சுழற்பந்து வீச்சுக்கு திணறுவதால் அவரை நீக்கிவிட்டு ஒருநாள் அணியின் அதிரடி ஆட்டக்காரரும் விக்கெட் கீப்பருமான ஜோஸ் பட்லரை ஆடும் லெவனில் சேர்க்க இங்கிலாந்து அணி விரும்புகிறது. இதனால் மொகாலி டெஸ்டில் ஜோஸ் பட்லர் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

ஜோஸ் பட்லர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துபாயில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் கடைசியாக இடம்பிடித்திருந்தார். அவர் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 630 ரன்கள் சேர்த்துள்ளார். சராசரி 30 ஆகும்.
 
  • தொடங்கியவர்

மூன்றாவது டெஸ்ட்டில் பார்த்திவ் பட்டேல்

எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட வருகிறார் பார்த்திவ் பட்டேல்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு காயமடைந்த விரித்திமன் சாஹாவுக்கு பதிலாக பார்த்திவ் சேர்க்கப்பட்டுள்ளார். சாஹாவுக்கு பதிலாக தற்காலிகமாகவே இவர் சேர்க்கப்பட்டுள்ளாராம்.

400_09576.jpg

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்திவ் பட்டேல் விளையாடும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இவர் விளையாடும் முதல் சர்வதேசப் போட்டியும் இதுதான். 20 டெஸ்ட் போடிகளில் 683 ரன்கள் எடுத்துள்ளார் பார்த்திவ் பட்டேல்.

http://www.vikatan.com/news/sports/73198-parthiv-patel-replaces-vriddhiman-saha-in-third-england-test.art

  • தொடங்கியவர்

மொகாலி டெஸ்ட்: பட்லர், வோக்ஸ் விளையாடுகிறார்கள்

மொகாலி டெஸ்டில் இங்கிலாந்து அணியின் கிறிஸ் வோக்ஸ் மற்றும் அதிரடி ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் ஆகியோர் விளையாடுகிறார்கள்.

 
 
மொகாலி டெஸ்ட்: பட்லர், வோக்ஸ் விளையாடுகிறார்கள்
 
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் 3-வது டெஸ்ட் மொகாலியில் நாளை தொடங்குகிறது.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் ஆண்டர்சன் இடம்பெற்றதால் கிறிஸ் வோக்ஸிற்கு இடம் கிடைக்கவில்லை. தற்போது அந்த அணியின் ஸ்டூவர்ட் பிராட் காயம் அடைந்துள்ளதால் மொகாலி டெஸ்டில் அவர் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக கிறிஸ் வோக்ஸ் விளையாடுகிறார். இவர் ராஜ்கோட் டெஸ்டில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் அந்த அணியின் பேட்ஸ்மேன் பென் டக்கெட் சரியாக பேட்டிங் செய்யவில்லை. இதனால் அவருக்குப் பதிலாக ஜோஸ் பட்லர் களம் இறக்கப்பட இருக்கிறார்.
 
634F8162-5A45-44F3-8007-CC746C33E603_L_s

சுழற்பந்து வீச்சாளர் சாபர் அன்சாரி உடல்நலக்குறைவால் நாளைய டெஸ்டில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக மாற்று சுழற்பந்து வீச்சாளர் இடம்பெறுவாரா? அல்லது வேகப்பந்து வீச்சாளர் இடம்பெறுவாரா? என்பது ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து முடிவு செய்யப்படும் என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் அலைஸ்டர் குக் தெரிவித்துள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/11/25172009/1052733/Buttler-and-Woakes-return-for-third-Test.vpf

  • தொடங்கியவர்

இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: மொஹாலியில் நாளை தொடக்கம்!

 

 
Kohli4121_(3)

 

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொஹாலியில் நாளை தொடங்குகிறது.

முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றியடைந்தது. இதனால் இந்தப் போட்டியிலும் வென்று தொடரில் முன்னிலை பெறும் முனைப்பில் களமிறங்குகிறது இந்தியா. அதேநேரத்தில் இங்கிலாந்து அணி, கடந்தப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்ததால் மொஹாலியில் ஜெயிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

இந்திய அணியைப் பொறுத்தவரையில் காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்துவிட்ட தொடக்க வீரர் கே.எல்.ராகுல் இந்த ஆட்டத்திலும் களமிறங்குகிறார். ரஞ்சி கிரிக்கெட்டில் சதமடித்த கையோடு களமிறங்கும் ராகுல், கடந்த போட்டியில் ஏமாற்றமளித்தாலும் இந்தப் போட்டியில் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு தொடக்க வீரரான முரளி விஜய் நல்ல ஃபார்மில் இருக்கிறார். இருவரும் இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கம் ஏற்படுத்தித் தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிடில் ஆர்டரில் சேதேஷ்வர் புஜாரா, கேப்டன் விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, அஸ்வின் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். இந்தப் போட்டியில் சாஹாவுக்குப் பதிலாக பார்தீவ் படேல் களமிறங்குகிறார். 

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் உமேஷ் யாதவுக்குப் பதிலாக புவனேஸ்வர் குமார் இடம்பெறக்கூடும். சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வினும் ரவீந்திர ஜடேஜாவும் சிறப்பாக செயல்படும்பட்சத்தில் இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுக்க முடியும். புதுமுகம் ஜெயந்த் யாதவுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணி பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் வலுவாகவே இருந்தாலும் அந்த அணியால் இந்தத் தொடரில் வெற்றியைத் தொடமுடியவில்லை. கேப்டன் குக், ஹஸீப் ஹமீது, ஜோ ரூட், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பேட்டிங்கில் மிகப்பெரிய பலம் சேர்க்கின்றனர். டக்கெட்டுக்குப் பதிலாக ஜோஸ் பட்லெர் அணியில் விளையாடவுள்ளார். இங்கிலாந்து அணியில் எப்படியும் மூன்று மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.dinamani.com/sports/sports-news/2016/nov/25/இந்தியா-இங்கிலாந்து-3-வது-டெஸ்ட்-மொஹாலியில்-நாளை-தொடக்கம்-2604959.html

  • தொடங்கியவர்

#INDvENG இங்கிலாந்து அணி பேட்டிங்!

c1e5ae6f1abd4b779f0d41501309ea52_09012.j

இந்தியா-இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, மொஹாலியில் தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றியடைந்தது. 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சர்வதேச போட்டிகளில் களம் இறங்குகிறார் பார்த்தீவ் படேல். 

