Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு பறிபோய்விடுமென்ற சம்பந்தனின் எச்சரிக்கை

Featured Replies

கிழக்கு பறிபோய்விடுமென்ற சம்பந்தனின் எச்சரிக்கை

 

வடக்கு மாகா­ணத்­துடன் இணை­யா­விடின் கிழக்கு மாகாணம் விரைவில் பறிபோய் விடும் என்ற எச்­ச­ரிக்­கையை பகி­ரங்­க­மாக விடுத்­துள்ள எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் அவர்கள் அதா­வது வடக்கும் கிழக்கும் இணை­யாது பிரிந்து செயற்­ப­டு­மாயின் கிழக்கு மாகாணம் விரைவில் பறி­போய்­விடும்.

 கிழக்கு மாகா­ண­மா­னது தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு உரிமை இல்­லாத நிலை ஏற்­பட்­டு­விடும். எனவே கிழக்கு மாகாணம் பறி போவ­தற்கு தமிழ், முஸ்லிம் மக்கள் உடந்­தை­யாக இருக்­கக்­கூ­டாது. எனவே இரு மாகா­ணங்­களும் இணைக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­னது. அவ­ச­ர­மான தேவை­யுங்­கூட. இந்த நிலைப்­பாட்­டி­லேயே த.தே.கூட்­ட­மைப்பு உள்­ளது என்ற யதார்த்த பூர்­வ­மான கருத்­தொன்றை முன்­வைத்­துள்ளார் இரா.சம்­பந்தன் அவர்கள்.

வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் தமிழ்­மொ­ழியை தாய் மொழி­யாகக் கொண்­டுள்ள இஸ்­லா­மிய சகோ­த­ரர்­களும் தமிழ் மக்­க­ளோடு ஒன்று சேர்ந்து வாழ்ந்து வந்­ததை வர­லாற்றுச் சான்­று­களும் குடி­சன மதிப்­பீ­டு­களும் இலக்­கிய வடி­வங்­களும் எடுத்­துக்­காட்­டு­வதால் தமிழ் மக்கள் போன்று இஸ்­லா­மி­ய­ரது பாரம்­ப­ரியப் பிர­தே­ச­மா­கவும் இருந்து வரும் இவ்­விரு மாகா­ணங்­களும் இரட்டைப் பிள்­ளைகள் போல காணப்­படும் தொன்­மையின் அடிப்­படை நிலையே சம்­பந்­தனின் தீர்க்க தரி­ச­ன­மான கருத்து அமைந்­தி­ருக்­கி­ றது.

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான முயற்­சிகள் தீவி­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்டு வரும் சூழ்­நி­லையில் அதா­வது நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது சிறு­பான்மை சமூ­கங்­க­ளான தமிழ், முஸ்லிம் மக்கள் நீண்ட கால­மாக எதிர்­நோக்­கி­வரும் அடிப்­படை மற்றும் அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்கு நிரந்­த­ர­மான தீர்­வைக்­காணும் நோக்கில் உரு­வா­க­வி­ருக்கும் அர­சியல் சாசன உரு­வாக்­கத்­துக்கு இன்று சவா­லாக இருக்கும் விவ­கா­ர­மாக பார்க்­கப்­ப­டு­வதும் பேசப்­ப­டு­வதும் வட கிழக்கு இணைப்பு என்ற சூடான விவ­கா­ர­மாகும்.

சில சந்­தர்ப்­பங்­களில் தென்­னி­லங்­கை­யைச் ­சேர்ந்த பேரி­ன­வா­தி­களும் கிழக்கு இணை­வதை விரும்­பாத தலை­மைத்­து­வங்­களும் சமஷ்டி என்ற ஆட்சி முறையை அர­சாங்கம் வட­கி­ழக்கு வழங்­கு­வதை ஏற்­றுக்­கொண்­டாலும் அல்­லது அங்­கீ­க­ரித்­தாலும் வட­கி­ழக்கு இணைப்பு என்­பதை ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்கள் என்ற சூழ்­நி­லையும் எதிர்ப்­புமே நாளுக்­குநாள் வளர்ந்து வரு­வதை அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தா­யுள்­ளது. குறிப்­பிட்டுச் சொல்­லப்­போனால் வட­கி­ழக்கு இணைப்பு என்­பது சில­ருக்கு சிம்­ம­சொப்ப­ன­மா­கவே இருந்து கொண்­டி­ருக்­கி­றது.

