Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்ரேலியா-தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டி செய்திகள்

Featured Replies

அவுஸ்ரேலியா-தென்ஆப்பிரிக்கா முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பம்

aus-vs-south-af

தென்ஆப்பிரிக்கா- அவுஸ்ரேலியாவுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி உலகின் அதிவேக ஆடுகளம் என்று வர்ணிக்கப்படும் பேர்த்தில் நாளை வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.  அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. காயம் காரணமாக  டிவில்லியர்ஸ் ஓய்வு எடுப்பதன் காரணமாக  தென்ஆப்பிரிக்க அணியை பாப் டு பிளிஸ்சிஸ் வழிநடத்துகிறார்.

தென்ஆப்பிரிக்க அணி அவுஸ்ரேலியாவில் டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருப்பது இது 11-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஐ.சி.சி. டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் அவுஸ்ரேலியா 108 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும்ம், தென்ஆப்பிரிக்கா 96 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன.  அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றால் 112 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/archives/5609

  • தொடங்கியவர்

அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் தொடங்குகிறது

 

 

அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் தொடங்குகிறது

அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை (03) பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது.

அண்மையில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலியாவை 5-0 என்று தோற்கடித்தது தென் ஆப்பிரிக்கா. இந்நிலையில், அவுஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது.

2014 ஆம் ஆண்டு இரு அணிகளும் மோதிய போது ரியான் ஹாரிஸ், மிட்செல் ஜான்சன் ஆகியோர் அபாரமாக பந்து வீசி கேப்டவுனில் தொடரை வென்றனர்.

இதனால், தென் ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் முதலிடத்தைப் பறித்தது அவுஸ்திரேலியா.

ஆனால், இப்போது டெஸ்ட் தரவரிசையில் அவுஸ்திரேலியா 3 ஆம் இடத்திலும் தென் ஆப்பிரிக்கா 5 ஆம் இடத்திலும் உள்ளன.
தென் ஆப்பிரிக்கா தனது கடைசி 12 டெஸ்ட் போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.

தற்போது அந்த அணியின் தலைவரும் அபாரமான துடுப்பாட்ட வீரருமான ஏ.பி.டி வில்லியர்ஸ் தொடர்ச்சியான காயங்கள் காரணமாக ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

2012 இல் தென் ஆப்பிரிக்காவிடம் அவுஸ்திரேலியா உள்நாட்டில் டெஸ்ட் தொடரை இழந்த பிறகு உள்நாட்டில் தொடரை இழக்கவில்லை.

தென் ஆப்பிரிக்கா பெர்த்தில் இடம்பெற்ற 3 டெஸ்ட் போட்டிகளில் இரண்டில் வென்று ஒன்றில் சமன் செய்துள்ளது.

அவுஸ்திரேலிய அணி பெர்த்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியதில்லை.

http://newsfirst.lk/tamil/2016/11/அவுஸ்திரேலியா-தென்-ஆப்ப/

  • தொடங்கியவர்

ஸ்டார்க் பந்து வீச்சு, வார்னர் அதிரடியில் சிக்கி தென் ஆப்பிரிக்கா திணறல்

 

 
 
 
  • தென் ஆப்பிரிக்காவை சுருட்டிய மகிழ்ச்சியில் பெவிலியன் திரும்பும் ஆஸ்திரேலிய் அணி. | படம்: ஏ.எஃப்.பி.
    தென் ஆப்பிரிக்காவை சுருட்டிய மகிழ்ச்சியில் பெவிலியன் திரும்பும் ஆஸ்திரேலிய் அணி. | படம்: ஏ.எஃப்.பி.
  • ஸ்டெய்ன் பவுன்சரை தேர்ட்மேனில் சிக்ஸ் அடித்த வார்னர் கீழே மல்லாந்த காட்சி. | படம்: ஏ.பி.
    ஸ்டெய்ன் பவுன்சரை தேர்ட்மேனில் சிக்ஸ் அடித்த வார்னர் கீழே மல்லாந்த காட்சி. | படம்: ஏ.பி.

பெர்த்தில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிகா 242 ரன்களுக்குச் சுருள, ஆஸ்திரேலியா டேவிட் வார்னரின் அதிரடி 73 ரன்களுடன் விக்கெட் இழப்பின்றி 105 ரன்கள் எடுத்துள்ளது.

கடந்த முறை போன்ற தார்ச்சாலை பிட்ச் ஆக இல்லாமல் ஒரளவுக்கு முதல் 2 மணிநேரம் பெர்த் பிட்ச் பவுன்ஸ், வேகம் நிரம்பியதாக இருந்தது. புதிய பந்தை ஆடுவது கடினமாக இருந்தது. டாஸ், பவுமா, குவிண்டன் டி காக் தவிர தென் ஆப்பிரிக்காவுக்கு எதுவும் சரியாக அமையவில்லை. ஆனால் 32/4 என்ற நிலையிலிருந்து மீண்டு 242 ரன்களுக்கு வந்தது பெரிய விஷயம்தான், 2012 தொடரில் பெர்த்தில் முதல் இன்னிங்சில் 225 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி டெஸ்ட்டை வென்றது தென் ஆப்பிரிக்கா, ஆனால் இம்முறை தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சு சரிப்படவில்லை, குறிப்பாக டேல் ஸ்டெய்ன் ஆஸ்திரேலியர்களுக்கு ஷார்ட் பிட்ச் பந்தை வீசக்கூடாது என்ற அடிப்படையைக் கடைபிடிக்காமல் வார்னருக்கு சில பவுண்டரிகளை வாரி வழங்கினார்.

டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார் டு பிளெசிஸ், இது எதிர்மறையாக முடியும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை, காயத்திலிருந்து மீண்டு வந்த மிட்செல் ஸ்டார்க் முதல் ஓவரிலேயே குக் விக்கெட்டை வீழ்த்தினார். குக் தேவையில்லாமல் எம்பி, ஸ்கொயர் ஆகி எட்ஜைக் காட்டினார், ஆனால் அதனை கல்லியில் மிட்செல் மார்ஷ் அபாரமாக எம்பிப் பிடித்தார், ஒரு டெஸ்ட் போட்டிக்கான அற்புதமான தொடக்கமாக இது அமைந்தது.

இது கூட இழப்பாகத் தெரியாவிட்டாலும், ஹஷிம் ஆம்லா ரன் எடுக்காமல் ஜோஷ் ஹேசில்வுட்டின் அருமையான துல்லியமான ஸ்விங்க்கிற்கு எட்ஜ் ஆகி வெளியேறியதில் தென் ஆப்பிரிக்கா வெலவெலத்துப் போனது. அதே போல் டீன் எல்கர் (12) ஹேசில்வுட்டின் அருமையான லெந்த் பந்தை ஆடாமல் விட மட்டையை எடுப்பதற்குள் அது மட்டையின் உள்விளிம்பில் பட்டு கேட்ச் ஆனது, எட்ஜ் ரன்னருக்கே கேட்டதால் ரிவியூ செய்யவில்லை.

டுமினி 11 ரன்களுக்கு தடவாமல் ஆடினார், ஆனால் பீட்டர் சிடில் ஒரு பந்தை அருமையாக லெந்தில் வீசி வெளியே எடுக்க கால்களை சரியாக நகர்த்த முடியாத நிச்சயமின்மையில் மட்டையை தொங்க விட பந்து உள்விளிம்பில் பட்டு கேட்ச் ஆனது. டுபிளெசிஸ், பவுமா மேலும் சேதமாகாமல் உணவு இடைவேளை வரை ஆடினர்.

உணவு இடைவேளை முடிந்து 37 ரன்களில் இருந்த டுபிளெசிஸ் ஸ்டார்க் பந்தை ஸ்லிப்பில் ஆடம் வோஜசிடம் எட்ஜ் செய்து கேட்ச் கொடுத்து வெளியேறினார். 81/5 என்ற நிலையில் 120 ரன்கள் வருமா என்ற ஐயம் எழுந்தது.

‘ஸ்டைலிஷ்’ தெம்பா பவுமா நிதானம், டி காக் அதிரடி:

தென் ஆப்பிரிக்க அணியில் உயரம் குறைவான தெம்பா பவுமா உண்மையில் ஒரு கிளாசிக் டெஸ்ட் பேட்ஸ்மென் என்றே கூற வேண்டும். மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது என்பது போல் அருமையான, துல்லியமான கால்நகர்த்தல், கச்சிதமான பேக் லிப்ட், சாதுரியமான ஷார்ட் தேர்வு என்று அசத்துகிறார் பவுமா. இவரிடம் உள்ள சிறப்புத் தன்மை நம் ஜி.ஆர்.விஸ்வநாத்தை மீண்டும் கண் முன் நிறுத்தும் ஒரு ஸ்டைலிஷ் பேட்டிங்.