இந்திய அணி XI:முரளி விஜய்,பார்த்தீவ்,புஜாரா,கோஹ்லி,ரஹானே,கருண் நாயர்,அஷ்வின்,ஜடேஜா,மொஹமது ஷமி,உமேஷ்,ஜெயந்த் யாதவ்

http://www.vikatan.com/news/india/73505-england-wins-toss-and-decides-to-bat-first.art

  • தொடங்கியவர்

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இந்தியா ஆதிக்கம்

 

 
 
மோயின் அலி ஆட்டமிழந்ததைக் கொண்டாடும் இந்திய வீரர்கள் | படம்: ஏ.எஃப்.பி
மோயின் அலி ஆட்டமிழந்ததைக் கொண்டாடும் இந்திய வீரர்கள் | படம்: ஏ.எஃப்.பி
 

இந்தியா - இங்கிலாந்து இடையே நடைபெற்றுவரும் 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று, உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 92 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆட்டத்தின் 2-வது ஓவரிலேயே ஷமி பந்துவீச்சில் குக் கொடுத்த கேட்சை ஜடேஜா தவறவிட்டார். இதற்குப் பின் சற்று சுதாரித்த இங்கிலாந்து அணி சீராக ரன் சேர்த்து வந்தது.

சரியாக பத்தாவது ஓவரில், உமேஷ் யாதவ் வீசிய பந்து, ஆடிக்கொண்டிருந்த ஹமீத் நினைத்ததை விட அதிகமாக பவுன்ஸ் ஆக, பந்து அவரது கையில் பட்டு ஸ்லிப் பகுதிக்கு பறந்தது. ரஹானே கேட்ச் பிடிக்க, ஹமீத் 9 ரன்களுக்கு வெளியேறினார்.

அடுத்த ஓவரிலேயே ஷமியின் பந்தை சந்தித்த குக் மீண்டும் கேட்ச் தர, இம்முறை மிட் விக்கெட் பகுதியில் இருந்த அஸ்வின் அதை தவறவிட்டார். தொடர்ந்து சில ஓவர்களில் ஜோ ரூட், யாதவ்வின் சுழலில் ஆட்டமிழக்க, அடுத்த ஓவரை வீச வந்த அஸ்வின் முதல் பந்திலேயே குக்கை வெளியேற்றி தான் விட்ட கேட்சுக்கு சரிகட்டிக் தேடி கொண்டார்.

தொடர்ந்து களமிறங்கிய மோயின் அலி முதலில் சற்று நிதானித்தாலும் யாதவ் ஓவரில் சிக்ஸர், பவுண்டரி என அடுத்தடுத்து அதிரடி காட்டினார். அவர் 16 ரன்கள் எடுத்திருந்த போது ஷமியின் பவுன்சரை தூக்கி அடிக்க முயல அது ஃபைன் லெக் பகுதியில் நின்று கொண்டிருந்த விஜய்யின் கைகளில் தஞ்சம் புகுந்தது.

உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 92 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. தற்போது பேர்ஸ்டோ (20 ரன்கள்) மற்றும் ஸ்டோக்ஸ் (5 ரன்கள்) களத்தில் உள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/இங்கிலாந்துக்கு-எதிரான-3வது-டெஸ்ட்-இந்தியா-ஆதிக்கம்/article9389467.ece?homepage=true

  • தொடங்கியவர்

முதல்நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 268/8

 

23258f_16587.jpg

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் பஞ்சாப்பின் மொஹாலியில் இன்று துவங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தது. இதையடுத்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக அந்த அணியின் பயர் ஸ்டோவ் 89 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்திய அணியில் உமேஷ் யாதவ், ஜெயந்த் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

  • தொடங்கியவர்

அவுட் ஆன விரக்தியில் இந்திய வீரர்களை திட்டிய பென் ஸ்டோக்ஸ்: ஐ.சி.சி. கண்டிப்பு

மொகாலி டெஸ்டில் அவுட்டான விரக்தியில் பென் ஸ்டோக்ஸ் இந்திய வீரர்களை நோக்கி தகாத வார்த்தைகளை பயன்படுத்தினார். இதனால் ஐ.சி.சி. அவரை கண்டித்துள்ளது.

 
 
 
அவுட் ஆன விரக்தியில் இந்திய வீரர்களை திட்டிய பென் ஸ்டோக்ஸ்: ஐ.சி.சி. கண்டிப்பு
 
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொகாலியில் இன்று தொடங்கியது. அந்த அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணி விக்கெட்டுக்களை இழந்து திணறியபோது பென் ஸ்டோக்ஸ் அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். ஆனால், 29 ரன்னில் ஜடேஜா பந்தில் ஸ்டம்பிங் ஆகி அவுட் ஆனார்.

அப்போது இந்திய வீரர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இதனால் கோபம் அடைந்த பென் ஸ்டோக்ஸ் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி இந்திய வீரர்களை திட்டிக்கொண்டே சென்றார்.

இதை மைதான நடுவர்களான மரைஸ் எராஸ்மஸ் மற்றும் கிறிஸ் கஃபானெய் கவனித்தார்கள். அவர்கள் இந்த பிரச்சினையை போட்டி நடுவரான ரஞ்சன் மதுகலேயிடம் கொண்டு சென்றனர்.

விசாரணையில் பென் ஸ்டோக்ஸ் வீரர்களின் நன்னடத்தை விதி 2.1.4.-ஐ மீறியதாக தெரியவந்தது. அவரது குற்றம் 1-வது லெவலுக்குள்ளானது என்பதால் கண்டிப்புடன், சஸ்பெண்டுக்கான ஒரு புள்ளி வழங்க ஐ.சி.சி. முடிவு செய்தது. இதற்கு பென் ஸ்டோக்ஸ் ஒப்புக்கொண்டதால் மேற்கொண்டு விசாரணை இல்லாமல் கண்டிப்புடன் பென் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட்டார்.

