Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா எதிர் இங்கிலாந்து டெஸ்ட் போட்டி தொடர் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

சென்னையில் சொல்லி அடித்த கோலி பாய்ஸ்

 

240502_16097.jpg

சென்னையில், இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் இந்திய 759 ரன்களை குவிக்க, அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 207 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜடேஜா 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இஷாந்த், மிஷ்ரா மற்றும் யாதவ் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் 4-0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 477 ரன்கள் எடுத்தது. அடுத்த களமிறங்கிய இந்திய அணி 759 ரன்கள் குவித்தது. டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அதிகபட்ச ரன் இதுதான். குறிப்பாக ராகுல் 199 ரன்களுடன் இரட்டை சதத்தை தவறவிட, அடுத்த களமிறங்கிய கருண்நாயர் தனது முதல் சதத்தையே முச்சதமாக மாற்றி சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

  • Replies 157
  • Views 8.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இங்கிலாந்தை கலங்கடித்த ஜடேஜா ; இறுதி டெஸ்டிலும் வென்றது இந்தியா

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இறுதி டெஸ்ட் போட்டியிலும் வெற்றிபெற்று இந்திய அணி 4 -0 என டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

C0Hbtg0VIAA5bco.jpg

போட்டி சமநிலையில் முடியும் என்ற நிலையயை மாற்றிய இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும்  75 ஓட்டங்களால் அபாரா வெற்றியினை பெற்றுக்கொண்டுள்ளது.

இந்த  போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 477 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 759 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் 282 ஓட்டங்கள் பின்னடைவிலிருந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி ஜடேஜாவின் பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 207 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

இந்திய அணி சார்பில் ஜடேஜா 7 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இந்த போட்டியின் சிறப்பாட்டக்காரராக கருண் நாயர் தெரிவுசெய்யப்பட்டதுடன், தொடர் ஆட்டநாயகனாக இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவுசெய்யப்பட்டார்.

http://www.virakesari.lk/article/14572

  • தொடங்கியவர்

ஜடேஜா சுழலில் சிக்கி இங்கிலாந்து இன்னிங்ஸ் தோல்வி: இந்திய அணிக்கு 4-0 வெற்றி

 

சென்னை டெஸ்ட்: 7 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஜடேஜா, பென் ஸ்டோக்ஸை வீழ்த்திய போது. | படம்.| ஏ.பி.
சென்னை டெஸ்ட்: 7 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஜடேஜா, பென் ஸ்டோக்ஸை வீழ்த்திய போது. | படம்.| ஏ.பி.
 
 

சென்னை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தன் 2-வது இன்னிங்ஸில் 5-ம் நாளான இன்று 207 ரன்களுக்குச் சுருண்டு இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது, இதன் மூலம் இந்திய அணி இங்கிலாந்தை 4-0 என்று வீழ்த்தியுள்ளது.

103/0 என்ற நிலையிலிருந்து அடுத்த 49 ஓவர்களில் மேலும் 104 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தது; அதிலும் குறிப்பாக 192/4 என்ற நிலையிலிருந்து அடுத்த 15 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் என்பது கிரிக்கெட்டை கண்டுபிடித்ததாக கூறிக்கொள்ளும் ஒரு நாட்டின் அணிக்கு நிச்சயம் உகந்ததல்ல. ஜடேஜா இங்கிலாந்து பேட்டிங்கை சீட்டுக்கட்டாக சரித்தார்.

குக், ஜெனிங்ஸிற்குப் பிறகு இங்கிலாந்து பேட்ஸ்மென்களின் ஷாட் தேர்வு மோசமாக அமைந்ததும் ஒரு காரணம், பிட்சில் பெரிய பூதம் ஒன்றுமில்லை. 4-ம் நாள் ஆட்டத்தில் கருண் நாயர் ஒருவரே 303 ரன்கள் அடித்திருக்கும் போது, 5-ம் நாளில் 104 ரன்களில் 10 விக்கெட்டுகளை இழப்பது இங்கிலாந்து போன்ற அணி துணைக்கண்டத்தில் ஆடுவதை எவ்வளவு விரயமாக கருதுகின்றனர் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

ரவீந்திர ஜடேஜா 25 ஓவர்கள் வீசி 5 மெய்டன்களுடன் 48 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இது ஜடேஜாவின் மிகச்சிறந்த பந்து வீச்சாகும். அமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ், இசாந்த் சர்மா தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்த, 2 விக்கெட்டுகள் வீழ்த்தினால் அதிவிரைவு 250 விக்கெட்டுகள் என்ற சாதனையை நிகழ்த்த வாய்ப்பிருந்த அஸ்வினுக்கு இந்த டெஸ்ட் போட்டியில் 69 ஓவர்கள் வீசியும் 1 விக்கெட்தான் கிடைத்தது. இங்கிலாந்து அஸ்வினை இந்த போட்டியில் சிறப்பாக ஆடியுள்ளது என்றே தெரிகிறது.