இவர் ஸ்டார்க்கை மிட்விக்கெட் பிளிக் பவுண்டரி மூலம் தொடங்கினார். பிறகு மிட்செல் மார்ஷை ஒரு அருமையான கவர் டிரைவ், அடுத்த பந்தே மிட்விக்கெட்டில் ஒரு புல் பிறகு ஹேசில்வுட்டை அடித்த அற்புத கவர் டிரைவ் என்று ஆஸ்திரேலிய வர்ணனையாளர்களே அசந்து போகும் அளவுக்கு ஆடினார். கடைசியில் லயன் பந்தை மேலேறி வந்து அருமையாக கவர் திசையில் பவுண்டரி அடித்து 51 ரன்களை எட்டினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அடுத்த பந்து லெக் திசையில் ஸ்பின் ஆக பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு பேடில் பட்டு ஷார்ட் லெக்கில் ஷான் மார்ஷின் அருமையான டைவிங் கேட்சாக முடிந்தது.

பவுமா, டி காக் இணைந்து 6-வது விக்கெட்டுக்காக 71 ரன்களைச் சேர்த்தனர். குவிண்டன் டி காக் தொடக்கம் முதலே அடிக்க வேண்டிய பந்துகளை அடித்து நொறுக்கினார், இடையில் ஹேசில்வுட் ரிவர்ஸ் ஸ்விங் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ரவுண்ட் த விக்கெட் தொடர் பவுன்சர்கள் என்ற சோதனைகளை திறம்பட கடந்து 101 பந்துகளில் 11 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 84 ரன்கள் எடுத்து ஹேசில்வுட் பந்தை ஷான் மார்ஷிடம் புல் ஆடி கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ரபாதா 11 நாட் அவுட், பிலாண்டரையும், ஸ்டெயினையும் ஸ்டார்க் பவுல்டு செய்தார். தென் ஆப்பிரிக்கா 63.4 ஒவர்களில் 242 ஆல் அவுட்.

ஸ்டார்க் 71 ரன்களுக்க்கு 4 விக்கெட்டுகளையும், ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளையும் லயன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

வார்னர் அதிரடியும், பிலாண்டர் நோ-பாலும்:

ஆஸ்திரேலியா இன்னிங்ஸை தொடங்கிய போது டேல் ஸ்டெய்ன் மணிக்கு 140 கிமீ வேகத்தில் சராசரியாக வீசினார், ஒரு சமயத்தில் 150 கிமீ வேகத்தையும் தொட்டார். ஆனால் தென் ஆப்பிரிக்காவின் துரதிர்ஷ்டம் என்னவெனில் 17 ரன்களில் வார்னர் இருந்த போது பிலாண்டர் பந்தில் கால்காப்பில் வாங்க நேர் பிளம்ப் எல்.பி. அது, ஆனால் அலீம் தார் அதனை நாட் அவுட் என்றார், டு பிளெசிஸ் ரிவியூ செய்தார் ரிவியூவில் பிலாண்டர் நோ-பால் வீசியது தெரியவர வார்னர் பிழைத்தார். நோ-பால் இல்லையெனில் வார்னர் அம்பேல்! ஆனால் என்ன அதிர்ஷ்டம்! அவரது பெர்த் ஃபார்ம் தொடர்ந்தது.

முதலில் பிலாண்டரை பேக்ஃபுட் பஞ்ச் கவர் பவுண்டரியுடன் தொடங்கினார் வார்னர். அதன் பிறகு பிலாண்டர் ஒரு ஓவரில் 3 பந்துகளை ஷார்ட் பிட்சும் ஓவர் பிட்சுமாக வீச மூன்றையும் பவுண்டரி அடித்தார் வார்னர்.

பிறகு ஸ்டெய்ன் சிக்கினார், முதலில் அவரை புல் ஷாட்டில் பவுண்டரி அடித்த வார்னர், ஷார்ட் பிட்ச் பந்தை ஆஃப் திசையில் இன்னொரு 4 விளாசினார். பிறகு ரபாதாவும் ஷார்ட் பிட்ச் வீச பவுண்டரி விளாசினார்.

இந்நிலையில் ஸ்டெய்ன் வீசிய இன்னிங்ஸின் 11-வது ஓவரில் ஷார்ட் பிட்ச் பந்தை ஒதுங்கிக் கொண்டு சச்சின் போல் தேர்ட்மேன் திசையில் அடிக்க பந்து சிக்ஸ் ஆனது ஆனால் வார்னர் நிலை தடுமாறி மல்லாந்து விழுந்தார். அடுத்த பந்து மீண்டும் ஆஃப் திசையில் பவுண்டரி 39வது பந்தில் ரபாதாவை எக்ஸ்ட்ரா கவரில் பவுண்டரி விளாசி அரைசதம் கடந்தார் வார்னர். கடைசியில் இடது கை ஸ்பின்னர் மஹராஜ் வீசிய ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசினார் வார்னர். ஆட்ட முடிவில் வார்னர் 62 பந்துகளில் 13 பவுண்டரி 1 சிக்சருடன் 73 ரன்கள் எடுத்தும் உறுதுணையாக ஆடிய ஷான் மார்ஷ் 29 ரன்களுடனும் உள்ளனர்.

டேல் ஸ்டெய்ன் 6 ஓவர்களில் 2 மெய்டன்களுடன் 34 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

http://tamil.thehindu.com/sports/ஸ்டார்க்-பந்து-வீச்சு-வார்னர்-அதிரடியில்-சிக்கி-தென்-ஆப்பிரிக்கா-திணறல்/article9300556.ece

  • தொடங்கியவர்

டெல் ஸ்டெய்ன் உபாதையினால் பாதிப்பு

dale-steyn-south-africa

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
தென் ஆபிரிக்காவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டெல் ஸ்டெய்ன் உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார். டெல் ஸ்டெய்னின் வலது தோள்பட்டையில் உபாதை ஏற்பட்டுள்ளது. இதனால் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியின் இடை நடுவிலேயே ஸ்டெய்ன் மைதானத்தை விட்டு வெளியேற நேரிட்டது.

மிகச் சிறந்த முறையில் பந்து வீசிக்கொண்டிருந்த போது அவர் இவ்வாறு உபாதைக்கு உள்ளாகியிருந்தார். உபாதையின் தன்மை மற்றும் எவ்வளவு காலம் ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

http://globaltamilnews.net/archives/5872

  • தொடங்கியவர்

சதத்திற்கு அருகில் வந்து அவுட் ஆனதில்லை என்று வர்ணனையாளர் கூறியவுடன் அவுட் ஆன வார்னர்: பெர்த்தில் ருசிகரம்

 

 
சதம் எடுக்காமல் 97-ல் அவுட் ஆன வார்னர் வெறுப்பில் வெளியேறுகிறார் அருகில் டேல் ஸ்டெய்ன். | படம்: ஏ.பி.
சதம் எடுக்காமல் 97-ல் அவுட் ஆன வார்னர் வெறுப்பில் வெளியேறுகிறார் அருகில் டேல் ஸ்டெய்ன். | படம்: ஏ.பி.

பெர்த் டெஸ்ட் போட்டியில் அதிரடியாக ஆடி 97 ரன்களில் வார்னர் ஆட்டமிழந்த தருணத்தில் வர்ணனையாளர் அறையில் சுவையான சம்பவம் ஒன்று நடந்தது.

முதல் நாள் ஆட்டத்தில் 62 பந்துகளில் 75 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இன்று களமிறங்கிய வார்னர் மேலும் வலுவாகச் சென்று 97 ரன்களில் ஆட்டமிழந்தார்.

வார்னரும், ஷான் மார்ஷும் தங்கள் போக்கிற்கு பவுண்டரிகளை அடித்து கொண்டிருந்த போது வர்ணனை அறையில் டேவிட் வார்னரின் பேட்டிங் குறித்து மார்க் நிகோலஸ், ஷேன் வார்ன் புகழாரத்தில் இறங்கினர்.

பெர்த்தில் டேவிட் வார்னரின் சராசரி 95 ரன்கள் என்பது பற்றியும் அவரது சதங்கள் பற்றியும் விதந்தோதி வந்தனர். அப்போது வார்னர் 97 ரன்களுக்கு வந்தார்.

அப்போது மார்க் நிகோலஸ், டேவிட் வார்னர் நிச்சயம் 100 அடித்து விடுவார், அவர் ஆடும் விதத்தைப் பார்த்தால் சதத்தையும் தாண்டிச் செல்வார் என்று கூறியதோடு நிற்காமல் டேவிட் வார்னர் டெஸ்ட் போட்டிகளில் சதத்திற்கு அருகில் வந்து சதமெடுக்காமல் அவுட் ஆனதில்லை என்று ஒரு புள்ளி விவரத்தைக் கூறி முடித்தார்.

சொல்லி முடித்தவுடன் டேல் ஸ்டெய்ன் வீச 97 ரன்களில் இருந்த வார்னர், அவுட் ஸ்விங்கரை டிரைவ் ஆட முயன்று எட்ஜ் செய்து ஆம்லாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அவர் ஆட்டமிழந்தவுடன் ’சதத்திற்கு அருகில் வந்து சதமெடுக்காமல் ஆட்டமிழந்ததில்லை வார்னர்’ என்று கூறிய மார்க் நிகோலஸிற்கு அடுத்து அமர்ந்திருந்த ஷேன் வார்ன் அதிர்ச்சியில் தன் இருக்கையை விட்டு எழுந்து விட்டார், மார்க் நிகோலஸை நோக்கி சில வார்த்தைகளை நகைச்சுவையாகக் கூறினார். நிகோலஸ் பின்னால் தட்டினார் ஷேன் வார்ன்.

