Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயிக்கப் போவது யார்?

Featured Replies

ஜெயிக்கப் போவது யார்?

 

எதிர்­வரும் 4 வருட காலத்­திற்கு அமெ­ரிக்­காவின் தலை­வி­தி­யை மட்­டு­மல்­லாது உலகின் தலை­வி­தி­யையே தீர்­மா­னிக்கப் போகும் முக்­கி­யத்­துவம் மிக்க தேர்­தலில் வாக்­க­ளிக்க அமெ­ரிக்க வாக்­கா­ளர்கள் தயா­ரா­கி­யுள்­ளனர்.

 அமெ­ரிக்­காவின் 58 ஆவது ஜனா­தி­பதி தேர்தல் எதிர்­வரும் செவ்­வாய்க்­கி­ழமை ஆரம்­ப­மா­கி­ன்றது. அமெ­ரிக்­கா­வி­னதும் உல­கி­னதும் தலை­விதி வாக்­கா­ளர்­களின் தோளில் முள் முனையில் நிற்­பது போன்று ஊச­லாடிக் கொண்­டி­ருக்­கி­றது என இந்தத் தேர்தல் தொடர்பில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா தெரி­வித்தி­ருந்த கருத்து நிதர்­ச­ன­மா­னது என்­பது கண்­கூடு. 

நேரத்­துக்கு நேரம் தனது கருத்­து­களை மாற்றி சல­ச­லப்பை ஏற்­ப­டுத்தி வரும் குடி­ய­ரசுக் கட்சி வேட்­பாளர் டொனால்ட் டிரம்­பையா அல்­லது மாற்­ற­மின்றி கடந்த கால அர­சி­ய­லையே தொடரும் சாத்­தி­யப்­பாட்டைக் கொண்­டுள்ள ஹிலாரி கிளின்­ட­னையா ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­வது என்ற பாரிய சவாலை அமெ­ரிக்க மக்கள் எதிர்­கொண்­டுள்­ளனர்.

இந்த முக்­கி­யத்­துவம் மிக்க தேர்­தலில் வேட்­பாளர் ஹிலாரி கிளின்­ட­னுக்கும் டொனால்ட் டிரம்­புக்கும் இடையில் கடும் போட்டி நில­வு­வ­தாக கருத்துக் கணிப்பு வாக்­கெ­டுப்­புகள் கூறு­கின்­றன. அமெ­ரிக்க வர­லாற்றில் ஜனா­தி­பதி தேர்தல் என்­பது அந்­நாட்டை மட்­டு­மல்­லாது முழு உல­கையும் பொறுத்­த­வ­ரையும் உன்­னிப்­பாக அவ­தா­னிக்­கப்­படும் பெரும் எதிர்­பார்ப்புக்கு­ரிய தேர்­த­லொன்­றாக விள ங்கி வரு­கின்ற நிலையில், இந்தத் தேர்­த லில் போட்­டி­யிடும் பிர­தான வேட்­பா­ளர்­க­ளான ஹிலாரி கிளின்­டனும் டொனால்ட் டிரம்பும் அந்­நாட்டின் வர­லாற்­றி­லேயே பிர­பலம் குன்­றிய வேட்­பா­ளர்­க­ளாக அர­சியல் அவ­தா­னி­களால் விமர்­சிக்­கப்­ப­டு­கின்­றனர். 

அவர்கள் இருவர் தொடர்­பிலும் முன்­வைக்­கப்­பட்­டுள்ள ஒரு தொகைக் குற்­றச்­சாட்­டுகள் மற்றும் அவர்­க­ளது வயோ­திப நிலை என்­பன அவர்கள் தொடர்­பில் வாக்­கா­ளர்கள் மத்­தி­ய­ிலான எதிர்­பார்ப்பின் ஆர் வத் தூண்­டலைக் குன்றச் செய்­துள்­ள­தாக தெரிவிக்கப்படுகிறது.