12/0 என்று தொடங்கிய இங்கிலாந்து தொடக்க வீரர்கள் அலஸ்டைர் குக், ஜெனிங்ஸ் உணவு இடைவேளை வரை அனைத்து அழுத்தங்களையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு 97/0 என்று முடித்தனர்.

உணவு இடைவேளையின் போது 47 ரன்களில் இருந்த அலஸ்டைர் குக், 49 ரன்கள் எடுத்து ஜடேஜாவிடம் இந்தத் தொடரில் 6-வது முறையாக வீழ்ந்தார். இம்முறை ஜடேஜாவின் வழக்கமான பந்தை லெக்ஸ்லிப்பில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஜெனிங்ஸ் மீண்டும் ஒரு அருமையான இன்னிங்சை ஆடி 121 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்து ஜடேஜாவின் கட்டுக்கோப்பை சிதைக்கும் நோக்கத்துடன் இறங்கி வந்து அடித்து அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்தின் முக்கிய வீரர் ஜோ ரூட் 22 பந்துகள் ஆடி பவுண்டரி இல்லாமல் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜாவிடம் எல்.பி.ஆனார். இந்த ஷாட் தேர்வும் மோசமானதே அதுவும் 2 விக்கெட்டுகள் விழுந்த சமயத்தில் ஜடேஜாவின் ஃபுல் பந்தை ஸ்வீப் ஆட முயன்று கால்காப்பில் வாங்கினார், நடுவர் நாட் அவுட் என்றார், கோலி வெற்றிகரமாக ரிவியூ செய்தார்.

கோலி கேப்டன்சியும் அருமையாக அமைந்தது. ரிவர்ஸ் ஸ்விங்கை எதிர்பார்த்து இசாந்த் சர்மாவுக்கு ஒரு சில ஓவர்களை அவர் கொடுக்க, இங்கிலாந்தின் இந்த தொடர் சிறந்த வீரர் ஜானி பேர்ஸ்டோவை அவர் அடுத்ததாக வீழ்த்தினார். இந்த ஷாட்டும் தேவையில்லாத ஒரு ஷாட்தான், காற்றில் பிளிக் அடித்தார் லெக் திசையில் ஜடேஜா அருமையாக ஓடிப்பிடித்தார், பார்ப்பதற்கு எளிமையான கேட்சாக இருந்தாலும் கடினமான கேட்ச் ஒன்றை பிடித்தார் ஜடேஜா.

மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ் இணைந்து தேநீர் இடைவேளை வரை மேலும் விக்கெட்டுகள் சரியாமல் 167/4 என்று கொண்டு சென்றனர்.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு முதலில் மொயின் அலி 44 ரன்களில் மிக மோசமாக ஜடேஜா பந்தை ஸ்லாக் செய்து அஸ்வினிடம் மிட் ஆனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 23 ரன்கள் எடுத்த ஸ்டோக்ஸ் அடுத்ததாக ஜடேஜா பந்தை நேராக மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

டாசனை கூக்ளியில் அமித் மிஸ்ரா பவுல்டு செய்தார். அடில் ரஷீத் 2 ரன்களில் உமேஷ் யாதவ் பந்தை லெக் திசையில் அடிக்க நினைத்தார் பந்து வெளி விளிம்பில் பட்டு பாயிண்டில் கேட்ச் ஆனது. அதன் பிறகு பிராட், பட்லர் 7 ஓவர்களை ஓட்டினர். இந்நிலையில் இன்னிங்ஸில் 88வது ஓவரை வீச வந்த ஜடேஜா, ஒரே ஓவரில் பிராட் (1), பால் (0) ஆகியோரை வீழ்த்த பட்லர் 50 பந்துகள் தீரத்துடன் போராடி 6 ரன்களுடன் நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இங்கிலாந்து 88 ஓவர்களில் 207 ரன்களுக்குச் சுருண்டு இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்களில் படுதோல்வி கண்டு தொடரை 4-0 என்று இழந்தது.

தொடரில் 2-வது முறையாக இங்கிலாந்து 400 ரன்களுக்கும் மேல் எடுத்த நிலையிலும் விராட் கோலி படையினர் வெற்றியை ஈட்ட முடிந்துள்ளது. சென்னையில் கே.எல்.ராகுலின் 199 ரன்களும், கருண் நாயரின் சற்றும் எதிர்பாராத முச்சதமும் 282 ரன்கள் முன்னிலையைப் பெற்றுத்தர வெற்றி சாத்தியமாகியுள்ளது.