சதத்திற்கு அருகில் வந்து அவுட் ஆனதில்லை என்று கூறியவுடன் வார்னர் 97 ரன்களில் அவுட் ஆனது ஒரு நகைச்சுவை தற்செயல் நிகழ்வானதால் வர்ணனையாளர்கள் ஒருவருக்கொருவர் சிரித்தபடியே ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். மேலும் இந்த அவுட் ஆஸ்திரேலிய சரிவுக்கு வித்திட்டது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/சதத்திற்கு-அருகில்-வந்து-அவுட்-ஆனதில்லை-என்று-வர்ணனையாளர்-கூறியவுடன்-அவுட்-ஆன-வார்னர்-பெர்த்தில்-ருசிகரம்/article9305166.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

தோளில் எலும்பு முறிவு: டேல் ஸ்டெய்ன் தொடரிலிருந்து விலகல்

 

 
காயம் காரணமாக வலது தோளைப் பிடித்துக் கொண்டு கிழே உட்கார்ந்த டேல் ஸ்டெய்ன். | பெர்த். | ராய்ட்டர்ஸ்.
காயம் காரணமாக வலது தோளைப் பிடித்துக் கொண்டு கிழே உட்கார்ந்த டேல் ஸ்டெய்ன். | பெர்த். | ராய்ட்டர்ஸ்.

பெர்த் டெஸ்ட் போட்டியில் திடீர் எழுச்சியுற்று ஆஸ்திரேலியாவை குறைந்த ரன்களில் சுருட்டிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தி தென் ஆப்பிரிக்காவை வெற்றி பெறச் செய்து விடுவார் என்று எதிர்பார்த்த டேல் ஸ்டெய்ன் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக ஸ்கேன் அறிக்கை தெரிவிப்பதால் அவர் இந்த 3 டெஸ்ட் தொடரிலிருந்தே விலக நேரிட்டுள்ளது.

2-ம் நாளான இன்று டேல் ஸ்டெய்ன் நன்றாக வீசி டேவிட் வார்னரை 97 ரன்களில் வெளியேறச்செய்தார். ஆனால் அந்த ஓவருக்கு அடுத்த அவரது ஓவரில், அதாவது இன்னிங்சின் 38-வது ஓவரை ஸ்டெய்ன் வீசினார், அப்போது கவாஜா அவரை எதிர்கொண்டு ஆடி வந்தார்.

அப்போது 4-வது பந்தை வீசி முடித்தவுடன் தோள்பட்டையை பிடித்து கொண்டு சிறிது நேரம் குனிந்து நின்றார் டேல் ஸ்டெய்ன், பிறகு பெவிலியன் திரும்பினார்.

தற்போது அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு அதில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளதால் இந்தத் தொடரில் மேலும் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அவருக்குப் பதிலாக வேறொரு வீரரை தென் ஆப்பிரிக்கா அனுப்பும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா தனது 2-வது இன்னிங்சில் 2-ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் டீன் எல்கர் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 46 ரன்கள் எடுத்தும் டுமினி 6 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்தும் களத்தில் உள்ளனர்.

முன்னதாக குக் 2 பவுண்டரிகளுடன் 12 ரன்கள் எடுத்து சிடில் வீசிய தலையுயர பவுன்சரை மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஹஷிம் ஆம்லா 1 ரன் எடுத்து ஹேசில்வுட்டின் உள்ளே வந்த பந்தை கட் செய்ய முயன்று பவுல்டு ஆனார்.

அதன் பிறகு எல்கரும், டுமினியும் சேர்ந்து ஆட்டமிழக்காமல் இன்றைய தினம் மேலும் 59 ரன்களைச் சேர்த்து களத்தில் உள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/தோளில்-எலும்பு-முறிவு-டேல்-ஸ்டெய்ன்-தொடரிலிருந்து-விலகல்/article9305375.ece

  • தொடங்கியவர்

தென் ஆப்பிரிக்கா அபாரம்: 86 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸி. 244-க்கு சுருண்டது

 

 
 
  • பிலாண்டர். | படம்: ஏ.பி.
    பிலாண்டர். | படம்: ஏ.பி.
  • வெறுப்பில் செல்லும் ஸ்மித். | படம்: ஏ.பி.
    வெறுப்பில் செல்லும் ஸ்மித். | படம்: ஏ.பி.

பெர்த் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் திடீர் திருப்பம் ஏற்பட 158/0 என்று இருந்த ஆஸ்திரேலியா 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

100 பந்துகளில் 16 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 97 ரன்கள் எடுத்த டேவிட் வார்னர், டேல் ஸ்டெய்னின் அருமையான அவுட் ஸ்விங்கரில் ஸ்லிப்பில் ஆம்லாவிடம் கேட்ச் ஆகி வெளியேற 158/1 என்ற நிலையிலிருந்து அடுத்த 86 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சிக்குள்ளானது.

டேல் ஸ்டெய்ன், வார்னர் விக்கெட்டை வீழ்த்திய பிறகு தோள்பட்டை வலி காரணமாக பெவிலியன் திரும்பினார். ஏற்கெனவே திணறி வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு இது ஒரு பெரும் பின்னடைவு என்று கருதிய நேரத்தில் மேட் பிலாண்டர், இடது கை ஸ்பின்னர் மஹராஜ், ரபாதா ஆகியோர் திடீர் எழுச்சியுற்று ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்து ரன்களை வறளச்செய்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

கேப்டன் டு பிளெசிஸ் தன் பங்கிற்கு களவியூகம் மூலம் கடும் நெருக்கடி கொடுத்தார். தென் ஆப்பிரிக்க வீரர்களின் அதற்கேற்ற சுறுசுறு பீல்டிங்கும் வார்னர் ஆட்டமிழந்த பிறகு ரன்களை கடுமையாக வறளச் செய்தது.

வார்னர் ஆட்டமிழந்த தருணத்தில் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகத் தொடங்கியிருந்தது, ரவுண்ட் த விக்கெட், ஓவர் த விக்கெட் என பிலாண்டர், ரபாதா கடினமான கோணங்களை பந்தை ஸ்விங் செய்து கொண்டிருந்தனர். புதிய பேட்ஸ்மெனுக்கு கடினம் என்ற நிலை உருவான போதுதான் உஸ்மான் கவாஜாவுக்கு ரவுண்ட் த விக்கெட்டில் ஒரு பந்தை உள்ளே கொண்டு வந்தார் ரபாதா, நல்ல வேகம், கவாஜா பவுல்டு ஆனார். அவர் எடுத்த ரன்கள் 4.

வார்னரை விட்டால் ஸ்மித்தை நம்பியிருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு பெர்த்தில் முதன் முறையாக அறிமுகமாகும் ஸ்பின்னர் மஹராஜ் அதிர்ச்சி அளித்தார்.

மஹராஜ் வீசிய பந்தை மேலேறி அடிக்க முயன்ற ஸ்மித் பிளைட்டில் ஏமாற பந்து கால்காப்பில் தாக்கியது. பெரிய முறையீடு எழுப்பாவிட்டாலும் பவுலரின் முறையீட்டுக்கு அலீம்தார் ஆச்சரியகரமாக செவி சாய்த்து எல்.பி.என்று தீர்ப்பளித்தார். டி.ஆர்.எஸ் இல்லாத காலத்தில் இது அவுட் கொடுக்க முடியாததே. இவ்வளவு மேலேறி வருகிறார் பந்து எப்படி வேண்டுமானாலும் செல்லலாம் என்ற வாதம் எழும், ஆனால் அலீம் தார் மிகவும் தைரியமாக அவுட் கொடுக்க, டி.ஆர்.எஸ்.-ம் அதற்கு இசைந்தது.

ஷான் மார்ஷ் 148 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்து பிலாண்டர் ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய பந்தை கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார். தேவையில்லாமல் ஒரு ரிவியூவையும் விரயம் செய்தார். உணவு இடைவேளைக்குப் பிறகு மிட்செல் மார்ஷ், பிலாந்தரின் ஸ்விங் பந்துக்கு கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார். தற்போது ஆஸ்திரேலிய அணியைக் காப்பாற்ற களத்தில் இருப்பவர் ஆடம் வோஜஸ் மட்டுமே. ஆனால் இவர் ரபாதாவின் வேகமான பந்தை அவர் கையிலேயே கேட்ச் கொடுத்து வெளியேற ஆஸ்திரேலியா 202/6 என்று ஆனது.

மிட்செல் ஸ்டார்க், மஹராஜ் பந்தை மிட்விக்கெடில் பிளிக் செய்து கேட்ச் ஆனார். நெவில், சிடில் இணைந்த் 29 ரன்களைச் சேர்த்தனர். 23 ரன்கள் எடுத்த நெவில் மஹராஜ் பந்தை ஆட முற்படும்போது பந்து கால்காப்பில் பட்டு ஸ்லிப்பில் ஆம்லாவிடம் கேட்ச் ஆனதாக தீர்ப்பளிக்கப்பட்டது, பந்து மட்டையில் படவில்லை. களநடுவர் அவுட் என்றார், ரிவியூவை அனாவசியமாகத் தீர்த்த ஆஸ்திரேலியா என்ன செய்ய முடியும்? ஹேசில்வுட், நேதன் லயன் ஆகியோரை பிலாண்டர் வீழ்த்த ஆஸ்திரேலியா 86 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சோகமுகம் காட்டியது.