அத்­துடன் டொனால்ட் டிரம்பால் முன்­வைக்­கப்­பட்ட குடி­யேற்­ற­வா­சிகள் மற்றும் பெண்கள் தொடர்­பான சர்ச்­சைக்­கு­ரிய விமர்­ச­னங்கள் பலர் மத்­தியில் அதி­ருப்­தி யை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. அதே­ச­மயம் ஹிலாரி கிளின்டன் இரா­ஜாங்க செய­லா­ள­ராக கட­மை­யாற்­றிய கால கட்­டத்தில் இர­க­சி­ய­மாக பாது­காக்­கப்­பட வேண்­டிய அமெ­ரிக்க உத்­தி­யோ­க­பூர்வ தகவல் பரி­மாற்­றங்­களை தனது தனிப்­பட்ட மின்­னஞ்சல் மூல­மாக மேற்­கொண்­ட­தாக தெரி­விக்­கப்­படும் குற்­றச்­சாட்டை அவ­ரது அர­சியல் எதி­ரா­ளிகள் பூதா­க­ர­மாக மாற்ற முயற்­சித்து வரு­வது அவர் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்றால் அந்தப் பத­விக்­கு­ரிய பொறுப்­பு­ணர்­வுடன் செயற்­ப­டு­வாரா என்ற சந்­தே­கத்தை வாக்­கா­ளர்கள் மத்­தியில் விதைத்­துள்­ளது. 

 இந்­நி­லையில் எது எப்­ப­டி­யி­ருந்த போதும் இரு பிர­தான வாக்­கா­ளர்­களில் ஒரு­வரை தெரிவு செய்யும் நிர்ப்­பந்­தத்தில் தாம் உள்­ள­தா­கவே அமெ­ரிக்க வாக்­கா­ளர்­களில் பலர் நம்­பு­வ­தாக அர­சியல் அவ­தா­னிகள் கரு­து­கின்­றனர்.

 கடந்த ஒக்­டோபர் 23 ஆம் திகதி வெளி­யா­கி­யி­ருந்த கருத்துக் கணிப்பு வாக்­கெ­டுப்பு ஹிலாரி கிளின்டன் தனது போட்­டி­யா­ள­ரான டொனால்ட் டிரம்பை விடவும் 12 சத­வீத வாக்­கு­களால் முன்­னி­லையில் உள்­ள­தாக தெரி­வித்­தி­ருந்த அதே­ச­மயம், அதற்கு 9 நாட்கள் கழித்து நடத்­தப்­பட்ட பிறி­தொரு கருத்துக் கணிப்பு வாக்­கெ­டுப்பு ஹிலாரி கிளின்­டனை விடவும் டொனால்ட் டிரம்ப் ஒரு சத­வீத வாக்­கு­களால் முன்­னி­லையில் உள்ளார் எனக் கூறு­கின்­றது. எனினும் ஏனைய அநேக வாக்­கெ­டுப்­பு­களில் ஹிலாரி கிளின்டன் ஒரு சில சத­வீத வித்­தி­யா­சத்தில் முன்­னி­லையில் இருந்து வரு­கிறார்.

மேற்­படி கருத்துக் கணிப்பு வாக்­கெ­டுப்­பு­களில் ஹிலா­ரிக்கு ஏற்­பட்ட திடீர் வீழ்ச்­சிக்கு அவ­ரது மின்­னஞ்சல் தொடர்­பான விசா­ர­ணை­களை அமெ­ரிக்கப் புல­னாய்வுப் பணி­மனை (எப்.பி.ஐ.) மீள ஆரம்­பித்­துள்­ளமை பிர­தா­ன­மான கார­ண­மாகக் கூறப்­ப­டு­கி­றது.

ஹிலா­ரியின் மின் அஞ்­சல்கள்

ஹிலாரி அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செய­லா­ள­ராக இருந்த போது தனது உத்­தி­யோ­க­பூர்வ தகவல் பரி­மாற்­றத்­துக்கு தனது சொந்த மின்­னஞ்சல் முக­வ­ரியை பயன்­ப­டுத்­திய விவ­காரம் கடந்த ஆண்டு முதல் தட­வை­யாக அம்­ப­ல­மா­னது.