வட­கி­ழக்கு இணைப்பை ஏற்­றுக்­கொள்­ளா­த­வர்கள் எக்­கா­ர­ணங்­களை மனங்­கொண்டு இதை எதிர்த்து வரு­கின்­றார்கள். அதற்­கு­ரிய மூல­கா­ர­ணங்கள் என்ன என்­பதை ஆராய்ந்து பார்ப்­ப­தற்கு முன் இரு மாகா­ணங்­களும் இணை­யாது பிரிந்து செயற்­ப­டு­மாயின் கிழக்கு பறி­போய்­விடும் என்ற யதார்த்­தத்தின் வர­லாற்று ரீதி­யான போக்­கு­க­ளையும் பாதிப்­பு­க­ளையும் பார்ப்­ப­த­னூ­டாக கிழக்கு நிலை­மை­களை ஓர­ளவு தெரிந்து கொள்­ள­மு­டியும்.

கிழக்கு மாகாணம் மூன்று மாவட்­டங்­களை உள்­ள­டக்­கிய மாகா­ண­மாகும். அவை திரு­கோ­ண­மலை, அம்­பாறை, மட்­டக்­க­ளப்பு ஆகிய மாவட்டப் பிரி­வு­களை உள்­ள­டக்கி இன்று காணப்­ப­டு­கின்­றது. இதில் திரு­கோ­ண­மலை மாவட்டம் திரு­கோ­ண­மலை, மூதூர், சேரு­வில என்ற மூன்று தேர்தல் தொகு­தி­களைக் கொண்­ட­தா­கவும் மட்­டக்­க­ளப்பு மாவட்டம் மட்­டக்­க­ளப்பு, கல்­குடா, பட்­டி­ருப்பு ஆகிய மூன்று தேர்தல் தொகு­தியைக் கொண்­ட­தா­கவும் அம்­பாறை மாவட்டம் அம்­பாறை, கல்­முனை, பொத்­துவில், சம்­மாந்­துறை ஆகிய நான்கு தொகு­தி­களைக் கொண்­ட­தா­கவும் மொத்­த­மாக கிழக்கு மாகாணம் 10 தேர்தல் தொகு­தி­களைக் கொண்ட மாகா­ண­மாகும்.

மேற்­படி மூன்று மாவட்­டங்­களில் மட்­டக்­க­ளப்பு தவிர்ந்த திரு­கோ­ண­மலை மற்றும் அம்­பாறை மாவட்­டங்­களின் போக்­குகள் எவ்­வாறு மாற்­ற­ம­டைந்­தன என்­பதை நோக்­கு­வோ­மாயின் சுதந்­தி­ரத்­துக்குப் பின்­னுள்ள பறி­போன தன்­மை­களைத் தெரிந்­து­கொள்ள முடியும்.

இலங்கை அந்­நிய ஆதிக்­கத்­துக்­குட்­பட்ட காலத்­தி­லி­ருந்து சோல்­பரி யாப்பு உரு­வா­கிய காலம் வரை­யுள்ள சுமார் 400 வரு­டங்­க­ளுக்கு மேலாக அம்­பாறை மாவட்­ட­மா­னது மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­துடன் இணைந்த ஒரு மாவட்­ட­மா­க­வே­யி­ருந்து வந்­துள்­ளது.

திரு­மதி ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்க 1960 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரண்­டா­வது பொதுத்­தேர்­தலின் போது இலங்­கையின் பெண் பிர­த­ம­ராக பத­வி­யேற்றுக் கொண்டார். டி.எஸ்.சேனா­நா­யக்க காலத்தில் அபி­வி­ருத்­தி­யென்ற போர்­வையில் உரு­வாக்­கப்­பட்ட கல்­லோயா அபி­வி­ருத்தித் திட்­டத்தின் அடிப்­ப­டையில் சிங்­க­ளக்­ கு­டி­யேற்­றங்­களை உள்­நோக்­க­மாகக் கொண்ட மாவட்டம் ஒன்று உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டு­மென்ற இனத்­துவ தூர­நோக்கு சிந்­த­னை­யுடன் அம்­பாறை மாவட்டம் ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்கவால் 1961 ஆம் ஆண்டு (10.04.1961) உரு­வாக்­கப்­பட் ­டது. 