பிலாண்டர் 56 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், ரபாதா 2 விக்கெட்டுகளையும் மஹராஜ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இடையில் ரபாதா, ஷான் மார்ஷுக்கு லெக் ஸ்டம்ப் லைனில் வீசி திசைமாறினார், ஆனால் ஸ்டெய்ன் காயமடைந்து வெளியேறியவுடன் ஒழுங்காக வீசினார்.

தென் ஆப்பிரிக்கா தன் 2-வது இன்னிங்ஸில் சற்று முன் வரை விக்கெட் இழப்பின்றி 29 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

http://tamil.thehindu.com/sports/தென்-ஆப்பிரிக்கா-அபாரம்-86-ரன்களுக்கு-அனைத்து-விக்கெட்டுகளையும்-இழந்து-ஆஸி-244க்கு-சுருண்டது/article9304995.ece

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியாவை வறுத்து எடுத்த டுமினி எல்கர் சதங்கள்: வலுவான நிலையில் தென் ஆப்பிரிக்கா

ஆர்.முத்துக்குமார்

 
 
  • ஆஸி.யை வறுத்து எடுத்த டுமினி, எல்கர். | படம்: ஏ.எஃப்.பி.
    ஆஸி.யை வறுத்து எடுத்த டுமினி, எல்கர். | படம்: ஏ.எஃப்.பி.
  • எல்கர் கொடுத்த கேட்சைத் தட்டுத் தடுமாறி தரையில் வழிய விட்ட ஸ்டார்க். | படம்: ஏ.பி.
    எல்கர் கொடுத்த கேட்சைத் தட்டுத் தடுமாறி தரையில் வழிய விட்ட ஸ்டார்க். | படம்: ஏ.பி.

பெர்த் டெஸ்ட் போட்டியில் டீன் எல்கர், டுமினி அபார சதங்களுடன் தென் ஆப்பிரிக்கா தன் 2-வது இன்னிங்ஸில் 388 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

பெர்த்தில் 3-ம் நாளான இன்று ஆஸ்திரேலியாவை வெயிலும், டுமினி மற்றும் எல்கர் ஆகியோரும் சேர்ந்து ‘காய்ச்சி’ எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தன் 2-வது இன்னிங்ஸில் 388 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ஆட்ட முடிவில் டி காக் 16 ரன்களுடனும் வெர்னன் பிலாண்டர் 23 ரன்களுடனும் களத்தில் இருக்க, தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 390 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு இன்னொரு பெர்த் தோல்வி பயத்தை உருவாக்கியுள்ளது.

ஆஸி.யை முழு ஆதிக்கம் செலுத்திய டீன் எல்கர், டுமினி சதங்கள்:

45/2 என்று தடுமாற்ற நிலையில் இணைந்த எல்கர், டுமினி ஜோடி 3-வது விக்கெட்டுக்காக ஆட்டத்தின் போக்கை மாற்றும் 250 மகா கூட்டணி அமைத்து கடும் வெயிலில் ஆஸ்திரேலியாவை பயங்கரமாக சோதித்தனர்.

இருவருமே இதே பெர்த்தில்தான் டெஸ்ட் அறிமுகம் மேற்கொண்டார்கள், இருவருமே தங்களது 5-வது டெஸ்ட் சதத்தை எடுத்தனர், டுமினி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது 3-வது சதத்தை எடுத்தார். 225 பந்துகளில் 20 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 141 ரன்கள் எடுத்த டுமினி மேலும் வலுவாகச் செல்லும் நிலையில் சிடிலின் வைடு பந்தை துரத்தி எட்ஜ் செய்தார், நடுவர் அலீம் தார் நாட் அவுட் என்றார் ஆனால் ஸ்மித் ரிவியூ செய்ய மெலிதான எட்ஜ் தெரிந்தது.

ஆனால் டுமினியின் இன்னிங்ஸ் அபாரமானது அவரது நேர் டிரைவ் பவுண்டரிகள், மற்றும் அற்புதமான கவர் டிரைவ்கள் மற்றும் நளினமான தேர்டேமேன் பகுதி பவுண்டரிகள் அவரை ஒரு அற்புதமான டெஸ்ட் வீரர் என்பதை உணர வைத்தது.

ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட், ஸ்டார்க், சிடில் ஆகியோர் அவ்வப்போது மட்டையைக் கடந்து சில பந்துகளை வீசி பீட் செய்ய முடிந்ததே தவிர விக்கெட்டுகள் விழவில்லை, மிட்செல் மார்ஷ் தனது அவ்வப்போது யார்க்கர்கள், ஷார்ட் பிட்ச் பந்துகள் மூலம் பிரச்சினையளித்தாலும் பெரும்பாலும் சிக்கனமாக வீச முடிந்ததே தவிர தேநீர் இடைவேளைக்கு சற்று முன் வரை எல்கர்-டுமினி கூட்டணியை உடைக்க முடியவில்லை.

ஆஸ்திரேலியா பீல்டிங்கும் கொஞ்சம் சொதப்பலாக அமைந்தது, குறிப்பாக எல்கர் 81 ரன்களில் இருந்த போது லயன் பந்தை மேலேறி வந்து ஒரு தூக்குத் தூக்க ஷாட் சரியாகச் சிக்காமல் மிட் ஆஃப் அருகிலேயே மேலே எழும்பியது மிட்செல் ஸ்டார்க் அதனை தவறாகக் கணித்துக் கோட்டை விட்டார். இதே ஓவரில் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சும் விதமாக டீன் எல்கர் தவறிய ஷாட்டை சரியாக தூக்கி சிக்சருக்கு அடித்தார் டுமினி. ஸ்டார்க்கைக் குறைகூறி பயனில்லை, காரணம் தொடர்ந்து அவரை பந்து வீசச் செய்து அவர் களைப்படைந்தவராகக் காணப்பட்டார். அவரை அதிக ஓவர்கள் பயன்படுத்தியதால் அவர் லைன் மற்றும் லெந்த் பாதிப்படைய டுமினி அவரை பதம் பார்த்தார்.

4 ஆண்டுகளுக்கு முன்பாக இங்கு அறிமுகமான டீன் எல்கர் அப்போது இரு இன்னிங்ஸ்களிலும் மிட்செல் ஜான்சனிடம் டக் அவுட் ஆகி வெளியேறியது அவரது தூக்கத்தை பலநாட்கள் கெடுத்திருக்கும். இன்று லெக் திசையில் அவர் அதிகம் ரன்கள் அடித்தார், டுமினி ஆஃப் திசையில் அதிகம் ஆடினார். கேட்ச் கோட்டை விட்டதை பயன்படுத்திக் கொண்ட எல்கர், லயன் பந்தை கவர் டிரைவ் செய்து 255-வது பந்தில் சதம் பூர்த்தி செய்தார். பிறகு 316 பந்துகளில் 127 ரன்கள் எடுத்த டீன் எல்கர், ஜோஷ் ஹேசில்வுட் பந்தை கல்லியில் கேட்ச் கொடுத்தது களைப்பினால் என்பது புரிந்தது. ஆனால் இவர்கள் இருவரும் கடும் வெயிலில் ஆஸி. அணியினரை வறுத்து எடுத்தனர் என்றே கூற வேண்டும்.

ஸ்டைலிஷ் பவுமா, மிட்செல் மார்ஷ் பந்தை புல் செய்து மிட்விக்கெட்டில் கவாஜாவின் நல்ல கேட்சிற்கு வெளியேறினார். 32 ரன்கள் எடுத்த ஸ்டார்க், குவிண்டன் டி காக்கிற்கு ஹை கேட்சை வோஜஸ் கோட்டை விட்ட அதே ஓவரில், எட்ஜ் செய்து ஆட்டமிழந்தார்.

கடைசியில் 390/6 என்று தென் ஆப்பிரிக்கா வலுவான நிலையில் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு கடினமான நாளாக அமைந்தது, கடும் வெயில், டுமினி, எல்கரின் வலுவான சுவர் போன்ற பேட்டிங், கோட்டை விட்ட கேட்ச்கள் தென் ஆப்பிரிக்கா 400 ரன்களுக்கும் மேல் முன்னிலை என்று அந்த அணி தோல்வி பயத்தை ஏற்படுத்திய நாளாகும் இது. 2-வது இன்னிங்ஸில் களமிறங்கும்போது டேல் ஸ்டெய்ன் வீசமாட்டார் என்ற ஒரே ஆறுதல் தவிர ஆஸ்திரேலியாவுக்கு இப்போதைக்கு எந்த ஒன்றும் ஆதரவாக இல்லை.

http://tamil.thehindu.com/sports/ஆஸ்திரேலியாவை-வறுத்து-எடுத்த-டுமினி-எல்கர்-சதங்கள்-வலுவான-நிலையில்-தென்-ஆப்பிரிக்கா/article9309991.ece

  • தொடங்கியவர்

பெர்த் டெஸ்டில் தோல்வியை நோக்கி ஆஸ்திரேலியா

 

 
 

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பெர்த் டெஸ்டில் 539 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய ஆஸ்திரேலியா தோல்வியை சந்திக்கும் நிலையில் உள்ளது.