 இந்­நி­லையில் இது தொடர்­பான விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­பட்டு கடந்த ஜூலை மாதம் 5 ஆம் திகதி அவர் தனது உத்­தி­யோ­க­பூர்வ தகவல் பரி­மாற்­றத்­துக்கு தனது தனிப்­பட்ட மின்னஞ்­சலைப் பயன்­ப­டுத்தி முக்­கி­ய­மான மீறல் ஒன்றை மேற்­கொண்­டுள்ள போதும், அவரை விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­து­வ­தற்கு ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய கார­ணங்கள் எதுவும் இல்லை என அமெ­ரிக்க புல­னாய்வுப் பணி­ம­னை அறி­வித்து­ அவரை அந்தக் குற்­றச்­சாட்­டி­லி­ருந்து விடு­வித்திருந்தது.

இந்­நி­லையில் ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு 11 நாட்­க­ளே­யி­ருந்த நிலையில் ஹிலாரி கிளின்­டனின் மின்­னஞ்சல் தொடர்­பான விசா­ரணை மீள ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக அமெ­ரிக்கப் புல­னாய்வுப் பணி­மனை அதி­ ரடி அறி­விப்புச் செய்­துள்­ளமை, ஹிலா­ரி யைப் பொறுத்த வரை அவ­ரது வாக்­கா­ளர்கள் மத்­தியிலான செல்­வாக்கை ஆட்டம் காணச் செய்யும் ஒன்­றாக அமைந்­துள்­ளது.

ஹிலாரி கிளின்டன் அமெ­ரிக்க செய­லா­ள­ராக பதவிப் பொறுப்­பேற்­ப­தற்கு சிறிது முன்னர் மின்­னஞ்சல் பரி­மாற்ற வழங்­கி­யொன்றை (சேர்வர்) நியூ­யோர்க்கில் சப்­ப­குவா எனும் இடத்­தி­லுள்ள தனது வீட்டில் ஸ்தாபித்­தி­ருந்தார். அவர் அந்த மின்னஞ்ல் முக­வ­ரியில் தனது 4 வருட பதவிக் காலத் தில் உத்­தி­யோ­க­பூர்வ மற்றும் தனிப்­பட்ட தகவல் பரி­மாற்­றங்­க­ளையும் மேற்­கொண்டு வந்­துள்ளார்.

அவர் அமெ­ரிக்க அர­சாங்­கத்தால் தனக்கு மின்­னஞ்சல் பரி­மாற்­றத்­துக்­காக வழங்­கப்­பட்­டி­ருந்த பிளக்­பெரி கைய­டக்­கத்­தொ­லை­பே­சியை ஒரு­போதும் செயற்­ப­டுத்­தவோ பயன்­ப­டுத்­தவோ இல்லை என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அந்தத் தொலை­பேசி மூலம் ஒரே­ச­ம­யத்தில் உத்­தி­யோ­க­பூர்வ மற்றும் தனிப்­பட்ட மின்­னஞ்­சல்­களைக் கையாள முடி­யா­ததால் வசதி கருதி தனது தனிப்­பட்ட மின்­னஞ்லைப் பயன்­ப­டுத்­தி­ய­தாக ஹிலாரி கிளின்டன் தெரி­வித்­தி­ருந்தார்.

அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செய­லாளர் என்ற முக்­கிய பதவிப் பொறுப்பை வகித்த அவர் அமெ­ரிக்க பாது­காப்பு இர­க­சிய தக­வல்­களை உள்­ள­டக்­கிய உத்­தி­யோ­க­பூர்வ தக­வல்­களை, இல­குவில் உள்­ள­டக்­கங்கள் கசியும் அபாயம் உள்ள தனிப்­பட்ட மின்­னஞ்சல் முக­வ­ரியில் பரி­மாறிக் கொண்­ டமை பார­தூ­ர­மான பொறுப்­பு­ணர்­வற்ற செயற்­பா­டா­கவே நோக்­கப்­பட்­டது.

மேற்­படி மின்­னஞ்சல் தொடர்­பான வழ க்கு நான்கு மாதங்­க­ளுக்கு முன் கைவி­டப்­பட்­ட­தை­ய­டுத்து ஹிலாரி பெரிதும் ஆறு­த­ல­டைந்­தி­ருந்தார் என்றே கூற வேண்டும்.