இம்­மா­வட்­ட­மா­னது கல்­முனை, சம்­மாந்­துறை, அக்­க­ரைப்­பற்று, பொத்­துவில், பாணம, அம்­பாறை, உகன, தமண ஆகிய பிர­தே­சங்கள் பிரித்­தெ­டுக்­கப்­பட்டு இவற்­றுடன் பதுளை மாவட்­டத்­துடன் இருந்த மஹா­ஓயா, பதி­யத்­த­லாவ என்­ப­வற்­றி­னையும் இணைத்து அம்­பாறை என்னும் புதிய மாவட்டம் உரு­வாக்­கப்­பட்­டது. இப்­பு­திய மாவட்டம் உரு­வாக்­கப்­பட்­டதன் கார­ண­மாக கிழக்கில் தமிழ், முஸ்லிம் சமூ­கத்­துக்கு அர­சியல் பலம் வலு­வி­ழந்­தது. பொரு­ளா­தார வளம் தொடர்ந்தும் சூறை­யா­டப்­பட்டு வரு­கின்­றது. காணிப் பறிப்­புகள், இனம் சார் குடி­யேற்­றங்கள் பெருக்­கெ­டுத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன. இது மட்­டு­மன்றி மத­வ­ழி­பாட்டு கெடு­பி­டிகள் நாளுக்­குநாள் அதி­க­ரித்து வரும் நிலை­மையே அம்­பாறை மாவட்­டத்தில் கடந்த 55 வரு­டங்­க­ளாக கண்டு கொண்­டி­ருக்­கின்றோம்.

1961 ஆம் ஆண்டு அம்­பாறை மாவட்டம் உரு­வாக்­கப்­பட்­டாலும் வேகம் வேக­மாக 21 பிர­தேச செய­லாளர் பிரி­வுகள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. இங்கு இரு மாந­கர சபைகள் ஒரு நகர சபை,17 பிர­தேச சபைகள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. இப்­பி­ர­தேச சபை­களில் பெருந்­தொ­கை­யா­னவை பேரினச் சமூ­கத்­துக்­கென உரு­வாக்­கப்­பட்­ட­வை­யாகும்.

இன்று இக்­கட்­டான போராட்­டங்­க­ளுக்கு ஆளா­கி­யி­ருக்கும் மாவட்டம் திரு­கோ­ண­மலை மாவட்­ட­மாகும். இம்­மா­வட்­டத்தில் 1977 ஆம் ஆண்டு வரை இருந்த இரண்டு தேர்தல் தொகு­தி­க­ளிலும் தமிழ், முஸ்லிம் பிர­தி­நி­தி­களே பாரா­ளு­மன்றம் செல்லும் வாய்ப்பு இருந்­துள்­ளது. திரு­கோ­ண­மலைத் தேர்தல் தொகு­தியில் 1977 ஆம் ஆண்டு வரை தமிழர் ஒரு­வரே பாரா­ளு­மன்றம் செல்லும் நிலை­மையும் மூதூர் இரட்டை அங்­கத்­தவர் தொகு­தி­யி­லி­ருந்து தமிழர் ஒரு­வரும் முஸ்லிம் ஒரு­வரும் பாரா­ளு­மன்றம் செல்லும் பூரண சந்­தர்ப்பம் இருந்து வந்­துள்­ளது.