இங்கிலாந்து துணைக்கண்டங்களில் நன்றாக ஆடுவதற்கான மன நிலையை வளர்த்துக் கொள்வது நல்லது. தோல்வியோ, டிராவோ இந்தியாவை விட்டு உடனே இங்கிலாந்து சென்று விட வேண்டும் என்ற மனநிலை அவர்களது பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் தெரிந்தது, பீல்டிங்கும் கை கொடுக்கவில்லை. இங்கிலாந்து நிச்சயம் தவற விட்ட வாய்ப்புகளை நினைத்து நினைத்து வருத்தமடையக் கூடும்.

இந்த ஆண்டில் 8-வது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து இழந்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 477 ரன்கள் குவித்து விட்டு இன்னிங்ஸ் தோல்வி அடைவது (மிகப்பெரிய இன்னிங்ஸ் தோல்வி) நிச்சயம் இங்கிலாந்து தனது ஒட்டுமொத்த கிரிக்கெட் உருவாக்கத்தையே தீவிர சுய பரிசோதனைக்கு உட்படுத்துவதன் தேவையை உருவாக்கியுள்ளது.

ஆட்ட நாயகன்: முச்சத நாயகன் கருண் நாயர்.

தொடர் நாயகன்: விராட் கோலி

http://tamil.thehindu.com/sports/ஜடேஜா-சுழலில்-சிக்கி-இங்கிலாந்து-இன்னிங்ஸ்-தோல்வி-இந்திய-அணிக்கு-40-வெற்றி/article9436284.ece?homepage=true

  • தொடங்கியவர்

இங்கிலாந்து அணிக்கு முழுநேர சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் அவசியம் ; குக்

 

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு முழுநேர சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை கவனம் செலுத்த வேண்டும் என இங்கிலாந்து அணியின் டெஸ்ட் தலைவர் அலஸ்ரியா குக் தெரிவித்துள்ளார்.

256454.jpg

இந்திய அணியுடன் பெற்ற டெஸ்ட் தோல்வியினையடுத்து ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் தற்காலிக சுழற்பந்துவீச்சு ஆலோசகராக கடமையாற்றும் முன்னாள் பாகிஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சாளர் சக்லைன் முஸ்தாக் அணிக்குள் அழைக்கப்பட்டதற்கு பிறகு இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மொஹின் அலி மற்றும் அடில் ரஷாக் ஆகியோரின் பந்துவீச்சில் முன்னேற்றங்கள ஏற்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் இங்கிலாந்து அணிக்கு முழுநேர சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் ஒருவர் அழைக்கப்பட்டிருக்கவில்லை.

இந்திய மண்ணில் இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர்கள் நடந்து முடிந்த ஐந்து டெஸ்ட் போட்டிகளில் 48.10 என்ற சராசரியுடன் 40 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

இதனால் சுழற்பந்துவீச்சை வலுப்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்டுள்ளது. எனவே முழுநேர சுழற்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் ஒருவரை இங்கிலாந்து அணிக்கு தெரிவுசெய்வது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/14585

  • தொடங்கியவர்

கேட்ச்களை தவற விட்டது பெரிய இழப்பை ஏற்படுத்தி விட்டது: அலஸ்டைர் குக்

முக்கிய வாய்ப்புகளையும், கேட்ச்களையும் கோட்டை விட்டதே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது என்று குக் கூறியுள்ளார்.

 
கேட்ச்களை தவற விட்டது பெரிய இழப்பை ஏற்படுத்தி விட்டது: அலஸ்டைர் குக்
 
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் இன்றுடன் முடிவடைந்தது. இதில் இந்தியா 4-0 எனத் தொடரை கைப்பற்றியுள்ளது.

சென்னையில் இன்று நடைபெற்ற கடைசி டெஸ்ட் டிராவில்தான் முடியும் என அனைவரும் எதிர்பார்த்தனர். அதற்கேற்பதான் இங்கிலாந்து அணியின் பேட்டிங்கும் இருந்தது. ஆனால் ஜடேஜா அவர்களின் கனவை தகர்த்து விட்டார். 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அவர்களை இன்னிங்ஸ் தோல்வி அடைய வைத்துவிட்டார்.