 
 
 
 
பெர்த் டெஸ்டில் தோல்வியை நோக்கி ஆஸ்திரேலியா
 
ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பெர்த் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணி முதல் இன்னிங்சில் 242 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தென்ஆப்பிரிக்காவின் வேகத்தில் வீழந்தனர். அந்த அணியால் முதல் இன்னிங்சில் 244 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால் முதல் இன்னிங்சில் 2 ரன்களே பின்தங்கிய நிலையில் இருந்த தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் டுமினி 141 ரன்னும், எல்கர் 127 ரன்னும் குவிக்க 3-வது நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்கள் குவித்திருந்தது. டி காக் 16 ரன்னுடனும், பிலாண்டர் 23 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. டி காக் மற்றும் பிலாண்டர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இருவரும் அரைசதம் அடித்த நிலையில் டி காக் 64 ரன்னிலும், பிலாண்டர் 73 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

அதன்பின் வந்த மகாராஜ் 41 ரன்கள் எடுக்க தென்ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 540 ரன்கள் குவித்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 2 ரன்கள் பின்தங்கியிருந்ததால் 2-வது இன்னிங்ஸ் முடிவில் 538 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

இதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 539 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது தென்ஆப்பிரிக்கா 539 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ஷேன் மார்ஷ், வார்னர் ஆகியோர் களம் இறங்கினார்கள். அணியின் ஸ்கோர் 52 ரன்னாக இருக்கும்போது வார்னர் ஆட்டம் இழந்தார். மார்ஷ் 15 ரன்னில் ஆட்டம் இழந்தனர்.

அடுத்து கவாஜா உடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 34 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்மித் ரபாடா பந்தில் ஆட்டம் இழந்தார். ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் வந்த வோக்ஸ் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

5-வது விக்கெட்டுக்கு கவாஜாவுடன் மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். ஒரு பக்கம் விக்கெட்டுக்கள் வீழ்ந்த வண்ணம் இருந்தாலும் மறுமுனையில் கவாஜா அரைசதம் அடித்தார். அத்துடன் மார்ஷ் உடன் இணைந்து 4-வது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டார்.

ஆஸ்திரேலியா அணி 4-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்துள்ளது. கவாஜா 58 ரன்னுடனும், மிட்செல் மார்ஷ் 15 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு இன்னும் 370 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 6 விக்கெட்டுக்கள் உள்ளன.

கடைசி நாளில் 370 ரன்கள் அடிப்பது மிகக்கடினம். இல்லாவிடில் 6 விக்கெட்டுக்களை வைத்து 90 ஓவர்களை கழிக்க வேண்டும். இதுவும் மிகக்கடினம் என்பதால் பெர்த் டெஸ்டில் தோல்வியை சந்திக்கும் நிலையில் ஆஸ்திரேலியா உள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2016/11/06153022/1049232/Perth-Test-australia-towards-loss.vpf

  • தொடங்கியவர்
South Africa 242 & 540/8d
Australia 244 & 302/8 (101.6 ov)
Australia require another 237 runs with 2 wickets remaining
  • தொடங்கியவர்

சொந்த மண்ணில் வீழ்ந்தது ஆஸி ; 177 ஓட்டங்களால்  தென்னாபிரிக்க அணி அபாரா வெற்றி

 

 

ஆஸி மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 177 ஓட்டங்களால் அபார வெற்றிப்பெற்றது.

254665.jpg

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 242 ஓட்டங்களை பெற்றதுடன், ஆஸி அணி 244 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் இரண்டு ஓட்டங்கள் பின்னடைவில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி டுமினி மற்றும் எல்கர் ஆகியோரின் சதத்தின் உதவியுடன் 540 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

254672__1_.jpg

இதில் டுமினி 141 ஒட்டங்களையும் எல்கர் 127 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை 539 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி  361 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

254674.jpg

ஆஸி அணி சார்பில் கவாஜா 97 ஒட்டங்களையும், பீட்டர் நெவில் ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 7 விக்கட்டுகளை கைப்பற்றிய தென்னாபிரிக்க அணியின் ரொபாடா தெரிவுசெய்யப்பட்டார். 

254685.png

http://www.virakesari.lk/article/13253

  • தொடங்கியவர்

பிலாண்டர், அபோட்டின் அபார பந்து வீச்சில் ஆஸ்திரேலிய அணி 85 ரன்னில் சுருண்டது.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 85 ரன்னில் சுருண்டது.

 
பிலாண்டர், அபோட்டின் அபார பந்து வீச்சில் ஆஸ்திரேலிய அணி 85 ரன்னில் சுருண்டது.
 

பெர்த்:

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டி தொடரில் பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 177 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி ஹோபர்ட்டில் இன்று தொடங்கியது.

‘டாஸ்’ வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டுபெலிசிஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

தென்ஆப்பிரிக்க வீரர்களின் அபாரமான பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலியா திணறியது . அந்த அணி 32.5 ஓவர்களில் 86 ரன்னில் சுருண்டது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் 3-வது குறைந்தபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்பு 47 ரன்னிலும், (2011 ஆண்டு), 75 ரன்னிலும் (1950) சுருண்டு இருந்தன.

ஆஸ்திரேலிய அணியில் இரண்டு வீரர்களே இரட்டை இலக்கத்தை தொட்டனர். கேப்டன் சுமித் அதிகபட்சமாக 48 ரன் (அவுட் இல்லை) எடுத்தார். பிலாண்டர் 21 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். அபோட் 3 விக்கெட்டும், ரபாடா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை விளையாடியது. ஸ்டீபன் கூக்கும், எல்கரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தென் ஆப்பிரிக்காவின் தொடக்கம் சிறப்பாக இருந்தது.

http://www.maalaimalar.com/News/Sports/2016/11/12103115/1050355/Philander-Abbott-superlative-bowling-Australia-all.vpf

  • கருத்துக்கள உறவுகள்

 

 

tw_blush:

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியாவை அடக்கிய தென்னாப்பிரிக்கா... 85 ரன்களில் சுருண்ட கதை!

85

தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹோபர்ட் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியை வென்ற தெம்புடன் களமிறங்கியது தென் ஆப்பிரிக்கா. மழை அச்சுறுத்தல் இருந்த நிலையில், போட்டி நடக்குமா என்ற சந்தேகம் இருந்தது.  இயற்கை கருணை காட்ட ஆஸி பேட்டிங் பிடித்துது. ஆனால் தென்னாப்பிரிக்கா கருணையே இன்றி ஆஸி இன்னிங்க்ஸை வெறும் 32.5 ஓவருக்குள், 85  ரன்னில் முடித்து அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. 

முன்னதாக, டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டு பிளஸிஸ், பீல்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து வார்னரும், பர்ன்ஸூம் ஆட்டத்தை தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். தென் ஆப்பிரிக்க அணியில் ஸ்டெயின் காயம் காரணமாக போட்டியில் ஆட முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் கைல் அபாட் களமிறங்கினார். 

முதல் ஓவரில் இருந்தே வார்னர் அடித்து ஆட முயன்றார். அதனை கணித்த வேகப்பந்து வீச்சாளர் பிலாந்தர், ஓவரின் கடைசி பந்தை  வைடு லைனில் பந்தை வீச, அதனை வார்னர் விளாச முயல, பந்தோ எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் டீகாக் கையில் தஞ்சமடைந்தது. முதல் ஓவரில் விக்கெட் வீழ்ந்த அதிர்ச்சியில் ஆஸி மீள்வதற்குள் அடுத்த அதிர்ச்சி தந்தார் கைல் அபாட். இரண்டாவது ஒவரின் கடைசி பந்தில் எல்பி ஆகி வெளியறினார் பர்ன்ஸ். 

அதன் பின்னர் ஆக்ரோஷமாக இந்த இரண்டு பவுலர்களும் வீச, எட்டாவது ஒவர் முடிவில் 8/2 என இருந்த்து ஆஸி. ஒன்பதாவது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் கவாஜா, வோக்ஸ் இருவரையும் பெவிலியனுக்கு அனுப்பினார் பிலாந்தர். அப்போது ஆஸியின் ஸ்கோர் 8/4. ஸ்மித் ஒரு பக்கம் போராடிக்கொண்டிருக்க எப்படி பேட்டிங் செய்ய வேண்டுமென்ற ஐடியாவே இல்லாமல் பிட்ச்க்கு வருவதும் தென்னாப்பிரிக்க பவுலர்களிடம் விக்கெட்டை தாரை வார்ப்பதுவமாக இருந்தனர் ஆஸி பேட்ஸ்மேன்கள். 

தென்னாப்பிரிக்க பவுலர்கள் தவறே செய்யாமல் தொடர்ச்சியாக நல்ல லைன் & லென்த்தில் பந்து வீசி வந்தனர். இது போன்ற களங்களில் சேவாக் பாணி ஆட்டம் எடுபடாது, டிராவிட் போன்ற அமைதியான அணுகுமுறை வேண்டும். களத்தில் நீண்ட நேரம், நின்று தவறான பந்துகள் வரும் வரை காத்திருக்க வேண்டும். ஆஸி வீரர்களிடம் அத்தகைய பொறுமை இல்லை. இதனால் 32.5 ஓவரில் 85 ரன்னுக்கு ஆல் அவுட்டானது ஆஸி. மென்னி பத்து ரன்கள் எடுத்தார். அவுட்டான பத்து பேரில் மீதி ஒன்பது பேரும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகினர். சிறப்பாக விளையாடிய கேப்டன் ஸ்மித் 80 பந்துகளில் ஐந்து பவுண்டரியுடன் 48 ரன்கள் எடுத்தார். ஸ்மித் மட்டும் விரைவில் அவுட்டாகியிருந் தால் 40 ரன்களையாவது ஆஸி எடுத்திருக்குமா என்பது சந்தேகம் தான். 