1947,1952,1960 ஆகிய மூன்று கால பொதுத் தேர்­த­லி­க­ளிலும் மூதூர் தொகு­தி­யி­லி­ருந்து பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரி­வா­ன­வர்கள் முறையே ஏ.ஆர்.எம்.அபூ­பக்கர், எம்.ஈ.எச்.முஹமட் அலி, 1952, 1956 இரு காலப்­ப­கு­திக்கும் உறுப்­பி­ன­ராக தெரிவு செய்­யப்­பட்டனர். 1960 ஆம் ஆண்டு வரை மூதூர் தொகுதி ஒரு ஒற்­றை­ அங்­கத்­தவர் தொகு­தி­யா­கவே இருந்­து­வந்­துள்­ளது. இலங்­கையில் தேர்தல் தொகு­தியை நிர்­ண­யிப்­ப­தற்­காக இரண்­டா­வது தட­வை­யாக 1959 இல் ஒரு குழு நிய­மிக்­கப்­பட்­டது.

இக்­குழு முழு இலங்­கை­யையும் 145 தேர்தல் தொகு­தி­யாக நிர்­ண­யித்து அதில் 140 தனி அங்­கத்­தவர் தொகு­தி­க­ளா­கவும் மட்­டக்­க­ளப்பு, மூதூர், பதுளை, அக்­கு­றணை ஆகிய நான்கு தொகு­தி­களை இரட்டை அங்­கத்­தவர் தொகு­தி­க­ளா­கவும் கொழும்பு மத்தி மூன்று அங்­கத்­துவ தேர்தல் தொகு­தி­யா­கவும் வரை­ய­றுக்­கப்­பட்­டது.

இத­ன­டிப்­ப­டையில் மூதூர் தொகு­தி­யி­லி­ருந்த தமிழர் ஒரு­வரும் முஸ்லிம் பிர­தி­நிதி ஒரு­வரும் பாரா­ளு­மன்றம் செல்லும் வாய்ப்பு உரு­வா­கி­யது. இதன் நிமித்தம் மூதூர் தேர்தல் தொகு­தி­யி­லி­ருந்து 1960 இலி­ருந்து டி.ஏகாம்­பரம்,எம்.ஈ.எச். முஹமட் அலி 1960 (2) தேர்­தலில் டி.ஏகாம்­பரம் ஏ.எல்.அப்துல் மஜீத் ஆகியோர் தெரிவு செய்­யப்­பட்­டனர். 1965 எம்.ஈ.எச்.முஹமட் அலியும் ஏ.எல்.அப்துல் மஜீதும் முஸ்லிம் சமூ­கத்­தி­லி­ருந்து தெரி­வா­கினர். 1970 இல் அப்துல் மஜீத்தும் தமி­ழ­ரசுக் கட்­சி­யி­லி­ருந்து அ.தங்­கத்­து­ரையும் தெரிவுசெய்­யப்­பட்­டனர். 1977 ஆம் ஆண்டில் தெரிவு செய்­யப்­பட்ட இரு­வ­ருமே முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்கள்.

ஆனால் இந்த நிலை­மையை அவ­தா­னித்துக் கொண்ட இலங்கை அர­சாங்க பேரினத் தலை­மைகள் 1977 ஆம் ஆண்டு மூதூர் இரட்டை அங்­கத்­தவர் தொகுதி உடைக்­கப்­பட்டு சேரு­வில எனும் புதிய தேர்தல் தொகுதி திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் உரு­வாக்­கப்­பட்­டது. உரு­வாக்­கப்­பட்ட இத்­தேர்தல் தொகு­தி­யி­லி­ருந்து எக்­கா­லத்­தி­லுமே தமி­ழரோ முஸ்­லிமே பிர­தி­நி­தி­யாக வர­மு­டி­யாத அள­வுக்கு மிக மதி­நுட்­ப­மான முறையில் வடி­வ­மைக்­கப்­பட்­டது. இந்த தேர்தல் தொகுதி உரு­வாக்­கப்­பட்­டதன் கார­ண­மாக முதல்­முதல் பெரும்­பான்மை சமூ­கத்தைச் சேர்ந்த ஒருவர் பாரா­ளு­மன்றம் செல்லும் வாய்ப்பு உரு­வாக்கிக் கொடுக்­கப்­பட்­டது. இவ்­வாறு அர­சியல், பொரு­ளா­தாரம், கலா­சாரம், சமயம் என்ற எல்­லா­வ­கை­யிலும் பறி­போன ஒரு மாகா­ண­மாக கிழக்கு மாகாணம் காணப்­ப­டு­கின்ற சூழ்­நி­லை­யில்தான் வட­கி­ழக்கின் இணைப்பை வலி­யு­றுத்த வேண்­டிய தேவை தமிழ்த் தரப்­பி­ன­ருக்கு ஏற்­பட்­டது என்­பது, வர­லாற்று ரீதி­யான நியா­யங்­களும் உண்­மை­க­ளு­மாகும்.