இந்­நி­லையில் அவ­ரது நீண்ட கால உத­வி­யா­ள­ரான ஹுமா அபெ­டி­னி­ட­மி­ருந்து பிரிந்து வாழும் அவ­ரது கண­வரும் முன் னாள் அர­சி­யல்­வா­தி­யு­மான அந்­தோனி வெயினர் 15 வயது சிறு­மி­யொ­ரு­வ­ருக்கு பாலியல் ரீதி­யான எழுத்­து­வ­டிவ செய்­தி­களை அனுப்­பி­யி­ருந்­தாக தெரி­விக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டொன்­றை­ய­டுத்து, ஹிலா­ரியின் மின்­னஞ்சல் தொடர்­பான விசா­ரணை மீள ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

ஹிலாரி தனது தனிப்­பட்ட மின்­னஞ்சல் வழங்­கியில் இந்­திய – பாகிஸ்­தா­னிய வம்­சா­வ­ளி­யி­னத்தைச் சேர்ந்த ஹுமா­வுக்கும் இரா­ஜாங்க திணைக்கள உத்­தி­யோ­கத்­தர்கள் தலைவர் செறில் மில்­ஸுக்கும் மின்­னஞ்சல் முக­வ­ரி­களை ஸ்தாபித்­தி­ருந்­ததார்.

இந்­நி­லையில் ஹுமாவின் மின்­னஞ்­சல்கள் மூலம் பாலியல் குற்­றச்­சாட்டை எதிர்­கொண்­டுள்ள அந்­தோனி வெயினர், ஹிலா­ரியின் உத்­தி­யோ­க­பூர்வ இர­க­சிய தகவல் பரி­மாற்­றங்­களை ஊடு­ரு­வி­யி­ருக்க வாய்ப்பு உள்­ள­தாக அமெ­ரிக்கப் புல­னாய்வு பணி­மனை கரு­து­கி­றது.

தொடர்ந்து அமெ­ரிக்க புல­னாய்வுப் பணி­மனை இந்த விவ­கா­ரத்­துடன் தொடர்­பு­டைய ஆயி­ரக்­க­ணக்­கான மின்­னஞ்­சல்­களை பரி­சீ­லனை செய்து வரு­கி­றது. ஆனால் அது தொடர்­பான பெறு­பேறு எதிர்­வரும் செவ்­வாய்க்­கி­ழமை ஜனா­தி­பதி தேர்தல் இடம்­பெ­று­வ­தற்கு முன் வெளி­யா­வது சாத்­தி­ய­மில்லை என கூறப்­ப­டு­கி­றது.

 அந்த மின்ஞ்­சல்­களில் ஹிலாரி ஏதா­வது தவறு செய்­துள்­ள­மைக்­கான சான்று உள்­ ளதா இல்­லையா என்­பது அறி­யப்­ப­டாத நிலையில், அது தொடர்­பான பெறு­பே­றுகள் வரு­வ­தற்கு முன்னர் இடம்­பெறும் ஜனா­தி­பதி தேர்தலில் அது பாதிப்பை ஏற்படுத்தலாம் என அஞ்­சப்­ப­டு­கி­றது.

குடி­ய­ரசுக் கட்சி ஜனா­தி­பதி வேட்­பாளர் டொனால்ட் டிரம்­பிற்கு ரஷ்ய ஜனா­தி­ப­தி­யு­ட­னான நெருக்­க­மான தொடர்பு குறித்து வெளிப்­ப­டுத்தும் தக­வல்­களை வெளி­யிட ஜன­நா­யகக் கட்­சி­யி­னரால் விடுக்­கப்­பட்ட வேண்­டு­கோ­ளுக்கு செவி­சாய்க்க மறுத்­துள்ள அமெ­ரிக்கப் புலா­னாய்வுப் பணி­மனை, ஹிலா­ரியின் விவ­கா­ரத்தில் ஒரு தலைப்­பட்­ச­மாக செயற்­பட்டு விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ள­தாக குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது.