பிலாந்தர் ஐந்து விக்கெட்டும், ரபாடா ஒரு விக்கெட்டும், அபாட் மூன்று விக்கெட்டும் எடுத்தனர். இதையடுத்து தென் ஆப்ரிக்கா களமிறங்கியது. எல்கரும், குக்கும் மிக கவனமாக இன்னிங்ஸை ஆரம்பித்தனர். 18 வது ஓவர் வரை விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்திருந்த்து. 19 வது ஓவரில் ஃபுல் லெந்தில் ஒரு பந்து வீசி எல்கரை எல்பிடபிள்யூ ஆக்கினார் ஸ்டார்க். அதே ஓவரில் குக்கும் அவுட்டானார். 21 வது ஓவரை வீச வந்த ஸ்டார்க் டுமினியை காலி செய்தார். 46/3 என தடுமாறியது தென்னாபிரிக்கா. ஆம்லா அபாரபாக ஆஸியின் பந்துவீச்சை விளாசினார்.டுபிளஸிஸ் ஏழு ரன்னிலும், ஆம்லா 47 ரன்னிலும் அவுட்டாயினர். எனினும் அதன் பின்னர் தெம்பா பவுமாவும், டீகாக்கும் லாவகமாக ஆஸியின் பந்துவீச்சை எதிர்கொண்டனர். முதல் நாள் முடிவில் தென்னாப்பிரிக்கா 171/5 என்ற நிலையில் 86 ரன்கள் முன்னிலையோடு இருக்கிறது. டீகாக் 28, பவுமா 38 ஆகிய ரன்களோடு களத்தில் உள்ளனர். நாளை சற்று பொறுமையாக விளையாடி இன்னும் 100 - 150 ரன்களை சேர்க்கும் பட்சத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு போட்டியையும், தொனரையும் வெல்லும் அரிய வாய்ப்பு கிடைக்கும். 

http://www.vikatan.com/news/sports/72222-australia-was-bowled-out-for-85-by-south-africa.art

  • தொடங்கியவர்
2ஆம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது
 

article_1479045209-In58amn865.jpg

அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் பிறிஸ்பேணில் இடம்பெற்றுவரும் 2ஆவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம், மழை காரணமாக, ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

ஆரம்பத்திலிருந்தே பெய்த மழை காரணமாக, போட்டியை நடத்தும் மைதான நிலைமை காணப்படவில்லை என, நடுவர்கள் தீர்மானித்தனர்.

இப்போட்டியின் முதல்நாளில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அவுஸ்திரேலிய அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 85 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. பதிலளித்தாடிவரும் தென்னாபிரிக்க அணி, 5 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களுடன் காணப்படுகிறது.

- See more at: http://www.tamilmirror.lk/185966#sthash.S6BnjH56.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி

 

 

ஆஸ்திரேலியா அணிக்கு இது சோதனையான காலம். சொந்த மண்ணில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் கூட ஆஸ்திரேலியாவால் வெல்ல முடிவதில்லை. ஹொபார்ட்டில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரு இன்னிங்ஸிலும் மோசமாக விளையாடி தொடரை பறிகொடுத்து இருக்கிறது.

7713e4da7ae4489fa17eed295b343895_08266.j

 

முதல் இன்னிங்ஸில் 85, இரண்டாவது இன்னிங்ஸில் 161 என இரு இன்னிங்ஸிலும், ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள் சோபிக்கத் தவறினர். இரு இன்னிங்ஸிலும் 16 முறை ஒற்றை இலக்கில் ரன் அடித்து ஆஸ்திரேலியா அணியின் பெயரை நிலைகுலைய செய்து இருக்கிறார்கள் அதன் வீரர்கள். 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது தென் ஆப்பிரிக்கா. இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் எடுத்து அசத்திய அபாட் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

வரும் 24-ம் தேதி மூன்றாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் தொடங்குகிறது.

http://www.vikatan.com/news/sports/72416-south-africa-beats-australia-by-an-innings-and-80-runs.art

  • தொடங்கியவர்

கிரிக்கெட்: ஆஸி., அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது தெ. ஆப்ரிக்கா

 

ஆஸ்திரேலியாவில் உள்ளஹோபர்ட்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 80 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்ற தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி, 2-0 என்று டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.

பிலாண்டர்
 தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் பிலாண்டர்

ஹோபர்ட் நகரின் பெல்லரிவ் ஓவல் மைதானத்தில் தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கடந்த 11-ஆம் தேதியன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பந்து வீச தீர்மானித்தது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா தென் ஆப்ரிக்காவின் பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் தனது முதல் இன்னிங்ஸில் 85 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டு ஆஸ்திரேலிய வீரர்களை தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.

தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் பிலாண்டர் 5 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர், தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்ரிக்கா 326 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் குயிண்டன் டி காக் சதமடித்தார்.

குயிண்டன் டி காக்

 

 குயிண்டன் டி காக்

241 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா தென் ஆப்ரிக்க வேகப் பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் தனது விக்கெட்டுகளை தொடர்ந்து பறி கொடுத்து வந்தது. இறுதியில் 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் ஆஸ்திரேலியா இழக்க, இந்தப் போட்டியில்

ஒரு இன்னிங்ஸ் மற்றும் 80 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா வென்றது.

முன்னதாக பெர்த் மைத்தனத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியை தென் ஆப்ரிக்கா வென்றுள்ளதால், மூன்று டெஸ்ட்கள் அடங்கிய இந்த தொடரை தென் ஆப்ரிக்கா 2-0 என்று வென்றுள்ளது.

கைல் அபோட் தென் ஆப்ரிக்க வேகப் பந்துவீச்சாளர் கைல் அபோட் (கோப்புப் படம்)

துல்லியமாகவும், ஆதிவேகமாகவும் பந்து வீசிய தென் ஆப்ரிக்க வேகப் பந்துவீச்சாளர் கைல் அபோட் ஆறு விக்கெட்டுக்களை எடுத்து ஆட்ட நாயகன் விருதையும் வென்றுள்ளார்.

முன்னதாக இலங்கையில் நடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியுற்ற ஆஸ்திரேலியா, இந்த போட்டி தோல்வியுடன் தொடந்து 5 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

http://www.bbc.com/tamil/sport-37983828

  • கருத்துக்கள உறவுகள்

 

tw_blush:

  • தொடங்கியவர்

அணியில் இளம் வீரர்களை சேர்க்க வேண்டும்: தோல்வியினால் கடும் அதிருப்தி அடைந்த ஸ்டீவ் ஸ்மித்

 
ஸ்டிவ் ஸ்மித். | படம்: அகிலேஷ் குமார்.
ஸ்டிவ் ஸ்மித். | படம்: அகிலேஷ் குமார்.

தென் ஆப்பிரிக்க அணியிடம் இன்னிங்ஸ் தோல்வி அடைந்து தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தனக்கு மிகவும் சங்கடமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது என்றார்.

அதாவது பேட்டி முழுதும் அவர் பயன்படுத்திய வார்த்தைகள், கோபம், ஏமாற்றம், வெறுப்பு, காயம் போன்றவையாகவே இருந்தது.

“உங்களிடம் நேர்மையாகக் கூற வேண்டுமெனில் நான் இங்கு வந்து உட்காரவே தர்மசங்கடப்படுகிறேன். அடிக்கடி தொடர்ந்து விக்கெட்டுகள் சரிவடைவதை சந்தித்து வருகிறோம். இன்று 8 விக்கெட்டுகளை 30 ரன்களுக்கு இழந்தோம் முதல் இன்னிங்சில் 85 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தோம். இப்படி இருந்தால் ஆட்டத்தில் வெற்றி எப்படி வரும்? இது மிகவும் சீரான முறையில் நடந்து வருவது எனக்குப் பிடிக்கவில்லை.

நாங்கள் பதிலடி கொடுக்கவில்லை, கடினமான நேரத்தில் மன உறுதியுடன் மேலும் கடினமாக நாம் ஆட வேண்டும் ஆனால் அவ்வாறு நிகழவில்லை. விக்கெட் பவுலிங்குக்குச் சாதகமாக இருந்தாலும் களத்தில் நின்று அந்தக் கடின காலக்கட்டத்தை எதிர்கொண்டு ஒரு சவாலை ஏற்படுத்த முயல வேண்டும், கூட்டணிகளை கட்டமைக்க வேண்டும்.

பயிற்சியாளர் டேரன் லீ மேன் தவறு இதில் எதுவுமில்லை, அவர் அருமையாகவே தயார்படுத்துகிறார், ஆனால் களத்தில் போய் செயலாற்றுவது வீரர்கள் கடமையல்லவா? நாங்கள் நன்றாகவே தயாரானோம், ஆனால் களத்தில் அதனை செயல்படுத்தத் தவறினோம். அணித்தேர்வாளர்களுடன் அமர்ந்து சிறந்த அணியை தேர்வு செய்ய வேண்டும்.