தமிழ் – முஸ்லிம் உறவு என்­பது, நேற்று, இன்று உரு­வாக்­கப்­பட்ட ஒரு தற்­செ­ய­லான சம்­ப­வ­மு­மல்ல, உற­வு­க­ளு­மல்ல. அதற்­கொரு வர­லாற்றுப் பாரம்­ப­ரியம் இருந்து வந்­துள்­ளது என்­பது இரு சமூ­கத்­த­வரும் ஏற்­றுக்­கொள்­கின்ற உண்­மை­யாகும். போர்த்­துக்­கீசர், ஒல்­லாந்தர், ஆங்­கி­லேயர் என்ற அந்­நிய ஏகா­தி­பத்­தி­ய­வா­தி­களும் குடி­யேற்ற ஆட்­சி­யா­ளர்­களும் இனப்­பி­ரிப்பை தந்­தி­ர­மா­கவும் சூட்­சு­ம­மா­கவும் செய்த காலப்­ப­கு­தி­க­ளி­லெல்லாம் கிழக்­குவாழ் தமி­ழர்கள், முஸ்லிம் சகோ­த­ரர்கள் வாஞ்­சை­யு­டனும் பாசத்­து­டனும் கைநீட்டி வர­வேற்ற காலங்­களின் வர­லா­றுகள் தெளி­வா­கவே எழு­தப்­பட்­டி­ருக்­கி­றது.

இவ்­வண்ணம் நூற்­றாண்டுக் கணக்கில் உடன் பிறப்­புக்­க­ளாக வாழ்ந்­த­வர்கள் மத்­தியில் உடைவு ஏற்­படக் கார­ணமாய் இருந்த கார­ணங்கள் ஏராளம். அண்­மையில் முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு தாவூத் ஆழ­மான கருத்­தொன்றை கூறி­யி­ருந்தார்.

கிழக்கு வாழ் முஸ்­லிம்­க­ளுக்கும் தமி­ழர்­க­ளுக்கும் இரும்புத் திரை­யொன்று போடப்­பட்ட காலம் 1985 ஆம் ஆண்­டு­களை அண்­டிய காலப்­ப­கு­தி­யென ஆழ­மான உண்­மை­யொன்றை முடிச்­ச­விழ்த்துக் காட்­டி­யி­ருந்தார். இலங்­கை ­அர­சாங்­க­மா­னது, இரு சமூ­கங்­க­ளுக்கு இடையே குரோத எண்­ணங்­களை விதைக்­கப்­பண்­ணிய இக்­கா­லப்­ப­கு­தி­யில்தான் மொஷாட் என்ற உள­வுசார் பிரி­வி­னரின் வழி­காட்­டலில் விதைக்­கப்­பட்ட விதைப்பே இவ்­வ­ளவு விருட்­ச­மாக இன்று வளர்ந்து விட்­டது என்ற கார­மான ஒர் உண்­மையை கூறி­யி­ருந்தார்.

இவ்­வகை உண்­மை­க­ளுக்கு அப்பால் வட­கி­ழக்கில் நடந்­தே­றிய கசப்­பான சம்­ப­வங்கள் ஒரு சமூ­கத்­தையும் ஒன்றின் மீது ஒன்றை விரோதப் பார்வை பார்க்க வைத்­தது என்­பது இப்­பொ­ழுது ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­கின்ற உண்­மை­யாகும். வடக்கு மாகா­ணத்­தி­லி­ருந்து 1990 ஆம் ஆண்டு (10.10.1990) முஸ்லிம் மக்கள் இர­வோ­டி­ர­வாக வெளி­யேற்­றப்­பட்­டமை.