டொனால்ட் டிரம்பின் பெண்கள் விவ­காரம்

டொனால்ட் டிரம்பை பொறுத்த வரை கடந்த ஒக்­டோபர் 7 ஆம் திகதி வெளி­யான 2005ஆம் ஆண்டு கால காணொளிக் காட்சி அவ­ருக்கு மக்கள் மத்­தி­யி­லான ஆத­ரவில் பெரும் சரிவை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. அவர் அந்தக் காணொளிக் காட்­சியில் பெண்­களை பாலியல் ரீதியில் பற்­று­வது தொடர்பில் பெருமை பேசி­யி­ருந்தார்.

இந்தக் காணொளிக் காட்சி வெளி­யா­ன­தை­ய­டுத்து அவ­ரது சொந்தக் கட்­சியைச் சேர்ந்த சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் பலர் அவ­ருக்­கான ஆத­ரவை வாபஸ் பெற்­றி­ருந்­தனர். இத­னை­ய­டுத்து அந்த விவ­காரம் தொடர்பில் மன்­னிப்புக் கோரும் நிர்ப்­பந்­தத்­திற்கு டொனல்ட் டிரம்ப் உள்­ளானார்.

இந்­நி­லையில் சுமார் 15 பெண்கள் டொனால்ட் டிரம்ப் தம்­மிடம் பாலியல் ரீதியில் தவ­றான முறையில் நடந்து கொண்­ட­தாக குற்­றச்­சாட்டை முன்­வைத்­தனர்.

 இது தொடர்பில் டொனால்ட் டிரம்ப் மறுப்புத் தெரி­வித்­துள்ளார். தன் மீது குற்­றச்­சாட்டை முன்­வைத்­தி­ருந்த அந்தப் பெண்­களில் எவரும் தன்னைக் கவரும் வகையில் கவர்ச்­சி­க­ர­மா­ன­வர்கள் அல்லர் என அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

புதிய ஜனா­தி­பதி குறித்து எதிர்­பார்ப்பு

அமெ­ரிக்­காவின் புதிய ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­பவர் எவ்­வாறு உள்­நாட்டு விவ­கா­ரங்­க­ளையும் வெளி­நாட்டு விவ­கா­ரங்­க­ளையும் தந்­தி­ரோ­பாய முறையில் அணுகி தீர்வு காணப் போகிறார் என்­பதே அமெ­ரிக்க மக்­க­ளதும் உல­கி­னதும் பெரும் எதிர்­பார்ப்­பாக உள்­ளது.

 டொனால்ட் டிரம்ப்பை பொறுத்­த­வரை அவர் ஸ்திரத்­தன்­மை­யற்ற மனப்­போக்கைக் கொண்­ட­வ­ரா­கவும் நடக்க முடி­யா­த­வற்றை நடத்திக் காட்­டு­வ­தாக வீம்­புக்கு சவால் விடுப்­ப­வ­ரா­கவும் உள்­ளமை அவ­ரது ஒவ் ­வொரு கருத்து வெளிப்­பாட்­டிலும் செயற்­பாட்­டிலும் வெளிப்­ப­டுத்­தப்­பட்டு வரு­வது கண்­கூடு.

 தான் ஜனா­தி­ப­தி­யாக வரும் பட்­சத்தில் அமெ­ரிக்­கா­விற்குள் குடி­யேற்­ற­வா­சிகள் பிர­வே­சிப்­பதைத் தடுக்க அமெ­ரிக்க- – மெக்­ஸிக்கோ எல்­லையில் அந்­நாட்டின் செலவில் 5 பில்­லியன் டொல­ரி­லி­ருந்து 10 பில்­லியன் டொலர் செலவில் பாரிய தடுப்புச் சுவரை எழுப்பப் போவ­தாக அவர் வாக்­கு­று­தி­ய­ளித்­துள்­ளமை பெரும் கேலிக்­கூத்­தான விட­ய­மாவே நோக்­கப்­ப­டு­கி­றது.