பந்து ஸ்விங் ஆனாலும் ஸ்பின் ஆனாலும் எங்களிடம் இப்போதைக்கு அதற்கு விடையில்லை. எங்களது விக்கெட் மீது எங்களுக்கு எந்த வித மதிப்பும் இல்லாமல் இருந்து வருகிறது. இனி எந்த ஒரு அணியை வீழ்த்தவும் நிச்சயம் பயங்கரமாக முன்னேற வேண்டிய நிலையே உள்ளது. பிட்சில் ஒன்றுமில்லை என்றால் அடித்து ஆடலாம், ஆனால் ஸ்விங், ஸ்பின் ஆகிறது என்றால் நாங்கள் இப்போது சரியாக ஆடுவதில்லை. நாங்கள் அதிக நேரம் களத்தில் நின்று அதனை எதிர்கொள்ளவில்லை.

எங்களது தடுப்பாட்டம் சவாலுக்குள்ளாகியுள்ளது. எங்கள் தடுப்பாட்டம் நல்ல முறையில் இல்லை. சிலர் சில நேரங்களில் பெரிய ஸ்கோர்களை எடுக்கின்றனர். ஆனால் பிறகு சீராக ஆடுவதில்லை. ஒருவருமே முனைந்து வந்து பெரிய சதங்களையோ, அல்லது தொடர்ச்சியாக 3 சதங்களையோ அடிப்பதில்லை. எனவே இளம் வீரர்களை அணியில் கொண்டு வந்து இந்த மட்டத்தில் ஆட அவர்களை தயார் செய்ய வேண்டும்” என்கிறார் ஸ்மித்.

http://tamil.thehindu.com/sports/அணியில்-இளம்-வீரர்களை-சேர்க்க-வேண்டும்-தோல்வியினால்-கடும்-அதிருப்தி-அடைந்த-ஸ்டீவ்-ஸ்மித்/article9349696.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஒரே டெஸ்ட்டில் அதிக ஒற்றை இலக்க ஸ்கோர்கள்: ஆஸி. ‘சாதனை’ புள்ளி விவரங்கள்

 

 
தலையைத் தொங்கப் போட்டு செல்லும் ஸ்மித். | படம்: ஏ.எஃப்.பி.
தலையைத் தொங்கப் போட்டு செல்லும் ஸ்மித். | படம்: ஏ.எஃப்.பி.

தென் ஆப்பிரிக்காவிடம் வரலாறு காணாத தோல்விகளைச் சந்தித்து வரும் ஆஸ்திரேலிய அணி பல எதிர்மறைச் சாதனைகளுக்கு சொந்தமாகியுள்ளது.

ஹோபார்ட் டெஸ்ட் போட்டியில் மொத்தம் 16 ஒற்றை இலக்க ஸ்கோர்கள் ஆஸ்திரேலிய அணி ஸ்கோர் கார்டில் பதிவாகியுள்ளது. இதற்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிராக ஓவலில் 1912-ம் ஆண்டுதான் இத்தகைய மோசமான பேட்டிங் செய்துள்ளது ஆஸ்திரேலியா.

ஹோபார்ட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவின் வார்னர், பர்ன்ஸ், கவாஜா, வோஜஸ், பெர்குசன், நெவில், ஸ்டார்க், ஹேசில்வுட், லயன் ஆகியோரும் 2-வது இன்னிங்சில் பர்ன்ஸ், வோஜஸ், பெர்குசன், நெவில், மெனி, ஸ்டார்க், ஹேசில்வுட், லயன் ஆகியோரும் ஒற்றை இலக்க ஸ்கோர்களை எடுத்தனர்.

ஆஸ்திரேலியாவில் தென் ஆப்பிரிக்கா தொடர்ச்சியாக 3-வது தொடரை வெல்கிறது. இதற்கு முன்பாக 2008-09, 2012-13 தொடர்களை தென் ஆப்பிரிக்கா இங்கு வென்றுள்ளது.

இதற்கு முன்பாக ஆஸ்திரேலியாவை ஆஸ்திரேலியாவில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றதில்லை தென் ஆப்பிரிக்க அணி. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும் இது, இதற்கு முன்பாக ஆஸ்திரேலியாவில் பெர்த்தில் 2012-ம் ஆண்டு 309 ரன்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

326 ரன்களை மட்டுமே எடுத்து அதில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற வகையில் இது 5-வது மிகக்குறைந்த ரன் எண்ணிக்கையாகும். இதற்கு முன்பாக பெர்த்தில் மே.இ.தீவுகள் 322 ரன்களை மட்டுமே எடுத்த போது ஆஸ்திரேலியாவை இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்களில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

2013-க்குப் பிறகு ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக 5 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி கண்டது. 1984-ம் ஆண்டு ஆஸ்திரேலியா 6 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வி கண்டது அப்போது காயம் ஏற்படுத்திய அணி மே.இ.தீவுகள்.

ஆஸ்திரேலியா ஹோபார்ட் டெஸ்ட் போட்டியில் மொத்தம் 558 பந்துகளையே சந்தித்து தோல்வி கண்டது. இதற்கு முன்பாக 1928-29-ல் பிரிஸ்பனில் இங்கிலாந்துக்கு எதிராக 457 பந்துகளையே சந்தித்து தோல்வி கண்டது.

ஹோபார்ட் டெஸ்ட் போட்டியில் இன்று 32 ரன்களுக்கு தனது 8 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியாவின் 2-வது பெரிய சரிவாகும்.

இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா மொத்தம் எடுத்த 246 ரன்கள் சொந்த மண்ணில் 6-வது குறைந்த ரன் எண்ணிக்கையாகும்.

ஷான் போலாக் 1998-ம் ஆண்டு அடிலெய்ட் டெஸ்டில் 7 விக்கெட்டுகளை 87 ரன்களுக்கு எடுத்தபிறகு ஆஸி. மண்ணில் சிறந்த பந்து வீச்சுக்குரியவரானார் கைல் அபாட், இவர் 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 2 போட்டிகளில் கைல் அபாட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

http://tamil.thehindu.com/sports/ஒரே-டெஸ்ட்டில்-அதிக-ஒற்றை-இலக்க-ஸ்கோர்கள்-ஆஸி-சாதனை-புள்ளி-விவரங்கள்/article9348760.ece

  • தொடங்கியவர்

மீண்டும் ஒயிட் வாஷ் ஆகுமா ஆஸ்திரேலியா? #AUSvsSA

 

ஆஸ்திரேலியா

கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையில்  ஒயிட்வாஷ் ஆனது ஆஸ்திரேலியா. தற்போது மீண்டும் அத்தகைய சூழ்நிலையை சந்திக்கும்  மோசமான  நிலைமையில்  இருக்கிறது. ஆஸ்திரேலிய  நாட்டில் தென்னாபிரிக்க அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த நவம்பர் மூன்றாம் தேதி பெர்த் மைதானத்தில் நடந்தது.  முதல் இன்னிங்ஸில்  தென்னாப்பிரிக்காவை விட இரண்டு ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தது ஆஸ்திரேலியா. தென்னாபிரிக்க அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் டுமினி,  எல்கர்  சதங்கள்  உதவியால் 540 ரன்கள் எனும் மெகா இலக்கை எட்டியது. சாதனை இலக்கை நோக்கி பயணித்த ஆஸ்திரேலியாவை அடியோடு சாய்த்தார் ககிஸோ ரபாடா. இதையடுத்து 177  ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது தென்னாபிரிக்கா. ரபாடா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

சொந்த மண்ணில் முதல் டெஸ்ட் போட்டியே தோல்வியடைந்ததால், அதிர்ச்சி அடைந்தது ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது டெஸ்டில் சில வீரர்கள் நீக்கப்பட்டு அணியில் பர்ன்ஸ் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.   ஹோபர்ட்டில் கடந்த நவம்பர்  பன்னிரெண்டாம் தேதி தொடங்கிய  டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் பிடிக்க முடிவெடுத்தது ஆஸ்திரேலியா. தென்னாபிரிக்காவின் பந்துவீச்சாளர்கள் அபாட், பிலாந்தர் இருவரையும் சமாளிக்க முடியாமல் சரசரவென சீட்டுக்கட்டுகள் போல ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸ் வெறும் 85  ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. குவிண்டன் டீ காக்கின் அதிரடி சதத்தால் முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் குவித்தது  தென்னாபிரிக்கா  ஒரு மிகப்பெரிய இன்னிங்ஸ் ஆடியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, கடைசியில் வெறும் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இன்னிங்ஸ் மற்றும் 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைச் சுவைத்தது தென்னாபிரிக்க அணி. 