இன்னும் 24 மாதத்திற்குள் மேலும் நான்கு புள்ளிகள் பெற்றால் ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் அல்லது இரண்டு டி20 போட்டி இதில் எது முதலில் வருகிறதோ அதில் விளையாட தடை விதிக்கப்படும்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/11/26214319/1052917/India-vs-England-3rd-Test-Ben-Stokes-reprimanded-for.vpf

  • தொடங்கியவர்

ஏமாற்றத்தில் இருந்து மீண்டு வருவோம்: இங்கிலாந்து பேட்ஸ்மேன் பேர்ஸ்டோவ் சொல்கிறார்

 

முதல் நாளில் விக்கெட்டுக்களை இழந்தது ஏமாற்றம் அளிக்கிறது என்று பேர்ஸ்டோவ் கூறியுள்ளார்.

 
ஏமாற்றத்தில் இருந்து மீண்டு வருவோம்: இங்கிலாந்து பேட்ஸ்மேன் பேர்ஸ்டோவ் சொல்கிறார்
 
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் மொகாலியில் இன்று தொடங்கியது. மொகாலி ஆடுகளம் சுழற்பந்து பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் இருந்தால் 4-வது மற்றும் கடைசி நாளில் பேட்டிங் செய்வது மிகவும் கடினம். இதனால் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்று  கருதப்பட்டது.

இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றது. அப்போதே இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய வாய்ப்பு என்று கருதப்பட்டது. ஆனால் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 268 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவ் மட்டும் தாக்குப்பிடித்து 89 ரன்கள் சேர்த்தார். இன்றைய ஆட்டம் குறித்து பேர்ஸ்டோவ் கூறுகையில், டாஸ் வென்ற நல்ல வாய்ப்பை விக்கெட்டுக்களை இழந்து தவற வி்ட்டுவிட்டோம் என்றார்.

மேலும் பேர்ஸ்டோவ் கூறுகையில் ‘‘டாஸ் வென்ற பின்னர், விக்கெட்டுக்களை இழந்தது மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. அதே சமயத்தில் இது பேரழிவான நாள். விரைவில் விக்கெட்டுக்களை இழந்தது எங்களுக்கு ஏமாற்றம் தந்தது. நாளை காலை செசனில் நாங்கள் ஓரளவிற்காவது பேட்டிங் செய்ய வேண்டும். இல்லையெனில் கடிமான பந்து வீச வேண்டும்.

ஆடுகளம் முதல் நாள் ஆட்டத்திற்கு ஏற்ற வகையில் சிறந்த வகையில் சென்று கொண்டிருந்தது. நாளைக்கும் இதுபோன்றே இருக்கலாம். ஆனால், ஆடுகளத்தில் ஏதிர்பாராத பவுன்சஸ் இருப்பதை நாங்கள் பார்த்தோம். முதல் நாள் முழுவதும் இந்த பவுன்ஸ் இருந்தது. நாங்கள் போராடி வருகிறோம். இது எங்களுக்கு மோசமான நாள்தான். ஆனால், இதுபோன்ற மோசமான நிலையை இதற்கு முன்னரும் நாங்கள் எதிர்கொண்டிருக்கிறோம்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/11/26211922/1052914/India-vs-England-Jonny-Bairstow-promises-tourists.vpf

  • தொடங்கியவர்

#INDvsENG - இங்கிலாந்து 283 ரன்களுக்கு ஆல்-அவுட்

400_10062.jpg

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி மொஹாலியில் நடந்து வருகிறது. போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 283 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக பெர்ஸ்டாவ் 89, பட்லர் 43 ரன்கள் எடுத்தனர். ஷமி மூன்று விக்கெட்டுகள் எடுத்தார். இந்தியா இப்போது பேட்டிங்கை துவக்கியுள்ளது. 

  • தொடங்கியவர்

மொகாலி டெஸ்ட்: 2-வது நாள் முடிவில் இந்தியா 271/6; முன்னிலைக்காக போராடும் அஸ்வின்- ஜடேஜா

மொகாலிடெஸ்டில் 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்துள்ளது. முன்னிலைக்காக அஸ்வின் - ஜடேஜா ஜோடி போராடி வருகிறது.

 
 
மொகாலி டெஸ்ட்: 2-வது நாள் முடிவில் இந்தியா 271/6; முன்னிலைக்காக போராடும் அஸ்வின்- ஜடேஜா
 
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் மொகாலியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி மேலும் 15 ரன்கள் எடுத்து 283 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இந்திய அணியின் ஷமி 3 விக்கெட்டும் உமேஷ் யாதவ், ஜயந்த் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக முரளி விஜய், பார்தீவ் பட்டேல் ஆகியோர் களம் இறங்கினார்கள். முரளி விஜய் 12 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து பட்டேல் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 42 ரன்கள் எடுத்த நிலையில் பட்டேல் ஆட்டம் இழந்தார்.

அடுத்து புஜாராவுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்தது. 51 ரன்கள் எடுத்த நிலையில் புஜாரா ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் வந்த ரகானே (0), கருண் நாயர் (4) அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் இந்தியா 156 ரன்களுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்தது.

அரைசதம் கடந்த விராட் கோலி 62 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 204 ரன்னாக இருந்தது. இதனால் இங்கிலாந்து எடுத்த ரன்னையாவது இந்தியா எடுக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது.

ஆனால் 7-வது வீரராக களம் இறங்கிய அஸ்வின் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு ஜடேஜா முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அஸ்வின் அரை சதத்தால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
 
F6DB5573-CB74-43E8-9FBB-8BC28F371747_L_s


முதல் இன்னிங்சில் இங்கிலாந்தை விட குறைந்தது 50 ரன்னாவது முன்னிலை வகிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அஸ்வின் - ஜடேஜா ஜோடி விளையாடியது. இந்த ஜோடி 2-வது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. அஸ்வின் 57 ரன்னுடனும், ஜடேஜா 31 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்த ஜோடி இதுவரை 7-வது விக்கெட்டுக்கு 67 ரன்கள் எடுத்துள்ளது.