தொடரை இழந்தது குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் அலஸ்டைர் குக் கூறுகையில் ‘‘எந்த சாக்குபோக்கும் சொல்வதற்கில்லை. இந்தியா மிகவும் சிறந்த அணி. இந்த தொடரின் வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள். இன்றைய ஐந்தாவது நாள் ஆடுகளம் பந்து அதிக அளவில் டர்ன் ஆகும் நிலைக்கு மாறியது. மதிய உணவு இடைவேளை நாங்கள் நல்ல நிலையில் இருந்தது.

ஆனால், அது போட்டியை டிராவிற்கு கொண்டு செல்லும் அளவிற்கு கொணடு செல்ல முடியவில்லை. நாங்கள் முக்கியமான பல வாய்ப்புகளை வீணடித்தோம். இதனால் எங்களை இந்திய வீரர்கள் தண்டித்து விட்டார்கள். இதனால் அவர்களை வேகத்தை கட்டுப்படுத்துவது கடினமாகிவிட்டது.

அனைத்து பெருமையும் விராட் கோலிக்கே. அவர்கள் எங்களை போட்டியில் இருந்தே வெளியேற்றி விட்டனர். பல கேட்ச்களையும், முக்கியமான வாய்ப்புகளையும் தவற விட்டது எங்களை தொடரை இழக்கும் நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது. போதுமான அளவிற்கு ரன்களும் அடிக்கவில்லை. விக்கெட்டுக்களையும் வீழ்த்த முடியவில்லை’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/20202335/1057278/We-dropped-vital-chances-and-India-have-been-punishing.vpf

  • தொடங்கியவர்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் ரவீந்திர ஜடேஜாவின் சாதனைகள்

இந்திய கிரிக்கெட் அணி சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா செய்த சாதனைகளை பார்க்கலாம்.

 
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் ரவீந்திர ஜடேஜாவின் சாதனைகள்
 
சென்னை :

இந்த ஆண்டை தித்திப்போடு முடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அமர்க்களப்படுத்தியது.

இந்த போட்டியில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா, இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அடுத்தடுத்து ‘செக்’ வைத்தார். ஸ்கோர் 103 ரன்களாக உயர்ந்த போது, அலஸ்டயர் குக் (49 ரன், 134 பந்து, 4 பவுண்டரி) லெக்ஸ்லிப்பில் நின்ற ராகுலிடம் கேட்ச் ஆனார். ஜடேஜாவின் சுழல் வலையில் குக் சிக்குவது இது 6-வது முறையாகும்.

ஜென்னிங்ஸ் (54 ரன், 121 பந்து, 7 பவுண்டரி) ஜடேஜாவின் பந்தில் இறங்கி வந்து ஆட முற்பட்ட போது விக்கெட்டை தாரைவார்த்தார். பந்து அவரது காலின் அடிப்பகுதியில் உரசிய பிறகு பேட்டில் பட்டு நேராக பவுலிங் செய்த ஜடேஜாவின் கைக்கு கேட்ச்சாக சென்றது. அவரும் அதை எளிதாக கேட்ச் செய்தார்.

அடுத்து வந்த அபாயகரமான பேட்ஸ்மேன் ஜோ ரூட்டையும் (6 ரன், 22 பந்து) ஜடேஜா காலி செய்தார். முதலில் நடுவர் எல்.பி.டபிள்யூ. வழங்க மறுக்க, பிறகு டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின்படி அப்பீல் செய்து அவரை வெளியேற்றினர்.

பவுலிங்கில் கலக்கிய ஜடேஜா, பீல்டிங்கிலும் பிரமிக்க வைத்தார். நட்சத்திர வீரர் பேர்ஸ்டோ (1 ரன்) லெக்சைடில் தூக்கியடித்த போது, ஜடேஜா எல்லைக்கோடு நோக்கி முன்பக்கமாக ஓடிச்சென்று கேட்ச் செய்த விதம் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. மறுபக்கம் போராடிய மொயீன் அலி 44 ரன்களில் (97 பந்து) கேட்ச் ஆனதும், ஆட்டம் முழுமையாக இந்தியா பக்கம் திரும்பியது.

* சென்னை டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 477 ரன்கள் குவித்தது. முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் திரட்டி, அதன் பிறகு மோசமான இன்னிங்ஸ் தோல்வியை (இன்னிங்ஸ் மற்றும் 75 ரன் வித்தியாசம்) சந்தித்த வகையில் முதலிடம் இங்கிலாந்துக்கு தான். இதற்கு முன்பும் இதே மோசமான அனுபவம் இங்கிலாந்துக்கு தான் உண்டு. 2001-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 432 ரன்கள் சேர்த்து, இறுதியில் இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று இருந்தது.

* டெஸ்ட் தொடரை இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வெல்வது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2013-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுடன் 4-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இருந்தது.