ஆஸ்திரேலியா

இந்த நிலையில் தான் மூன்றாவது மற்றும் தொடரின் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் வரும் வியாழக்கிழமை துவங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டி பகலிரவாக நடக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பொதுவாக சிவப்பு நிற பந்துகள் பயன்படுத்தப்படும். ஆனால் பகலிரவு போட்டியாக நடத்தப்படுவதால், இந்த போட்டியில் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்படும். ஆஸ்திரேலியாவுக்கு  பிங்க் பந்தில் விளையாடிய அனுபவம் இருக்கிறது. நியூஸிலாந்துடன் கடைசியாக விளையாடிய பகலிரவு டெஸ்ட் போட்டியில் வெற்றியைச் சுவைத்தது. ஆஸ்திரேலியாவுக்கும் சரி, அடிலெய்டு மைதானத்துக்கு சரி, தற்போது நடக்கவிருப்பது இரண்டாவது பிங்க் பந்து டெஸ்ட் போட்டி. ஆனால், தென்னாபிரிக்க அணிக்கு இதுவரை பிங்க் பந்தில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடி பழக்கமில்லை, இது தான் சர்வதேச அரங்கில் அந்த அணி ஆடும் முதல் பகலிரவு போட்டி ஆகும். எனவே இந்த போட்டியை வெல்ல வேண்டும், அதோடு ஆஸ்திரேலிய அணியை  ஒயிட் வாஷ் ஆக்க வேண்டும் என்ற உற்சாகத்துடன் களமிறங்கியிருக்கிறது தென்னாபிரிக்க அணி.

கேப்டன் டூ பிளசிஸ் தலைமையில்  புது உத்வேகம் பெற்று ஆடும் தென்னாப்ரிக்காவிற்கே மூன்றாவது டெஸ்ட் போட்டியை வெல்லும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் சொல்லியிருக்கிறார்கள். கடும் மனச்சோர்வில் இருக்கும்  ஆஸ்திரேலிய அணி, இந்த போட்டியை வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்குகிறது. ஒருவேளை  இந்த போட்டியில் சொதப்பினால் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் வரும் என  எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஐந்து வீரர்கள் இந்த போட்டியில் கழட்டிவிடப் பட்டுள்ளனர். தனது கேப்டன் பதவிக்கும் கத்தி தொங்கும் சூழ்நிலை இருப்பதால் கேப்டன் ஸ்மித் இந்த போட்டியில் தென்னாபிரிக்காவை  ஜெயிக்க என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார் என பொறுத்திருந்து  தான் பார்க்க வேண்டும். ஏற்கனவே இலங்கையுடன்  ஒயிட் வாஷ் ஆன நிலையில், தொடர்ச்சியாக அதுவும் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா ஒயிட் வாஷ் ஆகுமா என்பதை உலகின் அத்தனை கிரிக்கெட் ரசிகர்களும் உற்றுநோக்கி இருக்கிறார்கள். 

as6_17491.jpg

தென்னாபிரிக்க அணியை பொறுத்தவரை ஸ்டெயின், டிவில்லியர்ஸ் என இரண்டு முக்கியமான  வீரர்கள் இல்லாத போதும், பேட்டிங்,பவுலிங் இரண்டிலும் வலுவாக இருக்கிறது. அம்லா, டுபிளசிஸ் ஆகிய அனுபவ வீரர்கள் இன்னும் முழு பார்மில் ஆட வில்லை. எனினும் எல்கர், டுமினி, தெம்பா பவுமா ஆகியோர் நம்பிக்கையளிக்கும் விதமாக பேட்டிங் செய்கின்றனர். ஆறாவது ஆட்டக்காரராக களமிறங்கும் டீ காக், ஷேவாக் ஸ்டைலில் அதிரடியாக டீல் செய்கிறார். பவுலிங்கில் ரபடா ஆஸ்திரேலிய அணியை அச்சுறுத்துகிறார். பிலாந்தரும், அபாட்டும் விக்கெட் வீழ்த்தும் பவுலராக திகழ்கின்றனர். எனவே ஆஸ்திரேலியா புது உத்தியை யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இந்த ஆண்டு ஏற்கனவே சொந்த மண்ணில் இந்திய அணியிடம் டி20 தொடரில் ஒயிட் வாஷ் ஆனது ஆஸ்திரேலியா. இதையடுத்து இலங்கையில் டெஸ்ட் தொடரிலும், தென்னாபிரிக்க  மண்ணில் ஒருநாள் தொடரிலும் ஆஸ்திரேலியா ஒயிட் வாஷ் ஆகியிருந்தது. தற்போது இந்த தொடரிலும் ஒயிட் வாஷ் ஆனால், வரலாற்றில் ஆஸ்திரேலிய அணியின் மிக மோசமான பெர்ஃபார்மென்ஸ் இந்த ஆண்டு தான் என்ற அவப்பெயருக்கு ஆளாக நேரிடும். ஆஸ்திரேலியா என்ன செய்யப்போகிறது? 

http://www.vikatan.com/news/sports/73163-will-south-africa-make-it-3-0-against-australia.art

  • தொடங்கியவர்

தலைகீழ் மாற்றங்களுடன் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக களமிறங்கும் ஆஸ்திரேலியா

 

ஸ்டீவ் ஸ்மித். | படம்: ஏ.எஃப்.பி.
ஸ்டீவ் ஸ்மித். | படம்: ஏ.எஃப்.பி.
 

ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வியாழனன்று தொடங்குகிறது. பகலிரவு டெஸ்ட் போட்டியான இந்த ஆட்டம் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

3 புதிய பேட்ஸ்மென்களான நிக் மேடின்சன், மேட் ரென்ஷா, பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் ஆகியோர் களமிறக்கப்படுகின்றனர், இதில் மேடின்சனை ‘கேம் பிரேக்கர்’என்று வர்ணித்து பெரிய அளவில் எதிர்பார்க்கிறார் ஸ்மித். பந்து வீச்சில் ஜேக்சன் பேர்ட் களமிறக்கப்படுகிறார்.

3 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி தொடரை கைப்பற்றியது. அந்த அணி தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கும் நிலையில் ஆஸ்திரேலிய அணியை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்த டெஸ்ட் போட்டியை சந்திக்கிறது.

அதேவேளையில் சொந்த மண்ணில் மோசமாக தோல்வியடைந்துள்ள ஆஸ்திரேலிய அணி மீண்டும் திறமையை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் அந்த அணியில் கடந்த இரு போட்டிகளில் விளையாடிய 6 வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக 4 புதுமுக வீரர்கள் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று தொடங்கும் போட்டிக்கான விளையாடும் லெவனை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நேற்று அறிவித்தார். இதன்படி, 3-வது வேகப்பந்து வீச்சாளராக ஜேக்சன் பேர்டு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பிரதான வேகப்பந்து வீச்சாளர்களாக மிட்செல் ஸ்டார்க், ஹேசல்வுட் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க அணியில் மஹராஜுக்குப் பதிலாக இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் தப்ரைஸ் ஷம்சி களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிங்க் பந்தின் தையலை பேட்ஸ்மென்கள் சரிவர பார்க்க முடியாது என்பதால் இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் தப்ரைஸ் ஷம்சிக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணி விவரம்:

டேவிட் வார்னர், மேட் ரென்ஷா, உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), பீட்டர் ஹென்ட்ஸ்கோம்ப், நிக் மேடின்சன், மேத்யூவ் வேட், மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹேஸல்வுட், நாதன் லயன், ஜேக்ஸன் பேர்டு.

http://tamil.thehindu.com/sports/தலைகீழ்-மாற்றங்களுடன்-தென்-ஆப்பிரிக்காவுக்கு-எதிராக-களமிறங்கும்-ஆஸ்திரேலியா/article9378580.ece

  • தொடங்கியவர்

South Africa 89/3 (28.0 ov)

  • தொடங்கியவர்

அடிலெய்டு டெஸ்ட்: 259 ரன்கள் எடுத்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்த டு பிளிசிஸ்

அடிலெய்டு டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்த நிலையில் எதிர்பாராத விதமாக முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

 
 
அடிலெய்டு டெஸ்ட்: 259 ரன்கள் எடுத்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்த டு பிளிசிஸ்
 
ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான பகல் - இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டு பிளிசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி அந்த அணியின் குக், எல்கர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். குக் 40 ரன்கள் எடுத்தார். ஆனால் எல்கர் 5 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். இந்த இரண்டு விக்கெட்டுக்களையும் ஸ்டார்க் வீழ்த்தினார். அடுத்து வந்த அம்லா, டுமினி ஆகியோர் தலா 5 ரன்கள் எடுத்த நிலையில் ஹசில்வுட் பந்தில் பெவிலியன் திரும்பினார்.

ஆனால், ஐந்தாவது வீரராக களம் இறங்கிய கேப்டன் டு பிளிசிஸ் நிலைத்து நின்று விளையாடி சதம் அடித்தார். இவரது சதத்தால் தென்ஆப்பிரிக்கா அணி 76 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்திருந்தது. அத்துடன் தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

AB1750C6-8FBB-4B47-86A9-E108B0F20369_L_s

முதல் நாள் ஆட்டம் முடியும் நேரத்தில் ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுக்களை விரைவில் வீழ்த்தி விடலாம் என்ற எண்ணத்தில் டு பிளிசிஸ் இந்த முடிவை எடுத்தார். டுபிளிசிஸ் 118 ரன்னுடனும், ஷாம்சி 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா அணி சார்பில் ஹசில்வுட் 4 விக்கெட்டும், ஸ்டார்க், பேர்டு தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக கவாஜாவும் ரென்ஷாவும் களம் இறங்கினார்கள். இருவரும் முதல் நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். அந்த அணி 12 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்துள்ளது.

கவாஜா 3 ரன்னுடனும், ரென்ஷாவ் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
 

http://www.maalaimalar.com/News/Sports/2016/11/24173209/1052557/Adelaide-Oval-south-africa-259-declare-first-innings.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.