அத்­துடன் கடந்த வருடம் ஜூன் மாதம் தனது பிர­சார நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­தி­ருந்த போது அமெ­ரிக்­கா­வி­லுள்ள ஆவ­ணப்­ப­டுத்­தப்­ப­டாத அனைத்துக் குடி­யேற்­ற­வா­சி­க­ளையும் நாடு கடத்தப் போவ­தாக சூளு­ரைத் ­தி­ருந்த டொனால்ட் டிரம்ப், பின்னர் அது தொடர்பில் கடும் எதிர்ப்பு எழுந்­த­தை­ய­டுத்து தீவி­ர­வா­தத்­துடன் தொடர்­பு­பட்­ட­வர்­களை மட்­டுமே நாடு கடத்தப் போவ­தாக குறிப்­பிட்­டி­ருந் தார்.

அதே­ச­மயம் அமெ­ரிக்க சான் பெர்­னா ண்டோ பிராந்­தி­யத்தில் இடம்­பெற்ற துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வத்­திற்கு பின் அமெ­ரிக்­கா­வுக்குள் முஸ்­லிம்கள் பிர­வே­சிப்­ப­தற்கு தடை விதிக்க வேண்டும் என வலி­யு­ றுத்­தி­யி­ருந்த அவர், பின்னர் ஐ.எஸ். தீவி­ர­வா­ தி­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளையே நாட்டை விட்டு வெளி­யேற்றப் போவ­தாக கூறினார். அவர் சிரிய அக­தி­களை ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் என குற்­றஞ்­சாட்­டி­யி­ருந்தார்.

குடி­யேற்­ற­வா­சி­களை கைது­செய்த பின் விடு­தலை செய்­வதை முடி­வுக்கு கொண்டு வர­வேண்டும் என வலி­யு­றுத்­தி­யி­ருந்த டொனால்ட் டிரம்ப், அவர்களை கைது­செய்த பின் நாடு கடத்த அழைப்பு விடுத்­துள்ளார். அத்­துடன் அமெ­ரிக்­காவில் பிறந்த ஒரே கார­ணத்­துக்­காக ஆண­வப்­ப­டுத்­தப்­ப­டாத குடி­யேற்­ற­வா­சி­க­ளான பெற்­றோ­ருக்கு பிறந்த பிள்­ளை­க­ளுக்கு பிர­ஜா­வு­ரிமை அளிக்கும் பிறப்­பு­ரிமை பிர­ஜா­வு­ரி­மையை முடி­வுக்கு கொண்டு வர டொனால்ட் டிர ம்ப் விருப்பம் வெளியிட்­டுள்ளார்.

மேலும் மெக்­ஸிக்கோ குடி­யேற்­ற­வா­சி­களை பாலியல் வல்­லு­றவில் ஈடு­ப­டு­ப­வர் கள் மற்றும் போதை­வஸ்தைக் கடத்­து­ப­வர்கள் என அவர் விமர்­சித்­தி­ருந்­தமை பெரும் சர்ச்­சையைத் தோற்­று­வித்­துள்­ளது..

அமெ­ரிக்க கறுப்­பி­னத்­த­வர்கள் தொடர் பில் ஒரு­ச­மயம் கடும் போக்கைக் கடை­பி­டித்த அவர், பின்னர் அதனைத் தளர்த்திக் கொண்­டுள்ளார்.

தீவி­ர­வாத தாக்­கு­தல்­களால் அச்­ச­ம­டைந்­துள்ள அமெ­ரிக்க வாக்­கா­ளர்­க­ளது வாக்­ குளை தனது பக்­க­மாக திசை திருப்­பு­வதை இலக்காக கொண்ட அவ­ரது மேற்­படி விமர்­ச­னங்­களும் கருத்­து­களும் அமெ­ரிக்கப் பிர­ஜா­வு­ரிமை பெற்ற வெளி­நாட்­ட­வர்கள் உள்­ள­டங்­க­லாக பல தரப்­பினர் மத்­தி­யிலும் கடும் கண்­ட­னத்தைத் தோற்­று­வித்­த­தை­ய­டுத்தே அவர் தனது நிலைப்­பாட்டை மாற் றிக் கொள்ள நேர்ந்­தது.

 அவர் ஈரா­னுடன் சர்­வ­தேச நாடுகள் செய்து கொண்­டுள்ள அணு­சக்தி உடன்­ப­டிக்­கையை இல்­லா­தொ­ழிக்க விருப்பம் தெரி­வித்­துள்­ள­துடன் வட கொரி­யாவை பேச்­சு­வார்த்தை மேசைக்கு அழைக்கப் போவ­தாக குறிப்­பிட்­டுள்ளார்.