ஹஜ் யாத்­தி­ரைக்குச் சென்று வந்த காத்­தான்­கு­டியைச் சேர்ந்த பொது­மக்கள் 68 பேர் குருக்கள் மடம் எனும் இடத்தில் வைத்து (12.7.1990) கடத்­திச்­சென்று படு­கொலை செய்­யப்­பட்ட துய­ரச்­சம்­பவம் காத்­தான்­கு­டி­யி­லுள்ள பள்­ளி­வா­சலில் நடத்­தப்­பட்ட (03.08.1990) தாக்­கு­தலில் படு­கொலை செய்­யப்­பட்ட 03 பொது­மக்­களின் படு­கொ­லை­யா­கிய பாவ­கா­ரியம் போன்ற நூற்­றுக்­க­ணக்­கான சம்­ப­வங்கள் முஸ்லிம் மக்­க­ளுக்கு தமிழ் மக்கள் மீது தீராத கோபத்­தையும் வெறுப்­பையும் உண்­டாக்­கி­யதன் விளைவே இன்று இரு சமூ­கத்­துக்­கு­மி­டையே ஒற்­று­மையை உரு­வாக்க முடி­யாத அசா­தா­ரண சூழ்­நி­லை­யொன்று உரு­வா­கி­யி­ருக்­கி­றது என்­பதை இரு சமூ­கத்­த­வரும் ஏற்­றுக்­கொள்வர்.

ஆனால் இச்­சூழ்­நி­லையும் உடைவும் தொடர்ந்தும் இருக்­க­வேண்­டு­மென்று நினைக்கும் தென்­னி­லங்கை சக்­திகள் ஊர் இரண்­டு­பட்டால் கூத்­தா­டிக்குக் கொண்­டாட்டம் என்­பது போல் சமூ­கப்­பி­ள­வு­களில் குளிர்­காய நினைக்­கி­றார்கள் என்­பதை அறிவு பூர்­வ­மாக உணர்ந்து கொள்ள வேண்­டிய தேவை உள்­ளது என்­பது மறை­வான நியா­ய­மாகும்.

யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வந்­தபின் முன்னாள் ஆட்­சி­யா­ளர்­களால் குறி­வைத்த சமூகம் முஸ்லிம் சமூ­க­மென்­ப­தற்கு பல ஆதா­ரங்கள் உரித்­து­டை­ய­தா­கி­றது. பொது­பல சேனா, சிங்­கள ராவய ஆகிய தீவி­ர­வாத அமைப்­புகள் உரு­வாக்­கப்­பட்­டன.

ஹலால் எதிர்ப்பு, ஹிஜாப், அபாயா அணி­யத்­தடை, உல­மாக்­களை புலி­க­ளோடு ஒப்­பிட்­டமை, ஹாஜிகள் தீவி­ர­வா­தத்தைப் பரப்­பு­கின்­றனர் என்ற விஷமப் பிர­சாரம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான சுவ­ரொட்­டிகள், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான ஒன்­று­கூடல், எதி­ரான குறுந்­த­க­வல்கள், வியா­பார நிலை­யங்­களைத் தாக்­கி­யமை, பள்­ளி­வா­சல்­களை உடைத்­தமை, ஹலால் சான்­றிதழ், ஷரீஆ சட்டம், இஸ்­லா­மிய வங்கி முறை, காதி நீதி­மன்றம் ஆகி­ய­வற்­றுக்­கான எதிர்ப்பு என ஏரா­ள­மான கொடு­மைகள் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக கட்­ட­விழ்த்து விடப்­பட்­ட­மையை வர­லாற்­றி­லி­ருந்து மறைத்து விட­மு­டி­யாது. முஸ்லிம் மக்­களின் மன­நி­லையில் இன்று குடி­கொண்­டி­ருக்கும் பீதி­யென்­பது வட­கி­ழக்கு இணைப்பின் மூலம் எதிர்­கொள்­ளக்­கூ­டிய, பீதிகள் எவை­யென்­ப­தையும் நாம் சுட்டி நோக்­கு­வது, அவ­சி­ய­மா­கின்­றது.