2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்தை விட 12 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. நாளைய 3-வது நாள் ஆட்டத்தில் இந்த ஜோடி இன்னும் 50 முதல் 60 ரன்கள் வரை நிலைத்து நின்று விளையாடினால் இங்கிலாந்துக்கு கடும் நெருக்கடி கொடுக்க முடியும்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/11/27171540/1052996/Mohali-Test-2nd-day-stump-India-271-for-six.vpf

  • தொடங்கியவர்

அஸ்வின் சாதனை அரைசதத்துடன் இந்தியா 6 விக். இழப்புக்கு 271 ரன்கள்

 

204/6 என்ற நிலையிலிருந்து இந்திய அணியை மீட்ட நாட் அவுட் கூட்டணி ஜடேஜா, அஸ்வின். | படம்: பிடிஐ.
204/6 என்ற நிலையிலிருந்து இந்திய அணியை மீட்ட நாட் அவுட் கூட்டணி ஜடேஜா, அஸ்வின். | படம்: பிடிஐ.
 

மொஹாலி டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று இங்கிலாந்தின் 283 ரன்களுக்கு எதிராக இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்துள்ளது.

அஸ்வின் 57 ரன்களுடனும் ஜடேஜா 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர், நாளை தொடர்வார்கள். 148/2 என்ற நிலையிலிருந்து 204/6 என்று சரிந்த இந்திய அணியை அஸ்வின், ஜடேஜா கூட்டணி இன்று 67 ரன்கள் விக்கெட்டில்லா கூட்டணியுடன் நிலை நிறுத்தியுள்ளது. நாளை மேலும் தொடரவும் இந்த கூட்டணி உறுதியுடன் உள்ளது.

இன்றைய தினத்தின் சிறப்பு இங்கிலாந்தின் பீல்டிங் ஒரு சிறப்பம்சமாக அமைந்தது. கேட்ச்களை விட்டாலும் முக்கியத் தருணங்களில் பிடித்த கேட்ச், ரன் அவுட் ஆகியவற்றினால் இங்கிலாந்து இந்திய அணியை பின்னடைவு காணச் செய்தது.

அஸ்வின் சாதனை:

82 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இன்றைய தினத்தை முடித்த ஆல்ரவுண்டர் அஸ்வின் இந்த ஆண்டில் 500 ரன்கள் 50 விக்கெட்டுகள் என்ற சாதனைக்குச் சொந்தக்காரரானார்.

அருமையான ஒரு டெஸ்ட் தினமாக இது அமைந்தது. இரு அணிகளும் சரிசமமாக பலப்பரிட்சை நடத்தின, புஜாரா, விராட் கோலி காலையில் இங்கிலாந்தின் முயற்சிகளை முறியடித்து அரைசதங்கள் கண்டனர், பார்த்திவ் படேல் அருமையாக ஆடினார், குறிப்பாக ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சை இவர் கையாண்டதுதான் சரி என்று தோன்றும் விதமாக ஆடினார், அதுவும் அந்த இரண்டு நேர் டிரைவ்கள் உண்மையில் ஆண்டர்சனுக்கு எரிச்சலூட்டக்கூடியவைதான்.

42 ரன்கள் எடுத்த பார்த்திவ் படேல் ரஷீத் படேல் பந்தை நன்றாக முன்னால் வந்து ஆடினார், ஆனாலும் பேடில் பட்டதற்கு இங்கிலாந்து ரிவியூ செய்ய அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இது துரதிர்ஷ்டவசமானது. காரணம் லெக் ஸ்டம்ப் எப்போது நடுவருக்குரியது என்றே 3-வது நடுவர் தீர்ப்பு வழங்குவர், இம்முறை லெக்ஸ்டம்பின் முனையில் படுமாறுதான் ரீப்ளே காண்பித்தது, ஆனால் நடுவர் நாட் அவுட் தீர்ப்பை மாற்றி அவுட் என்றார் 3ம் நடுவர், இத்தகைய முரண்பாடுகளைத்தான் தோனி போன்றவர்கள் கடுமையாக விமர்சித்தனர். கங்குலி கூறியது போல் பார்த்திவ் படேல் இன்று சதம் அடித்திருக்க வேண்டும்.

முன்னதாக கேட்ச் கோட்டை விடப்பட்ட வாய்ப்பை முரளி விஜய் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. 12 ரன்களில் ஸ்டோக்ஸ் வீசிய மிகவும் வெளியே சென்ற பந்தை தட்டுமாறு ஆடினார், உண்மையில் அது கேட்சிங் பிராக்டீஸ்தான், அந்த ஷாட்டை சேவாக் போல் அடித்து நொறுக்குமாறு ஆடியிருந்தால் எட்ஜ் எடுத்தால் கூட பந்து தலைக்கு மேல் பறக்கும், ஆனால் விஜய்யோ பந்தைப் போய் மட்டையால் இடித்தார். உண்மையில் ‘நத்திங் ஷாட்’ என்பார்களே அதுதான் விஜய் ஆடியது. நடுவர் இதற்கு அவுட் கொடுக்காத போதிலும் விஜய் நேர்மையாக பெவிலியன் நோக்கி நடையைக் கட்டியது பாராட்டுக்குரியது. எப்படியிருந்தாலும் ரிவியூவில் அவர் அவுட் என்பது தெளிவாக தெரிந்து விடும் போதிலும் அவுட் என்றால் வெளியேறுவது என்பது ஒரு நல்ல பண்பு, அதைத்தான் விஜய் இன்று செய்தார்.