அது மட்­டுல்­லாது ஜப்­பானில் நிலை கொண்­டுள்ள அமெ­ரிக்கப் படை­யி­ன­ருக்­கான செலவை அந்­நாடே பொறுப்­பேற்க வேண்டும் எனவும் வட கொரி­யா­வி­லி­ருந்­துதான் தாக்­குதல் அச்­சு­றுத்­தலை எதிர்­கொள்ள அந்­நாடு அணு ஆயுத வல்­ல­மையைப் பெற வேண்டும் எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

ஆனால் ஹிலாரி கிளின்­டனோ ஆவ­ணப்­ப­டுத்­தப்­ப­டாத பல குடி­யேற்­ற­வா­சி­க­களை நாடு கடத்­தப்­ப­டு­வ­தி­லி­ருந்து பாது­காத்து சமூ­கத்­துடன் இணைக்க விருப்பம் தெரி­வித்­துள்ளார்.

தான் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்று 100 நாட்­க­ளுக்குள் ஆவ­ணப்­ப­டுத்­தப்­ப­டாத குடி­யேற்­ற­வா­சி­க­ளுக்கு முழு­மை­யான மற் றும் சமத்­துவ பிர­ஜா­வு­ரி­மையை வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்கப் போவ­தாக அவர் சூளு­ரைத்­துள்ளார். அத்­துடன் ஆவ­ ணப்­ப­டுத்­தப்­ப­டாத குடி­யேற்­ற­வா­சிகள் அமெ­ரிக்கப் பிர­ஜை­க­ளாக மாறு­வ­தற்­கான செயற்­கி­ரமம் ஆரம்­பிக்­கப்­ப­டு­வ­தற்கு முன் னர் தமது தாய்­நாட்­டிற்கு திரும்­பு­வதை நிர்ப்­பந்­திக்கும் ஒழுங்கு விதி­களை முடி­வுக்கு கொண்டு வரவும் அவர் விருப்பம் தெரி­வித்­துள்ளார்.

 இந்­நி­லையில் அமெ­ரிக்க பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், வெள்ளை மாளிகை, அர­ சி­யல்­வா­திகள் மற்றும் தொடர்­பு­பட்ட அக்­க­­றை­யி­லுள்ள குழுக்­க­ளாலும் தனி­ந­பர்­க­ளாலும் ஆற்­றப்­படும் உரை­க­ளையும் வெளி­யி­டப்­படும் அறிக்­கை­க­ளையும் பரி­சீ­ல­னைக்­குட்­ப­டுத்தி மதிப்­பீட்டை மேற்­கொண்டு வரும் பொலிட்­டிபக்ட்.கொம் இணை­யத்­த­ள­மா­னது டொனால்ட் டிரம்ப் குறைந்­தது 17 தட­வைகள் எதை­யா­வது ஆணித்­த­ர­மாக கூறி­விட்டு பின்னர் அதற்கு மறுப்புத் தெரி­வித்­துள்­ள­தாக குறிப்­பிட்­டுள்­ளது.

 கோடீஸ்­வர வர்த்­த­க­ரான டொனால்ட் டிரம்ப் அர­சி­யலை மனி­தா­பி­மா­னத்­துக்கு அப்பால் ஒரு வியா­பா­ர­மாக நோக்­கு­வதை அவர் சந்­தர்ப்­பத்­திற்கு ஏற்ப தனது கருத்­து­களை மாற்றிக் கொள்ளும் மேற்படி செயற்­பா­டுகள் எடுத்­துக்­காட்­டு­வ­தாக உள்­ளன.

அவர் ரஷ்­யா­வுக்கு எதி­ரான தடை விதிப்­பு­களை நீக்கி ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரான போராட்­டத்தில் அந்­நாட்டின் உத­வியைப் பெற வேண்டும் என அழைப்பு விடுத்­துள்­ளமை சிறு­பிள்­ளைத்­த­ன­மான ஒன்­றாக அர­சியல் அவ­தா­னி­களால் நோக்­கப்­ப­டு­கி­றது. அத்­துடன் நேட்டோ அமைப்பு உரிய ஒத்­து­ழைப்பை வழங்கத் தவ­றினால் அந்த அமைப்­பி­லி­ருந்து வெளி­யேறப் போவ­வ­தாக அவர் அச்­சு­றுத்தல் விடுத்­துள்ளார்.

