Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் போதனா வைத்தியசாலையில் கருப்பைக் கழுத்து புற்றுநோயை கண்டறிவதற்கான பரிசோதனைகள் ஆரம்பம்:-

Featured Replies

யாழ் போதனா வைத்தியசாலையில் கருப்பைக் கழுத்து புற்றுநோயை கண்டறிவதற்கான பரிசோதனைகள் ஆரம்பம்:-

யாழ் போதனா  வைத்தியசாலையில் பெண்களில் ஏற்படுகின்ற கருப்பைக் கழுத்து புற்றுநோயை மிகவும் ஆரம்ப நிலையில் கண்டறிவதற்கான பரிசோதனைகள் (Colposcopy Test) 4.11.2016 அன்று 1க்கப்பட்டுள்ளன.

சுகவனிதையர் சிகிச்சை நிலையங்களில் பரிசோதிக்கப்பட்டு மேலதிக ஆலோசனைகள் தேவைப்படும் போது Colposcopy Test செய்யப்படும்.

சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஊடாக இச்சேவையை இலகுவில் பெற்றுக் கொள்ள முடியும்.

திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் காலை 10.00 – 12.00 மணிவரை இப் பரிசோதனைகள் செய்யப்படும்.

http://globaltamilnews.net/archives/5874

  • தொடங்கியவர்

யாழ் போதனா வைத்தியசாலையில் DEXA SCAN பரிசோதனை ஆரம்பம்.

20161104_111600

எலும்பு தேய்வடையும் நோயானது (ஒஸ்ரியோபொரோசிஸ் – DEXA SCAN) வயது முதிர்ந்தவர்களில் குறிப்பாக மாதவிடாய் நின்ற பின்னர் பெண்களில் காணப்படுகின்ற ஒரு பிரச்சினையாகும். இது ஏற்படுவதற்கு பல்வேறுபட்ட ஹோர்மோன் குறைபாடுகள், நீண்ட கால சத்துக் குறைபாடுகள், பலவிதமான உடல் நோய்கள் மற்றும் சில வகையான மருந்துவகைகளை நீண்டகாலமாக உள்ளெடுத்தல் என்பன காரணமாக அமையலாம்.

இவ்வாறு எலும்பு தேய்வடையும் நிலையை ஆரம்பத்திலேயே இனங்கண்டு சிகிச்சையளிப்பதன் மூலம் எலும்புகள் முறிவடைதல் மற்றும் பல்வேறுபட்ட பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். இவ்வாறு எலும்பு தேய்வடைவதைக் கண்டறிவதற்கான சிறந்த பரிசோதனையாக அமைவது DEXA SCAN ஆகும். இவ்வளவு காலமும் எமது நோயாளர்கள் இப்பரிசோதனைக்கு உட்படுவதற்கு கொழும்பை நாடிச் செல்ல வேண்டிய தேவையிருந்தது.

சுகாதார அமைச்சினதும் யாழ்போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்களதும் அயராத முயற்சினால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு DEXA SCAN இயந்திரத்தைப் பெறுவது இன்று நிறைவேற்றியுள்ளது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களிலேயே முதற் தடவையாக இந்த DEXA SCAN சேவையானது யாழ் போதனா வைத்தியசாலையில் 04.11.2016 வெள்ளிக்கிழமை பணிப்பாளரினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இப் பரிசோதனை இயந்திரம் கிடைக்கப்பெற்று இன்று தொழிற்பட  ஆரம்பித்துள்ளமையானது எமக்குக் கிடைத்த வரப்பிரசாத மென்பதில்  ஐயமில்லை.

20161104_11164220161104_11184620161104_112236

 

http://globaltamilnews.net/archives/5930

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.