அதன் பிறகு கோலியும், புஜாராவும் 3-வது விக்கெட்டுக்காக 75 ரன்களைச் சேர்த்தனர். நேற்று இங்கிலாந்து போல்தான் தேவையில்லாமல் அவுட் ஆனதுதான் விஜய், புஜாரா, கோலி, ரஹானே போன்றோரது அவுட்கள். புஜாரா 104 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து இன்னொரு சதம் நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆனால் அடில் ரஷீத் வீசிய ஒன்றுமேயில்லாத, எங்கு வேண்டுமானாலும் கேட்டு அடிக்க வேண்டிய ஷார்ட் பிட்ச் பந்தை குறிபார்த்து டீப்பில் லெக் திசையில் வோக்ஸிடம் அடித்தார், வோக்ஸ் சில அடிகள் முன்னால் ஓடி வந்து கீழே தொடும் நிலையில் பந்தைப் பிடித்தார்.

அடுத்ததாக ரஹானேயின் மோசமான பார்ம் தொடர்ந்தது. 6 பந்துகள் ஆடி ரன் எடுக்காமல் ரஷீத்தின் லேசான கூக்ளியை ஆட நிறைய நேரம் இருந்தும், கால்காப்பில் நேராக வாங்கி எல்.பி.ஆனார்.

இதற்கு அடுத்தபடியாக அறிமுக வீரர் கருண் நாயர் 4 ரன்களில் ஜோஸ் பட்லரின் அற்புதமான பீல்டிங், மற்றும் நேரடி த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார்.

கோலி, புஜாரா கூட்டணியின் போது மற்றொரு ஆஃப் ஸ்பின்னர் கரேத் பாத்தியை கொண்டு வந்தது இங்கிலாந்துக்கு சரியாக அமையவில்லை, அவர் 5 ஓவர்களில் 29 ரன்களை விட்டுக் கொடுத்தார். புஜாராவுக்கும் லெக் திசையில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ ஒரு கேட்சை விட்டார், அதன் பிறகு விரைவு கதியில் 6 ஓவர்களில் 34 ரன்கள் அடிக்கப்பட்டது. முன்னதாக அடில் ரஷீத் தன் டெஸ்ட் வாழ்க்கையில் முதன்முறையாக இரு ஓவர்களை மெய்டன்களாக்கினார்.

விராட் கோலி அருமையாக ஆடி, பொறுமைகாத்து 127 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 62 ரன்களை எடுத்திருந்த போது தேவையில்லாமல் ஸ்டோக்ஸ் வீசிய வெளியே சென்ற பந்தை விக்கெட் கீப்பருக்கு கேட்சிங் பிராக்டீஸ் கொடுத்தார். 148/2லிருந்து இந்திய அணி 204/6 என்று சரிவின் விளிம்பில் இருந்தது.

மீண்டும் அஸ்வின் அருமையாக அணியை சரிவிலிருந்து மீட்டு ஆடிவருகிறார், விக்கெட்டுகளுக்கிடையே இவரது ஓட்டம் பிரச்சினைதான் என்றாலும் திட்டமிட்டு ஆடுகிறார். 2 ரன்களையெல்லாம் 1 ரன் ஓடினார் அஸ்வின். ஆனால் 7வது பவுண்டரியுடன் இந்தத் தொடரில் தனது 3-வது அரைசதத்தை எட்டினார். ரவீந்திர ஜடேஜா 34 பந்துகளில் 8 ரன்களிலிருந்து 3 பவுண்டரி 1 சிக்சருடன் 59 பந்துகளில் 31 என்று ஆடி வருகிறார். இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளையும் அடில் ரஷீத் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மொயின் அலி விக்கெட் எடுக்காவிட்டாலும் 9 ஓவர்களில் 19 ரன்களையே விட்டுகொடுத்தார்.

http://tamil.thehindu.com/sports/அஸ்வின்-சாதனை-அரைசதத்துடன்-இந்தியா-6-விக்-இழப்புக்கு-271-ரன்கள்/article9391737.ece

  • தொடங்கியவர்

#INDvsENG - ஆட்டமிழந்தார் அஷ்வின்

400_10453.jpg

மொஹாலியில் இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இப்போது ஏழு விக்கெட் இழப்புக்கு 301 ரன்கள் எடுத்து, 18 ரன்கள் முன்னிலையில் உள்ளது இந்தியா. 72 ரன்களுடன் சதத்தை நெருங்கிய அஷ்வின், பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் அவுட் ஆனார். ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து ஆடி வருகிறார்.

  • தொடங்கியவர்

3-வது டெஸ்ட்: இந்தியா முன்னிலை; ஜடேஜா அரை சதம்

 

 
 
 
 
அரை சதத்தைக் கொண்டாடும் ரவீந்திர ஜடேஜா | படம்: அகிலேஷ் குமார்
அரை சதத்தைக் கொண்டாடும் ரவீந்திர ஜடேஜா | படம்: அகிலேஷ் குமார்
 

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நாளான இன்று, உணவு இடைவேளையின் போது இந்தியா 354 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இது இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸின் ஸ்கோரை விட 71 ரன்கள் முன்னிலையாகும்.

2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 271 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அஸ்வினும் - ஜடேஜாவும் இன்று காலை ஆட்டத்தைத் தொடர்ந்தனர். 40 நிமிடங்களுக்கும் மேலாக களத்தில் நின்று ரன் சேர்த்த இந்த இணை ஆட்டத்தின் 95-வது ஓவரில் பிரிந்தது. ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் அஸ்வின் 72 ரன்களுக்கு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதுவரை அஸ்வினும் - ஜடேஜாவும் பார்ட்னர்ஷிப்பில் 97 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்து களமிறங்கிய ஜயந்த் யாதவ், ஜடேஜாவுடன் இணைந்து ரன் சேர்க்க ஆரம்பித்தார். இதற்கிடையில் ரவீந்திர ஜடேஜா 104 பந்துகளில் 5 பவுண்டரி, 1 சிக்ஸருடன் அரை சதம் எட்டினார். மேற்கொண்டு இந்த இணையை பிரிக்க இங்கிலாந்து செய்த முயற்சிகள் வீணாகின. உணவு இடைவேளையின் போது இந்திய அணி 354 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

தொடர்ந்து திறம்பட ஆடிய யாதவ் 66 பந்துகள் நிலைத்து ஆடி 26 ரன்களையும், ஜடேஜா 142 பந்துகளில் 70 ரன்களையும் சேர்த்து களத்தில் உள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/3வது-டெஸ்ட்-இந்தியா-முன்னிலை-ஜடேஜா-அரை-சதம்/article9394100.ece?homepage=true

  • தொடங்கியவர்

மொகாலி டெஸ்ட்: ஜடேஜா, ஜயந்த் யாதவ் ஆட்டத்தால் இந்தியா 417 ரன்கள் குவிப்பு

மொகாலியில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 417 ரன்கள் குவித்தது. ஜடேஜா 90 ரன்களும், ஜயந்த் யாதவ் 55 ரன்களும் சேர்த்தனர்.