(1) வட­கி­ழக்கு இணைக்­கப்­ப­டு­மாயின் நாம் இரண்­டாந்­தரப் பிர­ஜைகள் ஆகி­வி­டுவோம்.

(2) அர­சியல் பல­மற்ற ஒரு சமூ­க­மாக மாறும் நிலை உரு­வாகும்.

(3) பொரு­ளா­தார வள­மற்ற ஒரு சமூ­க­மாக தேய்ந்து போக நேரிடும். வேலை­வாய்ப்பு, வளப்­பங்­கீடு, காணிப்­பங்­கீடு என்­ப­வற்றில் தமக்கு பார­பட்சம் காட்­டப்­படும்.

பண்­பாடு மற்றும் பாரம்­ப­ரி­யங்­க­ளினால் தாம் ஓரம் கட்­டப்­பட்டு விடுவோம். வடக்கு, கிழக்­குக்கு வெளியே வாழும் முஸ்லிம் உற­வு­களை அர­சியல் அநா­தைகள் ஆக்­கி­விட்­டோ­மென்ற விமர்­ச­னத்­துக்கு ஆளாக வேண்­டி­வரும். எல்­லா­வற்­றுக்கும் அப்பால் வட­கி­ழக்கு இணைப்பு சமஷ்­டி­மு­றை­யி­லான அதி­காரப் பகிர்வு முறை­யொன்று உரு­வா­கு­மாக இருந்தால் அது தமிழ் மக்களை காலப்போக்கில் தனிநாட்டுக்கான நகர்வுக்கு வழிவகுத்து விடும் என்ற காரணங்களின் பின்னணியிலேயே வடகிழக்கு இணைப்பை சில தரப்பினர் சிம்மசொப்பனமாக நினைக்கிறார்கள் என்பது அறியப்பட்ட விடயமே.

மேலே தரப்பட்டவை வெறும் கற்பனாவாத நினைப்புகளாக இருக்கலாம். மாறாகவே அவை உண்மையான காரணங்களாகவும் காட்டப்படலாம். எவ்வாறு இருந்த போதிலும் மேலே குறிப்பிட்ட சட்டங்கள் எல்லாமே வெறும் கற்பனைப் பயங்களாகவே இருக்க முடியும். இதுபற்றி முஸ்லிம் சமூகம் அலட்டிக் கொள்ளத்தேவையில்லை என்பதை தமிழ்த் தரப்பினர் தெளிவாகவும் உறுதியாகவும் கூறிவருகிறார்கள் என்பது முஸ்லிம் மக்கள் அறியாத ஒரு விடயமல்ல.

வடகிழக்கு இணைப்பு என்பது நாங்கள் எதிர்பார்ப்பது போல் வெறும் அரசியல் யாப்பினால் இணைந்துகொள்கின்ற அல்லது சர்வஜன வாக்கெடுப்பினால் நிறைவேற்றிக்கொள்கிற ஒரு வெறும் சம்பிரதாயமாக இருக்குமானால் இவ்விடயத்தில் இரு சமூகங்களும் தோற்றுப்போன சமூகமாகவே ஆகிவிடும். வெறும் அரசியல் யாப்புகளோ தேர்தல் வெற்றிகளோ இரு சமூகத்தின் இணைப்புக்கு பாலமாக இருக்க முடியாது.

இம்மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ் – முஸ்லிம் சமூகமானது வாழ்வியல் முறையாலும் உறவு முறையாலும் ஒன்றுபட்ட சமூகமாக மாறுகின்றபோதே பூகோள மயப்பட்ட இணைவுகள் சாத்தியமாக முடியும். வெறும் அரசியல் சம்பிரதாயங்களுக்கு அப்பாற்பட்டது.

சமூகங்களுடைய பண்பாட்டு கோலங்களும் இணக்கப்பாடுகளுமாகும். இவ்வகை நியதியில் பார்க்கின்றபோது இவ்விரு சமூகங்களின் இணைவை வலிதாக்குவதில் வடகிழக்கு இணைவு முக்கியமாக இருக்குமென்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆணித்தரமாக எடுத்துக்காட்டியுள்ளார்.

திரு­மலை நவம்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-11-05#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.