* ஒரு டெஸ்டில் அரைசதம் (51 ரன்), 10-க்கும் மேல் விக்கெட் (முதல் இன்னங்சில் 3 விக்கெட், 2-வது இன்னிங்சில் 7 விக்கெட்), 4 மற்றும் அதற்கு மேல் கேட்ச் (4 கேட்ச்) இப்படியொரு சாதனையை ஒரு சேர செய்த முதல் வீரர் என்ற மகத்தான சாதனைக்கு ரவீந்திர ஜடேஜா சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.

*இங்கிலாந்து அணிக்காக அதிக டெஸ்டுகளில் கேப்டனாக பணியாற்றியவர் என்ற சிறப்புக்குரிய அலஸ்டயர் குக் இப்போது அதிக டெஸ்டுகளில் தோற்ற கேப்டனாகவும் மாறி விட்டார். குக் தலைமையில் இங்கிலாந்து அணி 59 டெஸ்டுகளில் விளையாடி 24 வெற்றி, 22 தோல்வி, 13 டிரா கண்டுள்ளது. இதற்கு முன்பு மைக் ஆதர்டன் தலைமையில் 21 டெஸ்டுகளில் தோற்றதே இங்கிலாந்து கேப்டன் ஒருவரின் மோசமான சாதனையாக இருந்தது.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/21085808/1057310/Ravindra-Jadeja-achievements-in-the-last-Test-against.vpf

  • தொடங்கியவர்

ஜடேஜாவின் டபுள் தமாக்கா!

 

jadeja-sword-flashing_16282.jpg

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட, ரவீந்திர ஜடேஜா தற்போது டபுள் சந்தோசத்தில் இருக்கிறார். ஒருபுறம் டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கும், மறுபுறம் டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் மூன்றாவது இடத்துக்கும் முன்னேறியுள்ளார் ஜடேஜா.

ஜடேஜாவின் கேரியரில் இரண்டிலுமே சிறந்தநிலை இதுதான். டெஸ்ட் பவுலிங் மற்றும் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் அஸ்வின் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். அதேபோல் முச்சதம் அடித்த கருண்நாயர் 122 இடங்கள் முன்னேறி 55-வது இடத்துக்கும், 199 ரன்கள் எடுத்த ராகுல் 29 இடங்கள் முன்னேறி 51-வது இடத்தில் உள்ளார். 

http://www.vikatan.com/news/sports/75559-jadeja-career-best-in-test-rankings.art

  • தொடங்கியவர்

கோலியின் எழுச்சிபூர்வமான தலைமைத்துவமே வெற்றிக்குக் காரணம்: ஜெயசூரியா பாராட்டு

 
சனத் ஜெயசூரியா. | கோப்புப் படம்: விவி. கிருஷ்ணன்.
சனத் ஜெயசூரியா. | கோப்புப் படம்: விவி. கிருஷ்ணன்.
 
 

விராட் கோலியின் எழுச்சிபூர்வமான கேப்டன்சியினால் இந்தியா, இங்கிலாந்தை வீழ்த்தியது என்று முன்னாள் இலங்கை அதிரடி வீரர் சனத் ஜெயசூரியா பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயசூரியா கூறும்போது, “டீம் இந்தியா நல்ல நிலையில் உள்ளது. வலுவான இங்கிலாந்து அணியைக் கூட எளிதாக வீழ்த்த முடிகிறது.

சிறந்த கேப்டனான கோலி தனது பவுலர்களை அருமையாகப் பயன்படுத்துகிறார், அவரே அருமையாக பேட் செய்து முன்னுதாரணமாக திகழ்கிறார்.

கருண் நாயர் முச்சதம் அடித்திருப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இத்தகைய மைல்கல்லை எட்டுவதற்கு பெரிய அளவில் பொறுமை மனோபாவம் தேவை. உள்நாட்டு கிரிக்கெட்டில் அயராது ரன்களை இவர் குவித்துள்ளதால் தற்போது அவரால் 303 ரன்கள் என்று கிரிக்கெட் உலகைப் பரபரப்புக்குள்ளாக்கியுள்ளார். இவருக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது.

கும்ப்ளே தனது பயிற்சிக் காலக்கட்டத்தை இப்போதுதான் தொடங்கியுள்ளார், அவர் விளையாடும் போது ஆதிக்கவாத பவுலராக திகழ்ந்தார். எனவே பயிற்சியாளராகவும் அவர் பெரிய வெற்றி பெறுவார்.

http://tamil.thehindu.com/sports/கோலியின்-எழுச்சிபூர்வமான-தலைமைத்துவமே-வெற்றிக்குக்-காரணம்-ஜெயசூரியா-பாராட்டு/article9440695.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.