 
மொகாலி டெஸ்ட்: ஜடேஜா, ஜயந்த் யாதவ் ஆட்டத்தால் இந்தியா 417 ரன்கள் குவிப்பு
 
மொகாலி:

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 283 ரன் குவித்தது.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 271 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் விராட் கோலி 62 ரன்னும், புஜாரா 51 ரன்னும் எடுத்தனர். அஸ்வின் 57 ரன்னுடனும், ஜடேஜா 37 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. அஸ்வின் - ஜடேஜா ஜோடி ஆட்டத்தை தொடங்கியது. 93-வது ஓவரில் இந்திய அணி 300 ரன்னை குவித்தது. அடுத்த சில நிமிடங்களில் அபாரமாக ஆடிவந்த அஸ்வின் ஆட்டம் இழந்தார். அவர் 113 பந்துகளில் 72 ரன் எடுத்தார். இதில் 11 பவுண்டரிகள் அடங்கும். அவரது விக்கெட்டை ஸ்டோக்ஸ் கைப்பற்றினார். அஸ்வின் ஆட்டம் இழந்தபோது இந்திய அணியின் ஸ்கோர் 301 ஆக இருந்தது. இருவரும் 7-வது விக்கெட்டுக்கு 97 ரன் எடுத்தது மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும்.

அடுத்து ஜெய்ந்த் யாதவ் களம் வந்தார். மறுமுனையில் இருந்த ஜடேஜா சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். 103 பந்துகளில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் அவர் 50 ரன்னை தொட்டார். 23-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 3-வது அரை சதமாகும். இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடியதில் இந்தியா ரன்களை குவித்தது. 111-வது ஓவரில் 350-வது ரன்னை தொட்டது.
 
6D3C3D97-E511-456E-85DC-3A99D44A8372_L_s


மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 354 ரன் குவித்து இருந்தது. ஜடேஜா 70 ரன்னும், ஜயந்த் யாதவ் 26 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.
 
95A256EE-C6F8-4C6A-8652-1C35FF63FD76_L_s


மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய ஜடேஜா 90 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் ஜயந்த் யாதவ் 55 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்தியா முதல் இன்னிங்சில் 417 ரன்கள் குவித்தது.

10-வது வீரராக களம் இறங்கிய உமேஷ் யாதவ் 12 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மொகமது ஷமி 1 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டும், ரஷித் 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 134 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது.

http://www.maalaimalar.com/News/TopNews/2016/11/28145315/1053119/Mohali-Test-India-417-runs-in-1st-innings-jadeja-90.vpf

  • தொடங்கியவர்

#IndVsEng.,மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 78/4

 

23387_16522.jpg

இந்தியா-இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட் போட்டி மொஹாலியில் நடந்து வருகிறது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 417 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 90, அஸ்வின் 72, ஜெயந்த் யாதவ் 55 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்துள்ளது. ரூட் 36 ரன்களுடன், கரீத் பட்டி ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். அஸ்வின் 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ஜெயந்த் யாதவ் 1 விக்கெட் எடுத்துள்ளார். இங்கிலாந்து அணி, இந்தியாவை விட 56 ரன்கள் பின்தங்கியுள்ளது.

http://www.vikatan.com/news/sports/73670-england-784-stumps-on-day3-vs-india.art

  • தொடங்கியவர்

வார்த்தை போர்: பென் ஸ்டோக்ஸ்க்கு பதிலடி கொடுத்த விராட் கோலி

மொகாலி டெஸ்டில் விராட் கோலியை கிண்டல் அடித்த பென் ஸ்டோக்ஸ்க்கு, இன்று அவர் அவுட்டாகி செல்லும்போது விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார்.

 
 
வார்த்தை போர்: பென் ஸ்டோக்ஸ்க்கு பதிலடி கொடுத்த விராட் கோலி
 
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் மொகாலியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஜடேஜா பந்தில் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார்.

அப்போது இந்திய வீரர்கள் சந்தோசத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். அவுட்டான விரக்தியில் பென் ஸ்டோக்ஸ் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டே சென்றார். அதற்கு விராட் கோலி பதிலடி கொடுத்தார். அவர்கள் இருவரும் அப்போது முறைத்துக் கொண்டனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு பென் ஸ்டோக்ஸ் எச்சரிக்கப்பட்டார்.

பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. விராட் கோலி 62 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது சந்தோசத்தை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ் திடீரென வாயை மூடிக் கொண்டார். முதல் இன்னிங்சில் அபராதம் விதிக்கப்பட்டதை கேலி செய்யும் வகையில் அமைதியான முறையில் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அப்படி செய்தார்.
 
1D332F7C-7188-440C-AB23-1E68C1BF1CE6_L_s


இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் விளையாடும்போது பென் ஸ்டோக்ஸ் 5 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். அப்போது விராட் கோலி தனது வலது கை ஆள்காட்டி விரலை வாயில் வைத்து ‘மூச்’ விடக்கூடாது என்ற தோனியில் செய்கை காட்டி அமைதியான முறையில் உணர்வை வெளிப்படுத்துகிறேன் என்று பதிலடி கொடுத்தார். பென் ஸ்டோக்ஸ் பேசாமல் பெவிலியனுக்கு நடையை கட்டினார்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/11/28193133/1053177/Virat-Kohli-comes-up-with-a-silent-celebration-after.vpf

  • தொடங்கியவர்

மொகாலி டெஸ்ட்: வித்தியாசமான பதாதையுடன் அனைவரையும் ஈர்த்த ரசிகர்

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மொகாலி டெஸ்டில் ரசிகர் ஒருவர் பிடித்திருந்த பதாதை அனைவரது பாதையும் ஈர்த்தது.