சாத்­தி­ய­மற்ற முரண்­பட்ட கருத்­து­களை வெளி­யிட்டு சல­ச­லப்பை ஏற்­ப­டுத்தி வரும் டொனால்ட் டிரம்ப், அமெ­ரிக்க வெள்­ளை­யின கடும் போக்கு வாக்­கா­ளர்கள் மற்றும் தீவி­ர­வாத தாக்­கு­தல்கள் தொடர்பில் பீதி­யி­லுள்ள வாக்­கா­ளர்­களைப் பொறுத்தவரை அபிமானத்துக்குரிய வேட்பாளராக தொட ர்ந்தும் இருந்து வருகிறார்.

அதேசமயம் ஹிலாரி தற்போதைய ஜனாதி பதி பராக் ஒபாமாவின் அடிச்சு வட்டைப் பின்பற்றி அரசியலை முன்னெ டுக்கப் போகும் ஒருவராகவே நோக்கப் படுகிறார்.

அத்துடன் அவர் அண்மையில் நுரையீரல் அழற்சிக்கு உள்ளாகி மயக்க நிலைக்குச் சென்ற விவகாரத்தை அரசியலாக்கும் முயற்சியில் டொனால்ட் டிரம்ப் சார்ந்த வட்டாரங்கள் ஈடுபட்டு வருகின்றன.

பொறுப்பு மிக்க ஜனாதிபதி பதவியால் வரக்கூடிய பெரும் அழுத்தங்களுக்கு அவரது உடல் நலம் தாக்குப் பிடிக்குமா என அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அவரால் குடியேற்றவாசிகள் உரிமை மற்றும் பெண்கள் உரிமை என்பன மேம் பாடடைய வாய்ப்புள்ளதாக நம்பப்படு கிறது.

அமெரிக்க முதல் பெண்மணி, செனட் சபை உறுப்பினர் மற்றும் இராஜாங்க செயலாளர் என அமெரிக்க அரசியலில் நீண்ட கால அனுபவத்தைக் கொண்ட ஹிலாரி, உறுதியான எந்தவொரு கொள் கைப் பிடிப்புமற்ற டொனால்ட் டிரம்ப்பை விடவும் இந்தப் பதவிக்கு பொருத்தமான வர் என்பதை மறுக்க முடியாது.

அத்துடன் டொனால்ட் டிரம்ப் பதவி க்கு வந்தால் அவரது அரசியல் தீர்க்க தரிச னமற்ற கருத்துகளால் மூன்றாம் உலக யுத்த மொன்றை தூண்டி முழு உலகையுமே இடர்பாட்டுக்குள் தள்ளி விடக்கூடும் என்ற அச்ச நிலையும் உள்ளது.

அத்துடன் டொனால்ட் டிரம்ப் ஜனாதி பதியாக தெரிவானால் இலங்கை உள்ளடங் கலான வளர்முக நாடுகள் தொடர்பில் அவ ரது அணுகுமுறை எவ்வாறு இருக்கும் என்பதையும் நிச்சயப்படுத்திக் கூற முடி யாதுள்ளது.

இந்நிலையில் டொனால்ட் டிரம்ப், கருத் துக் கணிப்பு வாக்கெடுப்புகள் பலவற்றில் ஹிலாரி முன்னிலையில் உள்ள போதும் அது அவருக்கு ஆதரவான ஊடகங்களால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட பொய் பிரசார நடவடிக்கை எனவும் தேர்தலில் தான் வெற்றி பெறுவது உறுதி எனவும் தெரிவித்து வருகிறார்.

இந்தத் தேர்தலில் அமெரிக்க மக்கள் எத்த கைய வியூகமான தீர்மானத்தை எடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத் திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆர்.ஹஸ்தனி

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-11-05#page-7

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.