 
மொகாலி டெஸ்ட்: வித்தியாசமான பதாதையுடன் அனைவரையும் ஈர்த்த ரசிகர்
 
பிரதமர் நரேந்திர மோடி 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். இதனால் பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் பழைய நோட்டுக்களை மாற்றி வருகிறார்கள். இதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. பழைய ரூபாய் நோட்டுக்கள் அடுத்த மாதம் 30-ந்தேதிக்குப் பிறகு செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் மொகாலியில் நடைபெற்று வருகிறது. இன்றைய 3-வது நாள் ஆட்டத்தை ஏராளமான ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு ரசிகர் தன் கையில் உள்ள பதாதையை தூக்கி காண்பித்தார்.

அதில் பவுண்டரி அடித்தால் பழைய 500 ரூபாயும், சிக்ஸ் அடித்தார் பழைய 1000 ரூபாய் நோட்டும் பரிசாக வழங்கப்படும் என்று எழுதியிருந்தார். தற்போதைய இந்தியாவில் நடைபெற்று வரும் சூழ்நியைில் அனைவரது பார்வையையும் ஈர்த்தது.

http://www.maalaimalar.com/News/TopNews/2016/11/28204428/1053189/A-fan-plays-on-demonetisation-to-good-effect-India.vpf

  • தொடங்கியவர்

இங்கிலாந்து ஆல்-அவுட்: இந்திய வெற்றிக்கு 103 ரன்கள் தேவை

 

prv_5f853_1480404202_13370.jpg

மொகாலியில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட்டில் 2-வது இன்னிங்ஸை விளையாடி முடித்துள்ள இங்கிலாந்து, 236 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்தியாவை விட 102 முன்னிலை பெற்றுள்ளது அந்த அணி. ஜோ ரூட் நிலைத்து விளையாடி 78 ரன்கள் அடித்து அவுட் ஆனார். ஹசிப் ஹமீத் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 59 ரன்கள் குவித்தார். அஷ்வின் 3 விக்கெட்டுகளும், ஜடேஜா, ஷமி, யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 103 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கி உள்ளது இந்தியா. தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜய், பார்த்திவ் பட்டேல் விளையாடி வருகின்றனர்.

http://www.vikatan.com/news/sports/73730-england-all-out-for-236-india-needs-103-runs-to-win.art

  • தொடங்கியவர்

மொகாலி டெஸ்ட்: இந்திய அணிக்கு 103 ரன்கள் வெற்றி இலக்கு

மொகாலியில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் இந்திய அணியின் வெற்றிக்கு 103 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து.

 
 
மொகாலி டெஸ்ட்: இந்திய அணிக்கு 103 ரன்கள் வெற்றி இலக்கு
 
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் மொகாலியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 283 ரன்கள் சேர்த்தது. அதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 417 ரன்கள் குவித்தது.

134 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 36 ரன்னுடனும், கரேத் பேட்டி 0 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பேட்டி ரன் ஏதும் எடுக்காமல் ஜடேஜா பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். அடுத்து வந்த பட்லர் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஜயந்த் யாதவ் பந்தில் ஆட்டம் இழந்தார். இங்கிலாந்து அணி இன்று காலை விரைவாக இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது.

7-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் ஹமீத் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. ஜோ ரூட் அரைசதம் கடந்தார். மதிய உணவு இடைவேளைக்கு முன் 78 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஸ்லிப் திசையில் நின்ற ரகானேவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

366B2B15-BC19-4D21-87F4-50AC75DDA11D_L_s

கிறிஸ் வோக்ஸ் 30 ரன்கள் எடுத்து அவுட் ஆக ஹமீத் அரைசதம் அடித்தார். கடைசி விக்கெட்டாக ஆண்டர்சன் 5 ரன்னில் ரன்அவுட் ஆக இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 236 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஹமீத் 59 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

முதல் இன்னிங்சில் 134 ரன்கள் பின்தங்கி இருந்ததால் 2-வது இன்னிங்ஸ் முடிவில் இந்தியாவை விட 102 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது இங்கிலாந்து. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 102 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
 
C2CD71BD-F724-4BB9-822D-D77A8FB6387F_L_s


103 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் பார்தீப் பட்டேல், முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முரளி விஜய் ரன்ஏதும் எடுக்காமல் வோக்ஸ் பந்தில் ஜோ ரூட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

CD6C0026-D1AA-469E-89FF-8CB914B0E6EA_L_s

அடுத்து புஜாரா களம் இறங்கினார். 6 ஓவர் முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்திருக்கும்போது மதிய தேனீர் இடைவேளை விடப்பட்டது. பட்டேல் 16 ரன்னுடனும், புஜாரா 13 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/11/29142555/1053321/Mohali-Test-103-runs-target-to-india-won.vpf

  • தொடங்கியவர்

3-வது டெஸ்டை வென்றது இந்தியா: 2-0 முன்னிலை பெற்றது

 

 
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் பார்த்தீவ் படேல் | படம்: ஏபி
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் பார்த்தீவ் படேல் | படம்: ஏபி
 
 

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மொஹாலியில் நடைபெற்று வந்த 3-வது டெஸ்ட் போட்டியை இந்தியா வென்றுள்ளது. இந்தியா, 103 ரன்கள் என்ற எளிய இலக்கை ஆட்டத்தின் 4-வது நாளான இன்றே 21 ஓவர்களுக்குள் எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

236 ரன்களுக்கு 2-வது இன்னிங்ஸை முடித்த இங்கிலாந்து அணி, ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலையில் பந்துவீச்சைத் தொடங்கியது. குறைந்த இலக்கே இருப்பதால் கண்டிப்பாக விக்கெட் இழப்பின்றி வெற்றி பெறவே இந்தியா விரும்பியிருக்கும். ஆனால் துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய், வோக்ஸ் வீசிய இன்னிங்ஸின் 2-வது ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.

அடுத்து புஜாரா களத்தில் இருக்கும் பார்த்திவ் படேலுடன் இணைந்தார். எதிர்பார்த்ததை விட இந்த இணை வேகமாக ரன் குவிக்க ஆரம்பித்தது. குறிப்பாக படேல் ஓவருக்கு ஒரு பவுண்டரி என விளாசினார்.

சிறப்பாக ஆடிய படேல் 39 பந்துகளில் 1 சிக்ஸர் 8 பவுண்டரிகளுடன் அரை சதம் எட்டினார். ஓவருக்கு சராசரியாக 5 ரன்களுக்கு குறையாமல் வர, வெற்றிக்கு 15 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் புஜாரா 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து கோலி களமிறங்க அடுத்த 2 ஓவர்களில் இந்தியா வெற்றி இலக்கை அடைந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. பார்த்தீவ் படேல் 67 ரன்களுடனும், கோலி 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஷமியின் பவுன்சர்களும் காயத்தை வென்ற ஹமீதும்

முன்னதாக உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 156 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. களத்தில் இருந்த ஹமீது, வோக்ஸ் இணை சுதாரித்து ஆடி ரன் சேர்த்தது. 3 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்திருந்த வோக்ஸ், ஷமி வீசிய ஓவரின் முதல் பந்தை ஹெல்மெட்டில் வாங்கினார். அவருக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று உறுதி செய்யப்பட்டதும் ஆட்டம் தொடர்ந்தது. அடுத்த பந்து மீண்டும் ஷார்ட் பிட்ச் அளவில் வர அதை சமாளிக்கத் முடியாத வோக்ஸ் விக்கெட் கீப்பர் படேலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து ஆட வந்த ரஷீத் முதல் பந்தை லெக் திசையில் அடித்தாலும் ரன் எடுக்கமுடியவில்லை. அடுத்த பந்தை ஷமி மீண்டும் ஷார்ட் பிட்ச் அளவில் வீச ரஷீத் அதை ஃபைன் லெக் பகுதிக்கு தூக்கி அடித்தார். அங்கு நின்று கொண்டிருந்த யாதவ் கைகளுக்கு பந்து சிரமிமின்றி வந்து சேர்ந்தது.

கடைசியாக ஆண்டர்சன் களமிறங்கி சிறுது நேரம் ஹமீதுக்கு இணையாக ஆடினார். ஹமீது, காயம் காரணமாக தாமதமாக களமிறங்கினாலும், மிகச் சிறப்பாக ஆடி 147 பந்துகளில் அரை சதம் கடந்தார். பெரும்பாலும் ஆண்டர்சனை சந்திக்க விடாமல் தானே பல பந்துகளை சந்தித்தார். துரதிர்ஷ்டவசமாக அஸ்வின் ஓவரில் 2 ரன்கள் எடுக்க முற்பட்ட போது ஆண்டர்சன் ரன் அவுட்டாக, இங்கிலாந்து அணி 103 ரன்கள் முன்னிலை பெற்று, 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஹமீத் 59 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 8ஆம் தேதி மும்பையில் தொடங்குகிறது.

http://tamil.thehindu.com/sports/3வது-டெஸ்டை-வென்றது-இந்தியா-20-முன்னிலை-பெற்றது/article9398303.ece?homepage=true

  • தொடங்கியவர்

2012 அணி வேறு, தற்போதைய அணி வேறு: குக் சொல்கிறார்

 

2012-ம் ஆண்டு இந்தியா வந்த இங்கிலாந்து அணி வேறு, தற்போது இந்தியாவில் விளையாடும் அணி வேறு என்று அந்த அணியின் கேப்டன் குக் கூறியுள்ளார்.

 
 
 
 
2012 அணி வேறு, தற்போதைய அணி வேறு: குக் சொல்கிறார்
 
மொகாலியில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் தொடரில் 0-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது. எஞ்சிய இரண்டு டெஸ்டிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றால்தான் தொடரை சமன்செய்ய முடியும். இல்லையெனில் தொடரை இழக்க நேரிடும்.

2012-ம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்த இங்கிலாந்து அணி தொடரை 2-1 எனக்கைப்பற்றியது. இந்தியா அணியில் சச்சின், சேவாக், காம்பீர், ஹர்பஜன் சிங் மற்றும் டோனி போன்ற ஜாம்பவான்கள் இருந்த போதிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

தற்போது அந்த அணி தோல்வியடைந்தது குறித்து குக் கூறுகையில், 2012 அணியில் அனுபவம் வாய்ந்த பழைய வீரர்கள் இருந்தார்கள் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘2012-ல் இந்தியா வந்து விளையாடி எங்கள் அணி முற்றிலும் மாறுபட்டது. அப்போதைய அதிக வயதுடைய அணியுடன் தற்போது ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. அது முற்றிலும் மாறுபட்ட அமைப்பை கொண்ட அணி.

அணியில் இளம் வீரர்கள் இருந்தாலும், நான்கு வருடத்திற்கு மேல் இதுபோன்ற சூழ்நிலையில் விளையாடிய வீரர்கள் இருந்தனர். எங்களுடைய 2012-ம் ஆண்டு அணியில் ஏராளமான அனுபவ வீரர்கள் (குக், இயான் பெல், பீட்டர்சன், மாட் பிரியர், ஆண்டர்சன், ஸ்வான், மோன்டி பெனாசர்) இருந்தார்கள். அவர்கள் இதுபோன்ற சூழ்நிலையிலான ஆடுகளத்தில் ஏராளமான போட்டியில் விளையாடி இருந்தார்கள்.

தற்போதைய அணியில் உள்ள முன்னணி பேட்ஸ்மேன்கள் ஒன்றிரண்டு போட்டிகளில்தான் இதற்கு முன் விளையாடி உள்ளனர். ஆகவே, இந்த அணி பொதுவாகவே முற்றிலும் மாறுபட்டது’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/11/29211931/1053412/In-2012-India-were-old-side-in-2016-we-are-inexperienced.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.